The Art of Appraisal
-
Big Boss: This year your performance was good, excellent and outstanding.
So, your rating is "average".
Kumar: What? How come 'average'?
Big Boss: Becau...
பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (104)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (9)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Monday, February 16, 2009
பிரச்சினைகளும் தீர்வுகளும்
நம்மில் பலரும் பலவிதமான பிரச்சினைகளை அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். சமயங்களில், சில பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்று விழி பிதுங்கிப் போகிறோம். ஒரு பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண்பது என்பது பற்றி ஒரு நடைமுறை அனுபவக் கட்டுரை படித்தேன். அது தமிழில் இங்கே.
சில உண்மை பிரச்சினைகளும் அவற்றை தீர்ப்பதற்கு முன்வைக்கப் பட்ட தீர்வுகளும் இங்கே.
முதல் பிரச்சினை: பல ஆண்டுகளுக்கு முன்னர், விண்ணில் மனிதன் கால் பதித்த போது எழுந்த பிரச்சினை இது. அதாவது, வான்வெளியில் புவி ஈர்ப்பு விசை (Gravity) என்று ஒன்று இல்லாததால், பேனாவை உபயோகப் படுத்தி எழுத முடிய வில்லை.
தீர்வு ஒன்று: நாசா விஞ்ஞானிகள் இதற்காக சுமார் பத்து ஆண்டுகள் தீவிரமான ஆராய்ச்சி செய்து, புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் கூட எழுதக் கூடிய பேனா ஒன்றை கண்டுப் பிடித்தனர். இந்த ஆராய்ச்சிக்கு ஆன செலவு சுமார் அறுபது கோடி ரூபாய்.
தீர்வு இரண்டு: ரஷ்ய விண்வெளி பயணிகள், வான்வெளியில் பேனாவிற்கு பதிலாக பென்சில் உதவி கொண்டு எழுத ஆரம்பித்தனர்.
இரண்டாவது பிரச்சினை: ஒருமுறை ஜப்பானிய சோப் நிறுவனம் விற்பனை செய்த சோப் உறைக்குள் சோப் கட்டி இல்லாமல் போய் விட்டது. இது குறித்து நுகர்வோரிடம் இருந்து புகார் எழுந்தது. இந்த நிகழ்வு அந்த நிறுவனத்தின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கருதிய நிறுவனத் தலைமை, இது போன்று மீண்டும் நிகழாமல் தடுக்க தரக் கட்டுப்பாட்டு துறைக்கு ஆணையிட்டது. அப்போது, இரண்டு விதமான தீர்வுகள் வெவ்வேறு அலுவர்களால் முன் வைக்கப் பட்டது.
தீர்வு ஒன்று: ஒரு எக்ஸ் ரே இயந்திரம் தயாரிக்கப் பட்டு, அதன் ஊடே விற்பனைக்கு செல்லும் அனைத்து சோப் உறைகளையும் அந்த செலுத்துவது. அந்த எக்ஸ் ரே திரையை இருபத்து நான்கு மணி நேரமும் கண்காணிக்க இரு ஊழியர்களை நியமிப்பது.
தீர்வு இரண்டு: விற்பனைக்கு செல்லும் சோப் உறைகள் செல்லும் பாதையில் ஒரு காற்றாடியை வைப்பது, ஒருவேளை உறைக்குள் சோப் கட்டி இல்லாவிடில், அது (லேசாக இருப்பதால்) காற்றில் அடித்து செல்லப் பட்டு விடும்.
இந்த அனுபவங்களில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது:
பிரச்சினைகளை விட அவற்றுக்கான தீர்வுகளே முக்கியமானவை.
எனவே பிரச்சினைகளின் மீது கவனம் செலுத்தாமல் தீர்வுகளின் மீதே நமது கவனம் இருக்க வேண்டும்.
அந்த தீர்வுகள் எளிமையானதாகவும், எளிதில் நடைமுறை படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
//பிரச்சினைகளின் மீது கவனம் செலுத்தாமல் தீர்வுகளின் மீதே நமது கவனம் இருக்க வேண்டும்.
//
இதை நான் உல்டாவா செஞ்சிட்டு இருந்தேன். இப்போ பரவாயில்லை. நல்லா எழுதியிருக்கீங்க :-)
அன்புள்ள கபீஷ்
//இதை நான் உல்டாவா செஞ்சிட்டு இருந்தேன். //
நான் கூட பல முறை அப்படித்தான் இருந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட கட்டுரை படித்த பின்னர் ஒரு தெளிவு பிறந்தது போல இருந்தது. அதனால்தான் அனைவருடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.
//இப்போ பரவாயில்லை. //
நல்லது. தொடருங்கள்.:-)
//நல்லா எழுதியிருக்கீங்க :-)//
மிக்க நன்றி. அன்புள்ள கபீஷ்
//இதை நான் உல்டாவா செஞ்சிட்டு இருந்தேன். //
நான் கூட பல முறை அப்படித்தான் இருந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட கட்டுரை படித்த பின்னர் ஒரு தெளிவு பிறந்தது போல இருந்தது. அதனால்தான் அனைவருடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.
//இப்போ பரவாயில்லை. //
நல்லது. தொடருங்கள்.
//நல்லா எழுதியிருக்கீங்க :-)//
மிக்க நன்றி. :-)
எனக்கும் தெளிந்தது. நான் பெரிதாக வெடிக்குமோ என்று பயந்த பல விஷயங்கள் புஸ்வாணமாகி போனதுண்டு. எதிர்பார்க்காத விஷயங்கள் திடீர் வெடியாகி வெடித்ததுண்டு. பிரச்சனைகளின் வீரியம் தெரிய காலம் ஒரு நல்ல மருந்து.ராத்திரி பயமுறுத்தும் விஷயங்கள் (மனைவி அல்ல) காலையில் சாதரணமாகிவிடுகிறது.
எதற்கு அதிகம் கவலை படுகிறோமோ அதுவே பூதாகரமாகி பயம் கொடுக்கிறது.
life is easy என்ற மன நிலை தற்போது உதவுகிறது. அனைத்துக்கும் காரணம் பிரச்சனை யை சுற்றி சுழலும் சில மனிதர்கள் (ஆபீஸ் பாஸ், பக்கத்து வீட்டுகாரர் , ஒத்து வராத சொந்தங்கள், புரிந்து (கொல்கின்ற) கொள்ளாத வாழ்க்கை துணை இவர்களின் எதிர்பார்க்க முடியாத செயல்களின் மேல் உள்ள பயம் தான் . யார் என்ன செய்தால், சொன்னால் என்ன நம் இப்படித்தான் என்ற நிலை சில நேரங்களில் உதவி செய்யும்.போ போ சூனா பனா போய்டே இரு..
அன்புள்ள பொதுஜனம்
//பிரச்சனைகளின் வீரியம் தெரிய காலம் ஒரு நல்ல மருந்து.//
உண்மை. காலம் பல விஷயங்களை தலைகீழாக புரட்டிப் போட்டு விடுகிறது.
//எதற்கு அதிகம் கவலை படுகிறோமோ அதுவே பூதாகரமாகி பயம் கொடுக்கிறது. //
எனவேதான், பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் தீர்வுகளில் கவனம் செலுத்துவோம் என்ற புதிய சிந்தனை மனதிற்கு இதமளிக்கிறது.
//புரிந்து (கொல்கின்ற) கொள்ளாத வாழ்க்கை துணை //
"கொல்கின்ற" என்ற வார்த்தை எழுத்துப் பிழையா? இல்லை ???? :-)
//யார் என்ன செய்தால், சொன்னால் என்ன நம் இப்படித்தான் என்ற நிலை சில நேரங்களில் உதவி செய்யும்.போ போ சூனா பனா போய்டே இரு..//
இதுவரைக்கு நல்லாத்தானே போயிட்டுருந்தது?
நன்றி :-)
புரிந்து (கொன்றால் ) கொண்டால் சரி..எழுத்து பிழைகளை நான் அதிகம் செய்வதில்லை. இனிமேலும் நல்லாத்தான் போவும்.
என்னுடைய சொந்த தீர்வு, சமீபத்தில் நடந்தது. இன்றைய பொருளாதார சூழலில் செலவுகளை கட்டுப்படுத்தும் கூட்டம் (office meeting - எப்படி மொழி பெயர்ப்பது என்று தெரியவில்லை). அதில், தொலை பேசி கட்டணம் அதிகமாக வந்திருப்பது குறித்து பேசி கொண்டிருந்தோம். (இதில் audio/video conference பில்லும் அடக்கம்). சிலர் positive-ஆக அதை சொல்லி, நிறைய பேர் இப்போது பயணம் செய்யாததால் இருக்கும் என்று முடித்து விட்டோம். ஆனால் கொஞ்ச நேரம் பொறுத்து எனக்கு ஒரு சந்தேகம், அதனால் என் காரியதரிசியை அழைத்து இரண்டு மாத invoice-ஐ எடுத்து அதை அனலைஸ் செய்து எனக்கு ஒரு அறிக்கை கொடுக்குமாறு கேட்டேன்.
இதில் audio conference கட்டணம் அதிகமாக இருந்தது. அதை மட்டும் எடுத்து இன்னும் கொஞ்சம் ஆழமாக பார்த்ததில், நிறைய பேர் இரண்டே பேர் இருந்தும் audio conference number கொண்டு பேசி இருப்பது தெரிந்தது. பின் ஒரு circular அனுப்பினேன், இருவர் மட்டும் இருந்தால் audio conference ஐ கட் செய்து விட்டு, அவருடைய நேரடி தொலைபேசிக்கு அழைக்க அன்பு கட்டளை போட்டேன்.
இதில் இந்த மாதம், செலவு நன்கு குறைந்திருப்பது தெரிந்தது. இது போன்று, நிறைய எளிமையான எண்ணங்கள், நம் அனைவருக்கும் வர வேண்டும். நம் அலுவலகத்தின் ஒவ்வொரு ரூபாயும் நம் பணம் என்ற எண்ணம் வரும் போது நாம் அனைவரும் வேலையை தாண்டி ஏதோ ஒரு வழியில் உதவுகிறோம் என்ற எண்ணம் வருவதும் நல்லது, அதுவும், இப்போது இருக்கும் சூழலில்.
அன்புள்ள இத்ச்டிபிபிறேன்ட்
கருத்துரைக்கு நன்றி
உங்களுடைய சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. "கொஞ்சம் மாத்தி யோசிப்பதால்" வரு பலன்கள் குறித்து அழகாக விளக்கியிருந்தீர்கள்.
//இது போன்று, நிறைய எளிமையான எண்ணங்கள், நம் அனைவருக்கும் வர வேண்டும். நம் அலுவலகத்தின் ஒவ்வொரு ரூபாயும் நம் பணம் என்ற எண்ணம் வரும் போது நாம் அனைவரும் வேலையை தாண்டி ஏதோ ஒரு வழியில் உதவுகிறோம் என்ற எண்ணம் வருவதும் நல்லது, அதுவும், இப்போது இருக்கும் சூழலில்.//
நிச்சயமாக. உங்கள் கருத்துக்கள் ஊக்கமளிப்பதாக உள்ளன. மிக்க நன்றி.
அன்புள்ள பொதுஜனம்
//புரிந்து (கொன்றால் ) கொண்டால் சரி..//
அடப் பாவி! எதுக்கும் வீட்டிலே ஒரு தடவ கேட்டுடலாம். :)
//இனிமேலும் நல்லாத்தான் போவும்.//
கண்டிப்பாக. நன்றி.
அருமையான பதிவு
ஸ்மார்ட் வொர்க் என்றால் என்ன என்று எளிமையாக விளக்கிவிட்டீர்கள்
அன்புள்ள வால்பையன்
கருத்துக்கு மிக்க நன்றி
நல்லதொரு கட்டுரை!!!
இதே போன்றதொரு கட்டுரையை நானும் படித்திருக்கிறேன்.
குவாலிட்டி மானேஜ்மெண்ட் சம்பந்தப் பட்ட கட்டுரைகளில் இது போன்ற சுவையான பல கட்டுரைகளைப் படிக்கலாம்.
//பிரச்சினைகளை விட அவற்றுக்கான தீர்வுகளே முக்கியமானவை.
எனவே பிரச்சினைகளின் மீது கவனம் செலுத்தாமல் தீர்வுகளின் மீதே நமது கவனம் இருக்க வேண்டும்.
அந்த தீர்வுகள் எளிமையானதாகவும், எளிதில் நடைமுறை படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.//
இதை இன்னும் சற்று தீவிரமாக பார்த்தோமேயானால், குவாலிட்டி மானேஜ்மெண்ட் தத்துவங்களில், 5W,1H என்று பல விஷயங்களை சொல்வார்கள். அதாவது ஒவ்வொரு பிரச்சனைக்கும், அதற்குரிய காரணம் என்ன என்று கேட்டு, கடைசியில் எவ்வாறு களையலாம் என்பதன் மூலம் பிரச்சனையை தீர்க்கலாம்.
இதில் சூட்சுமம் என்ன வென்றால் என்ன கேள்வி கேட்கிறோம் என்பதும் மிக முக்கியம்!!!
மேலே சொன்ன இரு விஷயங்களிலும் முதல் தீர்வுக்கு தவறான கேள்விகள் கேட்கப்பட்டன. உதாரணமாக விண்ணில் எழுத வேண்டிய பிரச்சனையில், நாசா விஞ்ஞானிகள் கேட்ட கேள்வி, விண்ணில் எழுத எந்த இங்க்கை உபயோகப்படுத்த வேண்டும் என்று கேட்டனர். இதில் கண்டுபிடித்ததுதான் ஜெல் பேனா என்று நினைக்கிறேன்...
ஆனால் ரஷ்ய விஞ்ஞானிகள் கேட்டது விண்ணில் எப்படி எழுதுவது என்ற அடிப்படை கேள்வியை!!!
இரண்டாவது விஷயத்தில், சோப்பு இல்லாத பாக்ஸை கண்டுபிடிக்க எந்த டெக்னாலஜியை உபயோகப்படுத்த வேண்டும் என்று கேட்டதன் விளைவுதான் முதல் தீர்வு. ஆனால் இரண்டாவது தீர்வு வந்தது சோப்பு இல்லாத பாக்ஸை எப்படி கண்டு பிடிப்பது என்ற கேள்வி மூலம். இன்னும் சொல்லப் போனால், முதல் தீர்வை கண்டுபிடித்தது அந்த நிறுவனத்தின் முதல் தர பொறியாளர்கள், இரண்டாவது தீர்வை கண்டு பிடித்தது நிறுவனத்தின் தொழிலாளர் மேற்பார்வையாளர் (supervisor) ஒருவர் என்று நினைக்கிறேன்
இரண்டு விஷயங்களிலுமே இரண்டு முறைகளுமே தீர்வுதான். ஆனால் பிரச்சனை என்னவென்றால், முதல் தீர்வுகளுக்கான செலவு மிக மிக அதிகம்.
ஆக பிரச்சனையை அடிப்படையிலிருந்து அணுகுவதன் மூலம் எளிய தீர்வை பெறலாம்!!!!
அன்புள்ள நரேஷ்
கருத்துரைக்கு நன்றி
//இதை இன்னும் சற்று தீவிரமாக பார்த்தோமேயானால், குவாலிட்டி மானேஜ்மெண்ட் தத்துவங்களில், 5W,1H என்று பல விஷயங்களை சொல்வார்கள். அதாவது ஒவ்வொரு பிரச்சனைக்கும், அதற்குரிய காரணம் என்ன என்று கேட்டு, கடைசியில் எவ்வாறு களையலாம் என்பதன் மூலம் பிரச்சனையை தீர்க்கலாம்.
இதில் சூட்சுமம் என்ன வென்றால் என்ன கேள்வி கேட்கிறோம் என்பதும் மிக முக்கியம்!!!
மேலே சொன்ன இரு விஷயங்களிலும் முதல் தீர்வுக்கு தவறான கேள்விகள் கேட்கப்பட்டன. உதாரணமாக விண்ணில் எழுத வேண்டிய பிரச்சனையில், நாசா விஞ்ஞானிகள் கேட்ட கேள்வி, விண்ணில் எழுத எந்த இங்க்கை உபயோகப்படுத்த வேண்டும் என்று கேட்டனர். இதில் கண்டுபிடித்ததுதான் ஜெல் பேனா என்று நினைக்கிறேன்...
ஆனால் ரஷ்ய விஞ்ஞானிகள் கேட்டது விண்ணில் எப்படி எழுதுவது என்ற அடிப்படை கேள்வியை!!!
இரண்டாவது விஷயத்தில், சோப்பு இல்லாத பாக்ஸை கண்டுபிடிக்க எந்த டெக்னாலஜியை உபயோகப்படுத்த வேண்டும் என்று கேட்டதன் விளைவுதான் முதல் தீர்வு. ஆனால் இரண்டாவது தீர்வு வந்தது சோப்பு இல்லாத பாக்ஸை எப்படி கண்டு பிடிப்பது என்ற கேள்வி மூலம். இன்னும் சொல்லப் போனால், முதல் தீர்வை கண்டுபிடித்தது அந்த நிறுவனத்தின் முதல் தர பொறியாளர்கள், இரண்டாவது தீர்வை கண்டு பிடித்தது நிறுவனத்தின் தொழிலாளர் மேற்பார்வையாளர் (supervisor) ஒருவர் என்று நினைக்கிறேன்
இரண்டு விஷயங்களிலுமே இரண்டு முறைகளுமே தீர்வுதான். ஆனால் பிரச்சனை என்னவென்றால், முதல் தீர்வுகளுக்கான செலவு மிக மிக அதிகம்.//
இதே கட்டுரையை வேறு ஒரு கோணத்தில் அணுகியிருக்கிறீர்கள். மிகவும் நன்றாக இருந்தது.
//ஆக பிரச்சனையை அடிப்படையிலிருந்து அணுகுவதன் மூலம் எளிய தீர்வை பெறலாம்!!!!//
புதிய சிந்தனை. நன்றி
Post a Comment