The Art of Appraisal
-
Big Boss: This year your performance was good, excellent and outstanding.
So, your rating is "average".
Kumar: What? How come 'average'?
Big Boss: Becau...
பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (104)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (9)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Friday, December 12, 2008
ஒரு நாள் எம்.எல்.ஏக்கள்!
கடந்த மாதம் உத்தர பிரதேச மாநில சட்டசபையில் 60 குழந்தைகளுக்கு ஒரு நாள் எம்.எல்.ஏக்களாக மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளை பற்றி விவாதம் நடத்த ஒரு வாய்ப்பு வழங்கப் பட்டது. அந்த குழந்தைகளும் (ஒரு நாள் எம்.எல்.ஏக்கள் மட்டும் என்றாலும்) ஐந்து வருட முழு செயல்பாட்டை ஒரே நாளில் வெளிப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள். விவரம் உள்ளே.
உலக குழந்தைகள் உரிமை நாளை முன்னிட்டு, யூனிசெப் மற்றும் சில குழந்தைகள் நல அமைப்புகளின் முயற்சியில், உத்தர பிரதேச மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 60 குழந்தைகளுக்கு ஒரு நாள் எம்.எல்.ஏக்களாக பணி புரியும் வாய்ப்பு தரப் பட்டது. மிக அமைதியாக, பிரச்சினைகளின் அடிப்படையில் மட்டும் பொருள் பொதிந்த விவாதங்களை நடத்தி அந்த குழந்தைகள் அனைவரிடமும் "சபாஷ்" வாங்கினார்.
அந்த குழந்தைகள் விவாதித்த சில விஷயங்கள் கீழே.
குழந்தைகள் நலம் காப்பதற்காக குழந்தைகள் நல ஆணையம் அமைப்பது குறித்து இந்த ஒரு நாள் எம்.எல்.ஏக்கள் வலியுறித்தனர்.
வாரணாசியில் வந்த ஒரு குழந்தை அந்த ஊர் ரயில் நிலையத்தில் அமைப்பு சாரா முறையில் பனி புரியும் குழந்தைகள் உணவு, வீடு மற்றும் மருந்துப் பொருட்கள் கிடைக்காமல் படும் அவதியை மிகச் சிறப்பாக எடுத்துக் கூறியது. மற்றொரு குழந்தை, ஊனமுற்ற குழந்தைகளை தனியே ஒதுக்காமல் அவர்களையும் சாதாரண பள்ளிகளிலேயே படிக்க வகை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டது. மேலும், இந்த ஒரு நாள் எம்.எல்.ஏக்கள் குழந்தைகள் வெவ்வேறு வகையில் சுரண்டப் படுவது, சாதி அடிப்படையில் வித்தியாசம் பாராட்டுவது, குழந்தைத் தொழிலாளர்கள் மீது போலீஸ் அராஜகம், கிராமப் புறங்களில் போதுமான அளவு கல்வி, சுகாதார வசதி இல்லாதது மற்றும் பொது வாழ்கை வசதிகள் இல்லாதது போன்றவை பற்றி சிறப்பாக எடுத்துக் கூறினர்.
அந்த சட்டசபைக் கூட்டத்தை பார்வையாளர்களுக்கான அரங்கில் இருந்து பார்வையிட்ட அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், பொதுமக்கள் அனைவரும் அதிசயித்துப் போயினர். சட்டசபை சபாநாயகர் இது பற்றி பின்னர் கருத்து தெரிவிக்கையில் குழந்தைகள் சொன்னவை எல்லாம் கசப்பான உண்மைகள் எனவும் இவற்றின் மீது பெரியவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் ஒவ்வொரு வருடமும் இதே தேதியில் (நவம்பர் 20) இது போன்று குழந்தைகளின் சட்ட சபை நடைபெறும் என்றும் உறுதி அளித்தார்.
இந்த கூட்டம் முடியும் வரை தொடர்ந்து விவாதங்களைக் கூர்ந்து கவனித்த பி.ஜெ.பி. எம்.எல்.ஏ. திரு. ஓம் பிரகாஷ் சிங், பல முழு கூட்டத் தொடர்களை விட இந்த ஒரு நாள் கூட்டம் சிறப்பாக இருந்தது என்று கூறினார்.
இந்த ஒரு நாள் குழந்தைகள் சட்டசபை பற்றி கருத்து தெரிவித்த யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதி, இது விளையாட்டாக நடத்தப் பட்ட மாதிரி சட்ட சபை அல்ல எனவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப் பட்ட அனைத்து விஷயங்களும் முறைப்படி பதிவுகள் சட்டமன்ற பதிவேடுகளில் பதிவு செய்யப் பட்டன எனவும் கூறினார்.
இது போன்ற அனைவரையும் கவர்ந்த ஒருநாள் சட்டசபைக் கூட்டம் நடைபெற காரணமாக இருந்த அனைவரும் (சட்டசபை சபாநாயகர் உட்பட) பாராட்டுக்குரியவர்கள். இது போன்று ஒவ்வொரு மாநிலங்களிலும் குழந்தைகளுக்கு ஒருநாள் எம்.எல்.ஏக்களாக விவாதம் நடத்த (மட்டும் அல்ல முடிவுகள் எடுக்கவும்) வாய்ப்பு கொடுத்தால், இந்தியாவின் பல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி.
Labels:
அரசியல்,
சமூகம்,
செய்தியும் கோணமும்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
கிராங்களில் ஒரு சொலவடை உண்டு.
வெட்டியாக திரியும் பெருசுகளை பார்த்து நன்றாக படிக்கும்/வேலை பார்க்கும் சிறுவர்களின் மூத்திரத்தை குடிக்க சொல்வார்கள்.
ஏனோ தெரியவில்லை, இங்கே எனக்கு அது ஞாபகம் வருகிறது.
அன்புள்ள வால்பையன்
பின்னூட்டத்திற்கு நன்றி.
சரியாக ஞாபகப் படுத்தினீர்கள்
நம்மூரில் எல்லாம் அனுபவித்துத்தான் இது போன்ற "சொல் வழக்குகளை" உருவாக்கி இருப்பார்கள் போல
நன்றி
சில எம் எல் ஏக்கள் மற்றும் எம் பி கள் நம்மூரில் குழந்தைகள் போல தான் இருக்கிறார்கள்.சில சமயம் கட்சி மாறி விளையாடு கிறார்கள் . கையில் கிடைத்ததை வைத்து அடித்து கொள்கிறார்கள்.ஓட்டு போடும் போது பட்டன் மாற்றி அமுக்கி விடுகிறார்கள். உருப்படியாக பேசாமல் சண்டை போட்டு டைம் வேஸ்ட் செய்கிறார்கள். பேசாமல் வயது வரம்பை தளர்த்தி நிஜமான குழந்தை களுக்கும் போட்டியிட வாய்ப்பு தரலாம். அப்போதாவது சபாநாயகர் நிம்மதியாக இருப்பார்.இந்த கமண்ட்டுக்கு யாராவது குழந்தை தனமாக கேஸ் போட்டு விட போகிறார்கள் (!).
அன்புள்ள பொதுஜனம்
பின்னூட்டத்திற்கு நன்றி.
குழந்தைகள் (ரொம்ப) குழந்தைத்தனமாக இருக்கிறார்கள் என்று குழந்தைப் பள்ளிகளில் அனுமதி கொடுக்காத காலம் இது. குழந்தைகளுக்கு "கிண்டர் கார்டன் கிங்கரர்களிடம்" பள்ளிக் கூட சீட்டு வாங்குவதற்கு பதிலாக எம்.எல்.ஏ. சீட்டு எளிதாக வாங்கி விடலாம் போல இருக்கே.
Some interesting observation, I think its worth spreading the word.
Look at the Terror Pattern below:
13 May -> JAIPUR
June - nothing
26 July -> AHMEDABAD
August - nothing
13 September -> DELHI
October - nothing
26 November -> MUMBAI
December - nothing
13 January -> What Next?
I hope nothing should happen...?
BE VERY CAREFUL & CAUTIOUS
In case you come across any suspicious activity, any suspicious movement or have any information to tell to the Anti-Terror Squad, please take a Note of the new ALL INDIA TOLL-FREE Terror Help-line "1090".
Dear ItsDifferent
Thanks for the comments.
Your information is quite useful. Every Indian should be vigil and alert to avert any such terrorist incident again on any day.
Itsdifferent குறிப்பிட்டு இருக்கும் இந்த செய்தி உண்மை அல்ல.நண்பரும் என்னை போலவே முதலில் ஏமாந்து இருக்கலாம்.தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி என்னுடைய வலைபூவிற்கும் சற்று வாருங்களேன்...இதை பற்றிய விரிவான கட்டுரையை வெளியிட்டிருக்கிறேன்.நன்றி.
http://pattaampoochi.blogspot.com/2008/12/1090.html
அன்புள்ள பட்டாம்பூச்சி
நீங்கள் சொல்வது ஆச்சரியமாக உள்ளது. பலரின் வேதனை சிலருக்கு வேடிக்கையாக உள்ளது. சிலரோ நாட்டுப் பற்றை காசாக்கவே முயற்சிக்கிறார்கள்.
தகவலுக்கு நன்றி. மேலும் பல நல்ல பதிவுகளை இட வாழ்த்துக்கள்.
Post a Comment