இன்றைக்கு உலகையே அச்சுறுத்தி வரும் இரண்டு பெரிய அபாயங்கள். சோமாலிய நாட்டுக் கடற் கொள்ளைக்காரர்களும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுமே.
சோமாலிய நாட்டுக் கடல் பகுதியில் பயணிக்கும் சர்வதேச கப்பல்களை கொள்ளை அடிக்கும் கடற் கொள்ளைக் காரர்களை அடக்குவதற்காக பன்னாட்டு கடற் படைகள் அங்கு நிறுத்தப் பட்டிருக்கின்றன. ஆனாலும் விடாமல் கொள்ளையடிக்கும் கடற்கொள்ளையர்கள், பல முறை வணிக கப்பல்களைத் தாக்கிய பின்னர், தம்மைத் துரத்தி வரும் பன்னாட்டுப் படைகளுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு, சோமாலிய நாட்டு எல்லைக்குள் ஓடி ஒளிந்து கொள்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. சோமாலியா சுதந்திர இறையாண்மை கொண்ட ஒரு நாடு என்பதால் பன்னாட்டு படைகள் அதன் வான் எல்லையையோ நில எல்லையையோ தாண்டி உள்ளே செல்வதில்லை. காரணம் முறையான அமைப்புகளுக்கு எப்போதுமே சர்வதேச எல்லைகளை மதிக்க வேண்டிய கட்டாயம் உண்டு.
ஆனால் கொள்ளையருக்கும் கொலைகாரருக்கும்தான் எந்த எல்லையும் கட்டுப்பாடும் இல்லையே? (சோமாலிய கடற்கொள்ளையரைப் பற்றி வேறொரு பதிவில் விரிவாக சொல்லப் பட்டுள்ளது). சமீபத்தில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை, சோமாலிய நாட்டின் நில எல்லை மற்றும் வான்வெளி எல்லைக்குள் பன்னாட்டு படைகள் சென்று (அந்நாட்டின் ஒப்புதலுடன்) கடற்கொள்ளையரைத் தாக்கலாம் என்று ஒப்புதல் அளித்துள்ளது. இது ஒரு வரவேற்கத் தக்க முன்னேற்றம் ஆகும். இதன் மூலம் கடற்கொள்ளையர் அட்டகாசத்திற்கு விரைவில் முடிவு கிடைக்கும் என்று நம்பலாம்.
கடற்கொள்ளையரின் பிரச்சினையை விடப் பெரியது நிலகொலைகாரர்களின் பிரச்சினை. கடற்கொள்ளையராவது உடமைகளை மட்டுமே பறிக்கின்றனர். இந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளோ பல அப்பாவிகளின் உயிரையே பறிக்கின்றனர். உலகில் பயங்கரவாத தாக்குதல் நடத்துபவரில் 75 சதவீதம் பேர் பாகிஸ்தானிலேயே பயிற்றுவிக்கப் படுகின்றனர் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகமெங்கும் உயிர் வேட்டை நடத்தி விட்டு பாகிஸ்தானில் சென்று பயங்கரவாதிகள் பதுங்கிக் கொள்கின்றனர். உலகின் மிகக் கொடிய தீவிரவாதிகள் எனக் கருதப் படும் ஒசாமா பின் லேடன், தாவூத் இப்ராஹிம், மசூத் போன்றவர்கள் பாகிஸ்தானிலேயே தஞ்சம் புகுந்து கொள்கின்றனர் என்பது இப்போது சந்தேகத்திற்கு இடமின்றி நிருபணமாகி உள்ளது. .
இவர்களது தாக்குதல் அடிப்படைவாதிகளால் எதிரி நாடுகளாகக் கருதப் படும் இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இங்கிலாந்து நாடுகள் மட்டுமில்லாமல் இப்போது இந்தோனேசியா, பாகிஸ்தான் (வளர்த்த கடா மார்பிலே), சீனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலும் துவங்கி உள்ளது. இவர்களை நீடிக்க விடுவது உலகத்திற்கு வேறு எதனை விடவும் பெரிய ஆபத்து ஆகும்.
எனவே . ஐ நா. பாதுகாப்பு சபை ஒரு தீர்மானம் இயற்றி சர்வதேச படையை (முக்கியமாக சீனாவின் ஒத்துழைப்பை பெறுவது மிகவும் அவசியம்) பயங்கரவாதிகளின் விளை நிலமாகவும் சாவு தொழிலாளிகளின் சரணாலயமாகவும் உள்ள பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும். அங்குள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை ஒன்று விடாமல் வேரோடு அழிக்க வேண்டும். இந்த சர்வதேச முயற்சிக்கு இந்தியா முன்னோடியாக இருந்து இந்த பிரச்சினையின் தீவிரத்தை மற்ற நாடுகளுக்கு புரிய வைத்து ஒருமித்த கருத்து உருவாக முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
நன்றி.
13 comments:
தீவிரவாதிகள் அழிக்கபட வேண்டிய புற்றுநோய்கள் தான்!
அதினினும் முற்றிலும் அழிக்கபட வேண்டியவர்கள் உள்நாட்டில் பிரிவினையை தூண்டிவிடும் அரசியல்வாதிகள்
அன்புள்ள வால்பையன்
பின்னூட்டத்திற்கு நன்றி.
//அதினினும் முற்றிலும் அழிக்கபட வேண்டியவர்கள் உள்நாட்டில் பிரிவினையை தூண்டிவிடும் அரசியல்வாதிகள்//
கண்டிப்பாக.
ஆனால் இவர்களை எந்த ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானம் கொண்டும் அழிக்க முடியாதே. :-)
மிக அருமையான பதிவு. காலத்திற்கு தேவையான கருத்துக்கள்.
அரசியல்வியாதிகளை அழிப்பது ரொம்ப சுலபம். ஓட்டை போடுகையில் ஓட்டை இல்லாமல் போட்டால் தேட்டை போடுபவர்களை பேட்டையை விட்டு துரத்திவிடலாம்.
:)
இந்த வார ஆவில கூட இப்படித்தான் போட்டிருந்தாங்க
சீனாக்காரன் ஒத்துவந்த்தாதான் பிரச்சனையில் இருந்து ஓரளவேனும் விடுபட முடியும்
அன்புள்ள சத்யமுர்த்தி
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி
//அரசியல்வியாதிகளை அழிப்பது ரொம்ப சுலபம். ஓட்டை போடுகையில் ஓட்டை இல்லாமல் போட்டால் தேட்டை போடுபவர்களை பேட்டையை விட்டு துரத்திவிடலாம்//
அருமையான கருத்து.
//உலகில் பயங்கரவாத தாக்குதல் நடத்துபவரில் 75 சதவீதம் பேர் பாகிஸ்தானிலேயே பயிற்றுவிக்கப் படுகின்றனர் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன//
They shine in their beloved field.
They are exporting what they can.
நம்முடைய சில விவகாரங்களில் உறுதியான நடவடிக்கைகளை உலகிற்க்கு உணர்த்த வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.மக்களிடம் உள்ள விழிப்புணர்வு கூட அரசியல்வாதிகளிடம் இல்லை என்றே எண்ணத்தூண்டுகிறது.
அன்புள்ள கார்த்திக்
பின்னூட்டத்திற்கு நன்றி
//இந்த வார ஆவில கூட இப்படித்தான் போட்டிருந்தாங்க //
இன்னும் நான் பாக்கல.
//சீனாக்காரன் ஒத்துவந்த்தாதான் பிரச்சனையில் இருந்து ஓரளவேனும் விடுபட முடியும்//
கண்டிப்பாக. இப்போதைக்கு உலகின் இரண்டாவது பெரிய வல்லரசாக கருதப் படும் சீனா உலக நன்மைக்காக பாகிஸ்தான் பயங்கரவாதத்தை முடக்க முன்வர வேண்டும்.
நன்றி.
Dear Kabeesh
//They shine in their beloved field.
They are exporting what they can.//
Every Action has a equal and opposite Reaction. Every Export will be met by an Import.
Dear Kabeesh
Thanks for the comments
நம்முடைய சில விவகாரங்களில் உறுதியான நடவடிக்கைகளை உலகிற்க்கு உணர்த்த வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.மக்களிடம் உள்ள விழிப்புணர்வு கூட அரசியல்வாதிகளிடம் இல்லை என்றே எண்ணத்தூண்டுகிறது.
நம் அரசியல்வாதிகள் கோழைகள். பேராசைக்காரர்கள்.
அவர்கள் திருந்தினால் மட்டுமே நம் நாடு வளமாக முடியும்.
அல்லது நம் மக்கள் திருந்தி அவர்களை ஒழிக்க வேண்டும்.
எப்படி? இதுதான் மிகப்பெரிய கேள்வி?
Isolating Pakistan is very easy, compared to a war. Does our Pol have backbone to do it?
If the government enacts a law, every citizen, corporation, organization will obey in the US? Even when the law is wrong, they will fight the law, but will still will follow, till it is corrected?
Do we all have such morality in us?
Do we have assurance for our life, if we ever question a political leader? Goondas will come to your house, what does it show, they are cowards, nothing else.
How do we realise Kalam's 2020 vision, with these kinds of people, the whole world knows, all our development is despite our government, shame on our government, can such a government be bold and take any action, leave the military option, just the civil action of isolation. Will they ever do?
Or can we force them to do?
அன்புள்ள itsdifferent
பின்னூட்டத்திற்கு நன்றி.
உங்களுடைய கருத்துக்கள் கடுமையாகத் தோன்றினாலும் அவற்றில் உண்மை உண்டு என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.
Post a Comment