Wednesday, August 12, 2009

கிருஷ்ண விஜயம்!


விதி வலியது

பன்றி காய்ச்சல்
பற்றிக் கொள்ளுமோ
படபடவென்ற மனதுடன்
பைக்கில் அவன்
பயங்கர வேகத்தில்
பஸ் எதிரே!


கிருஷ்ண விஜயம்!

கோகுலாஷ்டமி காலை
கைகளில் கோலமாவு
காதுக்குள் ஓலம்
கண்கள் திரும்பின

தொலைக்காட்சியில் செய்திகள்
பன்றி காய்ச்சல்
பயங்கர வேகத்தில்
பரவுதல் பற்றி

கிருஷ்ணர் பாதம்
வாசலில் இடுமுன்
மனம் கேட்கின்றது
அவருக்கும் இருக்குமோ?


உலக மயமாக்கம்

மெக்சிகோவில் பன்றி பண்ணைகள்
இந்தியாவில் பன்றி காய்ச்சல்
இதுதான் உலக மயமாக்கலோ?


வராகம்

ஏழு மலை
ஏழு கடல்
ஏழு கண்டம்
தாண்டி வரும்
இதுவும் ஒரு
'வராக' அவதாரமோ?

நன்றி!

10 comments:

Arun said...

Install Add-Kannada button with ur blog. Then u can easily submit ur page to all top Kannada social bookmarking sites & u will get more traffic and visitors.
Install widget from www.findindia.net

Thomas Ruban said...

புது கவிதைகள் ந்ன்றாக உள்ள்து.

பன்றி காய்ச்சல் செய்திகள் உங்களை அதிகம் பாதித்யுல்லொதொ!

Maximum India said...

தகவலுக்கு நன்றி ராம்!

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

//பன்றி காய்ச்சல் செய்திகள் உங்களை அதிகம் பாதித்யுல்லொதொ!//

காலை முதல் இரவு வரை எல்லா ஊடகங்களிலும் இதே செய்திதான். எகோநோமிக் டைம்ஸ் போன்ற நிதி செய்தி தாளிலும் கூட மூன்று பக்கங்கள் இதே செய்திதான்.

வசிப்பது வேறு மும்பையில். திரும்பி பார்க்குமிடமெல்லாம் முகமூடி மனிதர்கள்.
பள்ளி மற்றும் தியேட்டர்கள் மூடப் பட்டுள்ளன. எங்களுக்கு முக்கிய பண்டிகைகளான கிருஷ்ண ஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி இரண்டும் பாதிக்கப் பட்டுள்ளன.

கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது. என்ன செய்ய?

வால்பையன் said...

தல எதிர்கவுஜ போடலாமா!?

Maximum India said...

உங்களுக்கில்லாத உரிமையா தல?

தாராளமா போடுங்க!

(என்னைப் போல ஒரு சிறு பதிவருக்கு உங்களைப் போல ஒரு பெரிய பதிவர் எதிர் கவுஜ போட்டா நல்ல விளம்பரம்தானே? :-))

நன்றி.

வால்பையன் said...

//(என்னைப் போல ஒரு சிறு பதிவருக்கு உங்களைப் போல ஒரு பெரிய பதிவர் எதிர் கவுஜ போட்டா நல்ல விளம்பரம்தானே? :-))//

யானைக்கு தன் பலம் தெரியாதாம்!
உங்களது ப்ளாக்கின் மூலமாக நான் உட்பட பலர் பயனடைகிறோம்! நானெல்லாம் வெட்டியாக எழுதி கொண்டிருக்கிறேன்!

வரட்டுவாதங்களும், சினிமா விமர்சனக்களும் யாருக்கு பயன்படும் சொல்லுங்க!
தெரிஞ்சும் ஏண்டா மொக்கை போடுறேன்னு கேக்குறிங்களா!?
வேறென்ன செய்ய எனக்கு தெரிஞ்சது அம்புட்டு தானே!

Maximum India said...

அன்புள்ள வால்பையன்!

அட! என்று திரும்பி பார்க்க வைக்கும் யாருமே பெரியவர்தான்.

அந்த வகையில் நீங்கள் பெரியவர்தான்.

அது மட்டுமல்ல சக பதிவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் சலிக்காமல் பின்னூட்டம் போடும் வகையில் நீங்கள் ரொம்ப பெரியவர்தான்.

பதிவுலகிலும் கூட எனக்கு நீங்கள் மூத்த பதிவர்தான்.

ஒரு அக்மார்க் தமிழ் எழுத்தாளராக உருவாகிக் கொண்டிருக்கும் உங்களுக்கு (கூடிய சீக்கிரம் நீங்கள் பதிவுலகிற்கு வெளியேயும் ஒரு பிரபல தமிழ் எழுத்தாளராக வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது) உங்கள் பதிலையே திருப்பிச் சொல்கிறேன்.

"யானைக்கு தன் பலம் தெரியாதாம்!"

நன்றி!

பொதுஜனம் said...

சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்க , இயற்கையை காக்க, கிருஷ்ணர் அடிக்கும் எச்சரிக்கை மணிதான் பன்றி காய்ச்சல். ஹி ஹி. மர்மமாய் முகமூடி போடும் மனித மடையர்களே. திரியுங்கள் உங்கள் அசிங்கமான முகத்தை காட்ட முடியாமல். இனிமேலாவது இயற்கையோடு ஒத்து போங்கள்.இயல்பாய் வாழுங்கள்.

Maximum India said...

//சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்க , இயற்கையை காக்க, கிருஷ்ணர் அடிக்கும் எச்சரிக்கை மணிதான் பன்றி காய்ச்சல். ஹி ஹி. மர்மமாய் முகமூடி போடும் மனித மடையர்களே. திரியுங்கள் உங்கள் அசிங்கமான முகத்தை காட்ட முடியாமல். இனிமேலாவது இயற்கையோடு ஒத்து போங்கள்.இயல்பாய் வாழுங்கள்.//

உண்மைதான் பொதுஜனம்!

எனக்குக் கூட அப்படித்தான் தோன்றியது. இப்போதைய மனித ராட்சசர்களிடம் இருந்து பூமியைக் காக்க வந்த புதிய 'வராக' அவதாரமோ என்று.

நன்றி!

Blog Widget by LinkWithin