Friday, July 17, 2009

பைபாஸ் பயணம்!


வாழ்க்கை எனும் சாலையில் முறையான பயணம் செய்தாலும் சில சந்தர்ப்பங்களில் நெறிமுறையற்ற சில சக பயணிகளை சந்திக்க நேரிடுகிறது. அதிலும் "மோதிப் பார்த்து விடு" என்ற அறைகூவலுடன் சிலர் நம்மை நேருக்கு நேராக எதிர் கொள்கின்றனர்.

இன்று முற்பகல் கூட, "நீயா நானா என்று பார்த்து விடலாம்" என்று சவால் விடும் வகையில், ஒருவர் முரட்டுத் தனமாக என்னிடம் நடந்து கொண்டார். முதலில் சற்று தணிந்து போனாலும், மோதல் தொடர்கதையாக, அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணமும் மனதில் எழுந்தது.

இன்று காலைதான், என்னுள் வேறுவிதமான சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தன. "மக்களை திருத்துகிறேன், கெட்டவர்களை தட்டிக் கேட்கிறேன்" என்று கிளம்பிய பலர் இறுதியில் தாமே தீவிரவாதிகளாகவும் தாதாக்களாகவும் மாறி இருக்கிறார்கள் என்றெல்லாம் நினைத்து கொண்டிருந்த எனக்கு இது ஒரு சோதனையாகவே இருந்தது.

அப்போது, நண்பர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இரண்டு நிமிடம் நேரம் இருக்கிறதா என்று கேட்ட அவர், ஒரு பெரிய கதையின் (மகாபாரதம்) சிறிய கிளைக் கதையை கூறினார்.

பாண்டவர்களின் வனவாசம் மற்றும் தலைமறைவு வாசம் முடிகின்ற தருணம் அது. பாண்டவர்கள் வெவ்வேறு வேடத்தில் விராட மன்னனிடம் பணி புரிகின்றனர். அப்போது விராட நாட்டிலுள்ள பசுக்களை கௌரவர்கள் ஓட்டிச் சென்று விடுகின்றனர். பெண் வேடத்தில் இருக்கும் அர்ச்சுனனும் அந்த நாட்டு இளவரசனும் பசுக்களை மீட்டு வருவதற்காக செல்கின்றனர்.

கர்ணன் போன்ற கௌரவ தரப்பினரை வெற்றி கொண்டு மேலும் முன்னேறும் போது, "அர்ச்சுனா! நில்!" என்ற குரல் கேட்கின்றது. திரும்பிப் பார்த்தால் துரோணர். "முடிந்தால், என்னை தோற்கடித்து விட்டு மேலே செல்!" என்று அறை கூவுகிறார் துரோணர்.

பாதியில் கதையை நிறுத்திய நண்பர், "அர்ச்சுனன் இப்போது என்ன செய்தான் தெரியுமா?" என்று கேட்டார்.

பதிலுக்கு, "வேறு என்ன செய்ய முடியும், எதிர்த்து போரிட்டு வென்ற பிறகு மேலே செல்ல வேண்டும்" என்று கூறினேன்.

அதுதான் இல்லை என்று கூறிய நண்பர் மேலே தொடர்ந்தார். "எனது முதல் கடமை மாடுகளை மீட்பதுதான். உங்களுடன் போரிடுவதற்கு இப்போது என்னிடம் நேரம் இல்லை. வேண்டுமென்றால், வைத்துக் கொள்ளுங்கள், சில அம்புகளை, உங்கள் காலடியில்" என்று சொல்லி சில அம்புகளை அவரது காலடியில் பாய்ச்சி விட்டு தனது பயணத்தை மேலே தொடர்கிறான். பதிலுக்கு ஒன்றுமே சொல்ல முடியாமல் வாயடைத்து நிற்கிறார் துரோணர்.

வீரம் என்றால் அர்ச்சுனன். அர்ச்சுனன் என்றால் வீரம். அப்படிப் பட்ட அர்ச்சுனனே கடமை முன்னிற்கும் போது அநாவசிய போரைத் தவிர்த்து முன்னே செல்கிறான். அதே போல வாழ்க்கை பயணத்தில் சில சந்தர்ப்பங்களில் பைபாஸ் வழியாக சென்று விட வேண்டும் என்று இந்த பைபாஸ் தத்துவ கதையை சொன்னவர் மூதறிஞர் ராஜாஜி என்று முடித்தார் என் நண்பர்.

எதிரில் வரும் வாகனம்தானே தவறான போக்கில் வருகிறது என்று எண்ணி பேசாமல் இருந்தால் இருந்தால் நஷ்டம் நமக்கும்தானே.

சரியான திசையில், முறையான வகையில் பயணம் செய்து உரிய நேரத்தில் இலக்கை அடைய வேண்டியது மட்டும்தான் நமது குறிக்கோள். இதற்காக சில சமயங்களில், முரட்டு வேகத்தில் முன்னே வரும் சில வாகனங்களை பொருட்படுத்தாமல் சற்று ஒதுங்கிப் போய், பைபாஸ் பயணம் செய்தால் தவறொன்றும் இல்லையே?

நன்றி.

10 comments:

sriram said...

இடுகை forwarded to நரசிம். இதை பார்த்து அவர் மனம் மாற்றமடைந்தால் மகிழ்வேன்

என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA

Maximum India said...

நன்றி ஸ்ரீராம்!

//இடுகை forwarded to நரசிம். இதை பார்த்து அவர் மனம் மாற்றமடைந்தால் மகிழ்வேன்//

நரசிம மட்டுமல்ல. நம்மில் பலரும் பல தருணங்களில் பொறுமை இழந்து விடுகின்றோம். அப்போதெல்லாம் இது போன்ற உதாரணக் கதைகளை நினைவில் கொள்வது நம்முடைய பொறுமையை மீட்டெடுக்க உதவும்.

எனது இன்னொரு நண்பர் ஒருமுறை கூறினார். "தவறு செய்த ஒருவர் மீது கோபம் கொள்வதை விட அவரை தவறு செய்ய தூண்டியது எது என்று ஒரு நிமிடம் யோசிக்க வேண்டும். அந்த ஒரு நிமிட இடைவெளி நம்முடைய கோபத்தை பெருமளவு தணித்து விடும். அது மட்டுமல்ல. பல தருணங்களில் அவர் மீது நமக்கு கருணையைக் கூட வரவழைக்கும். "

நன்றி.

பொதுஜனம் said...

நாட்டில் நிலவும் பிரச்னைகளை பார்த்தால் எப்போதுமே பை பாசில் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. எவ்ளோ அடி வாங்கி நல்லவன் என பேர் எடுத்தாச்சு..எவ்ளோ நேரம்தான் வலிக்காத மாதி நடிக்கறது.ஆனால் நீங்கள் சொல்வது சரிதான். தேவை இல்லாத பிரச்னைகளில் மாட்டாமல், வேலியில் போவதை வேட்டியில் விடாமல் செல்வது நல்லதுதான்.ஆனால் ஓநானுக்கும் கடிக்க வரும் நாய்க்கும் வித்யாசம் உள்ளது. அந்த சமயத்தில் அரசியல்வாதி சாரி சந்தர்ப்பவாதியாக இருப்பது நலம்.

Maximum India said...

நன்றி பொதுஜனம்!

//நாட்டில் நிலவும் பிரச்னைகளை பார்த்தால் எப்போதுமே பை பாசில் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. //

நிஜம்தான்.

//எவ்ளோ அடி வாங்கி நல்லவன் என பேர் எடுத்தாச்சு..எவ்ளோ நேரம்தான் வலிக்காத மாதி நடிக்கறது.//

திரும்ப திரும்ப தொந்தரவு செய்பவர்களிடமிருந்து ஒதுங்க வேண்டும் அல்லது அவர்களை ஒதுக்க வேண்டும்.

//ஆனால் ஓநானுக்கும் கடிக்க வரும் நாய்க்கும் வித்யாசம் உள்ளது. //

கடிக்க வரும் நாயிடமிருந்து தப்பிக்க ஓடி பிரயோஜனம் இல்லை. ஓடினால் அதிக வேகமாக துரத்தி வரும். தற்காப்புக்காக தடி அல்லது கல் கொண்டு தாக்குவதை தவிர்த்து வேறு வழியில்லை.

நன்றி.

Itsdifferent said...

Welcome back.
Just returned from India trip.
Thoughts triggered by your bypass post.
1. Me with the family and friends go to IMAX movies in Chennai. Waiting for the elevator, after 1o mins, we get one. It was very crowded, and we are like 8 of us with children and my parents. So me, my bro and my wife, let the others go thro the elevators, and we decide to walk the stairs, suddenly there is crowd 5 guys all young folks, pushing thro the crowd to enter, and they pushed my father out. I got really mad, and trying to explain, that we are standing out to let them go, and its not fair that you pushed him, but do you think they mind? Never, they just forced the elevator close and go up!!! What should I have done?
2. I travelled to Bangalore and Pune. Printed the boarding pass at home and work in both places. In Chennai, on the way to Bangalore. Meticulously I cut one half of the boarding pass, save it in my bag somewhere, and show the other half to the airline staff before getting into the stairs near the aircraft, but she demands my other copy, I slowly explain to her that its a customer copy, why do you need that. And it says, save that safely through your travel, but she never listens to me. So there I go thro my luggage and give that her. And this is even more cool, in Bangalore on the way to Pune, as usual I have the boarding pass printed at work, go straight to the securoty. Let my pc and the handluggage thro the xray scanner, and the gaurd who is supposed to check and stamp, tells me that I have to get the endorsement from the airline counter, and asks me to go back. I tried explaining him, but he never listens, he just repeats what he was saying. So I have to go all the way back, and the airline staff printed a new boarding card for me. What is use of checking in at home, and printing a boarding pass, no one knows. The point is there is no standard procedure in the airports across the country, and the employees or so rude to everyone. If I have to say a word against them, thats it you know what would have happened. So many people just to avoid that hassle, listen to all these nonsense. Bypass? or our inability to fight back?
3. On the road its a different story, everyone thinks they have to be the only one onthe road, and be first. In the US driving is by law is a privilege, not a right. In India, I think its reverse.
My father narrates so many stories where a simple customer service call ends up in a bitter note, without resolving the issue, even with the high tech companies like BSNL, Reliance, or banks, ICICI, HDFC and everywhere.
I am not sure, what is fundamentally wrong with our country. In this rate, 2020 will just be another New Year, no more.
And after all this, read about a simple citizen and his war with the officials for nothing more than water, which the land lord gets it free from the ground.
http://thirumbiparkiraen.blogspot.com/

Naresh Kumar said...

நல்ல கருத்து!!!

பல சமயங்களில் இது போன்ற விஷயங்களில் உணர்ச்சிப் பூர்வமாகவே செயல்படுகிறோம்... ஒதுங்கிப் போக வேண்டும் என்ற எண்ணம் மூளைக்கு தோன்றினாலும் யோசித்து செயல் படுவதற்கு ரொம்பவே தடுமாற வேண்டியிருக்கு!!!

Maximum India said...

அன்புள்ள itsdifferent!

உங்களுடைய கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளத் தக்கவையே! ஒவ்வொரு நாளும் இத்தகைய இந்திய கலாச்சாரத்தைக் கண்டு மனம் பொங்கி நிற்கின்றோம். ஆனால் எதிர்த்து நின்றால் உங்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்காது. மாறாக பல புதிய சிக்கல்கள்தான் உருவாகும்.

இந்தியனாக இந்தியாவிலேயே வாழ விரும்பி பல வெளிநாடு வாய்ப்புக்களை உதறிய என் மனநிலை இப்போதெல்லாம் லேசாக மாற துவங்கி உள்ளது.

நன்றி.

Maximum India said...

நன்றி நரேஷ் குமார்!

KARTHIK said...

// சமயத்தில் அரசியல்வாதி சாரி சந்தர்ப்பவாதியாக இருப்பது நலம்.//

சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி மாத்திக்கவேண்டி இருக்கே :-))

Maximum India said...

//சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி மாத்திக்கவேண்டி இருக்கே :-))//

உண்மைதான் கார்த்திக். அதே சமயத்தில் நமது கண்ணியத்தை இழக்காமல் ஒரு பிரச்சினையில் இருந்து வெளி வருவதில்தான் நமது சாமர்த்தியம் அடங்கி இருக்கிறது.

நன்றி.

Blog Widget by LinkWithin