
உண்மையில் ரூபாயின் ஏற்ற இறக்கங்கள் பாமரர் முதல் பங்கு சந்தை வரை பலரையும் அதிக அளவில் பாதிக்கின்றன. உதாரணமாக ரூபாய் தன மதிப்பை இழக்கும் பட்சத்தில் பங்கு சந்தையை உச்சிக்கு கொண்டு செல்லும் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியா பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டார்கள். அதே போல நலிந்த ரூபாய் இறக்குமதி செலவினத்தை அதிகப் படுத்தி பணவீக்கத்திற்கு வழி வகுத்து விடும்.
அதே சமயம் நலிவடைந்த ரூபாய் வெளிநாட்டில் பணி புரியும் இந்தியர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். காரணம், அவர்களுடைய ரூபாய் மாற்ற அளவு அதிகமாகும்.
ரூபாய் வர்த்தகத்தை பாதிக்கும் பல்வேறு காரணிகளைப் பற்றியும் ரூபாய் வர்த்தகத்தின் செயல்பாடு பற்றியும் விவாதிப்பதற்காக ஒரு புதிய பதிவு பூவை உருவாக்கியுள்ளேன்.
http://dailyrupee.blogspot.com/
அறிவைத் தேடும் இந்த பயணத்திற்கு உங்கள் துணையையும் வேண்டி நிற்கிறேன்.
நன்றி
6 comments:
//அதே சமயம் நலிவடைந்த ரூபாய் வெளிநாட்டில் பணி புரியும் இந்தியர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். காரணம், அவர்களுடைய ரூபாய் மாற்ற அளவு அதிகமாகும்.//
ஹி..ஹி.. ஆமாம் சார், எனக்கு இரண்டிலும் தொடர்பிருக்கிறது.
நன்றி பீர்!
//ஹி..ஹி.. ஆமாம் சார், எனக்கு இரண்டிலும் தொடர்பிருக்கிறது.//
அப்படியென்றால் உங்களுக்கு இனிமேல் ரூபாய் நிலவரத்திலும் நெருங்கிய தொடர்பிருக்கிறது என்று சொல்லுங்கள். :-)
//அறிவைத் தேடும் இந்த பயணத்திற்கு உங்கள் துணையையும் வேண்டி நிற்கிறேன்.//
உங்களுடைய இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்.எங்களுடைய
ஆதரவு என்றும் உண்டு.
நன்றி..நன்றி..
நன்றி தாமஸ் ரூபன்!
முடிந்த அளவு தமிழிலும்!
நன்றி வால்பையன்!
//முடிந்த அளவு தமிழிலும்!//
நிச்சயமாக.
Post a Comment