Skip to main content

கொலம்பஸ்! கொலம்பஸ்!

கொலம்பஸ் ஒருவேளை நம்மூர் பெண்ணை திருமணம் செய்த பின்னர், அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருந்தால் அமெரிக்காவை கண்டுபிடித்திருக்கவே முடியாது. ஏனென்று கேட்கிறீர்களா?

கிளம்புவதற்கு முன்னர் அவர் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் அளித்திருக்க வேண்டும்.

எங்கே போகிறீர்கள்?
எதற்காக போகிறீர்கள்?

போய்த்தான் ஆக வேண்டுமா?
அப்படி என்ன அவசியம்?

இரவு சாப்பிட வருவீர்களா?
போய் வர எத்தனை நாளாகும்?

யாருடன் போகிறீர்கள்?
எதற்காக அவர்களுடன் போகிறீர்கள்?

இவற்றுக்கெல்லாம் கூட பதில் அளித்து விடலாம். ஆனால் கடைசி இரண்டு கேள்விகள்;

என்னையும் கூட்டிச் செல்வீர்களா?
ஏன் முடியாது?

இதற்கு பதில் அளித்து விட்டு செல்வதற்கு பதிலாக வீட்டிலேயே இருந்து விடலாம் என்று யோசித்திருப்பார் என்று மின்னஞ்சலில் வந்த ஒரு நகைச்சுவையை என் நண்பருடன் பகிர்ந்து கொண்டேன்.

அதற்கு கூறினார்.

"கொலம்பஸ் ஒருவேளை நம்மூராக இருந்திருந்தால் அமெரிக்காவை கண்டுபிடித்ததை யாரிடமும் சொல்லியிருக்க மாட்டார்"

ஏன் என்று கேட்டேன்.

"யாரிடமும் சொல்லாமல் மனைவியை அமெரிக்காவிற்கு கொண்டு சென்று விட்டு விட்டு வந்திருப்பார்.அமெரிக்காவின் கண்டுபிடிப்பு சாதனையை விட இது பெரிய சாதனையாக இருந்திருக்கும்." என்றார்.

என்ன பண்ண?

அவரவர் கஷ்டம் அவரவருக்குத்தான் தெரியும்.

நன்றி!

Comments

Thomas Ruban said…
//அவரவர் கஷ்டம் அவரவருக்குத்தான் தெரியும்.//

உண்மைதான் சார்.

பதிவுக்கு நன்றி சார்.
ஆமாம் தல!

எங்கயாவது நண்பர்களுடன் ரெண்டு நாள் டூர் போகனும்னா ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இருந்தே பொய் ரெடி பண்ணியாகனும், அப்படியும் சமாளிக்கிறதுகுள்ள தாவூ தீந்துரும்!
Naresh Kumar said…
//அவரவர் கஷ்டம் அவரவருக்குத்தான் தெரியும்//

//உண்மைதான் சார்//

ஆகா, ஒண்ணு கூடிட்டாங்கய்யா, ஒண்ணு கூடிட்டாங்கய்யா!!!!!
நல்ல நகைச்சுவைப் பதிவு. நிற்க. உங்களுக்கு ஒன்று தெரியுமா - இந்த மாதிரி, 'மனைவி இடிப்பு' ஜோக்குகள் சொல்பவர்கள் மற்றும் ரசிப்பவர்கள்தாம் - அவரவர்கள் மனைவியை மிகவும் நேசிப்பவர்களாம்! Ref : The mind behind jokers - By Dr Schulet Winsor.
Btc Guider said…
//அவரவர் கஷ்டம் அவரவருக்குத்தான் தெரியும்.//
நன்றாக இருந்தது.

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.


வித்யாவின் அம்மா இந்த பதிவை படித்தார்களா.(உண்மை Please)
Anonymous said…
rompa thireyamthan parthu veetil purikatai varapoguthu
manjoorraja said…
கொலம்பஸ் பிறந்த நாளா இன்னிக்கு??
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!

நன்றி வால்பையன்!
Maximum India said…
//ஆகா, ஒண்ணு கூடிட்டாங்கய்யா, ஒண்ணு கூடிட்டாங்கய்யா!!!!!//

ரொம்பவும் சந்தோசப் படாதீர்கள் நரேஷ்!

கூடிய சீக்கிரமே நீங்களும் இந்த கும்மியில் சேர வேண்டியிருக்கும்.

:)

நன்றி.
Maximum India said…
// :) //

உங்கள் பெருந்தன்மைக்கு ரொம்ப நன்றி சின்ன அம்மிணி!

:)
Maximum India said…
// இந்த மாதிரி, 'மனைவி இடிப்பு' ஜோக்குகள் சொல்பவர்கள் மற்றும் ரசிப்பவர்கள்தாம் - அவரவர்கள் மனைவியை மிகவும் நேசிப்பவர்களாம்! Ref : The mind behind jokers - By Dr Schulet Winsor.//

நன்றி கௌதமன்!

இருக்கலாம். அந்த தைரியத்தினால்தான் அவர்களால் துணிச்சலாக ஜோக் அடிக்க முடிகிறது.

என்னுடய பதிவின் டிஸ்கி: இந்த ஜோக் மற்றும் பின்னுரை இரண்டுமே என்னுடையதில்லை. ரசித்து மட்டுமே நான்.

நன்றி.
Maximum India said…
//வித்யாவின் அம்மா இந்த பதிவை படித்தார்களா.(உண்மை Please)//

இல்லை ரஹ்மான்! ஆனால் பின்னுரை என்னுடையது அல்ல என்று சொல்லி எஸ்கேப் ஆக முடியும்.

நன்றி!
Maximum India said…
//rompa thireyamthan parthu veetil purikatai வரபோகுது//


பின்னுரை என்னுடையது அல்ல என்று சொல்லி எஸ்கேப் ஆக முடியும்.

நன்றி சிதம்பரராஜன்!
Maximum India said…
நன்றி மஞ்சூர் ராசா!
கொலம்பஸ் கு கல்யாணம் ஆகி பொண்டாட்டி தொல்ல தாங்காம சொல்லாம கொள்ளாம பரதேசம் கெளம்பி தான் அமெரிக்காவை கண்டு புடிச்சார்பா. கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி அவர் பேர் நலம் பஸ். ஆனா பின்னாடி கொலம்புஸ்.சோ .. நலவங்கல்லாம் சொல்லாம கெளம்புங்க.
Maximum India said…
//நலவங்கல்லாம் சொல்லாம கெளம்புங்க//

நான் ரெடி! நீங்க?

:)

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...