சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 40 க்கும் கீழே இருந்த நிலை மாறி, பின்னர் சில காலம் ஐம்பதிற்கு சற்று கீழேயே தடுமாறிக் கொண்டிருந்து, இப்போது, சரித்திரத்தில் இது வரை இல்லாத அளவாக 51 ரூபாய் அளவையும் தாண்டி உள்ளது. இந்த சரிவிற்கான காரணங்களையும், இதனால் இந்தியாவிற்கு ஏற்பட கூடிய பாதிப்புக்களையும், இந்த சரிவும் இன்னும் தொடருமா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். முதலில் ரூபாய் வீழ்ச்சிக்கான காரணங்கள்: உலகமெங்கும் பங்கு சந்தைகள் வீழ்ந்ததன் தொடர்ச்சியாக, இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் தாம் வைத்திருந்த இந்திய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தது. மேலும் இந்தியாவில் அந்நிய நாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீடுகள் குறைந்து போனது. மேற்சொன்ன காரணங்களின் விளைவாக இந்திய அந்நியச் செலவாணி கையிருப்பு பெருமளவில் குறைந்து போனது. இந்திய நிறுவனங்களால், வெளிநாடுகளில் (கடன் சந்தைகளில் நிலவி வரும் அச்சம் காரணமாக) கடன் வாங்க முடியாமல் போனது. அந்த வகையில் இந்தியாவிற்கு பணவரத்து குறைந்து போனது. அரசு மற்றும் தலைமை வங்கி, இந்த விஷயத்தில் இந்திய நிறுவனங்களுக...
கொஞ்சம் மாத்தி யோசி!