Saturday, January 17, 2009

தடுமாறும் இந்திய திரைப்படத் துறை


2008 ஆம் ஆண்டில் வெளிவந்த "கஜினி" 200 கோடி வசூல், "சிங்க் இஸ் கிங்" வசூல் மழை, "தசாவதாரம்" வரலாறு காணாத வெற்றி என்றெல்லாம் ஊடகங்களால் வர்ணிக்கப் பட்டாலும் உண்மையில் கடந்த ஆண்டு திரைப்படத் துறைக்கு சரிவைத் தந்த ஒரு ஆண்டாகவே இருந்தது. பொதுவாக வெற்றிவிகிதம் மிகக் குறைவாக உள்ள ஒரு துறையாகவே சினிமா தொழில் கருதப் பட்டாலும், பெரிய தொழிற் முறையிலான இந்திய மற்றும் வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் (இரோஸ் இன்டர்நேஷனல், ரிலையன்ஸ் அட்லாப்ஸ், பிரமிட் சமிரா போன்றவை) சில காலத்திற்கு முன்னர் பெருமளவில் இந்திய திரைப்படத் துறையில் நுழைந்தது அனைவரிடமும் புதிய நம்பிக்கைகளை உருவாக்கியது.

ஆனால் நடந்ததோ வேறு. முன்பெல்லாம் பட்ஜெட்/பார்முலா/ஸ்டார் அந்தஸ்து குறைந்த படங்கள் மட்டுமே அதிக தோல்வி அடைந்தன. ஆனால் சென்ற வருடம், மிகப் அதிக பொருட்செலவுடன் ஸ்டார் அந்தஸ்து உள்ள நடிகர்கள் துணையுடன் பெரிய நிறுவனங்கள் பிரமாண்டமாக தயாரித்து வெளி வந்த பல படங்கள் (துரோணா, லவ் 2050, யுவராஜ், குசேலன், ஏகன், குருவி மற்றும் பல) வணிக ரீதியாக தோல்வி அடைந்தன என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த வருடம் திரைப் படத் துறையைச் சேர்ந்த பல வணிக நிறுவனங்களின் பங்குகள் மற்ற தொழிற் துறைகளைச் சேர்ந்த பங்குகளை விட மிக அதிகமாக வீழ்ச்சி அடைந்ததும் சினிமா துறையின் வீழ்ச்சிக்கு கட்டியம் கூறுகிறது.

தெலுங்கு திரையில் வெளிவந்த படங்களில் தொண்ணூறு சதவீதம் வணிக ரீதியான தோல்வி பெற்றன எனவும் தமிழில் வெளி வந்த 115 படங்களில் 100 படங்கள் தோல்வியைச் சந்தித்தன என்றும் தகவல்கள் கூறுகின்றன. தமிழ் திரைப் படத் துறை கடந்த வருடம் மட்டும் சுமார் 700 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது என்று விநியோகஸ்தர் சங்கத் தலைவர் (கலைப் புலி சேகரன்) கூறுகிறார். மற்ற மொழி திரை உலகங்களும் இதற்கு விதி விலக்கல்ல. ஹிந்தி திரையுலகம் கூட இந்த வருடம் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதாக சில திரையுலக வணிக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மொத்தத்தில், இந்திய திரையுலகம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக தெரிகிறது. பல புதிய திரை முயற்சிகள் (மர்ம யோகி போன்றவை) தள்ளிப் போடப் பட்டுள்ளன. ஹிந்தியில் தொண்ணூறு சதவீத புதிய முயற்சிகள் நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாகவும் தயாரிப்பில் உள்ள திரைப் படங்கள் வெகுவாக காலதாமதமாகுவதாகவும் பிரபல ஹிந்தி திரைப் பட தயாரிப்பாளர் மகேஷ் பட் கூறுகிறார். நம்மூரில் கூட ரஜினி-சங்கர் கூட்டணியில் உருவாகும் "எந்திரன்" கைமாறியதற்கும் திரையுலகை வாட்டும் நிதி நெருக்கடி ஒரு முக்கிய காரணம் எனக் கருதப் படுகிறது.

இந்த வீழ்ச்சிக்கு காரணங்கள் என்ன என்பது பற்றி இங்கே ஒரு சிறு அலசல்.

காசுக்கேற்ற பணியாரம் இல்லை.

மல்டிப்ளெக்ஸ் கலாச்சாரம் திரைப் படங்களைப் பார்ப்பதற்கான செலவினை கடந்த சில வருடங்களில் பல மடங்கு உயர்த்தியுள்ளது. மாநகரத்தில் வாழும் ஒரு சிறிய குடும்பம் ஒரு சினிமாவைப் பார்ப்பதற்கு சாதாரணமாக ஆகும் செலவு கிட்டத் தட்ட ஆயிரம் ரூபாய். செய்த செலவிற்கு கணக்குப் பார்க்க கூடிய இந்திய கலாச்சாரத்தில், செலவு செய்த ஆயிரம் ரூபாய்க்கு குறிப்பிட்ட திரைப் படம் தகுதிதானா என்ற கேள்வி பலருடைய மனதிலும் எழுகிறது. அதிக செலவு செய்து பார்த்த படம் திருப்தி இல்லாத போது பணம் ஏமாற்றப் பட்டது போன்ற உணர்வு பலருக்கும் ஏற்படுகிறது. அதே நடிகர் அல்லது இயக்குனரின் அடுத்த படத்தை அவர்கள் பார்க்க இரு முறை யோசிப்பார்கள். மேலும், ஒட்டு மொத்த பொருளாதாரம் தேக்க நிலையைச் சந்திக்கும் இன்றைய காலகட்டத்தில் பெருமளவு பொருட் செலவு செய்து அரங்குகளுக்கு சென்று படங்களைப் பார்க்க முன் போல மத்திய தர வர்க்கத்தினர் முன் வருவார்களா என்பது ஒரு கேள்விக் குறி.

சின்னத் திரை வழங்கும் போட்டி

வீட்டிற்குள்ளேயே வரும் சின்னத் திரை முக்கியமாக நெடுந்தொடர்கள் பெரிய திரைக்கு கடும் போட்டியைத் தருகின்றன. நெடுந்தொடர்களின் ஒரு நாள் பகுதியைக் கூட தியாகம் செய்ய (திரைப்படம் பார்க்க) பல தாய்மார்கள் தயங்குவது பெண்களின் கூட்டம் வார நாட்களில் அரங்குகளில் குறைந்துக் காணப் பட முக்கிய காரணமாகிறது. திரை இயக்குனர் செல்வராகவன் சொல்வது போல, சின்னத் திரையில் ஏராளமான திரைப்படங்கள் தொடர்ந்து காட்டப் படுவது மக்களுக்கு ஒரு வித திகட்டலையே தருகிறது.

மலிவான வியாபார தந்திரங்கள்

மக்களை திரை அரங்குக்கு வரவழைக்க திரை உலக வியாபாரிகள் மேற்கொள்ளும் மலிவான முயற்சிகள் நீண்ட கால நோக்கில் எதிர்வினையையே ஏற்படுத்துகின்றன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், இந்த "பல நாட்களுக்கு அனைத்துக் காட்சிகளும் புக் செய்யப் பட்டு விட்டன", "இது வரை இல்லாத அளவிற்கு வசூல் மழை" (வெளிநாட்டு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வர இது ஒரு ஹவாலா முயற்சி என்று கூட சொல்லப் படுகிறது) என்றெல்லாம் விளம்பரம் செய்யப் படுவதைக் கூறலாம். "சிங்க் இஸ் கிங்" என்ற படத்திற்கு இவ்வாறே விளம்பரம் செய்யப் பட்டிருக்க, மேலும் ஒரு தினப் பத்திரிக்கையோ மிகச் சிறந்த படம் என சான்றிதழ் வழங்க, நான் இது ஒரு காணுதற்கரிய படம் என்று நம்பி அரங்கிற்கு செல்ல மிஞ்சியது ஏமாற்றமே. படம் வெளி வந்து நான்காவது நாள் மாலைக் காட்சியில் முன்னூறு பேர் அமரக் கூடிய அந்த அரங்கில் இருந்தது என் குடும்பத்தையும் (3) சேர்த்து மொத்தம் பத்திற்கும் கீழே. சான்றிதழ் வழங்கிய தினத்தாள் அந்த படத்திற்கு ஒரு "மீடியா பார்ட்னர்" என குறிப்பிடப் பட்டிருந்தது எனக்கு வெறுப்பையே தந்தது.

நிதி பற்றாக் குறை.

இந்திய திரையுலகம் ஒரு தொழிற் துறையாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் சரிவர அங்கீகரிக்கப் படாதது, திரை உலகம் சந்திக்கும் நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணம். மேற்சொன்னபடி, வெற்றி விகிதம் மிகவும் குறைவாக உள்ள துறையாக சினிமாத் துறை இருப்பதால், வங்கிகள் கடன் வழங்க தயங்குகின்றன. சினிமா துறை பங்குகளின் செயல்பாடு போதுமான அளவிற்கு திருப்தியாக இல்லாததால் பங்கு சந்தையிலும் நிதி திரட்ட திரையுலகத்தினருக்கு சிரமமான காரியமாகவே உள்ளது. இதனால் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப் படுகின்றனர். ஒரு படம் தயாரிக்கும் செலவில் பெரிய பங்கு (நடிகர்களின் ஊதியத்திற்கு அடுத்தபடியாக என்று கூட கூறலாம்) வட்டிக்கே போகிறது. திரைப் படம் தயாரிப்பில் மற்றும் வெளியீட்டில் ஏற்படும் தாமதங்கள் படத்தின் வணிக ரீதியான தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.

நடிகர்களின் ஸ்டார் அந்தஸ்து ஒரு கேள்விக் குறி

ஸ்டார் நடிகர்களுக்கு உள்ளதாக சொல்லப் படும் "மக்களை அரங்குகளுக்கு கவர்ந்திழுக்கும் காந்த சக்தி" இந்த ஆண்டு பெருமளவு வெளிப் பட வில்லை என்றே சொல்ல வேண்டும். உதாரணம், பெரிய நடிகர்கள் நடித்த குசேலன், யுவராஜ் போன்ற படங்கள் அடைந்த தோல்வி. ஏகன் மற்றும் குருவி படங்கள் பார்த்து வெளிவந்த போது மனதில் எழுந்த கேள்வி "குறிப்பிட்ட நடிகர்கள் பிடிக்கும் என்ற ஒரே காரணத்திற்காக இவ்வளவு பெரிய தண்டனை தேவையா?" என்பதே. எனவே மக்களின் விருப்பங்கள் வேகமாக மாறும் இன்றைய காலகட்டத்தில் ஸ்டார் நடிகர்களின் காந்த சக்தி என்பதே ஒரு கேள்விக் குறியான நிலையிலும் கூட அவர்களுக்கு மிக அதிக சம்பளங்கள் வழங்கப் படுவது, திரைப் படத்தின் வணிக ரீதியான தோல்விக்கு முக்கிய காரணமாகும்.

ஹாலிவுட் படங்கள் தரும் போட்டி

மொழிமாற்றம் செய்யப் படும் ஹாலிவுட் படங்கள் இந்தியப் படங்களுக்கு கடும் சவாலாக விளங்குகின்றன. சிறந்த தொழிற் நுட்பம், நேர்த்தியான கதை அமைப்பு, அரங்குகளில் மட்டுமே அனுபவிக்க முடிகிற பிரமாண்டம், கலைஞர்களின் தொழிற் அர்ப்பணிப்பு தன்மை இவற்றுடன் எளிதில் புரிய உதவும் தாய்மொழி மாற்றம் ஆகியவை ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் பெரும் வெற்றி பெற காரணமாக அமைகின்றன.

இந்திய திரைத் துறை வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.


இதற்கான பதிலை நாம் சென்ற ஆண்டில் வெற்றி பெற்ற படங்களில் இருந்தே பெற முடியும். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் குறிப்பிடத் தக்கவை கஜினி மற்றும் தசாவதாரம் ஆகியவை. எதிர்பார்ப்புகளை ஈடுகட்டும் அளவிற்கு கடும் உழைப்பு மற்றும் சரியான திட்டமிடல் இருந்ததே இந்த இரண்டு படங்களின் வெற்றிக்கும் முக்கிய காரணங்களாக இருந்தன. இவ்விரண்டு படங்களும் வெளி வர நீண்ட காலம் பிடித்தாலும் இடை பட்ட காலத்தில் மிகச் சிறந்த விளம்பர யுக்திகள் பின் பற்றப் பட்டதும் இவற்றின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் வந்து வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களில் குறிப்பிடத் தக்க அஞ்சாதே மற்றும் சுப்ரமணியபுரம் ஆகியவை ஸ்டார் நடிகர்கள் இல்லையென்றாலும் கூட சிறந்த வித்தியாசமான கதையமைப்பு கொண்டிருந்தன.

எந்த ஒரு தொழிற்துறையிலும் செய்த முதலீட்டைப் போல பல மடங்கு லாபம் அதுவும் அதிக உழைப்பின்றி குறுகிய காலத்தில் பார்க்க முனைவது பல சமயங்களில் எதிர் வினையையே ஏற்படுத்தும் என்பது வணிக நியதி. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டிய திரைத் துறையினர் செய்ய வேண்டியது என்ன?

௧. தமது (மொழிக்கான அல்லது வட்டாரத்திற்கான) சந்தை வீச்சை முழுமையாக புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் பட்ஜெட் இடுதல். தேவையற்ற ஆடம்பர செலவுகளைத் தவிர்த்தல். சிக்கனம் கூட ஒரு வகையில் வணிக ரீதியான வெற்றிக்கு உதவும்.


௨. ஸ்டார் நடிகர்களின் சம்பள பணத்தை படத்தின் மொத்த பட்ஜெட்டின் குறிப்பிட்ட விகித்தத்திற்குள் வைத்தல். முடிந்த வரை சிறந்த கதையமைப்பிற்கு மற்றும் தொழிற் நுட்ப நேர்த்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல். இதன் மூலம் நுகர்வோருக்கு அதுதாங்க ரசிகர்களுக்கு அதிக திருப்தியை வழங்க முடியும்.

௩. சிறந்த திட்டமிடல் அதுவும் படம் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னதாகவே முழுமையான திட்டம் இருப்பது படத்தின் செலவைக் குறைப்பதோடு திரைப் படம் நேர்த்தியான முறையில் வெளியாக உதவும். சிறந்த திட்டம் பாதி வெற்றிக்கு கியாரண்டி.

௪. அரங்கு உரிமையாளர்களும் திரைப் பட தயாரிப்பாளர்களும் கலந்து பேசி அரங்கு நுழைவுக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களின் அளவைக் குறைத்தல். "குறைந்த விலை அதிக லாபம்" என்பது வெற்றி பெற முக்கியமான வணிக நியதி.

லட்சக் கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் கோடிக் கணக்கான மக்களின் பொழுது போக்கு சாதனமாகவும் உள்ள இந்திய திரைப் படத் துறை ஆரோக்கியமான வளர்ச்சியை அடைந்து வரும் ஒரு தொழிற் துறையாக நீடித்திருப்பது அவசியமான ஒன்றாகும். இந்தியரின் வாழ்வோடு இரண்டற கலந்து விட்ட நமது திரைத் துறையினர் இந்த 2009 ஆம் ஆண்டில் தாமும் வணிக ரீதியாக வெற்றி கண்டு ரசிகர்களுக்கும் நல்ல படங்கள் பல வழங்க வாழ்த்துவோம்.

நன்றி.

16 comments:

ஷாஜி said...

சிறந்த அலசல்...

சென்ஷி said...

//ஏகன் மற்றும் குருவி படங்கள் பார்த்து வெளிவந்த போது மனதில் எழுந்த கேள்வி "குறிப்பிட்ட நடிகர்கள் பிடிக்கும் என்ற ஒரே காரணத்திற்காக இவ்வளவு பெரிய தண்டனை தேவையா?" என்பதே. //

பயங்கர ரண வேதனை போலருக்குது :))

நிறைய்ய விஷயத்தை அலசி ஆராய்ந்து எழுதியிருக்கீங்க.. பார்ப்போம். இந்த வருசமாவது ஏதாவது சினிமா லாபகரமான தொழிலா மாறுதான்னு?!

Maximum India said...

அன்புள்ள ஷாஜி

பின்னூட்டத்திற்கு நன்றி

Maximum India said...

அன்புள்ள சென்ஷீ

பின்னூட்டத்திற்கு நன்றி

//பயங்கர ரண வேதனை போலருக்குது :))//

அத ஏன் கேக்கிறீங்க? கொல வெறி.

கபீஷ் said...

நல்லா அலசி பிழிஞ்சிட்டீங்க. எங்க மாமனார் திரைப்படம் தயாரிப்பதை சமீப காலமா நிறுத்திவிட்டார். நிறைய அடி வாங்கியிருப்பார்னு நினைக்கிறேன். :-(:-(

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

பின்னூட்டத்திற்கு நன்றி.

//எங்க மாமனார் திரைப்படம் தயாரிப்பதை சமீப காலமா நிறுத்திவிட்டார். நிறைய அடி வாங்கியிருப்பார்னு நினைக்கிறேன். :-(:-(//

திரைத்துறைக்கும் மற்ற தொழிற் துறைகளுக்கும் முக்கிய வேறுபாடு பதிவிலேயே கூறியுள்ளது போல வெற்றி வாய்ப்பு சதவீதம் மிகக் குறைந்த ஒரு துறை திரைத் துறையாகும். எனவே இந்த துறையில் லாபம் சம்பாதிப்பது மிகவும் கடினமான ஒன்று என்பது என் கருத்து.

படித்துறை.கணேஷ் said...

நண்பரே மிக முக்கியமான விஷயத்தை விட்டு விட்டீர்கள்...கார்பொரேட் நிறுவனங்கள் பெரும் பொருட்செலவில் படம் எடுக்கும் போது இயக்குனர்கள் "ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே" என்று முடிந்த அளவு சுருட்ட நினைப்பது தான் அப்படங்களின் மிகப்பெரிய தோல்விக்கு காரணமாய் அமைகிறது.. சிறிய பட்ஜெட் படங்கள் தயாரிப்பாளரின் உயிரை முதலாக வைத்து எடுக்கப்படுவதால் கூடிய மட்டும் நியாயமான செலவு செய்யப்பட்டு கதையில் கவனம் செலுத்தப் படுகிறது

Maximum India said...

அன்புள்ள படித்துறை கணேஷ்

பின்னூட்டத்திற்கு நன்றி

//கார்பொரேட் நிறுவனங்கள் பெரும் பொருட்செலவில் படம் எடுக்கும் போது இயக்குனர்கள் "ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே" என்று முடிந்த அளவு சுருட்ட நினைப்பது தான் அப்படங்களின் மிகப்பெரிய தோல்விக்கு காரணமாய் அமைகிறது.. சிறிய பட்ஜெட் படங்கள் தயாரிப்பாளரின் உயிரை முதலாக வைத்து எடுக்கப்படுவதால் கூடிய மட்டும் நியாயமான செலவு செய்யப்பட்டு கதையில் கவனம் செலுத்தப் படுகிறது//

நீங்கள் சொல்வது சரியே. திரைப் பட இயக்குனர்கள் மட்டுமல்ல பல கார்பொரேட் நிறுவன இயக்குனர்கள் கூட பொது மக்கள் பணத்தில் செயல் படும் அந்த நிறுவனங்களின் பணத்தை சுருட்டவே பார்க்கின்றனர் என்ற பரவலான குற்றச்சாட்டு உண்டு. இதன் காரணமாகவே திரைப் படத் துறை பங்குகள் எப்போதுமே சரி வர செயல் படுவதில்லை.

pothujanam said...

பதிவினை படித்த நடிகரும் ரசிகனும் பேசிகொண்டார்கள்.

நடிகர்: என்னப்பா இந்த ப்ளாக்லே நல்ல தரமான படத்த கொடுக்க சொல்லி போட்டு இருக்காங்க .. கொடுதுரலாமா ?

ரசிகர்; தலைவா.. யாரோ பொழுது போகாம எழுதறதுக்கு எல்லாம் நீங்க கவலை படாதீங்க. நீங்க வழக்கம் போல உங்க இமேஜ் மெயிண்டேன் பண்ணியே படம் கொடுங்க .. நாங்க உங்க படம் பூஜை போடறதுல இருந்து ரிலீஸ் ஆகி ஓடற வரைக்கும் போஸ்டர் அடிச்சு , கட் அவுட் வெச்சு பால் மோர் ஊத்தி மண் சோறு சாப்ட்டு.. குடும்பத்த பத்தி யோசிக்காமே எவ்ளோ உழைக்கிறோம் .. நீங்க போயி நல்ல படத்தை எடுக்கிறேன்னு லொள்ளு பண்ணாதீங்க.

நடிகர்: ஏப்பா ஆலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுக்க வேணாமா ? ஆஸ்கர் வாங்க வேணாமா?
ரசிகர். வேணாம் தலைவா.. எவ்ளோ வயசானாலும் சின்ன பொண்ணு கூட டூயேட் பாடி அம்மா கிட்ட அழுது கடசீல வில்லனை போட்டு பொரட்டுன போதும். கதயை எவன் கேட்டான் .லாஜிக் எவன் கேட்டான்.எந்த படம் எடுத்தாலும் சூப்பெர் னு சொல்ல பத்திரிக்கை இருக்கு. டி வீ இருக்கு.. நீங்க கொள்ளு தாத்தா ஆயி டூயேட் பாடினாலும் பாக்க நாடு இருக்கு. என்ன கவலை.

நடிகர்: அப்போ இப்டியே மெயிண்டேன் பண்ணா போதுங்கறே ..

ரசிகர். ஆமா தலைவா. நீ பாட்டுக்கு நடி. சொந்த ஊர்ல நெலம் வாங்கு. இந்தியாவுல எல்லா ஊர்லயும் நெலம் வாங்கு. உன் பொண்டாட்டி புள்ளைய சேத்துக்கோ.தேர்தல் வந்தா கொறல் குடு. மெதுவா கட்சி ஆரம்பி. எங்களுக்கும் பதவி கொடு. சம்பாரிக்கறோம். டென்சன இருந்த எங்கேயாவது மலைக்கு போயிட்டு வா. நாங்க இங்க மண் சோறு சாப்டு மெயிண்டேன் பண்ணிக்கறோம். அப்டியே சத்யம் ராஜு கிட்டே போய் அடுத்த படத்த பத்தி டிஸ்குஸ் பண்ணிருங்கோ .

நடிகர். ஆகா. என் உயிர் மண்ணுக்கு. உடல் உனக்கு. உரம் விவசாயிக்கு. மயிர் திருப்பதிக்கு. நீயில்லாமல் நான் இல்லை.. வாழ வைத்த தமிழகமே.. உன்னை மறக்க மாட்டேன் ( அரே மேரே பீவி போன் ஆகயா கியா ?)

ரசிகர். யாருன்ங்க அது சந்தை நிலவரம் . அட்ரஸ் பாரு. அவர மண் சோறு சாப்ட வெச்சிரலாம்.. கெளம்பு .

Maximum India said...

அன்புள்ள பொதுஜனம்.

பின்னூட்டத்திற்கு நன்றி

//நடிகர்: என்னப்பா இந்த ப்ளாக்லே நல்ல தரமான படத்த கொடுக்க சொல்லி போட்டு இருக்காங்க .. கொடுதுரலாமா ?

ரசிகர்; தலைவா.. யாரோ பொழுது போகாம எழுதறதுக்கு எல்லாம் நீங்க கவலை படாதீங்க. நீங்க வழக்கம் போல உங்க இமேஜ் மெயிண்டேன் பண்ணியே படம் கொடுங்க .. நாங்க உங்க படம் பூஜை போடறதுல இருந்து ரிலீஸ் ஆகி ஓடற வரைக்கும் போஸ்டர் அடிச்சு , கட் அவுட் வெச்சு பால் மோர் ஊத்தி மண் சோறு சாப்ட்டு.. குடும்பத்த பத்தி யோசிக்காமே எவ்ளோ உழைக்கிறோம் .. நீங்க போயி நல்ல படத்தை எடுக்கிறேன்னு லொள்ளு பண்ணாதீங்க.//

பொது மக்கள்: நீங்க லொள்ளு பண்ணுங்க இல்ல ஜொள்ளு விடுங்க. ஆனா, பொருளாதார வீழ்ச்சியாலே ஏற்கனவே நொந்து போயி தியேட்டருக்கு வர எங்களுக்கு கொல வெறி மட்டும் ஏத்தாதீங்க.

//நடிகர்: ஏப்பா ஆலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுக்க வேணாமா ? ஆஸ்கர் வாங்க வேணாமா?

ரசிகர். வேணாம் தலைவா.. எவ்ளோ வயசானாலும் சின்ன பொண்ணு கூட டூயேட் பாடி அம்மா கிட்ட அழுது கடசீல வில்லனை போட்டு பொரட்டுன போதும். கதயை எவன் கேட்டான் .லாஜிக் எவன் கேட்டான்.எந்த படம் எடுத்தாலும் சூப்பெர் னு சொல்ல பத்திரிக்கை இருக்கு. டி வீ இருக்கு.. நீங்க கொள்ளு தாத்தா ஆயி டூயேட் பாடினாலும் பாக்க நாடு இருக்கு. என்ன கவலை.//

பொது மக்கள்: ஆமா. நீங்க எதுக்கு கவலைப் படனும். காசு கொடுத்து கவலை படத்தான் நாங்க இருக்கோமே.

//நடிகர்: அப்போ இப்டியே மெயிண்டேன் பண்ணா போதுங்கறே ..

ரசிகர். ஆமா தலைவா. நீ பாட்டுக்கு நடி. சொந்த ஊர்ல நெலம் வாங்கு. இந்தியாவுல எல்லா ஊர்லயும் நெலம் வாங்கு. உன் பொண்டாட்டி புள்ளைய சேத்துக்கோ.தேர்தல் வந்தா கொறல் குடு. மெதுவா கட்சி ஆரம்பி. எங்களுக்கும் பதவி கொடு. சம்பாரிக்கறோம். டென்சன இருந்த எங்கேயாவது மலைக்கு போயிட்டு வா. நாங்க இங்க மண் சோறு சாப்டு மெயிண்டேன் பண்ணிக்கறோம். அப்டியே சத்யம் ராஜு கிட்டே போய் அடுத்த படத்த பத்தி டிஸ்குஸ் பண்ணிருங்கோ . //

பொதுமக்கள்: படத்துல நடிச்ச டென்சன கொறைக்க நீங்க மலைக்கு போறீங்க. உங்க படத்த பார்த்த டென்சன குறைக்க நாங்க எந்த கடல்ல விழறது?

அப்புறம் ஏற்கனவே பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளான சஞ்சய் தத், மோனிக்கா பேடி எல்லாரும் இப்ப ரொம்ப பிசி. தாவூத் கால்சீட் ட்ரை பண்ணியும் கிடைக்கலே. முடிஞ்சா சத்யம் ராஜுவையும் சினிமாவுல நடிக்க வையுங்க. அப்புறம் "சத்யமேவ ஜெயதே"ன்னு கூட பேரு வைங்க.

//நடிகர். ஆகா. என் உயிர் மண்ணுக்கு. உடல் உனக்கு. உரம் விவசாயிக்கு. மயிர் திருப்பதிக்கு. நீயில்லாமல் நான் இல்லை.. வாழ வைத்த தமிழகமே.. உன்னை மறக்க மாட்டேன் ( அரே மேரே பீவி போன் ஆகயா கியா ?)

ரசிகர். யாருன்ங்க அது சந்தை நிலவரம் . அட்ரஸ் பாரு. அவர மண் சோறு சாப்ட வெச்சிரலாம்.. கெளம்பு .//

பொதுமக்கள்: ஆமாம் நடிகர் சார். படம் பார்த்தா பணம் உனக்கு. ரணம் எனக்கு.

அப்புறம் ரசிகர் சார். என்ன மண் சோறு சாப்பிட வைக்கிறது ஒருபக்கம். நீங்க சாப்பிடுற சொத்துல மண் விழுந்துட போகுது. ஜாக்கிரத.

அன்புள்ள பொதுஜனம்! கலக்கல் பின்னூட்டத்திற்கு மீண்டுமொரு நன்றி.

வால்பையன் said...

சூப்பர் பதிவு.
தரமான அலசல்!

தொடர்க உங்களின் சீரிய பணி!

கடந்த 4 வருடத்தில் நான் திரையரங்கு சென்று பார்த்த படங்கள் 2

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//சூப்பர் பதிவு.
தரமான அலசல்!
தொடர்க உங்களின் சீரிய பணி!//

நன்றி! நன்றி! நன்றி!

//கடந்த 4 வருடத்தில் நான் திரையரங்கு சென்று பார்த்த படங்கள் 2//

உண்மையாலுமே நீங்க பாராட்டப் பட வேண்டியவர். ஆனா உங்களைப் போல எல்லாரும் இருந்தா எப்படி பெரிய ஸ்டார்கள் பல கோடி வருமானம் சம்பாதிக்க முடியும்? எங்களப் போலவும் (காசு கொடுத்து கஷ்டப் படர ஜாதி) கொஞ்சம் பேர் வேணுமில்லே?

கார்த்திக் said...

//செய்த செலவிற்கு கணக்குப் பார்க்க கூடிய இந்திய கலாச்சாரத்தில், செலவு செய்த ஆயிரம் ரூபாய்க்கு குறிப்பிட்ட திரைப் படம் தகுதிதானா என்ற கேள்வி பலருடைய மனதிலும் எழுகிறது.//

நானும் நண்பனும் பெங்கலூரில் PVR தியேட்டருக்கு No smoking படத்துக்கு போனோம்.அவன் வேண்டாம்னுதான் சொன்னான் நான் தான் அந்த தியேட்டர பாத்தகனு்ம்னு போவனும்னு சொல்லி போயிப்பாத்தா டிக்கட்டு விலை 250 ரெண்டு பேருக்கு 500 வண்டிப்பாசு 30 உள்ள ஒன்னும் விலையே கேக்கமுடியல.35 ரூபாய்க்கு பாப்கான் வாங்கித்தின்னோம்.இப்படி இருந்தா எவ்ளவு பெரிய ஆலாஇருந்தாலும் தொடர்ந்து அரங்குல படம் பாக்கமுடியாது.(படத்தப்பத்தி சொல்லவெவேனாம்)

//மக்களின் விருப்பங்கள் வேகமாக மாறும் இன்றைய காலகட்டத்தில் ஸ்டார் நடிகர்களின் காந்த சக்தி என்பதே ஒரு கேள்விக் குறியான நிலையிலும் கூட அவர்களுக்கு மிக அதிக சம்பளங்கள் வழங்கப் படுவது, திரைப் படத்தின் வணிக ரீதியான தோல்விக்கு முக்கிய காரணமாகும்.//

மதன் சொல்லுவாரு வரலாறுல இருந்து நாம கத்துகிட்டது என்னன்னா ஒன்னுமே கத்துலகலைங்கிறதுதான். போனவருசம் பெரிய தலைங்கலோட படம் எதுவுமே ஓடலை.கதைதான் ஹீரோங்கரத காட்டிருக்கு.அதையேன் இந்த தயாரிப்பாளர்கள் புரியமாட்டிங்குது.

//அரங்கு உரிமையாளர்களும் திரைப் பட தயாரிப்பாளர்களும் கலந்து பேசி அரங்கு நுழைவுக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களின் அளவைக் குறைத்தல். "குறைந்த விலை அதிக லாபம்" என்பது வெற்றி பெற முக்கியமான வணிக நியதி.//

இல்லைன்னாக்கூட படத்தோட பட்சட்டுக்கு தகுந்தபடியாவது டிக்கெட்விலையை விக்ஸ் பன்னலாம்.

//இந்தியரின் வாழ்வோடு இரண்டற கலந்து விட்ட நமது திரைத் துறையினர் இந்த 2009 ஆம் ஆண்டில் தாமும் வணிக ரீதியாக வெற்றி கண்டு ரசிகர்களுக்கும் நல்ல படங்கள் பல வழங்க வாழ்த்துவோம்.//

ரசிகர்களுக்கு நல்ல படம் கிடைக்குதோ இல்லையோ.அந்த துறையை நம்பி பல லட்சம் குடும்பங்கள் இருக்கு அவங்கலுக்கவது நல்ல படங்கள் வரோனும்.அவங்கலும் வாழனும்.

// நடிகர். ஆகா. என் உயிர் மண்ணுக்கு. உடல் உனக்கு. உரம் விவசாயிக்கு. மயிர் திருப்பதிக்கு. நீயில்லாமல் நான் இல்லை.. வாழ வைத்த தமிழகமே.. உன்னை மறக்க மாட்டேன் ( அரே மேரே பீவி போன் ஆகயா கியா ?)//

எப்படிங்க இப்படியெல்லாம் கலக்கல் போங்க :-))

// முடிஞ்சா சத்யம் ராஜுவையும் சினிமாவுல நடிக்க வையுங்க. அப்புறம் "சத்யமேவ ஜெயதே"ன்னு கூட பேரு வைங்க.//

கலக்கல் காம்பினேசன்.என்றும் நிலைக்கட்டும்.

// உங்களைப் போல எல்லாரும் இருந்தா எப்படி பெரிய ஸ்டார்கள் பல கோடி வருமானம் சம்பாதிக்க முடியும்? //

அதுக்குத்தான் நாங்க இருக்கோம்ல.

வழக்கம் போல அருமையான பதிவு.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி.

//நானும் நண்பனும் பெங்கலூரில் PVR தியேட்டருக்கு No smoking படத்துக்கு போனோம்.அவன் வேண்டாம்னுதான் சொன்னான் நான் தான் அந்த தியேட்டர பாத்தகனு்ம்னு போவனும்னு சொல்லி போயிப்பாத்தா டிக்கட்டு விலை 250 ரெண்டு பேருக்கு 500 வண்டிப்பாசு 30 உள்ள ஒன்னும் விலையே கேக்கமுடியல.35 ரூபாய்க்கு பாப்கான் வாங்கித்தின்னோம்.இப்படி இருந்தா எவ்ளவு பெரிய ஆலாஇருந்தாலும் தொடர்ந்து அரங்குல படம் பாக்கமுடியாது.(படத்தப்பத்தி சொல்லவெவேனாம்)//

பெரியவர்களாக இருந்ததால் பாப்கார்னோடு முடிந்தது. குழந்தையும் கூட்டிக் கொண்டு போனால், பர்ஸ் நிலைமை என்ன ஆகும் என்று பாருங்கள்? குழந்தை கையில் படம் முடியும் வரை ஏதாவது ஒன்று இருந்தால்தான் நாம் நிம்மதியாக சினிமா பார்க்க முடியும். இந்த தியேட்டர் ஓனர்கள் ஆசைப் படலாம், ஆனால் அநியாத்திற்கு பேராசை பட்டு இவ்வளவு விலை வைக்கக் கூடாது.

//மதன் சொல்லுவாரு வரலாறுல இருந்து நாம கத்துகிட்டது என்னன்னா ஒன்னுமே கத்துலகலைங்கிறதுதான். போனவருசம் பெரிய தலைங்கலோட படம் எதுவுமே ஓடலை.கதைதான் ஹீரோங்கரத காட்டிருக்கு.அதையேன் இந்த தயாரிப்பாளர்கள் புரியமாட்டிங்குது.//

நாம் கூட எத்தனை தடவைதான் அரைத்த மாவையே அரைக்கும் இந்த ஸ்டார் நடிகர்களின் படங்களை திரும்ப திரும்ப பார்ப்போமோ என்ற கேள்விக்கு நமக்கே விடை புரிவதில்லை.

//கலக்கல் காம்பினேசன்.என்றும் நிலைக்கட்டும்.//

வாழ்த்துக்களுக்கு நன்றி.

மங்களூர் சிவா said...

சதையை நம்பி படம் எடுப்பதை விட்டு கதையை நம்புங்கள் டைரக்டர்களே!

@பொதுஜனம்
கமெண்ட் கலக்கல்.

Maximum India said...

அன்புள்ள சிவா

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா கம்மன்ட் போட்ட சிவாவுக்கு தேங்க்ஸ். :)

Blog Widget by LinkWithin