The Art of Appraisal
-
Big Boss: This year your performance was good, excellent and outstanding.
So, your rating is "average".
Kumar: What? How come 'average'?
Big Boss: Becau...
பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (104)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (9)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Saturday, April 18, 2009
புள்ள புடிக்கவரங்க வந்துட்டாங்கைய்யா! வந்துட்டாங்க!
இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் மாட்சுகள் ஆரம்பமாகி விட்டன. மக்களை ஐபிஎல் பக்கம் இழுக்க பல நாட்களாகவே விளம்பர வலைகளை வீசிக் கொண்டிருந்த கிரிக்கெட் நிறுவனங்கள் இன்று தமது "புள்ள புடிக்கும்" வேலையை முழு வீச்சில் துவங்கி விட்டன.
இன்றைக்கு காலைச் செய்தித் தாளை கிரிக்கெட் பற்றிய விளம்பரங்களே முழுவதுமாக அடைத்துக் கொண்டிருந்தன. அனைத்து ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளிலும் கிரிக்கெட் புராணங்கள் முழு வீச்சில் துவங்கி விட்டன. கிட்டத்தட்ட, உலகில் இன்றைய தேதியில் உலகில் கிரிக்கெட்டை விட்டால் வேறு எந்த நிகழ்வும் இல்லை என்பது போல செய்தி நேரம் கிட்டத்தட்ட முழுவதுமாக கிரிக்கெட்டுக்கு ஒதுக்கப் பட்டு விட்டது.
கிரிக்கெட்டில் இந்த முறை ஈடுபாடு காட்டக் கூடாது என்று நாம் எவ்வளவுதான் தலைகீழ் பிரயத்தனம் செய்தாலும், இந்த 'தொத்து வியாதியில்' இருந்து நம்மால் தப்பவே முடியாது. ஏனென்றால், நாம் தினந்தோறும் தொடரும் அனைத்து ஊடகங்களிலும் இதே செய்தியை மட்டுமே அதிகம் பார்க்க முடியும். அலுவலக விவாதங்களிலும் மெல்ல மெல்ல கிரிக்கெட் உள்ளே நுழைந்து விடும். ஒரு கட்டத்தில் "எங்கும் கிரிக்கெட் எதிலும் கிரிக்கெட்" என்றான பிறகு நாமும் இந்த கிரிக்கெட் பூதத்திடம் சரனைந்து விட வேண்டியதுதான். வேறு வழியே இல்லாமல் போய் விடும்.
யார் எவ்வளவு ரன் அடித்தார், யார் அடிக்க வில்லை, எந்த கேப்டன் சரியான முடிவு எடுத்தார், யார் எடுக்க வில்லை, எப்படி வெற்றி பெற்றிருக்கலாம் அல்லது எப்படி தோல்வியை தவிர்த்திருக்கலாம், இந்த அம்பயர் முடிவு தவறு அல்லது அந்த மூன்றாவது அம்பயர் தேவையில்லை என்பது போன்ற கருத்துக்கள் ஊடகங்களிலும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்திலும் நம்மை விடாது துரத்தும் "கருப்பு"கள்.
இவை மைதானத்திற்குள்ளே நடைபெறும் விஷயங்கள் என்றால், 'ப்ரீத்தி ஜிந்தா இன்று யார் தோளில் கை போட்டார்', யாருக்கு முன்னாபாய் (நம்மூரில் வசூல் ராஜா) வைத்தியம் பார்த்தார், 'விஜய் மல்லையா இன்று எந்த நடிகைக்காக ஏரோப்ளேன் விட்டார்', கவாஸ்கர் கருத்துக்கு ஷாருக் கானின் மறுப்புச் செய்தி' என்பது போன்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் இதர தேசிய அல்லது உலக செய்திகளை வெகுவாக பின்தள்ளி விடும்.
இது மட்டுமல்லாமல், "பாவம் டெண்டுல்கர்" ஒரு ரன்னில் நூறை தவற விட்டார், "பாவம் டிராவிட்" அவருக்கு விஜய் மல்லையா போதுமான வாய்ப்பு தரவில்லை, "அதிர்ஷ்டமில்லை டோனிக்கு" இன்று டாசில் தோற்று விட்டார் என்றெல்லாம் நாடு முழுக்க அடுத்த வேளை கஞ்சிக்கு வழியில்லாதவர்கள் கூட "உச்சு" கொட்டிக் கொண்டிருப்பார்கள்.
எப்படியோ! நேரத்தைக் கடத்த முடியாத வயதானவர்களுக்கும், கோடை விடுமுறையில் வெளியூருக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பள்ளிச் சிறார்களுக்கும் இது ஒரு நல்ல பொழுது போக்கு. அழ வைக்கும் சீரியல்களுக்கும் ஆபாசமான ரியாலிடி ஷோக்களில் இருந்து தப்ப நினைப்பவர்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. தொழிலில் களைத்துப் போய் வீடு திரும்பும் மற்றவர்களுக்கும் கூட இது ஒரு வகையில் மனதை லேசாக்கும் ஒரு பொழுது போக்கு.
பல நூறு கோடிகளை இந்திய கிரிக்கெட் வாரியமும், சில நூறு கோடிகளை விளம்பர நிறுவனங்களும், தொழில் அதிபர்களும் சில கோடிகளையாவது கிரிக்கெட் வீரர்கள் அள்ளப் போகின்றனர் என்றாலும் இந்த கிரிக்கெட் சீசனால் அதிகம் பலனடைய போவது காங்கிரஸ்தான் என்று சொல்லப் படுகிறது. ஏனென்றால், தீவிரவாதம், பொருளாதார மந்த நிலை, ஊழல் போன்ற நாட்டின் முக்கிய பிரச்சினைகளை மக்கள் தற்காலிகமாக கிரிக்கெட் எனும் போதையில் தேர்தல் நேரத்தில் மறந்திருப்பது ஆளுங்கட்சிக்குத்தானே வசதி?
நன்றி.
Labels:
செய்தியும் கோணமும்
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
//கிரிக்கெட்டில் இந்த முறை ஈடுபாடு காட்டக் கூடாது என்று நாம் எவ்வளவுதான் தலைகீழ் பிரயத்தனம் செய்தாலும், இந்த 'தொத்து வியாதியில்' இருந்து நம்மால் தப்பவே முடியாது.//
இதெல்லாம் ஜால்ஜாப்பு ஃப்ரெண்ட்
பார்க்காம இருக்கலாம் :-)
//இதெல்லாம் ஜால்ஜாப்பு ஃப்ரெண்ட்
பார்க்காம இருக்கலாம் :-)//
ஓகே கபீஷ். இந்த முயற்சி செய்வோம்.
நன்றி.
//இதெல்லாம் ஜால்ஜாப்பு ஃப்ரெண்ட்
பார்க்காம இருக்கலாம் :-)//
ஓகே கபீஷ். இந்த முறை முயற்சி செய்வோம்.
நன்றி.
// நேரத்தைக் கடத்த முடியாத வயதானவர்களுக்கும், கோடை விடுமுறையில் வெளியூருக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பள்ளிச் சிறார்களுக்கும் இது ஒரு நல்ல பொழுது போக்கு. அழ வைக்கும் சீரியல்களுக்கும் ஆபாசமான ரியாலிடி ஷோக்களில் இருந்து தப்ப நினைப்பவர்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. தொழிலில் களைத்துப் போய் வீடு திரும்பும் மற்றவர்களுக்கும் கூட இது ஒரு வகையில் மனதை லேசாக்கும் ஒரு பொழுது போக்கு.//
உண்மை
சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி,பாவம் தோனி!! எப்படி ஆரமெச்சுடமுல நாங்க
நன்றி DG
//சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி,பாவம் தோனி!! //
நம் சொந்த ஊர் என்பதால் சென்னையை ஆதரிப்பதா? இல்லை வாழும் ஊர் என்பதால் மும்பையை ஆதரிப்பதா? :-)
//எப்படி ஆரமெச்சுடமுல நாங்க//
நடக்கட்டும் நடக்கட்டும். :-)
//நேரத்தைக் கடத்த முடியாத வயதானவர்களுக்கும், கோடை விடுமுறையில் வெளியூருக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பள்ளிச் சிறார்களுக்கும் இது ஒரு நல்ல பொழுது போக்கு. அழ வைக்கும் சீரியல்களுக்கும் ஆபாசமான ரியாலிடி ஷோக்களில் இருந்து தப்ப நினைப்பவர்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. தொழிலில் களைத்துப் போய் வீடு திரும்பும் மற்றவர்களுக்கும் கூட இது ஒரு வகையில் மனதை லேசாக்கும் ஒரு பொழுது போக்கு.//
வழிமொழிகிறேன்
நன்றி சுரேஷ்
உண்மைதான்,
மக்களை ஒருவித போதையிலேயே வைத்திருக்க வேண்டும் என்றுதான் எல்லா அரசாங்கமும் விரும்புகின்றன!
கிரிக்கெட், விளையாட்டு என்ற நிலையிலிருந்து எப்போதோ, வியாபாரம் என்ற நிலைக்கு தாவி விட்டது (எப்படி கல்வி சேவை என்ற நிலையிலிருந்து வியாபாரம் என்ற நிலைக்கு மாறியதோ, அப்படியே!!!)
எனக்கு முன்பிருந்த சுவராசியம் குறைஞ்சுருச்சிங்க, ஆனாலும், அவ்வப்போது பார்க்காமல் இருக்க முடிவதில்லை!
நரேஷ்
www.nareshin.wordpress.com
//தற்காலிகமாக கிரிக்கெட் எனும் போதையில் தேர்தல் நேரத்தில் மறந்திருப்பது ஆளுங்கட்சிக்குத்தானே வசதி?//
சரியா சொன்னிங்க!
அதனால மக்கள் சவுத் ஆப்பிரிக்காவுல இருக்குறத நினைச்சிகிட்டு ஓட்டு போட மறந்துட்டா!
நன்றி வால்பையன்!
நன்றி நரேஷ் குமார்!
Post a Comment