Thursday, January 29, 2009

மாணவர்களுக்காக ஒரு செய்தி


தற்போது நடைபெறும் ஈழத்தமிழர்களுக்கான போராட்டத்தில் பல பள்ளி மற்றும் மாணவர்கள் கலந்து கொள்வதாக பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி செய்திகளின் மூலம் அறிந்து கொண்டேன். இதன் மீது தனிப் பட்ட அனுபவத்திலிருந்து ஒரு அறிவுரை.

பொதுவாக இது போன்ற உணர்வு பூர்வமான போராட்டங்களில் இளைஞர் சமுதாயம் குறிப்பாக மாணவர் சமுதாயம் துடிப்போடு கலந்து கொள்வது இயல்பான விஷயம். இதை குறை கூற முடியாது. கடந்த முறை கூட ஈழத்தமிழர்களுக்கான போராட்டத்தில் பல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இப்போதை விட மிகத் தீவிரமாகவே கலந்து கொண்டார்கள்.

அதே சமயம், இத்தகைய போராட்டங்கள் சட்டத்தின் வரம்பு மீறி போய் விடாமல் மாணவர்களும், இத்தகைய போராட்டங்களை முன்னின்று நடத்துபவர்களும் கவனமாக இருக்க வேண்டும். சாகும் வரை உண்ணாவிரத போராட்டங்கள், சாலை மறியல் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், சில அசம்பாவித நிகழ்வுகளின் காரணமாக போலீஸ் ரெகார்டில் ஒரு மாணவர் பெயர் வருவது பிற்காலத்தில் அவருக்கு , வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் பெறுவது, மத்திய மாநில அரசு அலுவலகங்களுக்கான மற்றும் பெரிய தனியார் நிறுவனங்களுக்கான உத்யோகத்தினை பெறுவது போன்ற சமயங்களில் வழங்கப் பட வேண்டிய போலீஸ் நற்சான்றிதல் பெறுவதில் பல சிக்கல்களை உருவாக்கும். எனவே, மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக் கொள்கிறேன்.

சட்டத்திற்கு முற்றிலும் உட்பட்டே, ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து, மாணவர்களால் சமூகத்திடையே விழிப்புணர்வும், மக்களிடையே பொது கருத்தும் உருவாக்க முடியும். மேலும் அரசாங்கத்திற்கு கூட இந்த பிரச்சினை குறித்து மக்களின் உணர்வை தெளிவாக தெரிவிக்கவும் முடியும். உதாரணம், மனித சங்கிலிகள், அமைதிப் பேரணிகள், சிறு நாடகங்கள், கையெழுத்து இயக்கங்கள், அடையாள உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்றவை. இப்படி, ஆக்கப் பூர்வமான அமைதியான வழியிலேயே உணர்வுகளை வெளிப் படுத்துவது, மாணவர்களுக்கும் அவர்கள் சுமக்கும் இந்தியாவின் வருங்காலத்திற்கும் நல்லது.

நன்றி.

பின்குறிப்பு: இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது நம்மை போன்ற முன்னாள் மாணவர்களின் கடமை என்று நினைக்கிறேன்.

22 comments:

ஆதித்தன் said...

சரியாகச் சொன்னீர்கள்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்.

வால்பையன் said...

உண்மை தான்!
மாணவர்களுக்கு புத்தி சொல்லும் முன்னர் அவர்களை தூண்டி விடுபவர்களுக்கு புத்தி சொல்ல வேண்டும்

Maximum India said...

அன்புள்ள ஆதித்தன்

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

//சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்//

சத்தியமான வார்த்தைகள். மாணவர்களின் கையில்தான், இந்தியா/தமிழகத்தின் எதிர்காலம். அரசியல்வாதிகள் இதைப் புரிந்து கொண்டு மாணவர்களை இது போன்ற பிரச்சினைகளில் இழுக்காமல் இருந்தால் நல்லது.

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//மாணவர்களுக்கு புத்தி சொல்லும் முன்னர் அவர்களை தூண்டி விடுபவர்களுக்கு புத்தி சொல்ல வேண்டும்//

சத்தியமான வார்த்தைகள். மாணவர்களின் கையில்தான், இந்தியா/தமிழகத்தின் எதிர்காலம். அரசியல்வாதிகள் இதைப் புரிந்து கொண்டு மாணவர்களை இது போன்ற பிரச்சினைகளில் இழுக்காமல் இருந்தால் நல்லது.

கபீஷ் said...

சரியா சொல்லியிருக்கீங்க. அமைதியான முறையிலும் நாகரீகமாகவும் நமது எதிர்ப்பைக் காண்பிக்கலாம் என்று அரசியல்வதிகளுக்குப் பாடம் சொல்லும் முறையில் இருந்தால் நன்றாக இருக்கும்

Rajkumar said...

வணக்கம் !

எத்தனை வருடம் தான் இப்படி மௌன உண்ணாவிரதம் இருக்க வேண்டும் .

Rajkumar said...

வணக்கம் !

எத்தனை வருடம் தான் இப்படி மௌன உண்ணாவிரதம் இருக்க வேண்டும் .

ISR Selvakumar said...

நல்ல செய்தி!

sa said...

அருமையான் அறிவுரை.

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

? said...

நன்றாய்ச் சொன்னீர்கள்.
1980களில் அடிக்கடி இலங்கை பிரச்சனைகாக ஸ்டிரைக் என சொல்லி மாணவர்கள் படத்துக்கு போய்விடுவார்கள். இதுவும் மீண்டும் நிகழக்கூடாது.

பொதுஜனம் said...

அரசியல்வாதிகள் பிழைக்க யார் தலையில் வேண்டுமானாலும் கை வைப்பார்கள். மாணவர்கள் இளம் பருவத்தினர். ஒரு செயலின் போக்கை, விளைவை தீர ஆராயாமல் செயலில் இறங்கி விடுவார்கள். கண்டிப்பாக இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் ஆர்ப்பாட்டம் செய்தோ, பொது சொத்தை உடைத்தோ அரசை ஸ்தம்பிக்க செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள் தமிழ் நாட்டில். . மாணவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு பங்கம் வராமல் ஆதரவை கொடுக்க வேண்டும்.

KARTHIK said...

// மனித சங்கிலிகள், அமைதிப் பேரணிகள், சிறு நாடகங்கள், கையெழுத்து இயக்கங்கள், அடையாள உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்றவை. இப்படி, ஆக்கப் பூர்வமான அமைதியான வழியிலேயே உணர்வுகளை வெளிப் படுத்துவது, மாணவர்களுக்கும் அவர்கள் சுமக்கும் இந்தியாவின் வருங்காலத்திற்கும் நல்லது.//

இதை நான் வழிமொழிகிறேன்.
இதனை புரிந்து கொள்ளவேண்டியது நம் கடமை மட்டும் அல்ல அரசியல்வாதிகளின் கடமையும் கூட.ஆரம்பத்திலிருந்தே மாணவ சமூதாயத்தை தூண்டிவிட்டே பழக்கப்பட்டவர்கள் இனியாவது தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளவேண்டும்.

Maximum India said...

அன்புள்ள சூர்யா

அமைதியான ஆக்கப் பூர்வமான போராட்டங்களே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் வன்முறை போராட்டங்கள் அந்த போராட்டங்களின் லட்சியப் பாதையிலிருந்து திசை மாறி லட்சியத்தையே நீர்த்துப் போக செய்து விடும் என்பதும் என் கருத்து.

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

பின்னூட்டத்திற்கு நன்றி. மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி அரசியல்வாதிகளுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும்.

Maximum India said...

அன்புள்ள செல்வக்குமார்

பின்னூட்டத்திற்கு நன்றி

Maximum India said...

அன்புள்ள விஜி

பின்னூட்டத்திற்கு நன்றி

உங்களுடைய இணைதளத்தில் இந்த பதிவு பூ இணைக்கப் பட்டு விட்டது.

Maximum India said...

அன்புள்ள நந்தவனத்தான்

நன்றாய்ச் சொன்னீர்கள்.
1980களில் அடிக்கடி இலங்கை பிரச்சனைகாக ஸ்டிரைக் என சொல்லி மாணவர்கள் படத்துக்கு போய்விடுவார்கள். இதுவும் மீண்டும் நிகழக்கூடாது

பின்னூட்டத்திற்கும் அறிவுரைக்கும் மிக்க நன்றி

Maximum India said...

அரசியல்வாதிகள் பிழைக்க யார் தலையில் வேண்டுமானாலும் கை வைப்பார்கள். மாணவர்கள் இளம் பருவத்தினர். ஒரு செயலின் போக்கை, விளைவை தீர ஆராயாமல் செயலில் இறங்கி விடுவார்கள். கண்டிப்பாக இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் ஆர்ப்பாட்டம் செய்தோ, பொது சொத்தை உடைத்தோ அரசை ஸ்தம்பிக்க செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள் தமிழ் நாட்டில். . மாணவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு பங்கம் வராமல் ஆதரவை கொடுக்க வேண்டும்.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி

//இதனை புரிந்து கொள்ளவேண்டியது நம் கடமை மட்டும் அல்ல அரசியல்வாதிகளின் கடமையும் கூட.ஆரம்பத்திலிருந்தே மாணவ சமூதாயத்தை தூண்டிவிட்டே பழக்கப்பட்டவர்கள் இனியாவது தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளவேண்டும்.//

கண்டிப்பாக. ஆனால், அரசியல்வாதிகளை மாற்றுவது மிகக் கடினமான ஒன்று என்று நினைக்கிறேன். மாணவர்களின் பெற்றோரும் அவர்தம் உறவினர்களும் மாணவர்களை தவறான பாதையில் சென்று விடாமல் தடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு கூட இதில் மிகுந்த கடமை உணர்வு இருக்க வேண்டும்.

நன்றி.

Maximum India said...

அன்புள்ள பொதுஜனம்

பின்னூட்டத்திற்கு நன்றி

//அரசியல்வாதிகள் பிழைக்க யார் தலையில் வேண்டுமானாலும் கை வைப்பார்கள். மாணவர்கள் இளம் பருவத்தினர். ஒரு செயலின் போக்கை, விளைவை தீர ஆராயாமல் செயலில் இறங்கி விடுவார்கள். கண்டிப்பாக இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் ஆர்ப்பாட்டம் செய்தோ, பொது சொத்தை உடைத்தோ அரசை ஸ்தம்பிக்க செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள் தமிழ் நாட்டில். . மாணவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு பங்கம் வராமல் ஆதரவை கொடுக்க வேண்டும்.//

உண்மையான வார்த்தைகள். முழுமையாக ஆமோதிக்கிறேன். சமூக அக்கறையுள்ள ஒரு போலீஸ்காரர், போலீஸ் நற்சான்றிதல் நான் வாங்கச் சென்ற போது எனக்குச் சொன்ன அறிவுரைகளைத்தான் இங்கு பதிவிட்டுள்ளேன்.

மங்களூர் சிவா said...

மிக சரி

Maximum India said...

அன்புள்ள சிவா

பின்னூட்டத்திற்கு நன்றி :)

Blog Widget by LinkWithin