Skip to main content

Posts

Showing posts from January, 2009

மாற்றம் தேவை - ஒரு காரோட்டியின் கதை

நீங்கள் வளைவுகள் நிறைந்த ஒரு கிராமப் புறச்சாலையில் வேகமாக காரை ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் திறமையான, அதே சமயத்தில் சாலை விதிகளை எப்போதும் மதிக்கும் ஒரு காரோட்டி என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வளைவில் செல்லும் போது தவறான திசையில் வேகமாக ஆனால் தடுமாறியபடி கார் ஒட்டியபடி வரும் ஒரு இளம்பெண் உங்களைப் பார்த்து "எருமை" என்று கத்தியபடி கடந்து சென்றால் என்ன செய்வீர்கள்? உங்கள் மீது எந்த ஒரு தவறும் இல்லை. சாலையின் சரியான பக்கத்திலேயே சென்று கொண்டிருந்தீர்கள். எதிரில் வந்தது அந்த பெண்ணின் தவறு. தவறான பக்கத்தில் வந்த வண்டியில் மோதாமல் தப்பித்தது கூட உங்களுடைய தனித் திறமையால்தான். இந்த நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை ஒரு கணம் சிந்தித்து முடிவு செய்து விட்டு மேற்கொண்டு படியுங்கள். இப்படித்தான் ஒரு முறை தவறான பக்கத்தில் வந்து விட்டு தன்னை நோக்கி கத்தி விட்டு சென்ற பெண்மணியின் மீது கடுங்கோபம் கொண்ட ஒரு திறமையான காரோட்டி அவளை விடக் கூடாது என்ற நோக்கத்துடன் மிக வேகமாக அவளைப் பின் துரத்திச் சென்றான். பல கி.மீ. தூரம் துரத்திய பின்னர் அவளை மடக்கிய அவன் அவளை பார்த்துக் கோபமாக கூ...

மாணவர்களுக்காக ஒரு செய்தி

தற்போது நடைபெறும் ஈழத்தமிழர்களுக்கான போராட்டத்தில் பல பள்ளி மற்றும் மாணவர்கள் கலந்து கொள்வதாக பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி செய்திகளின் மூலம் அறிந்து கொண்டேன். இதன் மீது தனிப் பட்ட அனுபவத்திலிருந்து ஒரு அறிவுரை. பொதுவாக இது போன்ற உணர்வு பூர்வமான போராட்டங்களில் இளைஞர் சமுதாயம் குறிப்பாக மாணவர் சமுதாயம் துடிப்போடு கலந்து கொள்வது இயல்பான விஷயம். இதை குறை கூற முடியாது. கடந்த முறை கூட ஈழத்தமிழர்களுக்கான போராட்டத்தில் பல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இப்போதை விட மிகத் தீவிரமாகவே கலந்து கொண்டார்கள். அதே சமயம், இத்தகைய போராட்டங்கள் சட்டத்தின் வரம்பு மீறி போய் விடாமல் மாணவர்களும், இத்தகைய போராட்டங்களை முன்னின்று நடத்துபவர்களும் கவனமாக இருக்க வேண்டும். சாகும் வரை உண்ணாவிரத போராட்டங்கள், சாலை மறியல் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், சில அசம்பாவித நிகழ்வுகளின் காரணமாக போலீஸ் ரெகார்டில் ஒரு மாணவர் பெயர் வருவது பிற்காலத்தில் அவருக்கு , வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் பெறுவது, மத்திய மாநில அரசு அலுவலகங்களுக்கான மற்றும் பெரிய தனியார் நிறுவனங்களுக்க...

உயிர் காக்கும் இறப்பு நிலை.

எங்களுக்காகவும் சில பதிவுகள் இடுங்கள் என்று கோரிக்கை வைத்த செல்வன்.தீபக் சூர்யா, செல்வன்.ஜெய சூர்யா போன்ற சில இளம் அறிவியல் சிந்தனையாளர்களுக்கான ஒரு பதிவு இது. இளைஞர்கள் போல அறிவியல் தாகம் கொண்ட பெரியவர்கள் கூட இதை படிக்கலாம். துருவப் பகுதி போன்ற அசாதாரண தட்பவெட்ப நிலைகளைக் கொண்ட உலகின் சில பகுதிகளில் (சில சமயங்களில் சாதாரண பகுதிகளில் கூட)வாழும் சில உயிரினங்கள் வருடந்தோறும் குறிப்பிட்ட சில மாதங்களில் நடைபெறும் கடுமையான பருவநிலை மாற்றத்தின் போது தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள ஒரு வித கோமா போன்ற நிச்சலன அல்லது ஜட நிலைக்கு சென்று விடுவது உண்டு. பருவ நிலை சீர்பெற்றவுடன் தம்மை தாமே மீண்டும் உயிர்ப்பித்து எழுவதும் உண்டு. இந்த அதிசய நிகழ்வுகள் பற்றியும் இந்த நிலையை மனிதன் எப்படி உபயோகித்துக் கொள்வது என்பது பற்றியும் இங்கு பார்ப்போம். இத்தகைய நிச்சலன நிலைக்கு அறிவியல் ரீதியான பெயர் HIBERNATION என்பதாகும். கடுமையான பருவநிலைகளில் உணவு தேடுவது (உணவு கிடைப்பது அரிது) உயிரினங்களுக்கு ஒரு சிரமமான செயலாகும். எனவே உணவு கிடைக்காத நிலையில் கூட உடல்ரீதியான தனது செயல்பாடுகளை ஒரே மாதிரி தொடர்ந்து கொண்டிரு...

பூவா? தலையா?

ஒபாமா மீது அமெரிக்க மக்கள் நம்பிக்கை வைத்த அளவிற்கு அவர் மீது சந்தைகள் நம்பிக்கை வைக்க வில்லை. சொல்லப் போனால், சந்தைகளினால் மிகவும் மதிக்கப் படும் வர்த்தக குருக்களில் ஒருவரான திரு.ஜிம் ரோஜர்ஸ் அவர்கள், ஒபாமா அமெரிக்காவின் மிக மோசமான அத்தியாயத்தை துவங்கி வைப்பார் என்ற பொருளில் பேசி இருப்பது குறிப்பிடத் தக்கது. அவருடைய பொருளாதார கொள்கைகள் அமெரிக்காவை மீண்டும் ஒரு மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்றும் ஜிம் ரோஜர்ஸ் கூறி இருப்பது அங்குள்ள சந்தை வணிகர்களின் மனப் போக்கினை எதிரொலிக்கிறது. மேலும், அமெரிக்காவின் பொருளாதாரத்தின் மீதும் அங்குள்ள நிறுவனங்களின் மீதும் நம்பிக்கை இழந்த வர்த்தகர்கள் பங்குகளை பெரிய அளவில் விற்றது இங்குள்ள பங்கு சந்தைகளிலும் எதிரொலித்து சென்ற வார சந்தைகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. சென்ற வார நிலவரம் மேலே கூறியது போல அமெரிக்காவின் பொருளாதாரத்தின் போக்கு பற்றிய கவலை உலக சந்தைகளில் சென்ற வாரம் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. IBM நிறுவனத்தின் காலாண்டு நிதி அறிக்கை நம்பிக்கையை தந்தாலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிதி அறிக்கை ஏமாற்றத்தையே ...

இந்திய குடியரசு நாள் - சில சுவாரஸ்யமான தகவல்கள்

உலகின் மிகப் பெரிய ஜனநாயக குடியரசான இந்தியாவின் குடியரசு நாளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் இந்நாளில் ஏற்றுக் கொள்ளப் பட்ட இந்திய அரசியல் வடிவமைப்பு சாசனத்தின் சிறப்பியல்புகள் பற்றியும் இங்கு பார்ப்போம். இந்தியாவை விட்டு 1947 இல் வெள்ளையர்கள் வெளியேறுவதற்கு முன்னர், ஜனவரி 26 ஆம் தேதியே இந்திய சுதந்திர நாளாக இந்தியாவின் தேசியவாதிகளால் கொண்டாடப் பட்டது என்றும் அந்த பாரம்பரியத்தின் அடிப்படையிலேயே பின்னர் ஜனவரி 26 ஆம் நாள் இந்திய குடியரசு நாளாக ஏற்றுக் கொள்ளப் பட்டது என்ற செய்து உங்களுக்கு தெரியுமா? சற்று விரிவாக பார்ப்போம். இந்தியாவின் தேவை பூரண சுதந்திரமே என்ற தீர்மானம், 1929 ஆம் ஆண்டு ஜவர்கர்லால் நேரு அவர்கள் தலைமையில் நடைபெற்ற லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் இயற்றப் பட்டது. மேலும் 1930 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் இந்திய சுதந்திர நாளாக இந்திய மக்கள் அனுசரிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப் பட்டது. இதையடுத்து ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவின் விடுதலை நாளாக தேசிய உணர்வுள்ள அனைவராலும் 1947 ஆம் ஆண்டு வரை அனுசரிக்கப் பட்டு வந்தது. இந்தியருக்கு 1948 ஆம் ஆண்டில் சுத...

சத்யம் தப்பிப் பிழைக்குமா?

ஒரு பொருளாதார பிரச்சினையாக மட்டுமே முதலில் கருதப் பட்ட சத்யம் விவகாரம் இப்போது அரசியல் பூச்சு பெற்று வருகின்ற நிலையில் சுமார் ஐம்பதாயிரம் ஊழியர்கள் (?) மற்றும் எண்ணற்ற சிறு முதலீட்டாளர்களின் வாழ்வாதாரமாக கருதப் படும் சத்யம் நிறுவனம் தப்பிப் பிழைக்குமா என்பது பற்றி அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான ஒரு அலசல். முதலில் அரசியல் ரீதியான அலசல் இந்த பிரச்சினை அரசியல் வடிவம் பெற்று வருவதற்கு முக்கிய காரணம் சத்யம் (முன்னாள்) தலைவரின் கட்சி வேறுபாடற்ற அரசியல் தொடர்புகள். மென்பொருள் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்த முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச தலைவருமான திரு.சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப் பட்டவர் ராமலிங்க ராஜு. மென்பொருள் வளர்ச்சி என்ற பெயரில் அரசிடமிருந்து பல சலூகைகளை (மென்பொருள் தொழிலுக்கென நிலம் பெற்று அதை இவரது மகன்களின் நிறுவனங்களுக்கு தாரை வார்த்ததாக கூட குற்றச் சாட்டு உண்டு) இவரால் பெற முடிந்தது. 2003 இல் வரி தணிக்கையின் போது ராம லிங்க ராஜு சார்பாக பல பினாமி கணக்குகள் இருந்ததாக இந்திய குடியரசு கட்சியைச் சார்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் செபி கடிதம் ...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியாவின் ஒபாமா?

இன்று உலகின் சரித்திரத்தின் மிக முக்கியமான நாள். சுரண்டலின் அடையாளமாக திகழும் அமெரிக்காவின் தலைவராக பல நூற்றாண்டுகளாக வஞ்சிக்கப் பட்ட ஒரு சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் இன்று பதவி ஏற்க உள்ளார். உலகின் மிக வலிமையான ஒரு ஜனநாயக நாட்டில் கத்தியின்றி ரத்தமின்றி அமைதியாக ஏற்பட்டுள்ள இந்த புரட்சி, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் (அதுதாங்க நம்ம இந்தியா) சில எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தவரைப் போன்றே சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல நூற்றாண்டுகளாக நேர்மையற்ற முறையில் ஒடுக்கப் பட்ட தலித் இனத்தைச் சார்ந்த ஒருவர் இந்தியாவின் பிரதமர் ஆவாரா என்றும் அப்படி ஆவது எப்போது என்பது பற்றியும் இங்கு பார்ப்போம். அது வேறு இது வேறு என்று நினைப்பவர்களுக்காக, பல்லாயிரம் மைல்கள் தூரத்தில் இருவேறு திசைகளில் அமைந்திருக்கும் இரு பெரும் நாடுகளில் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் ஏற்பட்ட இரண்டு சமுதாய மீட்சி இயக்கங்களுக்கிடையே உள்ள அதிசயத்தக்க சில ஒற்றுமைகள் பற்றி பார்ப்போம். தங்களுக்குள்ள நியாமான உரிமைகள் பற்றியும், தம் மீது இழைக்கப் படும் கொடுமைகளை எப்படி களைவது என்பது பற்றியும் பெரு...

ஒபாமாவே வருக! நம்பிக்கையைத் தருக!

பொருளாதார வீழ்ச்சி, வேலை இழப்புகள், வங்கிகள் மூடப் படுதல், வாகனத்துறை வீழ்ச்சி மற்றும் சந்தை ஊழல்கள் என கெட்ட செய்திகளாகவே வந்து கொண்டிருந்த அமெரிக்காவிலிருந்து பல நாள்களுக்கு பிறகு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதாவது, வரும் வாரத்தில் திரு.ஒபாமா அவர்கள் அமெரிக்காவின் முதல் குடிமகனாக பொறுப்பேற்க உள்ளார் என்ற செய்தி. பல நூற்றாண்டுகளாக கொடுமைபடுத்தப் பட்ட ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தை சேர்ந்த ஒருவர் முதன் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்கிறார் என்பது அரசியல் ரீதியான முக்கிய நிகழ்வு ஆகும். அதே சமயம், பல ஆண்டுகளாக ஒரே (பொருளாதார) பாதையில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவிற்கு (ஓரளவிற்கேனும்) வேறுபட்ட சிந்தனைகளைக் கொண்ட ஒருவர் பொறுப்பேற்கிறார் என்பது சந்தைகளிற்கு சற்று தெம்பைக் கொடுக்கும் விஷயம். இந்த தெம்பு வரும் வாரத்தில் சந்தைகளில் என்ன மாற்றம் தர உதவும் என்று பார்க்கலாம். சென்ற வார சந்தை நிலவரம் நாம் எதிர்பார்த்தது போலவே, சத்யம் ஊழல் மற்றும் சரிவைக் காட்டும் அமெரிக்க பொருளாதார புள்ளி விவரம், சென்ற வாரம் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைவரின் ஊழல் பற்றி தினந்த...

தடுமாறும் இந்திய திரைப்படத் துறை

2008 ஆம் ஆண்டில் வெளிவந்த "கஜினி" 200 கோடி வசூல், "சிங்க் இஸ் கிங்" வசூல் மழை, "தசாவதாரம்" வரலாறு காணாத வெற்றி என்றெல்லாம் ஊடகங்களால் வர்ணிக்கப் பட்டாலும் உண்மையில் கடந்த ஆண்டு திரைப்படத் துறைக்கு சரிவைத் தந்த ஒரு ஆண்டாகவே இருந்தது. பொதுவாக வெற்றிவிகிதம் மிகக் குறைவாக உள்ள ஒரு துறையாகவே சினிமா தொழில் கருதப் பட்டாலும், பெரிய தொழிற் முறையிலான இந்திய மற்றும் வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் (இரோஸ் இன்டர்நேஷனல், ரிலையன்ஸ் அட்லாப்ஸ், பிரமிட் சமிரா போன்றவை) சில காலத்திற்கு முன்னர் பெருமளவில் இந்திய திரைப்படத் துறையில் நுழைந்தது அனைவரிடமும் புதிய நம்பிக்கைகளை உருவாக்கியது. ஆனால் நடந்ததோ வேறு. முன்பெல்லாம் பட்ஜெட்/பார்முலா/ஸ்டார் அந்தஸ்து குறைந்த படங்கள் மட்டுமே அதிக தோல்வி அடைந்தன. ஆனால் சென்ற வருடம், மிகப் அதிக பொருட்செலவுடன் ஸ்டார் அந்தஸ்து உள்ள நடிகர்கள் துணையுடன் பெரிய நிறுவனங்கள் பிரமாண்டமாக தயாரித்து வெளி வந்த பல படங்கள் (துரோணா, லவ் 2050, யுவராஜ், குசேலன், ஏகன், குருவி மற்றும் பல) வணிக ரீதியாக தோல்வி அடைந்தன என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த வருடம் திரைப் படத் ...

திருமங்கலம் தீர்ப்பு - ஒரு அலசல்

பரவலாக எதிர்பார்க்கப் பட்டது போலவே ஆளுங்கட்சியான தி.மு.க. இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் மூலம் வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்கு கிடைத்துள்ள செய்திகள் என்னவென்று பார்ப்போம். தி.மு.க. : குடும்பம் மற்றும் கூட்டணியில் தொடர்ந்து விரிசல்கள் ஏற்பட்டு வரும் இந்த வேளையில் திருமங்கலம் தொகுதி வெற்றி கட்சித் தலைமைக்கு ஓரளவுக்கு திருப்தியைத் தந்திருக்கக் கூடும். அதே சமயம் ஒரு சிறிய தொகுதியில் முழு அரசு பலத்தையும் காட்ட முடிந்தது போல, அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் காட்ட முடியாது என்பதாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலை அப்போது என்னவாக இருக்கும் என்பது தொடர்ந்து கேள்விக் குறியாகவே இருப்பதாலும் நாடாளுமன்றத்திற்கு நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த முடிவுகளை எடுத்துக் கொள்ள முடியாது. பொருளாதார தளர்ச்சியின் பாதிப்பு அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ள இன்றைய சூழலில் சாதாரணமாக மக்களின் கோபம் ஆளுங்கட்சியின் மீதே திரும்ப வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாகவே, உடனடியாக தேர்தலை விரும்பாத மத்திய அரசு குறுகிய...

"சத்ய" சோதனை

சந்தைகளுக்கு இப்போது அக்னி பரிட்சைக் காலம். சத்யம் நிறுவனத்தையும் இந்திய வணிக நிறுவனங்களின் நம்பகத் தன்மையையும் காப்பாற்ற மத்திய அரசு தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் வெற்றி பெறும் பட்சத்தில் பங்குக் குறியீடுகளில் மீண்டும் ஒரு வளர்ச்சி நிலையை நாம் காண முடியும். தோல்வி பெற்றால் சந்தைகள் பெரிய வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டி இருக்கும். வரும் வாரத்தில் ஒரு தெளிவு பிறக்கும் என்று நம்பலாம். சென்ற வார சந்தை நிலவரம் சத்யம் நிறுவனத்தில் நடை பெற்றுள்ள ஊழல் வெளியாகும் வரை சந்தையில் நல்ல ஏறுமுகம் காணப் பட்டது. முக்கியமாக சென்செக்ஸ் புள்ளிகள் கடந்த ஏழு வாரங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்ததும் சிறிய மற்றும் நடுத்தர பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டதும் சந்தையில் ஒரு எழுட்சி நிலையை உருவாக்கியது. ஆனால், சத்யம் தலைவரின் ஒப்புதல் கடிதம் வெளியிடப் பட்ட இரு தினங்களில் சந்தை மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. சென்செக்ஸ் இரு தினங்களுக்குள்ளாகவே சுமார் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இந்த ஊழல் மூலம் சத்யம் மட்டுமில்லாமல் மேலும் பல இந்திய நிறுவனங்களின் நம்பகத் தன்மை கேள்விக் குறியானதும், இந்த விவகாரத்தில் மத்திய...

மக்களின் வெற்றி

பொதுவாக ஒரு மாநிலத்தில் நடைபெறும் இடைத் தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றி பெறும். அதுவும் ஒரு மாநிலத்தின் முதல்வர் தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் இடைத் தேர்தலில் நின்றால் கேட்கவே வேண்டாம். எத்தனையோ நிர்பந்தங்கள் இருந்தாலும் சரியான முறையில் வாக்களித்து சட்டங்கள் தண்டிக்க தவறிய ஒருவரை தண்டித்தவர்கள் நாமெல்லோரும் படிப்பறிவிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியவர்களாக கருதும் ஜார்கண்ட் மாநில மக்கள். அவர்களின் வெற்றியைக் பாராட்டுவதுடன் இந்த தேர்தலில் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை யாவை என்று பார்போம். இந்தியாவில் ஒரு கடைந்தெடுத்த அரசியல்வாதி எப்படி இருப்பார் என்ற கேள்விக்கு தயக்கமே இல்லாமல் உதாரணம் காட்டக் கூடிய வகையில் இந்திய அரசியல்வாதிக்கு தேவையான எல்லா சாமுத்ரிகா லட்சணங்களும் கொண்டவர் திரு.ஷிபு சோரேன். ஒரு அரசியல்வாதியாக இருப்பதற்கு என்ன தகுதி இல்லை அவரிடம்? ஊழல் குற்றச் சாட்டுக்கள். கிரிமினல் குற்றச் சாட்டுக்கள் கொலைக் குற்றச்சாட்டுக்கள். தலைமறைவு வாழ்க்கை காவலர்களால் கைது நீதி மன்றங்கள் வழங்கிய தண்டனைகள். முன்ஜாமீன் மனுக்கள் சிறை வ...

மாற்றம் தேவை - ஒரு கழுகின் கதை

இங்கே குறிப்பிட்டுள்ள வகையைச் சேர்ந்த கழுகின் ஆயுள் மற்ற கழுகு இனங்களின் ஆயுளை விட அதிகமாக உள்ளது. இதன் ஆயுள் சுமார் எழுபது ஆண்டுகள். ஆனால் இவ்வளவு நீண்ட ஆயுளைப் பெற அது சில கடுமையான முயற்சிகளைச் செய்ய வேண்டியுள்ளது. நாற்பது வயதுக்கு மேலே இந்த கழுகு இனத்தின் இறகுகள் தமது மென்மைத் தன்மையை இழந்து விட வேகமாக பறப்பது என்பது கழுகிற்கு இயலாத செயலாகி விடுகிறது. கழுகின் அலகுகளும் விரல் நகங்களும் வலுவிழந்து விட தனக்கான இரையை வேட்டையாடுவது கடினமானதாகி விடுகிறது. இப்போது கழுகிற்கு உள்ள பிரச்சினையைத் தீர்க்க இரண்டு வழிகள் உண்டு. முதலாவது இரை கிடைக்காமல் வாழ முடியாமல் மடிந்து போவது. இரண்டாவது தனது வாழ்வைப் புதிப்பித்துக் கொள்ள 150 நாட்கள் கடும் முயற்சி செய்வது. இங்கே இரண்டாவது பாதையை தேர்ந்தெடுக்கும் நமது கழுகு ஒரு மலை உச்சிக்கு செல்கிறது. அங்கே தனது அலகினால் ஒரு பாறையைக் கடுமையாக மோதி அலகினை தானே உடைத்துக் கொள்கிறது. புதிய அலகு வளர்ந்த பின்னர் தனது நகங்களை பிய்த்து எறிகிறது. புதிய நகங்கள் முளைத்த பின்னர் தனது இறகுகளை ஒவ்வொன்றாக பிய்த்து எறிகிறது. சுமார் ஐந்து மாதங்களுக்கு பின்னர் புதிய இறகுகள் ...

பொருளாதார பயங்கரவாதம்

சத்யம் நிறுவனத்தின் தலைவராக இருந்த ராமலிங்க ராஜு சுமார் 7000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பது இப்போது பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளது. இந்திய வணிக வரலாற்றில் இதுவே மிகப் பெரிய (பகிரங்கப் படுத்தப் பட்ட) மோசடி எனக் கருதப் படுகிறது. இந்த மோசடி குறித்து இங்கு விவாதிப்போம். சத்யம் நிறுவனம் 1987 இல் ராமலிங்கம் ராஜு அவர்களால் ஆந்திர மாநிலத்தில் துவங்கப் பட்டது. கடந்த இருபது வருடங்களில் பிரமாண்டமான வளர்ச்சியைப் பெற்றுள்ள இந்த நிறுவனம் இப்போது இந்தியாவின் முதல் நான்கு பெரிய மென்பொருள் சேவை நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. மேலும் உலகின் பல பகுதிகளிலும் (66 நாடுகள்) சேவை செயல்பாடுகள் கொண்ட இந்த நிறுவனத்தில் 50,000 பேருக்கும் மேற்பட்டோர் பணி புரிகிறார்கள். இந்த நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தையிலும் மும்பை பங்கு சந்தையிலும் மிக அதிக அளவில் வர்த்தகம் ஆகி வருவதும், இதன் பங்கு சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி குறியீடுகளில் முக்கிய மதிப்பீடு பெற்றிருப்பதும் குறிப்பிடத் தக்கவை. அதே சமயத்தில், நிறுவனத்தின் தலைமை மிகக் குறைந்த அளவே பங்குகள் சொந்தமாக வைத்திருப்பதும் பெரும்பாலான பங்குகள் பொது மக்கள...

தேவை ஒரு அரசியல் தீர்வு

கிளிநொச்சியின் வீழ்ச்சி தமிழர்களின் மீதான சிங்களர்களின் வெற்றியாக இலங்கையில் கருதப் படுவதும், அதனடிப்படையில் அங்கு பட்டாசு வெடிகளுடன் நடைபெறும் கொண்டாட்டங்களும் இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்த நமது அச்சத்தை அதிகப் படுத்தியுள்ளது. மேலும் அங்குள்ள ஜனதா விமுக்தி பெரமுணா போன்ற ஒரு சிங்கள அடிப்படைவாத அமைப்பு அதிக செல்வாக்கு பெற்று வருவதும், அந்த அமைப்பு வருங்காலங்களில் தமிழர்களுடன் அதிகார பங்கீடு ஏற்படுத்திக் கொள்வதை கடுமையாக எதிர்ப்பதும் கவலையைத் தருகிறது. தமிழர்கள் தற்போது இலங்கையில் படும் பாடு குறித்து சிங்கள சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒருவரே (அதிலும் இலங்கை தேசிய அமைதிக் குழு தலைவர் டாக்டர்.பெரேரா) தெரிவித்திருக்கும் தகவல்கள் மிகுந்த மன வேதனையை தருகின்றன. உலகின் எந்தப் பகுதியிலும் இதுவரை ராணுவ ரீதியான வெற்றிகள் தொடர்ந்து நிலைத்ததில்லை என்பது வரலாறு தரும் செய்தி மற்றும் பாடம். இதற்கு அமெரிக்கா எனும் உலகின் மிகப் பெரிய வல்லரசு வியட்நாம் எனும் சிறிய நாட்டிடம் (நீண்ட கால அடிப்படையில்) தோல்வி அடைந்து வெளியேற நேரிட்டது ஒரு மிகச் சிறந்த உதாரணம். இலங்கையில் தற்போது நடைபெறும் தமிழீழ போரா...

கடற் கொள்ளைக்காரர்களும் நிலக் கொலைகாரர்களும்

இன்றைக்கு உலகையே அச்சுறுத்தி வரும் இரண்டு பெரிய அபாயங்கள். சோமாலிய நாட்டுக் கடற் கொள்ளைக்காரர்களும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுமே. சோமாலிய நாட்டுக் கடல் பகுதியில் பயணிக்கும் சர்வதேச கப்பல்களை கொள்ளை அடிக்கும் கடற் கொள்ளைக் காரர்களை அடக்குவதற்காக பன்னாட்டு கடற் படைகள் அங்கு நிறுத்தப் பட்டிருக்கின்றன. ஆனாலும் விடாமல் கொள்ளையடிக்கும் கடற்கொள்ளையர்கள், பல முறை வணிக கப்பல்களைத் தாக்கிய பின்னர், தம்மைத் துரத்தி வரும் பன்னாட்டுப் படைகளுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு, சோமாலிய நாட்டு எல்லைக்குள் ஓடி ஒளிந்து கொள்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. சோமாலியா சுதந்திர இறையாண்மை கொண்ட ஒரு நாடு என்பதால் பன்னாட்டு படைகள் அதன் வான் எல்லையையோ நில எல்லையையோ தாண்டி உள்ளே செல்வதில்லை. காரணம் முறையான அமைப்புகளுக்கு எப்போதுமே சர்வதேச எல்லைகளை மதிக்க வேண்டிய கட்டாயம் உண்டு. ஆனால் கொள்ளையருக்கும் கொலைகாரருக்கும்தான் எந்த எல்லையும் கட்டுப்பாடும் இல்லையே? (சோமாலிய கடற்கொள்ளையரைப் பற்றி வேறொரு பதிவில் விரிவாக சொல்லப் பட்டுள்ளது) . சமீபத்தில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை, சோமாலிய நாட்டின் நில எல்லை மற்றும் வான்வெளி எல...

அன்புள்ள மும்பைக்கருக்கு ஓர் கடிதம்

மும்பையில் தற்போதைக்கு வசிக்கும் ஆனால் மும்பையை சொந்தம் கொண்டாடாத ஒரு இந்தியன் எழுதிக் கொள்வது. நான் பெரும்பாலும் தென்னிந்தியாவில் வாழ்ந்தவன். சில பயணங்களின் போதும் திரைப்படங்களின் மூலமுமே மும்பையின் ஒரு பக்கத்தை மட்டுமே அறிந்து வந்திருக்கிறேன். மும்பைக்கு இன்னொரு முகமும் உண்டு என்பதை இங்கு வசிப்பதற்கு வந்த பிறகே அறிந்து கொண்டேன். சில ஆயிரம் ரூபாய் வாடகையில் பெங்களூர் போன்ற ஒரு மாநகரத்தின் மையப் பகுதியில் சௌகரியமாக வாழ முடிந்த நான் மும்பையில் பல ஆயிரம் ரூபாய் வாடகைக்கு குருவிக்கூடு போல ஒரு வீடு கிடைக்குமா என்று விசாரித்த போது ஏளனமாக பார்த்தீர்கள். அந்த வாடகைக்கு நகரத்தை விட்டு குறைந்த பட்சம் 50 கி.மீ. தூரம் வெளியே போக வேண்டும் என்றீர்கள். சில நூறு ரூபாய் பெறாத விஷயங்களுக்காக கூட பல ஆயிரம் ரூபாய் செலவழிக்கும் நீங்கள் எங்களை போன்ற மத்திய தர மக்களின் வாழ்க்கை முறையை திருப்பி போட்டது மட்டும் இல்லாமல் பணத்துக்கே அவமரியாதை செய்தீர்கள். இவ்வாறு செலவிடும் பணமெல்லாம் சொந்த கணக்கில் அல்ல, தம் பொறுப்பில் உள்ள நிறுவனக் கணக்கில்தான் என்று பின்னர்தான் புரிந்து கொண்டேன். டீ கடையில் கூட உலக விஷயங்கள்...