Skip to main content

உடல்நிலை சரியில்லையா? வோட்கா மற்றும் பீர் சாப்பிடுங்கள்!

என்னடா! இது ஏதோ கேரளாவில் உள்ள ஒரு ஆரிய வைத்தியசாலையில் நடைபெறும் ராஜ வைத்தியம் போல தெரிகிறதே என்று பார்க்கிறீர்களா? இந்த வைத்தியம், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு தீவிரவாதிக்கு நடைபெறும் சிறைச்சாலை வைத்தியம். சற்று விரிவாக பார்ப்போம்.

பாகிஸ்தானில் அச்சடிக்கப் படும் இந்திய கரன்சிகளை இந்தியாவில் புழக்கத்தில் விடும் மோசடி கும்பலின் முக்கிய புள்ளி மொஹம்மட் ரஷித் குஞ்சு. இவன் கடந்த வருடம் டிசம்பர் 14 ஆம் தேதி மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப் பட்டு ராய்காட் சிறைச்சாலையில் அடைக்கப் பட்டான். ஆனால், உடல்நிலை சரியில்லை என்று அவன் தெரிவித்ததை அடுத்து ஜனவரி 30 ஆம் தேதி முதலில் ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு அதே நாளில் ஒரு தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப் பட்டான்.

அறைக்கு வெளியே இருபத்து நான்கு மணி நேர போலீஸ் காவல். உள்ளேயோ அவனுக்கு ராஜ உபசாரம். தினமும் அவனது மனைவி மற்றும் மகன் அவனை வந்து பார்த்து செல்வதோடு பீர், வோட்கா மற்றும் சிகரெட் போன்றவற்றையும் சப்ளை செய்து வந்தனர்.

இப்படி ராஜபோகமாக வாழ்ந்தவனின் சந்தோசத்திற்கு வேட்டு (இடைவேளை மட்டுமே?) அவனுடைய இரண்டு கூட்டாளிகள் மூலம் வந்தது. மும்பையில் கள்ள நோட்டு எடுத்துச் சென்ற அந்த இருவரை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து விசாரிக்க அவர்களுடைய தலைவனான குஞ்சு பற்றிய தகவல் கிடைத்தது.

மேற்கொண்டு இந்த குற்றம் குறித்து இவனிடம் விசாரிக்க மருத்துவமனை வந்த புலனாய்வு அதிகாரிகள் அங்கு இவனது நிலையை கண்டு அதிர்ந்து போயினர்.

"ரூம் முழுக்க பீர், வோட்கா பாட்டில்கள் மற்றும் மயங்கிய நிலையில் குஞ்சு."

கடுமையான தேச விரோத குற்றச் சாட்டு உள்ள இவன் அறையை சுற்றி 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு உள்ள நிலையில் எப்படி இது சாத்தியமாயிற்று என்று கேள்வி எழுப்பியுள்ள அந்த அதிகாரிகள், குறிப்பிட்ட போலீசாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் தலைவரிடம் தெரிவித்ததாகவும் கூறி உள்ளனர்.

ஏற்கனவே, சத்யம் ராஜுவிற்கு சிறையில் சிறப்பு அந்தஸ்து வழங்கிய விவகாரம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒரு தேச விரோத குற்றச்சாட்டு உள்ள ஒருவன், எப்படி இது போன்ற சுகபோக வாழ்வை (நீதிமன்ற காவலில் இருக்கும் போதே) அனுபவிக்க நமது சட்டக் காவலர்கள் அனுமதிக்கிறார்கள் என்று புரியவில்லை.

மேலும் யார் வேண்டுமானாலும், இது போன்ற கடுமையான குற்றச்சாட்டு உள்ள ஒருவனை வந்து பார்க்க முடியுமேயானால், இவனைப் போன்றவர்களால் வழக்கின் முக்கிய சாட்சியங்களை கலைப்பதுடன், தங்கள் தொழிலின் தலைமையகத்தை மட்டுமே மாற்றி கொண்டு முன் போலவே இயங்கவும் முடியுமே?

ஒரு வேளை, வெளியே பயந்து பயந்து திரிவதை விட, ஒரேயடியாக போலீசாரிடம் ஒப்புக் கொடுத்து விட்டு, உள்ளே போலீஸ் காவலுடன் ராஜ போக வாழ்வை அனுபவிக்கலாம், தமது தொழிலையும் தொடரலாம் என்ற நம்பிக்கையை தேச விரோதிகளுக்கு கொடுத்து, இவர்களை பிடிக்க வேண்டிய தங்கள் வேலையை சுலபமாக்கிக் கொள்ளலாம் என்று என்று நம் நாட்டின் காவலர்கள் நினைக்கிறார்களா என்று புரியவில்லை.

நன்றி (DNA India)

Comments

ஏற்கனவே ஒரு பதிவில் சொன்ன பதில் தான்

பணம் பாதாளம் வரைக்கும் பாயுமே!
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி.

//பணம் பாதாளம் வரைக்கும் பாயுமே!//

எத்தனை தரம் சொன்னாலும் உண்மை உண்மைதான்
கபீஷ் said…
கோயம்புத்தூர் குண்டுவெடிப்புல குற்றம் சாற்றப்பட்டு பின்பு வெளியில் வந்த அல் உம்மா தலைவருக்கு கேரளாவுல நம்ம அச்சு (இப்போதைய முதல்வர்) என்னமா வரவேற்பு குடுத்தார் பரிவாரத்தோட. இதெல்லாம் ஜுஜுபி... வோட்டு வேணுன்னா என்ன வேணா பண்ணுவாங்க
ஆதி said…
அவருடைய கூட்டாளிகளை ஒரே இடத்தில் பிடிக்க நவீண காவல்துறையின் புதிய யுக்தி என்பது கூட உமக்கு புரியவில்லையா!!!!!!
Maximum India said…
அன்புள்ள கபீஷ்

பின்னூட்டத்திற்கு நன்றி

//வோட்டு வேணுன்னா என்ன வேணா பண்ணுவாங்க//

இந்த சிச்சுவேஷனில் ஒரு சின்ன திருத்தம். வோட்டுங்கரத மாத்தி நோட்டுன்னு போட்டுக்கோங்க :)
Maximum India said…
அன்புள்ள ஆதி

பின்னூட்டத்திற்கு நன்றி

//அவருடைய கூட்டாளிகளை ஒரே இடத்தில் பிடிக்க நவீண காவல்துறையின் புதிய யுக்தி என்பது கூட உமக்கு புரியவில்லையா!!!!!!//

நான் பதிவிலேயே வேறு மாதிரி சொல்லி இருந்தேனே

//ஒரு வேளை, வெளியே பயந்து பயந்து திரிவதை விட, ஒரேயடியாக போலீசாரிடம் ஒப்புக் கொடுத்து விட்டு, உள்ளே போலீஸ் காவலுடன் ராஜ போக வாழ்வை அனுபவிக்கலாம், தமது தொழிலையும் தொடரலாம் என்ற நம்பிக்கையை தேச விரோதிகளுக்கு கொடுத்து, இவர்களை பிடிக்க வேண்டிய தங்கள் வேலையை சுலபமாக்கிக் கொள்ளலாம் என்று என்று நம் நாட்டின் காவலர்கள் நினைக்கிறார்களா என்று புரியவில்லை//

இதுவும் ஒரு நவீன யுக்திதானே :)
கபீஷ் said…
ஹி ஹி நான் பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம் போட்டேன் வழக்கம்போல :-)
எனக்கு அச்சு வை திட்டணும் போல இருந்தது. இந்த பதிவுல நோட்டு தான் சரியான காரணம்.அப்பாடா தீர்ப்பு சொல்லியாச்சு :-)
Maximum India said…
அன்புள்ள கபீஷ்

//அப்பாடா தீர்ப்பு சொல்லியாச்சு :-)//

சொம்பு கைலே இல்லேன்னா இப்படித்தான் நாட்டாமை தீர்ப்பு மாறிப் போகும் பாத்து!!! :)
கபீஷ் said…
சொம்பை எங்க டேமேஜர் பக்கத்து காபினுக்கு எடுத்துட்டு போயிருக்கார் :-) ஒரு சின்ன பஞ்சாயத்து அங்கே. எல்லாப் பழியும் அவருக்கே :-)
Maximum India said…
அன்புள்ள கபீஷ்

சொம்பை வாங்கி பத்திரமா வச்சுகோங்க! அடுத்த பதிவுக்கும் தீர்ப்பு சொல்லணும். :)
பெறுதல்
திரு. முததலிக்
மங்களூர்.

இங்கே ஒருவர் பீர் பிராந்தி பற்றி பேசுகிறார்.
அவரது பதிவின் தலைப்பு கூட சந்தை நிலவ "ரம்" .
குற்றவாளிகளுக்கு சாராயம் வழங்குவது பற்றி பேசுகிறார். கொஞ்சம் கவனிக்கவும் .
(இன்னொரு விஷயம். அவர் பிங்க் ஜட்டி எல்லாம் போடுவதில்லை.)
// "ரூம் முழுக்க பீர், வோட்கா பாட்டில்கள் மற்றும் மயங்கிய நிலையில் குஞ்சு." //

:)
Maximum India said…
//இங்கே ஒருவர் பீர் பிராந்தி பற்றி பேசுகிறார்.
அவரது பதிவின் தலைப்பு கூட சந்தை நிலவ "ரம்" .
குற்றவாளிகளுக்கு சாராயம் வழங்குவது பற்றி பேசுகிறார். கொஞ்சம் கவனிக்கவும் .//

பெறுதல்
திரு. முததளிக்
மங்களூர்.

அண்ணே!

உங்கள பொதுஜனங்க யாரும் சரியாவே புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க. நீங்க எப்ப "பீர், வோட்கா, ரம்" எல்லாம் ஆம்பள சிங்கங்க சாப்பிடக் கூடாதுன்னு சொன்னீங்க. பொண்ணுங்கள பாருக்கு கூட்டிட்டுப் போயி அவங்களையும் இதுக்கு பழக்கி அப்புறம் நம்ம மாதிரி ஆளுங்களுக்கு சரக்கு தட்டுப் பாடு ஏற்படக் கூடாதுன்னுதானே இவ்வவளவு கஷ்டப் படுறீங்க?

//(இன்னொரு விஷயம். அவர் பிங்க் ஜட்டி எல்லாம் போடுவதில்லை.)//

அண்ணே! நீங்க வேற, இங்க ரொம்ப பேரு ஜட்டியே போடுவதில்லை. கேட்டா "நான் ஒரு டூ தௌஸந்ட் மேன்" இல்லேன்னா "ஐ யாம் எ மில்லியணம் மேன்" அப்படின்னுதான் சொல்லிட்டு திரியறாங்க. "பிங்க் ஜட்டியான்னு" செக் பண்ணும்போது ஜாக்கிரதையாப் பண்ணுங்க.

இப்படிக்கு
Maximum India said…
அன்புள்ள ஜுர்கேன் க்ருகேர்

:) :)
Maximum India said…
அன்புள்ள ஜுர்கேன் க்ருகேர்

:) :)
KARTHIK said…
// ஒரு வேளை, வெளியே பயந்து பயந்து திரிவதை விட, ஒரேயடியாக போலீசாரிடம் ஒப்புக் கொடுத்து விட்டு, உள்ளே போலீஸ் காவலுடன் ராஜ போக வாழ்வை அனுபவிக்கலாம்,//

இதப்பாத்து பொறமப்படுரதா வேதனப்ப்படுரதான்னு தெரியல.

நானும் எதோ ரம் வோட்கானு ஆசையா வந்தேன்........:-((
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி

//இதப்பாத்து பொறமப்படுரதா வேதனப்ப்படுரதான்னு தெரியல.//

ஒரு இந்தியனா வேதனைதான் பட வேண்டும்.

//நானும் எதோ ரம் வோட்கானு ஆசையா வந்தேன்........:-((//

மன்னிக்கவும். :-)

Popular posts from this blog

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.