Friday, December 5, 2008

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அணுகுண்டு வீசி தீவிரவாதிகள் தாக்குதல் - அமெரிக்க அறிக்கை


அமெரிக்க அரசும் அதன் கூட்டணி நாடுகளும் உரிய மற்றும் கடும் நடவடிக்கை உடனடியாக எடுக்காவிட்டால் இன்னும் ஐந்து வருடங்களில் பாகிஸ்தான் திவிரவாதிகளுக்கு அணுகுண்டு போன்ற பேரழிவு ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தக் கூடிய பலம் வந்து விடும் என அமெரிக்க அறிக்கை ஒன்று கூறுகிறது. விவரங்கள் கீழே.

பேரழிவு ஆயுதங்கள் மற்றும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு நடத்த அமெரிக்க பாராளுமன்றம் (காங்கிரஸ்) ஒரு சிறப்புக் குழுவை அமைத்தது. அந்த குழு உலகெங்கும் சுற்றுபயணம் செய்து பல நாடுகளில் சுற்றுபயணம் செய்து மற்றும் அந்தந்த நாட்டு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமார் ஆறு மாதங்கள் ஆய்வுக்கு பிறகு சென்ற வாரம் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது (மும்பை தாக்குதலுக்கு முன்னரே).

அந்த அறிக்கையில், அமெரிக்க எதிர்ப்பு நாடுகளான ஈரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகளில் பேரழிவு ஆயுதங்கள் தயாரிக்கப் படுவது, அமெரிக்க பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் தற்போதைய மேற்கொள்ளப் படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானவை அல்ல (அமெரிகாவிலேயா? அப்ப இந்தியாவின் நிலை) எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

அதே சமயத்தில் பாகிஸ்தான் அமெரிக்காவின் ஒரு நட்பு நாடாக விளங்கினாலும் கூட அதுதான் உலகின் பாதுகாப்புக்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாகவும் விளங்குகிறது என்றும் தெரிவித்துள்ளது. புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள ஒபாமா அவர்களின் முதல் சவால் மற்றும் கடமை (நேச நாடான) பாகிஸ்தானை தீவிரவாதப் பிடியிலிருந்து காப்பாற்றுவதேயாகும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. "உலகில் தீவிரவாதம் மற்றும் பேரழிவு ஆயுதங்களுக்கான வரைபடம் என்று ஒன்று இருக்குமேயானால், அதில் உள்ள அனைத்து சாலைகளும் இணையும் சந்திப்பு பாகிஸ்தானே" என்று திட்டவட்டமாக குறிப்பிடப் பட்டுள்ளது.

"பாகிஸ்தான் ஒரு அமெரிக்காவின் நேச நாடாக இருக்கலாம். ஆனால் வருங்காலத்தில் அமெரிக்காவில் ஒரு பேரழிவு ஆயுதங்கள் மூலமான ஒரு பெரிய தீவிரவாத தாக்குதல் நடக்குமேயானால் அந்த தாக்குதலின் விளை நிலம் பாகிஸ்தானாகவே இருக்கும் அபாயம் உண்டு" எனவும் சொல்லப் பட்டு உள்ளது.

பாகிஸ்தானின் இரண்டு எல்லை நாடுகளான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளை ஒட்டிய பாகிஸ்தான் பகுதிகளே தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்கள் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரச்சினையில் உடனடியாக உலக நாடுகள் தலையிட வில்லையென்றால், 2013 இல் நடைபெறும் தீவிரவாத தாக்குதல் அணு ஆயுதம் போன்ற பேரழிவு ஆயுதங்களாலேயே இருக்கும் என்று எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. உலக நாடுகள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதத்தை (அந்த நாட்டின் ஜனநாயக ரீதியான அரசின் உதவியுடன்) உடனடியாக களையெடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது. (நன்றி நியூயார்க் டைம்ஸ்)

நண்பர்களே! அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டீர்களா? நானும் அப்படித்தான் முதன்முதலாக இந்த தகவலைப் படித்தவுடன் திகைத்துப் போய் விட்டேன். நம் நாட்டின் தூரதிர்ஷ்டம் அண்டை நாடாக பாகிஸ்தான் அமைந்து விட்டது. அந்த நாட்டின் தீவிரவாதிகளிடம் அணுகுண்டு கிடைத்து விட்டால் அவர்கள் அமெரிக்காவைத் தாக்குவதற்கு முன்னர் பரிசோதனை பார்க்க விரும்பும் சோதனைக் களம் இந்தியாவாகத்தான் இருக்கும். இப்போது நமது காவல்துறை வழங்கும் "பதட்டமான நாட்களில் வீட்டிற்குள்ளேயே இருங்கள்" என்பது போன்ற அறிவுரைகள் அத்தகைய தாக்குதலின் போது பலனளிக்காது. கமோண்டோ படை பாதுகாப்பிற்கு இருந்தாலும் கூட தலைவர்களும் அனைவருடன் சேர்ந்து "கூண்டோடு கைலாசம்" போக வேண்டி இருக்கும்.

எனவே தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு பொதுமக்கள் கூடும் சிலபகுதிகளில் சில போலீஸ்காரர்களை நிறுத்திவிட்டால் போதும் என்ற நினைப்பை மாற்றிக் கொள்ளவேண்டும். மேலும் குண்டுவெடிப்புகளை சில நாட்களில் மறந்து போகும் சிறுகால மறதி (short-term memory loss) வியாதியினை உடனடியாக குணப் படுத்த வேண்டும்.

இந்த செய்தியினை நமது உளவுத்துறை வழங்கும் குறிப்புகள் போல "பத்தோடு பதினொன்றாக" மறந்து போகாமல், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து இந்திய அரசு செயல்பட வேண்டும். நாமும் நமது வேற்றுமைகளையும் வாக்கு வங்கி அரசியலையும் சிலகாலம் மறந்து இந்த பிரச்சினையில் அரசு எடுக்கும் நிலைக்கு முழு ஆதரவு தர வேண்டும்.
நன்றி

9 comments:

KARTHIK said...

ISI இதை முதல்ல அழிச்சா ஓரளவுக்கு எல்லாம் சரியா போகும்.அதை பாக்னாலையே கட்டுப்படுத்தமுடியல அதை வலத்த US நாலையும் கட்டுப்படுத்த முடியாது.

அதனால அவனுங்க கைல நமக்கு அணூகுண்டு நிச்சையம்.

வேனும்னா அப்படிப்போட்டா கதிர்வீசிக்கலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படின்னு ஒரு வகுப்பெடுப்பாங்க.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி

//ISI இதை முதல்ல அழிச்சா ஓரளவுக்கு எல்லாம் சரியா போகும்.அதை பாக்னாலையே கட்டுப்படுத்தமுடியல அதை வலத்த US நாலையும் கட்டுப்படுத்த முடியாது.//


இந்திய அரசாங்கம் இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பேரபாயம் நிச்சயம்.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி

//ISI இதை முதல்ல அழிச்சா ஓரளவுக்கு எல்லாம் சரியா போகும்.அதை பாக்னாலையே கட்டுப்படுத்தமுடியல அதை வலத்த US நாலையும் கட்டுப்படுத்த முடியாது.//


இந்திய அரசாங்கம் இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பேரபாயம் நிச்சயம்.

pothujanam said...

பாகிஸ்தான் விரைவில் அணு குண்டர் களின் நாடாகி விடும் என்று சொல்கிறீர்கள் .என்ன செய்வது என்ன நடந்தாலும் நம் அசையாத குண்டர்கள் இருக்கும் வரை ? எதிர்பாராமல் நடந்த சுனாமி கூட இயற்கையின் வேலை.ஆனால் முட்டாள் முன்கோப தீவிரவாதியின் கையில் அணுகுண்டு சேர்ந்தால் ஒரு நாடே அழியும் நிலை ஏற்படலாம். உள்நாட்டில் அதிகார வர்க்கம் போதையில் இருந்து விட்டு போகட்டும். அட்லீஸ்ட் எல்லைகளை விழிப்புடன் இருப்பவர்கள் கையில் ஒப்படைக்கலாமே? இதற்கு வழி அரசியல் சார்பற்ற ஒரு நல்ல உறுதியான மனிதரிடம் நாட்டின் எல்லைகளை காப்பாற்றும் பொறுப்பை கொடுப்பது தான். சிவ சிவா !"பாட்டில்" மாற்றினால் போதுமா ("பா" வல்லினம் ) . சரக்கை மாற்ற வேண்டும்..

Maximum India said...

அன்புள்ள பொதுஜனம்

பின்னூட்டத்திற்கும் கருத்துக்கும் நன்றி

//இதற்கு வழி அரசியல் சார்பற்ற ஒரு நல்ல உறுதியான மனிதரிடம் நாட்டின் எல்லைகளை காப்பாற்றும் பொறுப்பை கொடுப்பது தான்.//

இதே போன்ற ஒரு பரிந்துரையை அமெரிக்க நிபுணர் குழுவும் அளித்துள்ளது. சரியான coordination இல்லாத காரணத்தினாலேயே மும்பையில் அதிகப் படியான உயிர்சேதம் தவிர்க்கப் பட முடியாமல் போய் விட்டது.

//சிவ சிவா !"பாட்டில்" மாற்றினால் போதுமா ("பா" வல்லினம் ) . சரக்கை மாற்ற வேண்டும்..//

கண்டிப்பாக. ஆனால் "பாட்டில் பதவி பறி போனது" அரசியல்வாதிகளுக்கு பதவி பற்றிய ஒரு பயம் உருவாக உதவி செய்யும்.

ஆட்காட்டி said...

இந்தியா ஆரிட்ட போய்த் தான் புலம்புறது?

Maximum India said...

அன்புள்ள ஆட்காட்டி

பின்னூட்டத்திற்கு நன்றி

//இந்தியா ஆரிட்ட போய்த் தான் புலம்புறது?//

இது புலம்பும் நேரமல்ல. நடவடிக்கை அதுவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரமிது.

நன்றி

karthik said...

ஒரு வேலை நம் மீது தீவிரவாதிகள் அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், சொம்பை காங்கிரஸ் அரசாங்கம் மாதிரி பாகிஸ்தானுக்கு எதிராக அறிக்கை விடக்கூடாது. பேச்சு, விசாரணை எதுவும் கூடாது. அடுத்த நொடி முதல் பாகிஸ்தானில் நாம் அணுகுண்டு மழை பொழிய வேண்டும். சில மணிநேரங்களில் பாகிஸ்தான் காணமல் போகவேண்டும். பிறகு வருவதை பார்த்துகொள்ளலாம். ஒரு வேலை நாம் அழிந்தால் கூட உலக்கதிருக்கு விடுதலை கிடைக்கும்.

Maximum India said...

அன்புள்ள சாமீ

பின்னூட்டத்திற்கும் கருத்திற்கும் நன்றி.

உங்கள் கோபம் புரிகிறது. அதே சமயம் வருமுன் காப்பதே புத்திசாலித்தனம்

நன்றி

Blog Widget by LinkWithin