Sunday, March 8, 2009

மகளிர் தினத்தில் ஆண்களுக்கு சில யோசனைகள்!


மகளிர் தினமான இன்று தன் குடும்பப் பெண்களை எப்படி அசத்துவது என்பது பற்றி ஆண்களுக்கு சில யோசனைகள் இங்கே.

இன்றைய சமையல் வேலைகளை முழுமையாக கவனித்துக் கொண்டு நீங்கள் உணவை பரிமாறுவது. (இதில் இன்னொரு உள்நோக்கமும் அடங்கியிருக்கிறது. ஒரு நாளைக்காவது நல்ல சாப்பாடு என்றால் எப்படி இருக்கும் என்று அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? ஒரு வேளை, உங்களுக்கு சமைக்கத் தெரியாதா? அப்போதும் கவலையில்லை. அவர்களும் ஒரு நாள் கஷ்டப் படட்டுமே? நம் வேதனை எப்படி இருக்கும் என்று புரிந்து கொள்ளட்டுமே)

இன்றைக்கு முழுக்க அவர்களை பேச விட்டு நாம் கேட்டுக் கொண்டே இருப்பது. (எல்லா நாளும் இதே கதைதான் என்று அலுத்துக் கொள்கிறீர்களா?)

உங்கள் வேலைகளை நீங்களே பார்த்துக் கொள்வது. உங்கள் துணிமணிகளை கழற்றி தூக்கி வீசாமல் ஒழுங்காக மடித்து அலமிராவில் வைப்பது. (இது கொஞ்சம் கவனிக்க வேண்டிய சீரியசான விஷயம்)

உங்கள் மனைவியை பியுட்டி பார்லருக்கு அழைத்துச் செல்வது (பியுட்டின்னா என்னான்னு நாமளும் தெரிஞ்சுக்க வேண்டாமா?). அங்கே வருபவர்கள் யாருமே அழகாக இல்லை என்று திரும்பி வரும் போது கூற மறந்து விடக் கூடாது.

சென்ற வருடத்தை விட இந்த வருடம் சற்று ஒல்லியாக ஆகி இருப்பது போல தோன்றுகிறது என்று போட்டு வைப்பது. (என்ன பண்ணுவது? பொழப்பு ஓடனுமில்ல?)

இவ்வளவு நேரத்திற்குள் முடித்து விட வேண்டும் என்று கண்டிஷன் எல்லாம் போடாமல், ஷாப்பிங் அழைத்துச் செல்வது. (நகைக் கடை பக்கம் போனால் உங்கள் பர்ஸுக்கு நான் காரண்டி இல்லை. இப்படித்தான் ஒரு முறை, இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். தனது மனைவியின் கண்ணில் ஒரு பூச்சி விழுந்து ஐந்நூறு ரூபாய் செலவு வைத்து விட்டதாக ஒருவர் ரொம்பவும் அலுத்துக் கொண்டார். அதற்கு மற்றவர் சொன்னார், "உனக்கு பரவாயில்லை, கண்ணில் விழுந்தது பூச்சிதான். என் மனைவியின் கண்ணில் விழுந்தது ஒரு புதிய நகைக்கடையின் விளம்பரம். என் நிலைமை எப்படி இருக்குமென்று யோசித்துப் பார்".)

என்ன ரொம்ப கஷ்டமாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா?

பேசாமல் "மகளிர் தின வாழ்த்துக்கள்" என்று உளமார ஒரு தடவை வாழ்த்தி விடுங்கள் போதும். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து விடுவார்கள்.

என்னைப் பொருத்த வரை, பெண்களின் உண்மையான தியாக உணர்வு, பிரதிபலன் பாரா அன்பு, வீட்டினருக்காக ஓயவில்லாமல் தரும் உழைப்பு, எல்லாவற்றுக்கும் மேலான அந்த தாய்மை ஆகியவற்றை நாம் சரியாக புரிந்து கொள்வதே அவர்களுக்கு நம்முடைய உண்மையான மகளிர்தின வாழ்த்துக்களாக இருக்கும்.

கடவுளின் பெருமைக்குரிய படைப்பான பெண்கள் அனைவருக்கும்,

"மகளிர் தின நல்வாழ்த்துக்கள்"

நன்றி.

10 comments:

மங்களூர் சிவா said...

நல்ல யோசனைகள்தான். வெளியில கூட்டிகிட்டு போனா பர்ஸ் பழுத்திடும்தான் அதனால அந்த சமைச்சி குடுக்கிறது வாழ்த்தறது அந்த மாதிரி ஐட்டம் ஓகே!!

:))))

மங்களூர் சிவா said...

/
உங்கள் மனைவியை பியுட்டி பார்லருக்கு அழைத்துச் செல்வது (பியுட்டின்னா என்னான்னு நாமளும் தெரிஞ்சுக்க வேண்டாமா?). அங்கே வருபவர்கள் யாருமே அழகாக இல்லை என்று திரும்பி வரும் போது கூற மறந்து விடக் கூடாது.
/

இந்த சோகத்தை ஏன் கேக்குறீங்க பியூட்டி பார்லர் நடத்தற "ஆண்ட்டிய" நான் சைட் அடிக்கறேனாம் அதனால அம்மிணி தனியாதான் போய்ட்டு வருவாங்க :(((

மங்களூர் சிவா said...

நல்ல நல்ல யோசனைகள்தான்.

Maximum India said...

அன்புள்ள சிவா!

பின்னூட்டங்களுக்கு நன்றி.

இந்த மகளிர் தினம் ஆண்களுக்கும் மகிழ்ச்சி தரும் தினமாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

நட்புடன் ஜமால் said...

மகளீர் தின வாழ்த்துகள்

Maximum India said...

நன்றி ஜமால்! :)

வால்பையன் said...

ஞாயிற்றுகிழமையா போச்சு!
இல்லைனா லீவு போட்டு நீங்க சொன்னதெல்லாம் செஞ்சிருப்பேன்

சும்மா லுலுலாயிக்கு!

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

//சும்மா லுலுலாயிக்கு!//

கொஞ்சம் உங்க வீட்டுக்காரம்மா முன்னாடி சொல்லி பாருங்க. :)

நன்றி.

Naresh Kumar said...

லேட்டானாலும், மகளீர் தின வாழ்த்துகள்!!!

இப்படி யோசனை தர்றீங்களே, உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சீங்களா???

Maximum India said...

அன்புள்ள நரேஷ்

// இப்படி யோசனை தர்றீங்களே, உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சீங்களா???//

என்ன இப்படி கேட்டுட்டீங்க? ஏழாவது கல்யாண நாளை போன வாரம்தான் கொண்டாடினேன். ஐந்து வயதில் ஒரு குழந்தை கூட இருக்கிறது.

நன்றி.

Blog Widget by LinkWithin