
"இப்பெல்லாம் ஏன் லேட்டா வந்தேன்னு கேட்டா, கார் பஞ்சராயிடுச்சுன்னு சொல்றா"

"இப்போது ஒரு புதிய கோரிக்கை எழுந்துள்ளது. ஏழைகளுக்கு கார் பார்கிங் செய்ய தனி இட ஒதுக்கீடு வேண்டுமென்று"

"இங்கே குறைந்த விலை பெட்ரோல் கிடைக்குமா?"
"டிராபிக் ஜாமா, நோ ப்ராப்ளம் "

இதற்கு வசனம் தேவையில்லை
"

"டிவி இலவசம் என்பதெல்லாம் பழைய கதையாச்சு. இப்போல்லாம் கார் ப்ரீயா கேக்கறாங்க."

"ஏதோ தருமம் பண்ணுங்க சாமீ"

"அப்பா எனக்கு பொம்மை கார் வேணாம், நானோ கார்தான் வேணும்"

"ஒண்ணில்லை, ரெண்டு கொடுங்க"
"இங்கே எக்சேஞ்ச் ஆபஃர் கிடைக்குமா? "
17 comments:
நல்ல காமெடி!
ஆனா பாருங்க முதன் முதலில் ஒரு பொருள் வரும்போது இந்த மாதிரி நகைச்சுவை வருவது சகஜம் தானே!
உதாரணம் விலைகுறைந்த செல்லுலார் போன்கள்
பின்னூட்டத்திற்கு நன்றி வால்பையன்
//நல்ல காமெடி!
ஆனா பாருங்க முதன் முதலில் ஒரு பொருள் வரும்போது இந்த மாதிரி நகைச்சுவை வருவது சகஜம் தானே!
உதாரணம் விலைகுறைந்த செல்லுலார் போன்கள்//
உண்மைதான். நானோ நடுத்தர எளிய மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. எனவே இது ஒரு மகிழ்ச்சியான காமெடி.
நன்றி.
ரத்தன் டாடாவின் கனவை நாம் காமடி ஆக்கிவிட்டோம்.ஆனாலும் கார்டூன் நன்றாக உள்ளது.நன்றி
அன்புள்ள dg
கருத்துரைக்கு நன்றி
//ரத்தன் டாடாவின் கனவை நாம் காமடி ஆக்கிவிட்டோம்.//
நிச்சயமாக இது காமெடிக்காக மட்டும் அல்ல. எளியவர்களும் வாங்கும் அளவுக்கு கார் வந்ததில் உள்ள மகிழ்ச்சியின் வெளிப்பாடு.
நன்றி
குபீர் என்று சிரிக்க வைத்த கார்டூன்கள். குறிப்பாக இன்று காலை முதலில் சிரிக்க வைத்த இந்த சந்தை நிலவரம் பதிவுக்கு நன்றி..
அடித்தட்டு மற்றும் கீழ் நடுத்தர மக்களையும் கார் வாங்கும் எண்ணத்தை உருவாக்கி உள்ள டாடா வாழ்க... எனினும் வண்டி ஓடத் தொடங்கிய பின்தான் உண்மை மதிப்பு புரியும்... பிரச்னை தெரியும்.. பார்ப்போம்...
பல கார்ட்டூன்கள் நானோ கார் வாங்குபவர்களை பிச்சைகாரர்கள் ரேஞ்சில் சித்தரிப்பதால் சிரிப்பு வரவில்லை!:((
நல்ல நகைச்சுவைதான்.... ஆனா "நானோ" இந்தியாவோட ஐகானா ஆயிடும். இப்ப ஜெனீவா ஆட்டோ ஷோவுல ஸ்டார் "நானோ"தான்.
அன்புள்ள ஜெயராஜன் ஐயா!
பின்னூட்டத்திற்கு நன்றி
//எனினும் வண்டி ஓடத் தொடங்கிய பின்தான் உண்மை மதிப்பு புரியும்... பிரச்னை தெரியும்.. பார்ப்போம்...//
பல முன்னோட்டங்கள் கார் நன்றாக வந்திருப்பதாக சொல்கின்றன. இந்த சாலையிலும் சிறந்த செயல்பாட்டை காட்டும் என்று நம்புவோம்.
நன்றி.
அன்புள்ள குசும்பன்
//பல கார்ட்டூன்கள் நானோ கார் வாங்குபவர்களை பிச்சைகாரர்கள் ரேஞ்சில் சித்தரிப்பதால் சிரிப்பு வரவில்லை!:((//
அதையே கொஞ்சம் திருப்பி போட்டுப் பாருங்கள். எளியவர்களும் கார் வாங்கக் கூடிய விலையில் தரமான கார் உற்பத்தி செய்யும் அளவிற்கு இந்திய வாகனத் துறை இன்றைக்கு வளர்ந்திருக்கிறது. சந்தோஷம் தானாக வரும்.
:)
நன்றி.
அன்புள்ள மகேஷ்
//நல்ல நகைச்சுவைதான்.... ஆனா "நானோ" இந்தியாவோட ஐகானா ஆயிடும். இப்ப ஜெனீவா ஆட்டோ ஷோவுல ஸ்டார் "நானோ"தான்//
இந்திய தொழிற்நுட்ப வரலாற்றில் நானோ ஒரு புதிய மைல் கல்.
நன்றி.
நானோ நீங்களோ கார் வாங்க முடியும் என்பதை நானோ கார் மூலம் சாத்தியம் செய்துள்ளார் டாட்டா. மத்திய வர்க்க பொருளாதார நிலையில் மற்றவர்களை எட்டி பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையை டாட்டா தந்துள்ளார்.மேலும் இரு சக்கர வாகனங்களால் உருவாக்கப்படும் சாலை நெருக்கடியை நானோ குறைக்கும்.விபத்துக்கள் குறையும். நானோ .. போக போக தெரியும்..
நன்றி பொதுஜனம். நானோ பொதுஜனத்தின் வெகுஜன காராக இருக்கட்டும்.
nice cartoons and humour.
Thank you shiva
Sir,
If I want to book a nano car, may i know the simple way for it.... herein Salem...
அன்புள்ள ஜெயராஜன் ஐயா!
நீங்கள் சேலம் அருகிலுள்ள டாட்டா மோட்டார்ஸ் ஷோ ரூம் அல்லது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளையை அணுகலாம்.
நன்றி.
நன்றி அய்யா...
Post a Comment