Friday, February 6, 2009

காதலர்களுக்கு ஒரு எச்சரிக்கை!


காதலர் தினம் சீக்கிரம் வரட்டும். நமது காதலியை (காதலனை) ஒரு அசத்து அசத்தி விட வேண்டும் என்று காத்துக் கிடக்கும் காதல் கண்மணிகளே! உங்களுக்கு ஒரு எச்சரிக்கை.

ஒரு காலத்தில் காதலுக்காக உயிர்துறந்த ஒரு சாமியாரின் (?) நினைவாக ஒவ்வொரு வருடமும் காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. இந்தியாவிலும் மேற்கத்திய வியாபாரிகளால் புகுத்தப் பட்ட இந்த கொண்டாட்டத்திற்கு நமது உள்ளூர் கலாச்சார காவலர்கள் எப்போதுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது வரை சிவன் (சிவ சேனா) பேரை சொல்லி எதிர்ப்பு வந்து கொண்டிருந்தது. இப்போது சிவனுக்கு போட்டியாக ராமரும் (ராம சேனே) கிளம்பி விட்டார். (வருங்காலத்தில் அனுமாரும் கிளம்புவாரோ?)

"என்ன செய்து விடுவார்கள் இவர்கள்? மிஞ்சிப் போனால், உருட்டுக் கட்டையால் அடிப்பார்கள், கற்களை வீசுவார்கள். அவ்வளவுதானே? அடிகளையும் தாண்டி புனிதமானது எங்கள் காதல்" என்றெல்லாம் வசனம் பேசும் நண்பர்களே! இதுவரை கலாச்சார காவலர்கள் தந்த இது போன்ற தண்டனைகள் எல்லாவற்றையும் விட கடுமையான ஒரு தண்டனையை தர இப்போது ஸ்ரீ ராம சேனே தலைவர் முடிவெடுத்துள்ளார். அதாவது, காதலர் தினத்தன்று பொது இடங்களில் நெருக்கமாக இருப்பவர்களைப் பிடித்து திருமணம் செய்து வைத்து விடப் போகிறாராம். (கேட்கவே நடுக்கமாக இருக்கிறதல்லவா?)

இதற்காகவே ப்ரோகிதர் சகிதமாக ஸ்ரீ ராம சேனேவின் ஐந்து குழுக்கள் மப்டியில் (குண்டாந்தடி, உருட்டுக் கட்டை இல்லாமல் வருவார்களோ?) பிப்ரவரி 14 ஆம் தேதி நகர வலம் வரப் போகிறார்கள். ஒருவேளை, காதலர்கள் மைனர்களாக இருக்கும் பட்சத்தில் போலீஸ் மூலம் தகுந்த எச்சரிக்கை செய்து அனுப்பப் படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். காலையில் வெளியே போகும் மேஜர் பிள்ளைகள் மாலையில் திருமணம் முடித்து திரும்புவதை விரும்பாத பெற்றோர்கள் அவர்கள் பெற்ற செல்வங்களை அன்றைய தினம் வெளியே அனுப்ப வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். (கல்யாண மாலை, நவீன சுயம்வரம், பாரத மாட்ரிமோனி, உள்ளூர் புரோக்கர் போன்றவற்றையெல்லாம் முயற்சித்து வெற்றி பெறாத பெற்றோர்கள் ஒரு ட்ரையல் பேசிஸ் முறையில் அனுப்பலாம் என்று நினைக்கிறேன்)

ஸ்ரீ ராம சேனேவின் தலைவர் (முத்தாலிக்) கூட ஒரு திருமணமாகாதவர் என்ற முறையில் அவருக்கு காதலை பற்றி என்ன தெரியும் என்ற கேள்விக்கு தனக்கும் காதலைப் பற்றி நன்றாகவே தெரியும் என்று பதிலளித்துள்ளார். (ஒரு வேளை நன்கு தெரிந்ததனாலேயே பிரம்மச்சாரியாக உள்ளாரோ?)

ஆக மொத்தத்தில், "ஒன்லி லவ் நோ மேரேஜ்" என்ற உயர்ந்த பாலிசி (இதும் கூட ஒரு நல்ல இன்சூரன்ஸ் பாலிசிதான்) கொள்கைகள் உள்ளவர்கள் அன்றைய தினம் யாராவது ப்ரோகிதர் சகிதமாக தொடரும் பட்சத்தில் எச்சரிக்கையாக இருந்தால் தப்பிப் பிழைக்கலாம்.

இதுவரை காதலர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த நாம், அவர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ள திருவாளர் முத்தாலிக்கு (அவரை மாதிரி ஆட்களும் நமக்கு தேவை இல்லையா? நமக்கும் பொழுது போக வேண்டாமா?) ஒரு போனஸ் எச்சரிக்கை கொடுத்து விடலாம்.

"பார்த்து முத்தாலிக் சார்! ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதில் ஜாக்கிரதையாக இருங்கள். அன்றைய தினம் இசகு பிசகாக இருக்கும் சில நெருக்கமான காதலர்களுக்கு திருமணம் செய்வதற்கு முன்னர் அவர்களின் உண்மையான சொந்த கணவன் மற்றும் மனைவியிடம் அனுமதி வாங்கி விட வேண்டியிருக்கும். எதற்கும் முன்னமே அவர்கள் திருமணமானவர்களா? யாருக்கு யார் கணவன் மனைவி என்று நன்கு தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால், ஒரு சினிமாவில் எங்க ஊரு பத்ம ஸ்ரீ விவேக் சார் அடிபடுவது போல நீங்களும் அடி பட வேண்டியிருக்கும்"

நன்றி.

14 comments:

Karthik said...

எ.கொ.சா இது??

வால்பையன் said...

//சில நெருக்கமான காதலர்களுக்கு திருமணம் செய்வதற்கு முன்னர் அவர்களின் உண்மையான சொந்த கணவன் மற்றும் மனைவியிடம் அனுமதி வாங்கி விட வேண்டியிருக்கும்//

ஹா ஹா ஹா

ஈரோட்டுக்கு அவுங்களை வர சொல்லுங்க!
இங்கே நிறைய பேருக்கு கல்யாணம் ஆக வேண்டியிருக்கு!

எங்க பாஸுக்கு தான்

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கும் முதல் வருகைக்கும் நன்றி

//எ.கொ.சா இது??//

பு.வி? சு.ஜா. இது.


நன்றி.

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

//ஈரோட்டுக்கு அவுங்களை வர சொல்லுங்க!
இங்கே நிறைய பேருக்கு கல்யாணம் ஆக வேண்டியிருக்கு!

எங்க பாஸுக்கு தான்//

கண்டிப்பாக. எதுக்கும் உங்க பாஸ் பிப்ரவரி 14 ஆம் தேதி என்ன பண்றார்னு கொஞ்சம் பாருங்க? வெளிய போனா ஸ்ரீ ராம் சேனேவிற்கு தகவல் கொடுத்திடலாம் :)

ஷங்கர் Shankar said...

பெங்களூருல தான இப்படி நடத்தபோறதா சொல்லி இருக்காங்க! மற்ற ஊர்களில் பிரச்சனையில்லை...

Maximum India said...

அன்புள்ள ஷங்கர்

பின்னூட்டத்திற்கு நன்றி.

மங்களூர் சிவா said...

/
கல்யாண மாலை, நவீன சுயம்வரம், பாரத மாட்ரிமோனி, உள்ளூர் புரோக்கர் போன்றவற்றையெல்லாம் முயற்சித்து வெற்றி பெறாத பெற்றோர்கள் ஒரு ட்ரையல் பேசிஸ் முறையில் அனுப்பலாம்
/

ROTFL
:)))))))))

Maximum India said...

Dear Shiva

Thank you :)))

Anonymous said...

ஏனுங்க இதான் சான்ஸ், உங்களுக்கு பிடிச்ச பெண்ணையோ, அல்லது நீங்கள் ஒருதலைப்
பட்சமாக காதலிக்கும் பெண்ணையோ உறுதி செய்து, எப்படியாவது காதலர் தினத்தன்று
உஷார் பண்ணிட்டு பெங்களூர்ல அந்த சேனா ஆளுங்க பாக்கறப்ப ஒன்னா இருக்கறா மாதிரி
ஒரு சிச்சுவேஷனை கிரியேட் பண்ணிட்டா, அப்புறம் அவங்களே தாலியை கொடுத்து கட்ட
சொல்லிடுவாங்க :)

அப்புறமா அந்த பொண்ணுகிட்ட எனக்கு வேற வழி தெரியலைன்னு சொல்லி சமாளிச்சுடலாம்
எப்டி நம்ம ஐடியா?

அபாய எச்சரிக்கைகள்:

1. அந்த பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகலைங்கறதை உறுதி பண்ணிக்கோங்க
2. ஒரே பொண்ணுக்கு நிறைய பேர் இதே பிளானை போட்டுருக்கப் போறாங்க, அப்புறம் தாலி
கட்டுற நேரத்துல அஞ்சாறு பேரு வந்து நிக்கப் போறாங்க!!!
3. ஒருவேளை இதே பிளானை எந்தப் பொண்ணாவது உங்களை வெச்சு போட்டுருக்கலாம்!

*புதுமொழி:*
புத்திசாலிகள் வாய்ப்பை உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள்
அதி புத்திசாலிகள் வாய்ப்பை உருவாக்கிக்கொள்கிறார்கள்!!!

Maximum India said...

அன்புள்ள நரேஷ்

முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி,

//*புதுமொழி:*
புத்திசாலிகள் வாய்ப்பை உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள்
அதி புத்திசாலிகள் வாய்ப்பை உருவாக்கிக்கொள்கிறார்கள்!!!//

ஆனாலும் நீங்க அநியாயத்துக்கு அதி புத்திசாலி. இதுக்காகவே வடபழனியில தனியா ரூம் போட்டு யோசிக்கிறீங்களா?

Anonymous said...

ஏங்க, நான் வடபழனியில இருக்கேன்னு யாரு சொன்னது?

இல்லை நீங்க குத்து மதிப்பா போட்டதுல நானத்தான் உளறிட்டேனா?

Maximum India said...

அன்புள்ள நரேஷ்

உங்களது பதிவைப் படித்தேன். உங்களது நடை பிடித்திருந்தது. ரொம்பவும் அழகாகவும் இயல்பாகவும் எழுதியிருந்தீர்கள். பின்னூட்டம் போடக் கூட முயற்சி செய்தேன். ஆனால், இண்டர்நெட்டில் இதே பிரச்சினை. பின்னூட்டம் போக வில்லை.

//ஏங்க, நான் வடபழனியில இருக்கேன்னு யாரு சொன்னது?

இல்லை நீங்க குத்து மதிப்பா போட்டதுல நானத்தான் உளறிட்டேனா?//

உங்களது பதிவின் லிங்க் கொடுத்து விட்டு, இப்படி கேள்வி கேட்டால்?

நன்றி.



போடவும்

Anonymous said...

நான் பதிவுல போட்டிருந்ததை கவனிக்கலை!

ஆனா எனக்கு நினைவு தெரிஞ்சு என்னோட அறிமுகத்திலெல்லாம் நான் இடத்தை போடவேயில்லியென்னு யோசிச்சு ரொம்பவே குழம்பிட்டேன் :))))

Maximum India said...

அன்புள்ள நரேஷ்

குழப்பமெல்லாம் வேண்டாம். காதலர் தினம் வருது. நீங்கள் குறிப்பிட்ட திட்டத்தை நிறைவேற்ற வாழ்த்துக்கள் :)

நன்றி

Blog Widget by LinkWithin