The Art of Appraisal
-
Big Boss: This year your performance was good, excellent and outstanding.
So, your rating is "average".
Kumar: What? How come 'average'?
Big Boss: Becau...
பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (104)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (9)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Monday, January 26, 2009
பூவா? தலையா?
ஒபாமா மீது அமெரிக்க மக்கள் நம்பிக்கை வைத்த அளவிற்கு அவர் மீது சந்தைகள் நம்பிக்கை வைக்க வில்லை. சொல்லப் போனால், சந்தைகளினால் மிகவும் மதிக்கப் படும் வர்த்தக குருக்களில் ஒருவரான திரு.ஜிம் ரோஜர்ஸ் அவர்கள், ஒபாமா அமெரிக்காவின் மிக மோசமான அத்தியாயத்தை துவங்கி வைப்பார் என்ற பொருளில் பேசி இருப்பது குறிப்பிடத் தக்கது. அவருடைய பொருளாதார கொள்கைகள் அமெரிக்காவை மீண்டும் ஒரு மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்றும் ஜிம் ரோஜர்ஸ் கூறி இருப்பது அங்குள்ள சந்தை வணிகர்களின் மனப் போக்கினை எதிரொலிக்கிறது. மேலும், அமெரிக்காவின் பொருளாதாரத்தின் மீதும் அங்குள்ள நிறுவனங்களின் மீதும் நம்பிக்கை இழந்த வர்த்தகர்கள் பங்குகளை பெரிய அளவில் விற்றது இங்குள்ள பங்கு சந்தைகளிலும் எதிரொலித்து சென்ற வார சந்தைகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
சென்ற வார நிலவரம்
மேலே கூறியது போல அமெரிக்காவின் பொருளாதாரத்தின் போக்கு பற்றிய கவலை உலக சந்தைகளில் சென்ற வாரம் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. IBM நிறுவனத்தின் காலாண்டு நிதி அறிக்கை நம்பிக்கையை தந்தாலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிதி அறிக்கை ஏமாற்றத்தையே தந்தது. மேலும் அங்குள்ள வங்கிகள் வீழ்ச்சியிலிருந்து மீளுமா என்ற மிகப் பெரிய கேள்வியும் வர்த்தகர்களை தடுமாறச் செய்தது. அதே சமயம் ரிலையன்ஸ் நிறுவனம் சந்தையின் எதிர்பார்ப்பை விட நல்ல ஒரு நிதி அறிக்கையைத் தந்தாலும் ஆடிக் காற்றில் அடித்துச் செல்லப் பட்ட அம்மிக் கல்லாகவே அது இருந்தது. மேலும், சத்யம் நிறுவனத்தில் லார்சன் நிறுவனம் காட்டி வரும் அக்கறை சத்யம் பங்குகளுக்கு உதவியாக இருந்தாலும், லார்சன் நிறுவன பங்குகள் சரிய காரணமாக இருந்தது. பணவீக்கம் சந்தை எதிர்பார்ப்புகளை விட மிக அதிகமாக இருந்ததால், வட்டி குறைப்பு பற்றிய எழுந்த சந்தேகங்கள் சந்தை வீழ்ச்சிக்கு மற்றொரு காரணமாக அமைந்தது. இந்த வாரமும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்று வந்தன.
மொத்தத்தில் சந்தைக்கு மிகுந்த ஏமாற்றம் தந்த ஒரு வாரமாகவே சென்ற வாரம் அமைந்தது. சென்செக்ஸ் கிட்டத்தட்ட 650 புள்ளிகள் குறைய மற்ற முக்கிய குறியீடுகள் அனைத்துமே பெரும் இழப்பை சந்தித்தன. ரியல் எஸ்டேட் துறை எப்போதும் போல மிகப் பெரிய இழப்பைச் சந்தித்தது. உலோகங்கள் மற்றும் வங்கித் துறை பங்குகளும் பெரும் இழப்பைச் சந்தித்தன. நிபிட்டி 2700 புள்ளிகளுக்கு மிக அருகிலேயே முடிவடைந்தது சற்று தெம்பைத் தருகிற விஷயம். ஆனால், சென்செக்ஸ் ஜனவரி 2008 க்கு பிறகு மிகக் குறைந்த அளவில் (வாராந்திர அடிப்படையில்) முடிவடைந்திருப்பது வருத்தமான விஷயம்.
வரும் வார நிலவரம்
வரும் வாரத்தின் முதல் நாள் சந்தை வணிகம், குறுகிய கால நோக்கில் சந்தைகளின் போக்கை நிர்ணயிக்க உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஏற்கனவே சொன்னபடி, நிபிட்டி தனது முக்கிய அரண் நிலையான 2700 க்கு மிக அருகிலேயே முடிவடைந்திருப்பது ஒரு நல்ல விஷயம். ஆனால், துவக்கத்தில் ஏதேனும் வீழ்ச்சி ஏற்படுமேயானால், அது சந்தையை மீண்டும் 2500 புள்ளிகளுக்கு கொண்டு சென்று விடும் ஆபத்து உள்ளது. வரும் வாரத்தில் வெளியிடப் பட உள்ள இந்திய தலைமை வங்கியின் காலாண்டு அறிக்கையில் ஏதேனும் வட்டிக் குறைப்பு இருக்குமா என்று சந்தைகளில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் வரும் வாரம் நடை பெற உள்ள அமெரிக்க தலைமை வங்கியின் கூட்டமும் சந்தைகளால் உன்னிப்பாக கவனிக்கப் படும்.
வரும் வாரத்திற்கான எதிர்ப்பு நிலைகள்
சென்செக்ஸ் - 8850-8950, 9450-9550,
நிபிட்டி 2700-2730, 2800-2850
வரும் வாரத்திற்கான அரண் நிலைகள்
சென்செக்ஸ் - 8550-8450, 7750-7650,
நிபிட்டி - 2550-2600, 2405-2430
மொத்தத்தில் இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாகவே இருந்தாலும் கீழ் நோக்கி செல்லவே வாய்ப்புகள் அதிகம். அதே சமயத்தில் நிபிட்டி 2730 க்கு மேல் முடிவடையும் பட்சத்தில் ஒரு குறுகிய கால மேல்நோக்கிய பயணத்தை சந்தை மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. வர்த்தகர்கள் மிக கவனத்துடன் செயல் பட வேண்டியது அவசியம்.
சந்தை சரிவைச் சந்திக்கும் பட்சத்தில், முதலிட்டாளர்கள் நன்கு செயல் படும் நிறுவனங்களின் பங்குகளை நீண்ட கால நோக்கில் வாங்கலாம்.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வர்த்தகம் மிகுந்த ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்பனை செய்வது ரூபாய் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். மற்றும் மேலே சொன்ன இதர சந்தை காரணிகள் ரூபாய் வர்த்தகத்தையும் பாதிக்கும். இந்திய ரூபாய் 50.00 அளவை தொட கூட வாய்ப்புகள் உண்டு.
வரும் வாரம் சிறப்பான வாரமாக அமைந்திட வாழ்த்துக்கள்.
Labels:
பங்கு சந்தை,
பொருளாதாரம்
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
// சந்தை சரிவைச் சந்திக்கும் பட்சத்தில், முதலிட்டாளர்கள் நன்கு செயல் படும் நிறுவனங்களின் பங்குகளை நீண்ட கால நோக்கில் வாங்கலாம்.//
சில பங்குகளை பரிந்துரை செய்யலாமே.
சிக்கல்யேதும் இல்லாத பட்சத்தில் :-))
//சில பங்குகளை பரிந்துரை செய்யலாமே.
சிக்கல்யேதும் இல்லாத பட்சத்தில் :-))
//
Karthick, Shall I?:-):-)
// Karthick, Shall I?:-):-) //
இப்ப புதுசா ஒரு அக்கவுண்டு ஓபன் செய்தேன்.கை பரபரானு இருக்கு.நல்லதா பாத்து சொல்லுங்க.
அன்புள்ள கார்த்திக்
பின்னூட்டத்திற்கு நன்றி
//சில பங்குகளை பரிந்துரை செய்யலாமே.
சிக்கல்யேதும் இல்லாத பட்சத்தில் :-))//
நான் முதலில் நினைத்தேன். ஆனால், பங்கு சந்தை இப்போதுள்ள நிலையில் பங்குகளின் (நிறுவனங்களின்) ஏற்ற இறக்கங்கள் எளிதில் கணிக்க முடியாதவாறு (சத்யம் ஒரு சிறந்த உதாரணம்) உள்ளன. மேலும், இவ்வாறு மாற்றங்கள் வெகு வேகமாக நிகழ்ந்து விடும் போது, நம்மை நம்பி பணம் போட்டவர்களுக்கு நம்மால் எச்சரிக்கை செய்ய இயலாமல் பொய் விடும் என்பதாலேயே வலைப்பூவில் பங்குகளின் பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன். அதே சமயம், வர்த்தக பரிந்துரைகளை (தகுந்த ஸ்டாப் லாஸ் லிமிட் உடன்) செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
மற்றும் உங்களுக்கு தேவையான போது நீங்கள் என்னை மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம். அப்போது, முடிந்த வரை தகுந்த யோசனைகளைக் கூற முடியும்.
ஏற்கனவே ஒரு ஸ்டாக் சொன்னேனே! வாங்கினீங்களா? நல்ல லாபம் இப்ப இருக்குமே? :)
அன்புள்ள கபீஷ்
என்ன ஆயிற்று உங்களுக்கு இன்று? ஒரே கலக்கலோ கலக்கல். நான் பின்னூட்டங்களுக்கு பதில் போடுவதற்கு முன்னர் நீங்கள் ஒரு பதில் பின்னூட்டம் போட்டு விடுகிறீர்கள். இது மட்டும் போதாது என்று பங்குகள் வேறு பரிந்துரைக்கிறேன் என்கிறீர்கள். (எனக்கு கூட ஒரு நல்ல பங்கு சொல்லுங்களேன்)
வாழ்த்துக்களுடன் நன்றியும் கூட. :-) :-)
// ஏற்கனவே ஒரு ஸ்டாக் சொன்னேனே! வாங்கினீங்களா? நல்ல லாபம் இப்ப இருக்குமே? :)//
இல்லைங்கணா எதுவும் வாங்க்லைங்க.
மார்க்கட் நாங்க ஒரு கணக்கு போட்ட அது ஒரு மாதிரி போகுது.பழைய அடி இன்னும் நெனப்பிருக்கு :-)).இது சரியான நேரம்னு தோனுது நீங்களும் பதிவே போட்டுட்டீங்க.
இந்தமுறை SIP தான் சரின்னு தோனுது என்ன சொல்லுரீங்க.
அன்புள்ள கார்த்திக்
ஒன்னென்ன? ஒன்பதே சொல்லி விடுகிறேன்.
SBI, ONGC, NTPC, BHARTI AIRTEL, IDFC, AXIS BANK, NIFTY BEES , LARSEN & GOLD BEES
எந்தெந்த விலையில வாங்கறதுன்னு ஒரு தரம் செக் பண்ணிட்டு சொல்கிறேன். மார்க்கெட் ரொம்பவே விழுந்துட்டதாலே SIP தேவையில்லே. நாமே நான்கு ஐந்து வருட நோக்கில் நேரடி முதலீடு பண்ணலாம். நான் உதவி செய்யறேன்.
அப்புறம் disclaimer: சந்தை முதலீடுகள் அபாயங்களுக்கு உட்பட்டவை. இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும். (செபி உத்தரவின் படி )
:-)
Reliance Industries
Reliance capital
Tata steel
Power grid
Suzlan
L & T
Punj LLoyd
Tata Power
Reliance communications
Reliance Capital
Karthik, actually i was kidding you :-) :-) Above few i bought, but I dont recommend you. just information(This is mun echarikkai disc)
//மார்க்கெட் ரொம்பவே விழுந்துட்டதாலே SIP தேவையில்லே.//
Yessu :-)
//கை பரபரானு இருக்கு.//
Then plz transfer some amount to my a/c :-):-)
//Then plz transfer some amount to my a/c :-):-)//
எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கிறீர்கள்? :)
//எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கிறீர்கள்? :)//
No competition. Just kabheesh the fool(What a proud!) :-)
//Reliance Industries
Reliance capital
Tata steel
Power grid
Suzlan
L & T
Punj LLoyd
Tata Power
Reliance communications
Reliance Capital
Karthik, actually i was kidding you :-) :-) Above few i bought, but I dont recommend you. just information(This is mun echarikkai disc)//
ரிலையன்ஸ் குரூப்பில் இப்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ரிலையன்ஸ் காம் கொஞ்சம் கஷ்டம். அப்புறம் டாட்டா நெறைய கடன் வாங்கி இருக்கிறார். சுஜ்லோன் ப்ளேட் ப்ரோப்லேம். லார்சன் பரவாயில்லை. ஆனால் அதற்கு சத்யம் தொந்தரவு கொடுக்கும். புஞ் லாயிட் நல்ல கம்பெனி. ஆனால் இப்போதைக்கு அடிப்படை கட்டமைப்பு தடுமாறுகிறது.
அன்புள்ள கபீஷ்
//No competition. Just kabheesh the fool(What a proud!) :-)//
ஹே! நான் ஏதோ உங்களை பெரிய அறிவாளின்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். உங்களோட ப்லோக், பின்னூட்டங்கள் உங்கள ஒரு சிந்தனை சிற்பின்னு காட்டுது. கொஞ்சம் ஓவரா தெரியுதா? இது போலத்தான் உங்களோட அநியாய தன்னடக்கமும். : -)
என்னோட பரிந்துரை.
நல்ல அடிப்படை கட்டமைப்பு உள்ள பங்குகளை வாங்குங்கள் .
நீண்ட கால நோக்கில் வாங்குங்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்யுங்கள்.
ஒரே நிறுவனத்தில் முதலீடு செய்யாதீர்கள்
பொறுமையுடன் காத்திருங்கள்.
disclaimer.
பங்கு சந்தை எல்லா அபாயங்களுக்கும் உட்பட்டது.
நல்ல கம்பனி நொள்ள கம்பனி ஆக வாய்ப்புகள் அதிகம்.
பேலேன்ஸ் சீட் என்பது முதலாளியின் பேலேன்ஸ் சீட் .
அரசியல் அபாயங்களுக்கு உட்பட்டது .
அரண் நிலை : மஞ்ச நோட்டீஸ் கொடுக்கும் பொது.
எதிர்ப்பு நிலை : சொந்தங்களின் கம்பனிகளை திருட்டு தனமாக
வாங்கும்போது.
முதலீடு செய்யும் முன் பக்கத்து போலீஸ் ஸ்டேஷனில் முதலாளியின் கேஸ் களை ஒரு முறை பார்ப்பது நல்லது.
எதற்கும் ஒரு முறை "எதுவும் தெரியாத " உதயன் முகர்ஜியிடம் அறிவுரை கேட்டால் " விளங்கிடும்".
அன்புள்ள பொதுஜனம்
பரவாயில்லேயே? நீங்களும் ஒரு சந்த (நொந்த) வல்லுநர் ஆகி விட்டீர்களே.
என்னோட பங்குக்கு ஒன்ன சொல்லிடறேன். சந்தையிலே முதலீடு செய்பவர்கள் அநியாயத்திற்கு நல்லவர்களாக இருக்க வேண்டும். அதாவது எவ்வளவு அடி (இடி) விழுந்தாலும் ஒண்ணுமே சொல்லாம இருக்கணும். ஏன்னா அவங்களதான் ரொம்ப நல்லவங்கன்னு சொல்லிட்டாங்களே.
//என்னோட பரிந்துரை.
நல்ல அடிப்படை கட்டமைப்பு உள்ள பங்குகளை வாங்குங்கள் .
நீண்ட கால நோக்கில் வாங்குங்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்யுங்கள்.
ஒரே நிறுவனத்தில் முதலீடு செய்யாதீர்கள்
பொறுமையுடன் காத்திருங்கள். //
நன்றி
//disclaimer.
பங்கு சந்தை எல்லா அபாயங்களுக்கும் உட்பட்டது.
நல்ல கம்பனி நொள்ள கம்பனி ஆக வாய்ப்புகள் அதிகம்.
பேலேன்ஸ் சீட் என்பது முதலாளியின் பேலேன்ஸ் சீட் .
அரசியல் அபாயங்களுக்கு உட்பட்டது .
அரண் நிலை : மஞ்ச நோட்டீஸ் கொடுக்கும் பொது.
எதிர்ப்பு நிலை : சொந்தங்களின் கம்பனிகளை திருட்டு தனமாக
வாங்கும்போது.
முதலீடு செய்யும் முன் பக்கத்து போலீஸ் ஸ்டேஷனில் முதலாளியின் கேஸ் களை ஒரு முறை பார்ப்பது நல்லது.
எதற்கும் ஒரு முறை "எதுவும் தெரியாத " உதயன் முகர்ஜியிடம் அறிவுரை கேட்டால் " விளங்கிடும்".//
பரிந்துரைய விட DISCLAIMER சூப்பர். ஒரே ஒரு சிறு திருத்தம்
பேலேன்ஸ் சீட் என்பது முதலாளியின் பேங்க் பேலேன்ஸ் புக். மத்தபடிக்கு எல்லாமே சூப்பர்.
//SBI,NTPC
இது ரண்டுலையும் NTPC ok தான்.
கபீஸ் நரநரரர... :-))
// Tata steel //
இதப்பத்தி ஒரு தனி பதிவே போடலாம்.
நான் ஒரு பெரிய இவன் மாதிரி என்கிட்ட ஷார் வாங்க சொல்ல சிலர் சொல்லிருந்தாங்க.அவங்க எல்லாருக்கும் Power grid,Suzlan,L&T,Punj Loyd நீஙலாக மற்ற கம்பெனிகள் எடுத்துவத்தேன்.இது போக RNRL,RPL...இப்படி இன்னும் இருக்கு.
இது TATA Steel அந்த கம்பெனியை வாங்குனதால நல்ல லாபம்னு சொன்னதால Tata power வச்சிருந்தான் நம்ம பையன் அதையக்குடுத்து இதைய வாஙிநேன்.இப்போ என்னாடான்ன அந்த கம்பனியே 2009ல தான் இவங்க கைக்கு வருதாம.இதெல்லாம் இப்போதான் சொல்லுராங்க.
// Then plz transfer some amount to my a/c :-):-) //
வேனும்னா சொல்லுங்க Krishna Lifestyle னு ஒரு கம்பனி ஷேர் இருக்கு ஒரு 2000 இருக்கும்னு நெனைக்குரேன்.அத வேனாதரேன்.அதுவும் நான் வாங்கி ஒரு மூனுவருசமாவது இருக்கும்.2.50 காசுக்கு வாங்கினேன்.கடைசியா பாக்கும் போது 0.75 பைசா இப்பொ இருக்கா இல்லையான்னே பாப்பதில்லை.
// பங்கு சந்தை எல்லா அபாயங்களுக்கும் உட்பட்டது.
நல்ல கம்பனி நொள்ள கம்பனி ஆக வாய்ப்புகள் அதிகம்.
பேலேன்ஸ் சீட் என்பது முதலாளியின் பேலேன்ஸ் சீட் .
அரசியல் அபாயங்களுக்கு உட்பட்டது .
அரண் நிலை : மஞ்ச நோட்டீஸ் கொடுக்கும் பொது.
எதிர்ப்பு நிலை : சொந்தங்களின் கம்பனிகளை திருட்டு தனமாக
வாங்கும்போது.
முதலீடு செய்யும் முன் பக்கத்து போலீஸ் ஸ்டேஷனில் முதலாளியின் கேஸ் களை ஒரு முறை பார்ப்பது நல்லது.
எதற்கும் ஒரு முறை "எதுவும் தெரியாத " உதயன் முகர்ஜியிடம் அறிவுரை கேட்டால் " விளங்கிடும்".//
எப்படி இப்படியெல்லாம்.
கலக்கல்ங்க பொதுஜனம்.
உதுதான் உங்க டச்.
அருமை போங்க.
//ஹே! நான் ஏதோ உங்களை பெரிய அறிவாளின்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். உங்களோட ப்லோக், பின்னூட்டங்கள் உங்கள ஒரு சிந்தனை சிற்பின்னு காட்டுது.
//
நெம்ப நன்றிங்க ! (விளையாட்டுக்கு சொன்னாலும் நாங்க சீரியசா தான் எடுத்துக்குவோம்.)
//கொஞ்சம் ஓவரா தெரியுதா?//
இல்லைங்க இது ரொம்ப கம்மி நீங்க வாலி எழுதற வெண்பா படிக்கறதில்லையா?
//இது போலத்தான் உங்களோட அநியாய தன்னடக்கமும். : -)//
இது ஓவர் தன்னடக்கம் இல்லைங்க. இப்படி சொன்னாதான் மக்கள் புகழுவாங்க அப்படிங்கறது விதுர நீதி :-):-) அதாகப்பட்டது என்ன புகழுங்கோன்னு மறைமுகமா சொல்றது
அன்புள்ள கார்த்திக்
//இது ரண்டுலையும் NTPC ok தான்.//
ஆனா SBI கூட (வில ரொம்ப கம்மி ஆயிட்டதால) இப்ப பரவாயில்லே.
//கபீஸ் நரநரரர... :-))//
கபீஷ் ஹர ஹர (ஏன்னா இன்னைக்கு ஒரே கலக்கல்) :)
//நான் ஒரு பெரிய இவன் மாதிரி என்கிட்ட ஷார் வாங்க சொல்ல சிலர் சொல்லிருந்தாங்க.அவங்க எல்லாருக்கும் Power grid,Suzlan,L&T,Punj Loyd நீஙலாக மற்ற கம்பெனிகள் எடுத்துவத்தேன்.இது போக RNRL,RPL...இப்படி இன்னும் இருக்கு.//
முடிந்த வரை மற்றவர்களுக்காக பங்குகளை வாங்காதீர்கள். ஏனெனில் FOLLOW பண்ணுவது கடினம். முடிந்தால் அட்வைஸ் மட்டும் கொடுங்கள்.
//வேனும்னா சொல்லுங்க Krishna Lifestyle னு ஒரு கம்பனி ஷேர் இருக்கு ஒரு 2000 இருக்கும்னு நெனைக்குரேன்.அத வேனாதரேன்.அதுவும் நான் வாங்கி ஒரு மூனுவருசமாவது இருக்கும்.2.50 காசுக்கு வாங்கினேன்.கடைசியா பாக்கும் போது 0.75 பைசா இப்பொ இருக்கா இல்லையான்னே பாப்பதில்லை.//
பரவாயில்லைங்கோ free ஆ கிடைச்சா கசக்குமா என்ன ? அதுவும் உங்களுக்கு வீணான டென்சன் வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் மட்டும் வாங்கிக் கொள்கிறேன் a/c no தனி மடலில் அனுப்புகிறேன். அவசரப் பட்டு இன்னிக்கே transfer செய்ய வேண்டாம் மெதுவா நாளைக்கு அனுப்பினா போதும்
//முடிந்தால் அட்வைஸ் மட்டும் கொடுங்கள்.//
அது நான் ரொம்ப நல்லா கொடுப்பேன். காசா பணமா?
அன்புள்ள கபீஷ்
//நெம்ப நன்றிங்க ! (விளையாட்டுக்கு சொன்னாலும் நாங்க சீரியசா தான் எடுத்துக்குவோம்.)//
முழுவதும் விளையாட்டல்ல. உங்களுக்கு உண்மையாலுமே நல்ல சிந்தனைகள் இருக்கிறது.
//இல்லைங்க இது ரொம்ப கம்மி நீங்க வாலி எழுதற வெண்பா படிக்கறதில்லையா?
இது ஓவர் தன்னடக்கம் இல்லைங்க. இப்படி சொன்னாதான் மக்கள் புகழுவாங்க அப்படிங்கறது விதுர நீதி :-):-) அதாகப்பட்டது என்ன புகழுங்கோன்னு மறைமுகமா சொல்றது//
இப்படியெல்லாம் என்னை பயமுருத்தாதீங்கோ. நமக்கு அதிகம் தெரிஞ்சது, பிசினஸ் லைன், எகோநோமிக் டைம்ஸ், பிசினஸ் ஸ்டாண்டர்ட், பினன்சியால் எக்ஸ்பிரஸ், அப்புறம் நம்ம தினத்தந்தி. மிஞ்சிப் போனா உதயான் முகர்ஜீ இவ்வளவுதான். எனக்கும் இலக்கியத்துக்கும் ரொம்பவே தூரம்.
// முடிந்தால் அட்வைஸ் மட்டும் கொடுங்கள்.//
இப்பெல்லாம் நான் யார்கிட்டையும் இதப்பத்தி பேசுரதே இல்லை.அவ்வள்வு டேமேஜ் ((:
// அவசரப் பட்டு இன்னிக்கே transfer செய்ய வேண்டாம் மெதுவா நாளைக்கு அனுப்பினா போதும்.//
அவ்லோதான மாத்திட்டாப்போச்சு :-))
//இப்படியெல்லாம் என்னை பயமுருத்தாதீங்கோ. //
நீங்க ரொம்ப பயந்ததுனால மன்னிப்பு கேட்காதபோதும் கருணை அடிப்படையில் மன்னிக்கிறேன்
PS: வெண்பா தெரிய இலக்கியம் தெரிய வேண்டாம் அரசியல் தெரிந்தால் போதும். ஐயோ எத்தனை தெரிய :-)
ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரை
சத்தமில்லாமல் ஒரு இடி.......காட்டில் மழை
நிஜார் போட்ட மனிதனின் பேஜார்
அன்புள்ள கபீஷ்
//நீங்க ரொம்ப பயந்ததுனால மன்னிப்பு கேட்காதபோதும் கருணை அடிப்படையில் மன்னிக்கிறேன் //
உங்களுக்கு ரொம்பவே பெரிய மனசுங்க.
//PS: வெண்பா தெரிய இலக்கியம் தெரிய வேண்டாம் அரசியல் தெரிந்தால் போதும். ஐயோ எத்தனை தெரிய :-)//
மறுபடியும் பயமுருத்தாமே கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.
அன்புள்ள புதுகைச் சாரல்
முதல் வருகைக்கு நன்றி
//ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரை
சத்தமில்லாமல் ஒரு இடி.......காட்டில் மழை
நிஜார் போட்ட மனிதனின் பேஜார்//
கொஞ்சம் உள்குத்துப் போல தெரிந்தாலும், உங்கள் கவிதை வரிகளை ரசித்தேன்.
சந்தை நிலவரத்தை கொஞ்சம் நேரம் இலக்கிய நிலவரமாக ஆக்கியதற்கு நன்றி.
Post a Comment