Friday, December 19, 2008

அன்பார்ந்த நன்றிகள் சமர்ப்பணம்


இது சந்தை நிலவரத்தின் தொண்ணூற்று ஒன்பதாவது பதிவு. நூறாவது பதிவு சற்று தாமதமாகலாம் என்பதினால் இப்போதே சிலருக்கு எனது வணக்கத்துக்கும் அன்புக்கும் உரிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சமுதாயத்திற்கு பயன்படுமாறு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு என் (நேரடி) முன்மாதிரிகளாக இருக்கும் எனது தந்தை மற்றும் தமையனுக்கு முதல் நன்றி சமர்ப்பணம். இவர்களைப் பார்க்கும் போதெல்லாம், நமக்கு இவ்வாறு வாய்ப்புகள் கிடைக்க வில்லையே என்று வருத்தப் பட்டிருக்கிறேன். (சமுதாயப் சேவை பணியினை ஒரு முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கும் நிறுவனத்தில் பணி புரிந்தாலும் கூட , நேரடியாக அந்த சேவைகளில் ஈடுபட முடியாத ஒரு சிறப்பு தனித் துறையிலேயே அதிக நாட்கள் (இன்று வரை) பணியாற்றி வந்திருக்கிறேன் என்பதும் நிறுவன வாயிலாகவே வருங்காலங்களில் நேரடி சேவையில் ஈடுபட பல வாய்ப்புகள் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத் தக்கது.)

எனது வாழ்வில் இதுவரை பலவாறாகப் பெற்ற அனுபவங்களையும் அறிந்தவற்றையும் மற்றவர்களுக்கு உபயோகப் படும் வகையில் பரிமாறிக் கொள்ளாமல் இருந்தால் என்ன பலன் என்ற கேள்வி எப்போதுமே எனக்குள் இருந்து வந்தது. அதே சமயத்தில் அவற்றை எப்படி பலருடன் பரிமாறிக் கொள்வது என்பதில் குழப்பங்கள் இருந்ததன. இணையதள பதிவுலகைப் பற்றி பத்திரிக்கைகளில் தவறான செய்திகளை மட்டுமே அதிகம் படிக்க நேர்ந்ததால், பதிவுலகு என்பது தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற மற்றும் சாட்டிங் போன்றவற்றிக்கான ஒரு ஊடகம் மட்டுமே என்று மட்டுமே (தவறாக) எண்ணியிருந்தேன். எனக்கிருந்த இந்த தவறான எண்ணத்தை நீக்கி தமிழில் பல நல்ல பதிவு வலைகள் உண்டு என்று அவற்றை அறிமுகம் செய்து என்னையும் "ஒரு பதிவு பூ ஆரம்பியுங்கள்" என்று ஊக்கப் படுத்திய கார்த்திக் தம்பிக்கு இரண்டாவது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்ததாக, சட்டம் போன்ற கடினமான துறை சார்ந்த விஷயங்களைக் கூட தமிழில் எளிமையாகவும் சுவையாகவும் வழங்க முடியும் என்று நிருபித்து தமிழில் எழுத எனக்கு முன்மாதிரியாக இருக்கும் வழக்கறிஞர் திரு.ஜெயராஜன் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டப் பார்வை எனும் இதழை நடத்தி வரும் இவர் தமிழில் சிறப்பாக எழுதியமைக்காக விருது பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழில் புதிதாக எழுத வரும் இளைய எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்னும் உயர்ந்த நோக்கத்துடன் தனக்கு பிடித்த பதிவுகளில் ஒன்றாக என்னுடைய பதிவினையும் அங்கீகரித்து மேலும் எழுத வேண்டும் என்ற ஊக்கத்தினையும் இன்னும் சிறப்பாக செயல் படவேண்டும் என்ற பொறுப்புணர்வையும் பதிவுலகில் நுழைந்த சில நாட்களுக்குள் எனககு ஈந்த எழுத்தாளர். திரு. சாருநிவேதிதா அவர்களுக்கும் எனது நன்றிகளை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

பின்னூட்டம் என்பது ஒரு பதிவருக்கு கிடைக்கும் க்ளுகோஸ் போன்றது. இதை நன்கு புரிந்து கொண்டு தனது சக பதிவர்களை போட்டியாக நினைக்காமல் இந்த பதிவுப் பூவினை தொடங்கிய நாட்களில் இருந்து பின்னூட்டங்கள் இட்டு ஊக்கமளித்து வரும் வால்பையன் அவர்களுக்கும், சந்தை நிலவரத்தில் தொடர்ந்து பின்னூட்டங்கள் பல இட்ட கபீஷ், dg, சுரேஷ், சதுக்க பூதம், ராஜநடராஜன், பொதுஜனம், நம் தமிழ், நனவுகள் மற்றும் இந்தப் பட்டியலில் விடுப்பட்டுப் போன பலருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அக்கறை கலந்த பல அறிவுரைகளை நேரிலும், மின்னஞ்சல் வாயிலாகவும், பின்னூட்டங்கள் வாயிலாகவும் தந்த (மிகுந்த தமிழார்வம் மற்றும் உயர்ந்த சமுதாய நோக்கங்கள் கொண்ட) திரு. நெற்குப்பை தும்பி அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரபல வெகுஜன பத்திரிக்கையான ஆனந்த விகடனை படிக்க மட்டுமே வாய்ப்புகள் கிடைத்த எனககு, என்னுடைய படைப்பு ஒன்று அதன் வரவேற்பறையிலேயே இடம் பெற்றது மிகவும் மகிழ்ச்சிகரமான பெருமையான ஒரு தருணம். இந்த வாய்ப்பினைத் தந்த விகடன் குழுமத்திற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுத்து மற்றும் பதிவுலத்தைப் பொறுத்தவரை அனுபவம் மிகவும் குறைந்த என்னையும் மதித்து, என் குறைகளைப் பொறுத்து இந்த பதிவுக்கு பல முறை வருகை தந்த அனைத்து வாசக நண்பர்களுக்கும் இந்த பதிவினைத் தொடரும் அன்பர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரித்துக் கொள்கிறேன். இவ்வாறு பலர் இந்தப் பதிவைப் பார்க்க முக்கிய காரணமான தமிளிஷ், தமிழ்மணம், திரட்டி போன்ற தமிழ் திரட்டிகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அங்கே வோட்டு போட்டவர்களுக்கும் எனது நன்றிகள் பல.

எல்லாவற்றிக்கும் கடைசியாக ஆனால் மிக முக்கியமாக, குடும்பத்திற்கான நேரத்தை கொஞ்சம் ஒதுக்கி பதிவுகள் இட ஒத்துழைத்ததற்காக என் இனிய குடும்பத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை படிக்கும் உங்களுக்கும் கூட ஒரு நன்றி.

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றிகள் பல.

பின்குறிப்பு: அன்புள்ள நண்பர்களே! வரும் வாரம் எனக்கு மிகவும் பிடித்த மற்றும் சொந்த ஊரான சேலத்திற்கு செல்ல (வர) இருப்பதால் புதிய பதிவுகளுக்கு சில நாட்கள் விடுப்பு அளிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். (அப்பாடா கொஞ்ச நாளைக்கு தப்பிச்சோம்னு நினைக்கிறீங்களா? )

இதை இடைவெளியில் நீங்கள் இது வரை பார்க்காமல் விட்ட பழைய பதிவுகளைப் பாருங்கள். உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களாக இடுங்கள். ஒரு வாரம் புதிய பதிவுகளுக்கு மட்டுமே விடுப்பு. பின்னூட்டங்களுக்கு பதில் நிச்சயமாக இடுவேன்.

18 comments:

கபீஷ் said...

Happy journey!!Have nice time, enjoy every second!!!

Maximum India said...

Thank you kabeesh

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள்!

தொடர்க உமது பணி!

மேலும் பல தொலைவுகள் கடப்பீர்!
பல சிகரங்கள் தொடுவீர்!

Maximum India said...

வாழ்த்துக்களுக்கும் ஆதரவிற்கும் நன்றி நாமக்கல் சிபி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஆஹா.....
ஆஹா............

raje said...

மிகுந்த பொறுப்புணர்வுடனும் நல்ல தமிழில் எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய வகையிலும் பதிவை பதியசெய்து வரும் maximum india வை அனைவரும் இருகை கூப்பி வரவேற்போம்
உங்கள் பின்னூட்டத்தில் உள்ள பிரிவுகள் அனைத்திலும் எளிமையான
உரைநடை மற்றும் செய்தி கோர்வையும் மிகவும் அருமை.

வேண்டுகோள்:உங்கள் பதிவில் அறிவியல் தமிழ் பற்றிய ஒரு பிரிவை உருவாக்க வேண்டும்.

Maximum India said...

அன்புள்ள சுரேஷ்

//ஆஹா.....
ஆஹா............//

ஓஹோ ........
ஓஹோ...............

:)

Maximum India said...

அன்புள்ள ராஜே!

பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

//வேண்டுகோள்:உங்கள் பதிவில் அறிவியல் தமிழ் பற்றிய ஒரு பிரிவை உருவாக்க வேண்டும்//

படிப்பின் அடிப்படையில் நான் ஒரு எஞ்சினியர்தான். ஆனால் இடையில் கொஞ்சம் டச் விட்டு போய் விட்டது. வாய்ப்பு கிடைத்தால் அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப விஷயங்களைப் பற்றி கண்டிப்பாக எழுதுவேன்.

நன்றி.

natrajan said...

வணக்கம் சமிபத்தில் ஆனந்தவிகடன் வரவேற்ப்பு அறை மூலம் தங்களது வலை பூவினை பற்றி அறிந்தேன்.தாங்கள் சேலம் சென்று திரும்பியவுடன் அளிக்கபோகும் சந்தைநிலவரம் அறிய ஆவலாக உள்ளேன்
அன்புடன்
நடராசன்

KARTHIK said...

அண்ணா மிக உணர்வுப்பூர்வமான பதிவு.
உங்களைப்போல சமூக அக்கறையோடு வரும் பதிவுகள் மிக குறைவு.உங்கள மட்டும் அன்னைக்கு சந்திக்காம இருந்திருந்தா இந்நேரம் தேவையில்லாம பல திட்டங்கள் நான் மட்டும் இல்லாம என்னோட சேர்ந்தவங்களையும் அதுல இழுத்துவுட்டு நானும் மண்ட காயிரதில்லமா அவங்களையும் காயவிட்டிருப்பேன்.நல்ல வேலையா கடவுள் புண்ணியத்துல உங்கள சந்திச்சேன்.அதனால இப்போ சந்தைவிளுந்ததுல இருந்து தப்பிச்சேன் இல்லைனா இந்நேரம் என்னோட சிறுசேமிப்பில் பெரும்பகுதியை இழந்திருப்பேன்.அதுக்காக நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.

ஊருக்கு போயிட்டு வந்து காப்பீடு பற்றி ஒரு பதிவு போடுங்க.
காப்பீடு பற்றிய உங்களின் நிலை எனக்கு ஏற்புடையதே.தங்களின் வாசிப்பாளர்கள் பெரும்பாலும் இளம் வயதினரே.அவர்களுக்கு அது ஒரு சரியான வழிகாட்டுதலாக அமையும்னு எதிர்பார்க்கிறேன்.குறைந்தபட்சம் சரியான முதலீடு பற்றி அவர்களுக்கு சிறு புரிதலாவது ஏற்படலாம்.

// நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள்!

தொடர்க உமது பணி!

மேலும் பல தொலைவுகள் கடப்பீர்!
பல சிகரங்கள் தொடுவீர்!//

கண்டிப்பாக.

// கபீஷ் said...

Happy journey!!Have nice time, enjoy every second!!!//

இதுக்கொரு ரிப்பீட்டு.

Have a nice Journey annaa

DG said...

வாழ்த்துக்கள்!

தொடர்க உமது பணி!

மேலும் பல தொலைவுகள் கடப்பீர்!
பல சிகரங்கள் தொடுவீர்!

வால்பையன் said...

நூறுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

ஈரோடு சேலத்துக்கு பக்கத்தில் தான் இருக்கிறது!

MARI MUTHU said...

surely relax is also a important part of our life to add energy. Take relax and come soon. All we try to create a good indian community and awareness to our MOTHER INDIA peoples.Have a Nice day.

Maximum India said...

அன்புள்ள நடராசன்

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

//வணக்கம் சமிபத்தில் ஆனந்தவிகடன் வரவேற்ப்பு அறை மூலம் தங்களது வலை பூவினை பற்றி அறிந்தேன்.தாங்கள் சேலம் சென்று திரும்பியவுடன் அளிக்கபோகும் சந்தைநிலவரம் அறிய ஆவலாக உள்ளேன்
அன்புடன்
நடராசன்//

நிச்சயமாக நல்ல பதிவுகளைத் உங்களுக்குத் தர முடியும் என்று நம்புகிறேன்.

நன்றி

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

//உங்கள மட்டும் அன்னைக்கு சந்திக்காம இருந்திருந்தா இந்நேரம் தேவையில்லாம பல திட்டங்கள் நான் மட்டும் இல்லாம என்னோட சேர்ந்தவங்களையும் அதுல இழுத்துவுட்டு நானும் மண்ட காயிரதில்லமா அவங்களையும் காயவிட்டிருப்பேன்.நல்ல வேலையா கடவுள் புண்ணியத்துல உங்கள சந்திச்சேன்.அதனால இப்போ சந்தைவிளுந்ததுல இருந்து தப்பிச்சேன் இல்லைனா இந்நேரம் என்னோட சிறுசேமிப்பில் பெரும்பகுதியை இழந்திருப்பேன்.அதுக்காக நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.//

உங்களுடன் நடந்த கருத்துப் பரிமாற்றங்கள் ஒருவருடைய அறிவு முறையாக வெளிப் படுத்தப் படும் போது சமூகத்திற்கு எவ்வளவு பயன்படும் என்பது புரிய வைத்தது. மேலும் பகிர்ந்துக் கொள்ளும் போது அறிவு தெளிவான நீரோடை போல உள்ளது. மாறாக அறிவு உள்ளேயே அடைந்து இருக்கும் குட்டை போல உபயோகமில்லாமல் போய் விடுகிறது.

//ஊருக்கு போயிட்டு வந்து காப்பீடு பற்றி ஒரு பதிவு போடுங்க.//

நிச்சயமாக

பின்னூட்டத்திற்கும் தொடர்ந்த ஆதரவுக்கும் நன்றி.

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

//நூறுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்//

எப்போதும் போல உங்களுக்கு இன்னொரு நன்றி.

//ஈரோடு சேலத்துக்கு பக்கத்தில் தான் இருக்கிறது!//

நிச்சயமாக. சேலம் கூட ஈரோட்டுக்கு பக்கத்தில்தான் இருக்கிறது.

(சும்மா தமாஷுக்கு) :)

மீண்டுமொரு ஈரோட்டில் ஒரு மாபெரும் பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாமா?

நேரில் சந்திக்க முயற்சி நிச்சயம் செய்வேன்.

நன்றி

Maximum India said...

அன்புள்ள dg

//வாழ்த்துக்கள்!

தொடர்க உமது பணி!

மேலும் பல தொலைவுகள் கடப்பீர்!
பல சிகரங்கள் தொடுவீர்!//

நன்றி. நன்றி. நன்றி.

Maximum India said...

Dear Marimuthu

Thank you for the comments

//surely relax is also a important part of our life to add energy. Take relax and come soon. All we try to create a good indian community and awareness to our MOTHER INDIA peoples.Have a Nice day.//

Sure. We all together will make a difference for the country.

Blog Widget by LinkWithin