The Art of Appraisal
-
Big Boss: This year your performance was good, excellent and outstanding.
So, your rating is "average".
Kumar: What? How come 'average'?
Big Boss: Becau...
பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (104)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (9)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Sunday, February 8, 2009
எல்லை தாண்டுமா?
எதிர்பார்த்ததை விட மோசமாக அமெரிக்க பொருளாதாரம் வீழ்ந்திருப்பதாக முந்தைய வார இறுதியில் வெளியிடப் பட்ட தகவலின் அடிப்படையில் நமது சந்தைகள் சென்ற வாரத்தை ஒரு பெரிய சரிவுடனேயே துவங்கின.
பெரும்பாலான காலாண்டு நிதி அறிக்கைகள் வெளி வந்து விட்ட நிலையில் சந்தையின் போக்கை நிர்ணயிக்கக் கூடிய புதிய காரணிகள் பெருமளவில் இல்லாத காரணத்தாலும், குறுகிய கால நோக்கில் சந்தையின் போக்கு குறித்து வணிகர்களிடையே நிலவி வரும் சந்தேகங்களினாலும் சென்ற வாரம் நமது பங்கு சந்தையில் வர்த்தகம் மிகவும் குறைந்தே காணப் பட்டது.
முந்தைய வாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக நன்கு உயர்ந்திருந்த பங்குகள் கடந்த வாரத்தில் லாப நோக்குடன் விற்பனை செய்யப் பட்டன. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் தமது பங்குகளை (குறைந்த அளவில்) விற்றன. இனி, இந்திய தலைமை வங்கி வட்டி வீதங்களை குறைக்காது என்ற சந்தை யூகங்களின் அடிப்படையில் ரியல் எஸ்டேட், வங்கி, வாகனம், இயந்திர உற்பத்தி துறைகளை சார்ந்த பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.டி.எல்.எப் நிறுவனத்தின் மோசமான காலாண்டு நிதி அறிக்கையும், ரியல் எஸ்டேட் பங்குகளின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம். சிமெண்ட் துறை சார்ந்த நிறுவன பங்குகள் முன்னேற்றத்தை சந்தித்தன. கிருஷ்ணா-கோதாவரி எரிவாயு விவகாரத்தில் சாதகமான இடைக் கால தீர்ப்பைப் பெற்றதால், சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி ஆகிய குறியீடுகளின் முக்கிய பங்கான ரிலையன்ஸ் ஏற்றத்தை கண்டது. மொத்தத்தில் நமது சந்தை சென்ற வாரத்தில் பெரும் ஏற்ற இறக்கங்களையே சந்தித்து வந்தது. இறுதியாக, முக்கிய குறியீடுகளான நிபிட்டி மற்றும் சென்செக்ஸ் சிறிய அளவில் சரிவைச் சந்தித்தன. நிபிட்டி 2750 அளவில் நல்ல அரணைக் கொண்டிருந்தது.
வருகிற வாரம், ஒபாமா அவர்களால் அறிவிக்கப் படவிருக்கும் அமெரிக்க பொருளாதார மீட்டெடுப்பு திட்டம் சந்தைகளால் உன்னிப்பாக கவனிக்கப் படும். ஏற்கனவே இந்த திட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள உலக சந்தைகள் கடந்த வெள்ளிக் கிழமை நல்ல முன்னேற்றத்தை கண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த வாரத்தில் நமது நாட்டில் பணவீக்கம் குறைந்திருப்பதும், மைய வங்கியின் தலைவரின் அறிக்கையும், வட்டி வீதங்கள் குறைக்கப் படலாம் என்ற மீண்டும் ஒரு புதிய நம்பிக்கையை சந்தை வர்த்தகர்களுக்கு தந்துள்ளன. மேலும் இந்திய மத்திய அரசால் வரும் வாரத்தில் அறிவிக்கப் படவிருக்கும் இடைக் கால நிதியறிக்கையில் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க புதிய திட்டங்கள் இருக்கும் என்ற நம்பிக்கையும் வருகின்ற வாரத்தில் சந்தையை ஏற்ற நிலையில் வைக்க உதவும்.
வெகு காலமாகவே, ஒரு குறுகிய எல்லைகளுக்குள்ளேயே (2700 -2900) தடுமாறி வரும் நமது சந்தைகள் இந்த வாரம் மேல் எதிர்ப்பான 2900 அளவை தாண்டும் என்று எதிர்பார்க்கலாம். அமெரிக்க பொருளாதார திட்டம் மற்றும் இந்திய (இடைக்கால) நிதி நிலை அறிக்கை ஆகியவை சந்தைகளுக்கு திருப்தி அளிக்கும் பட்சத்தில் நிபிட்டி 3050 (3200) நோக்கி பயணம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். அதே சமயத்தில் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் மிகுந்தே காணப் படும். வர்த்தகர்கள் 2750 அளவை ஸ்டாப் லாஸ் ஆக வைத்துக் கொண்டு நிபிட்டி குறியீடு மற்றும் பெரிய பங்குகளை வாங்கலாம்.
தொடர்ந்து இரு வாரங்களாக "முன்னேறி வரும் நாடுகளின் சந்தைகள்" முன்னேற்றத்தை கண்டு வருவதை தொடர்ந்து, நாணய சந்தையில் டாலர் விலை குறையும் என்று எதிர்பார்க்கலாம். அமெரிக்க பொருளாதார மீட்டெடுப்பு திட்டத்தின் அடிப்படையில் கட்சா எண்ணெய் மற்றும் அடிப்படை உலோகங்களின் விலை உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதே சமயம், பங்கு சந்தைகள் உயரும் பட்சத்தில் தங்கத்தின் விலை குறையவும் வாய்ப்பு உள்ளது.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
நன்றி.
Labels:
பங்கு சந்தை,
பொருளாதாரம்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//கட்சா எண்ணெய் மற்றும் அடிப்படை உலோகங்களின் விலை உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.//
மிக்க நன்றி!
அடிப்படை உலோகங்கள் ஐந்து வருடத்திற்கு முந்தைய விலையில் இருந்தாலும் முதலீடு செய்ய சிறு தயக்கம் இருந்தது. இப்போது காப்பர் விலையேற்றம் புது நம்பிக்கையை தருகிறது
hai :)
அன்புள்ள வால்பையன்
பின்னூட்டத்திற்கு நன்றி
//அடிப்படை உலோகங்கள் ஐந்து வருடத்திற்கு முந்தைய விலையில் இருந்தாலும் முதலீடு செய்ய சிறு தயக்கம் இருந்தது. இப்போது காப்பர் விலையேற்றம் புது நம்பிக்கையை தருகிறது//
குறுகிய கால நோக்கில் அடிப்படை உலோககங்களின் விலை ஏறும் (அமெரிக்க பொருளாதார மீட்டெடுப்பு முயற்சியின் அடிப்படையில்) என்றாலும், நீண்ட கால நோக்கில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. (பங்கு சந்தைகளுக்கும் இதே நிலைதான்). பொதுவாகவே சரிவை சந்திக்கும் ஒரு பெரிய பொருளாதாரத்தை சில அரசு நடவடிக்கைகள் மூலம் மட்டுமே உயரச் செய்ய முடியாது. அரசு அடிக்கும் நோட்டுக்களின் எண்ணிக்கை அதிகமாவது அதன் பொருளாதாரத்திற்கு நல்லது அல்ல.
நன்றி.
Dear Superlinks
Thanks for the visit.
Post a Comment