The Art of Appraisal
-
Big Boss: This year your performance was good, excellent and outstanding.
So, your rating is "average".
Kumar: What? How come 'average'?
Big Boss: Becau...
பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (104)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (9)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Friday, January 9, 2009
மக்களின் வெற்றி
பொதுவாக ஒரு மாநிலத்தில் நடைபெறும் இடைத் தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றி பெறும். அதுவும் ஒரு மாநிலத்தின் முதல்வர் தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் இடைத் தேர்தலில் நின்றால் கேட்கவே வேண்டாம். எத்தனையோ நிர்பந்தங்கள் இருந்தாலும் சரியான முறையில் வாக்களித்து சட்டங்கள் தண்டிக்க தவறிய ஒருவரை தண்டித்தவர்கள் நாமெல்லோரும் படிப்பறிவிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியவர்களாக கருதும் ஜார்கண்ட் மாநில மக்கள். அவர்களின் வெற்றியைக் பாராட்டுவதுடன் இந்த தேர்தலில் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை யாவை என்று பார்போம்.
இந்தியாவில் ஒரு கடைந்தெடுத்த அரசியல்வாதி எப்படி இருப்பார் என்ற கேள்விக்கு தயக்கமே இல்லாமல் உதாரணம் காட்டக் கூடிய வகையில் இந்திய அரசியல்வாதிக்கு தேவையான எல்லா சாமுத்ரிகா லட்சணங்களும் கொண்டவர் திரு.ஷிபு சோரேன்.
ஒரு அரசியல்வாதியாக இருப்பதற்கு என்ன தகுதி இல்லை அவரிடம்?
ஊழல் குற்றச் சாட்டுக்கள்.
கிரிமினல் குற்றச் சாட்டுக்கள்
கொலைக் குற்றச்சாட்டுக்கள்.
தலைமறைவு வாழ்க்கை
காவலர்களால் கைது
நீதி மன்றங்கள் வழங்கிய தண்டனைகள்.
முன்ஜாமீன் மனுக்கள்
சிறை வாசம்
மேல் முறையீடுகளின் மூலம் தண்டனைகளில் இருந்து தகுந்த ஆதாரம் இல்லாமல் தப்பித்தல். (இங்கு கவனிக்க வேண்டியது. நிரபராதி என்பதால் அல்ல)
தில்லி உயர்நீதி மன்றமே ஒரு வழக்கில் குற்றங்களை காவல் துறை சரிவர நிருபிக்காததைச் சுட்டிக் காட்டியது. (Delhi High Court in August, 2007 cited the CBI as "miserably failing" in proving Soren's involvement in the crime.)
கூட்டணி மாற்றங்கள்.
கூட்டணி பேர குற்றச்சாட்டுகள்
ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டுகள்
இவை மட்டுமல்ல, முதல் முறையாக மத்திய மந்திரியாக இருக்கும் ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டுக்காக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்ட பெருமையும் கொண்டவர் இவர். அதன் அடிப்படையில் மிகுந்த நிர்பந்தங்களுக்கு பின்னரே பதவியை ராஜினாமா செய்த இவர் உடனடியாக தலை மறைவும் ஆக முடிந்த மந்திரக் கலைகள் கற்றவர்.
இவரைப் பற்றி உலகமே அறிந்திருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் கூட்டணி தர்மங்களின் (?) அடிப்படையில் இவருக்கு பலமுறை பதவிகள் மத்தியிலும் மாநிலத்திலும் வழங்கப் பட்டன. கடைசியாக, ஜார்கண்ட் மாநிலத்தின் பழைய முதல்வரைக் கவிழ்த்த இவரது கூட்டணி இவ்வளவு தகுதிகள் பெற்ற இவரையே முதல்வராக்கியது.
பதவி ஏற்று ஆறு மாதங்களுக்குள் எம்.எல்.ஏ. பதவியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இடைத் தேர்தலில் நின்ற இவருக்கு ஜார்கண்ட் மக்கள் ஒரு சரியான தீர்ப்பை வழங்கியுள்ளனர். (இப்போது கூட முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்ள புதிய முயற்சிகள் செய்வதாக கேள்வி). இந்த தேர்தலில் நிஜமாக வெற்றிப் பெற்றவர்கள் அந்த தொகுதி மக்களே என்பது என் கருத்து.
இந்த உண்மையான இந்திய குடிமக்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது யாவை என்று பார்ப்போம்.
தவறாமல் வாக்களிப்பது.
தயங்காமல் தவறிழைத்தவர்களை வாக்கினால் வீழ்த்துவது.
தேர்தலில் நிற்பவர்கள் எல்லாரும் மோசமாக இருக்க முடியாது. கண்டிப்பாக யாராவது ஒருவராவது நல்ல நோக்கங்களுடன் போட்டியிடுவார். அவரை கண்டறிந்து வாக்களிப்பது நமது கடமை.
நமது காலுக்குக் கீழ் சிலகாலம் உழைக்கின்ற செருப்பைத் தேர்வு செய்வதற்காக பல கடைகள் ஏறி இறங்கும் நாம், நமது தலையில் மேல் ஏறி பல வருடங்கள் உற்காரும் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க கொஞ்சம் சிரமப் பட்டால் தவறில்லை.
நன்றி.
Labels:
அரசியல்,
செய்தியும் கோணமும்
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
மக்களுக்கு விழிப்புணர்வு வந்துவிட்டது,
எனக்குள் ஒரு நம்பிக்கை பிறக்கிறது
நாளைய சமுதாயம் நலம்பெற வாழும்
அன்புள்ள வால்பையன்
பின்னூட்டத்திற்கு நன்றி.
//மக்களுக்கு விழிப்புணர்வு வந்துவிட்டது,
எனக்குள் ஒரு நம்பிக்கை பிறக்கிறது
நாளைய சமுதாயம் நலம்பெற வாழும்//
உங்களுடைய என்னுடைய நம்முடைய நம்பிக்கைகள் விரைவில் பலிக்கட்டும்.
நாளை நமதே.
நீதித்துறை இப்போ நிதித்துறை ஆனதன் விளைவு சிபு போன்றவர்கள் வெளியே நடமாடுவது
மக்கள் இப்போ கிழிச்சது சிபுவை மட்டுமல்ல காங்கிரசையும் சேர்த்துத்தான்.
அன்புள்ள கார்த்திக்
பின்னூட்டத்திற்கு நன்றி
//நீதித்துறை இப்போ நிதித்துறை ஆனதன் விளைவு சிபு போன்றவர்கள் வெளியே நடமாடுவது //
நிதானத் துறை ஆனதும் ஒரு காரணம்.
//மக்கள் இப்போ கிழிச்சது சிபுவை மட்டுமல்ல காங்கிரசையும் சேர்த்துத்தான்.//
பல விடுதலை தியாகிகள் கண்ணீர் ஊற்றி வளர்த்த கட்சி இன்று பதவி மோகத்தில் அலைகிறது. மக்கள் ஒரு அருமையான பாடம் எடுத்துள்ளனர். இது போன்ற பாடங்கள் தொடர வேண்டும். மக்கள் மீது அரசியல்வாதிகளுக்கு ஒரு பயம் வர வேண்டும்.
neeraminmai kaaranamaaka neendanatgalaaka pinnudam ida mudiyavillai
He is punished by this defeat alright.
But who will punish the people to retain their power who gave him power and positions so far? Say "Con" gress.
Everyone has declared victory for Pakistan in the latest Mumbai blasts, including Pakistan itself.
Our cowards are sleeping and flying with dossier to every country.
I still dont get any hope, US enacted Sarbanes Oxley laws immediately after Enrron (but what is the use, thats different). Atleast they acted, lets see what our government does after "Satyam" and we all can conveniently forget Mumbai blast, and wait for Jan 26th for another blast. Like first and last day of the month, we can mark a terrorism day also, we have become so numb.
Sorry, about these comments, I simply cannot digest the fact, that our government is still there.
It's ok dg
Dear Itsdifferent
Thank you for the comments.
I respect your views. I think many people share your views.
இந்திய ஜனநாயகம் முன் அளவற்ற நம்பிக்கை உள்ளவர் சிபு சோரன். பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருபவரை இப்படியா கிண்டல் செய்வது. நம் மந்திய சாரி மத்திய அரசை கை கொடுத்து காப்பாற்றிய கனவான் அவர். விடா முயற்சியின் அடையாளம் அவர். எவ்ளோ அடிச்சாலும் தாங்கி திரும்ப வரும் அவர் நம் பிள்ளைகளுக்கு நல்ல உதாரணம்.
இவர் ஒரு போக்கிரி என்றால் இவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தவர்கள் எல்லாம் முட்டாள்களா?. நிலக்கரி நோண்டி எடுத்த துறையில் தோண்டி தோண்டி மக்கள் சேவை செய்தவர் என்பதால் இவர் மீதான வழக்கு களை போலீசார் தோண்டுகின்றனர். இந்த முறை ஏதாவது "உள்ளதுறை" சாரி உள்துறை மாதிரி கொடுத்தால் கிரிமினல் களை நன்கு அறிந்து செயல்படுவார். இவருக்கு கிரிமினல் துறையில் டாக்டர் பட்டத்தை எந்த காயலான் கடை யுனிவெர்சிட்டி யாவது கொடுத்தால் நன்றாக இருக்கும்.
பார்க்க நல்ல ஞானி போல் இருக்கும் இவர் மீதா சந்தேக படுகிறீர்கள்? அரசியல் வாதிகள் கொலை செய்ய கூடாதா என்ன?. சிபு சார்.. இவங்க இப்படி தன் பாஸ். நியாயம் தர்மம் னு சொல்லி கொழப்புவாங்க. நீங்க போய்டே இருங்க. செவுத்துல ஆன் பாத்ரூம் அடிச்சவர்லாம் துணை பிரதம மந்திரியா இருந்த நாடு இது. நீங்க சும்மா கொலை தானே பண்ணீங்க. சூனா பானா போய்டே இரு..போ போ .
அன்புள்ள தமிழ்சினிமா!
//விரைவில் துவங்க உள்ள நெல்லைத்தமிழ் இணையத்தின் திரட்டியில் இணையலாமே...//
நிச்சயமாக. புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நன்றி
அன்புள்ள பொதுஜனம்
மீண்டுமொரு கலக்கலான பின்னூட்டத்திற்கு நன்றி
என்னத்த சொல்ல?
சரியான நெத்தி அடிதான் போங்க. நமது கடித பரிமாற்ற நாட்களை நினைவூட்டியது இந்த பின்னூட்டம். ஒரே வித்தியாசம் நான் தனியாக சிரிப்பதை பார்க்க அங்கே (பொன்னம்பேட் ) யாரும் இருக்க வில்லை.
I second Mr.Pothujanam.
You underunderestimated the great patriot Shibu , Wait and See his raise again with the support of other patriots.
அன்புள்ள கபீஷ்
பின்னூட்டத்திற்கு நன்றி
ஐயா, சிபு தோற்றதில் உங்கள் மகிழ்ச்சி புரிகிறது. ஜனநாயகத்துக்கு அவ்வப்போது காலரைத் தூக்கி விட்டுக்கொள்ள நிகழ்வுகள் வேண்டியது தான். ஆனால், ஒன்று நெருடுகிறது. வென்றவர் யார்? கொலை போன்ற குற்றங்களுக்காக சிறை சென்று திரும்பியவர். சில பல குற்றப் பத்திரிகைகள் விசாரணையில் இருக்கின்றன. அவற்றில் கொலையும்/ கொலைகளும் அடக்கம். ஜனநாயகத்தை ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும்
அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா!
வெகுநாட்களுக்கு பின் வந்த உங்கள் பின்னூட்டத்தை கண்டதில் மிக்க மகிழ்ச்சி.
//ஐயா, சிபு தோற்றதில் உங்கள் மகிழ்ச்சி புரிகிறது. ஜனநாயகத்துக்கு அவ்வப்போது காலரைத் தூக்கி விட்டுக்கொள்ள நிகழ்வுகள் வேண்டியது தான். ஆனால், ஒன்று நெருடுகிறது. வென்றவர் யார்? கொலை போன்ற குற்றங்களுக்காக சிறை சென்று திரும்பியவர். சில பல குற்றப் பத்திரிகைகள் விசாரணையில் இருக்கின்றன. அவற்றில் கொலையும்/ கொலைகளும் அடக்கம். ஜனநாயகத்தை ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும்//
சரியாக சொன்னீர்கள். வாக்களிக்கும் மக்களுக்கு உள்ள சாய்ஸ் மிகவும் குறைவு. யார் குறைந்த அளவு கெட்டவன் என்பதை பார்த்து வாக்களிக்கும் அவல நிலை இப்போது இந்தியாவில் உள்ளது. அதே சமயம் மக்கள் குறைந்த பட்சம் இந்த நெகடிவ் தேர்வு முறையை சிறப்பாக தொடர்ந்து பின்பற்றினாலே கூட நம் நாட்டிற்கு கொஞ்சமாவது நன்மைகள் கிடைக்கும்.
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
Post a Comment