Monday, March 23, 2009

சிறியது ஆனால் பெரியது


இன்றைய தேதியில், நோட்டுக்காக நாட்டை ரத்தம் வரும் வரை சுரண்டத் தயங்காத பல இந்திய தொழில் அதிபர்களுக்கு மத்தியில், தன்னை வசதியாக வாழ வைத்த நாட்டுக்கு பதிலுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரும்பும் வெகு சில தொழில் அதிபர்களில் ரத்தன் டாட்டாவும் ஒருவர். இவர் மட்டுமல்ல, இவரது குழுமமும் நாட்டுப் பற்றுக்கு பெயர் போனது. தொழிற் துறையைப் பொருத்த வரை இந்தியாவின் பல 'முதல்'களில் (விமான சேவை, நட்சத்திர ஹோட்டல், உருக்கு தயாரிப்பு) டாட்டா குழுமத்தின் பெயரே பொறிக்கப் பட்டிருக்கும்.

ரத்தன் டாட்டா அவர்கள் ஒரு முறை காரில் செல்லும் போது, மழையில் நனைந்து கொண்டு தடுமாறியபடி ஸ்கூட்டரில் செல்லும் ஒரு இந்திய குடும்பத்தை சாலையில் பார்த்தார், இது அவர் மனதை வேதனைப் படுத்த, இந்திய நடுத்தர வகுப்பு மக்கள் பாதுகாப்பாக ஒரு காரில் பயணம் செய்வதற்கு ஏதுவாக, அவர்களின் வாங்கும் சகதிக்குள் அடங்கும் படி ஒரு கார் தயாரிக்க வேண்டுமென தீர்மானித்தார். அது மட்டுமல்லால், குறைந்த விலையில் கார் தயாரித்து தருவதாக இந்திய மக்களுக்கு ஒரு வாக்குறுதியும் அளித்தார்.

தேர்தல் பிரசாரத்தில் பல வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு பின் ஆட்சிக்கு வந்ததும், அவற்றையெல்லாம் மறந்து போகின்ற அரசியல்வாதிகளை பார்த்துப் பழகிப் போனது நம் நாடு. இந்த நாட்டில், எந்த ஒரு நிர்பந்தமும் இல்லாத நிலையிலேயே கூட, வாக்குறுதி அளித்த பின்னர் , கிட்டத்தட்ட ஆறு வருடங்களில் விலைவாசிகள் விண்ணை முட்ட முட்ட உயர்ந்த பின்னரும் கூட, "வாக்குறுதி என்றால் வாக்குறுதிதான்" என்று ஏறத்தாழ அதே விலையில் கொடுக்க முன் வந்திருப்பது, முற்றிலும் வணிகமயமாகி விட்ட இன்றைய காலகட்டத்தில் சாதாரணமான விஷயமல்ல.

அதுவும், கடந்த ஐந்து ஆண்டுகளில், கார் தயாரிக்க தேவைப் படும் மூலப் பொருட்களின் (உலோகங்கள்) விலை மிக அதிக அளவில் உயர்ந்துள்ள போதும், சம்பளம் உட்பட மற்ற வகையான செலவினங்கள் மேலேறிய போதும், இந்த விலை உயர்வுகள், நானோவின் விற்பனை விலையை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொண்டது பாராட்டப் பட வேண்டிய ஒன்று. நானோவுக்கு தடையாக வந்தது அதிகரித்து வரும் விலைவாசிகள் மட்டுமல்ல, சிங்குரில் நேரிட்ட பல்வேறு அரசியல் பிரச்சினைகள் வேறு. அனைத்தையும் தாண்டி, இன்று வெற்றிகரமாக நானோ சந்தைக்கு கொண்டு வரப் பட்டிருக்கிறது.

நானோ காரின் தொழிற் நுட்ப அளவீடுகள் (Specifications) அனைத்தும் (பேப்பர் அளவில்) மிகச் சிறப்பாகவே உள்ளன. ஐரோப்பிய தரத்திற்கு நிகரான புகை வெளியீட்டு தரங்கள் அமைக்கப் பட்டுள்ளன. அளவிலும் கூட மாருதி 800 ஐ விட (உள்ளளவு) அதிகமாகவே உள்ளது. ஒரு லட்சத்திற்கு அடக்கமாக ஏதோ ஒரு டப்பா போன்ற கார் வெளியிடப் படும் என்று நம்பிய பலருக்கு, கவர்ச்சிகரமான நானோ தோற்றம் வியப்பையே அளித்திருக்கும். ஆக மொத்தத்தில், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலேயே இந்த கார் உள்ளது. தொழிற்சாலை சோதனையில் சிறப்பாக இந்த கார் செயல்பட்டிருந்தாலும், நமது இந்திய சாலைகளில் சிறப்பான நடைமுறை செயல்பாடு மட்டுமே இன்னும் நிரூபிக்கப் பட வேண்டியுள்ளது.
இந்தியாவின் முதல் சொந்த தயாரிப்பான "டாட்டா இண்டிக்கா" அடைந்துள்ள பெரிய வெற்றி இந்த காரிலும் எதிரொலிக்கும் என்று நம்புவோம். இந்த கார் வெற்றி அடையும் பட்சத்தில், இந்திய வாகனத்துறைக்கே உலக அளவில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

கார் தயாரிப்பு தொழிற்நுட்பம் இத்தனை காலம் வெளிநாட்டினருக்கே சொந்தமாக கருதப் பட்டு வந்த நிலையில், உலகிற்கே இந்த புதிய வகை (குறைந்த விலை) காரை அறிமுகப் படுத்தி இந்தியாவை தலை நிமிர செய்த நானோ காரின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் சொல்லும் அதே வேளையில் இந்த பெருமையை நமெக்கெல்லாம் தந்த ரத்தன் டாட்டா அவர்களுக்கும் மற்றும் இந்த கனவை நனவாக்க உதவிய நம்மூர் தொழிற் நுட்ப வல்லுனர்களுக்கும் ஒரு நன்றி கலந்த வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வோம்.

நன்றி.

21 comments:

OriginalBear said...

இது நமக்கு ரொம்ப பெருமை தரும் செயல். உலக அளவில் இந்தியாவிற்கு நல்ல பெயரை வாங்கி தரும் என்று நம்புவோம். எப்ப அமெரிக்காவில் கிடைக்கும்? ஒன்னு வாங்கி போட்டுட வேண்டியது தான்.

OriginalBear said...

இது நமக்கு ரொம்ப பெருமை தரும் செயல். உலக அளவில் இந்தியாவிற்கு நல்ல பெயரை வாங்கி தரும் என்று நம்புவோம். எப்ப அமெரிக்காவில் கிடைக்கும் ? ஒன்னு வாங்கி போட்டுட வேண்டியது தான்.

Joe said...

ரத்தன் டாட்டா கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்.

இந்த சிறிய கார் நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்புவோம்.

Senthil said...

Me the firstu

Good Post

Senthil

Maximum India said...

அன்புள்ள ஒரிஜினல்பீர்

பின்னூட்டத்திற்கு நன்றி

//இது நமக்கு ரொம்ப பெருமை தரும் செயல். உலக அளவில் இந்தியாவிற்கு நல்ல பெயரை வாங்கி தரும் என்று நம்புவோம். //

நிச்சயமாக. இந்திய தொழில் துறையை தலை நிமிரச் செய்யும் சாதனை இது.

//எப்ப அமெரிக்காவில் கிடைக்கும்? ஒன்னு வாங்கி போட்டுட வேண்டியது தான்.//

மூன்று வருடங்களில் என்று பத்திரிக்கைச் செய்திகள் சொல்கின்றன.

நன்றி.

Maximum India said...

அன்புள்ள ஜோ

பின்னூட்டத்திற்கு நன்றி.

//ரத்தன் டாட்டா கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர். //

நிச்சயமாக. இந்திய தொழில் அதிபர்களில் இவர் மிகவும் வித்தியாசமானவர்.

//இந்த சிறிய கார் நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்புவோம்//

இந்த கார் இந்திய வாகனத்துறையில் கடும் போட்டியை உருவாக்கி, இன்னும் நல்ல மாடல்கள் வர உதவட்டும்.

நன்றி.

Naresh Kumar said...

தலைவா,

உங்க வேகம் எனக்கு வர மாட்டேங்குது, இப்பதான் ஒரு பதிவு போட்டுட்டு வர்றேன், அதுக்குள்ள பதிவு போட்டு வெச்சிருக்கீங்க...

நேனோ, என்னை மிக கவர்ந்த ஒரு வெற்றிப் பயணம், நோனோ சந்தித்த சவால்கள், அடைந்த முன்னேற்றங்கள் என்ற ஒரு நீண்ட பதிவையே போடப் போகிறேன்...

உங்கள் வாழ்த்துக்களோடு என் வாழ்த்துக்களும்...

KARTHIK said...

இது பலரது கார் கனவையும் நனவாக்கும்
திட்டம்.

நல்லபடியா வந்தா சரிதான்.

Maximum India said...

Thank you Senthil for the comments

Maximum India said...

அன்புள்ள நரேஷ்

//தலைவா,

உங்க வேகம் எனக்கு வர மாட்டேங்குது, இப்பதான் ஒரு பதிவு போட்டுட்டு வர்றேன், அதுக்குள்ள பதிவு போட்டு வெச்சிருக்கீங்க...//

வேகமெல்லாம் ஒண்ணுமில்ல. டாடா மீது எப்போதுமே எனக்கு தனி மரியாதை உண்டு. மக்களுக்காக சிந்திக்கும் வெகு சில தொழில் அதிபர்களில் அவரும் ஒருவர் என்பதுடன் கண்ணியம், வணிக நெறிமுறைகளை பின் பற்றுவது போன்ற சிறந்த அம்சங்களை கொண்டவர் அவர். உண்மையில், நேற்று பதிவுலகுக்கு விடுப்பு விடலாம் என்று முதலில் எண்ணியிருந்த நான், நானோவை வாழ்த்தி கண்டிப்பாக என் தரப்பில் இருந்து ஒரு பதிவு போட வேண்டுமென்பதற்காகவே இந்த பதிவினை இட்டேன்.

//நேனோ, என்னை மிக கவர்ந்த ஒரு வெற்றிப் பயணம், நோனோ சந்தித்த சவால்கள், அடைந்த முன்னேற்றங்கள் என்ற ஒரு நீண்ட பதிவையே போடப் போகிறேன்...//

நிச்சயமாக. சோர்ந்திருக்கும் பலருக்கும் நானோ கதை ஒரு உற்சாகத்தைக் கொடுக்கும். உங்கள் பதிவுக்காக ஆவலுடன் காத்திருப்பேன்.

//உங்கள் வாழ்த்துக்களோடு என் வாழ்த்துக்களும்//

நன்றி.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

//இது பலரது கார் கனவையும் நனவாக்கும்
திட்டம்.

நல்லபடியா வந்தா சரிதான்//

நன்றாக வர வேண்டும். இதர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு விலையை குறைக்க வேண்டும். இந்தியாவில் சாதாரண மக்களும் காரில் செல்ல வேண்டும். இந்த கனவு விரைவில் நிறைவேறட்டும்.

நன்றி.

வால்பையன் said...

என்னை போல் லோயர் மிடிலும் கார் வாங்க வைக்கும் ரத்தண்டாடா வாழ்க!

Unknown said...

டாட்டா மீது நம்பிக்கை வைத்திருக்கும் கோடிக்கனவர்களில் நானும் ஒருவன். இது வரை டாட்டா வெஹிகிலை தவிர வேறு எந்த வண்டியையும் என் கம்பெனிக்காக வாங்கினதில்லை. என்னுடுடைய நம்பிக்கை அது. அதுக்காக எல்லோரும் இப்படி இருக்க வேண்டும் என்பது இல்லை. டாட்டா இது வரை யாரையும் சீட் பண்ணியது இல்லை . யாருக்காவது இது மாதிரி நல்ல நினைப்பு வருமா?. நம்ம மக்கள் எல்லோரும் காரில் செல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணம். காரை பார்த்து பெரிய மூச்சு விட்ட எல்லோரும் காரில் தனது குடும்பத்துடன் காரில் செல்ல வழி தந்த டாட்டா அவர்களை நன்றி பெருக்குடன் கை எடுத்து கும்பிடலாம். எத்தனை பிள்ளைகள் காரை பார்த்து பெரிய மூச்சு விட்டு இருப்பார்கள். இனி எத்தனை குடும்பத்தில் பிள்ளைகள் சொல்லும் " எங்க வீட்லே கார் இருக்கே என்று ". இது எத்தனை சந்தோசம். இதற்கே எத்தனை நன்றி வேண்டுமானாலும் ரத்தன் டாட்டா அவர்களுக்கு கோடி நன்றி சொல்லலாம் . நம்ம இந்திய நாட்டுக்கு இது போன்ற நல்ல ஆத்மா கிடைத்திட நாம் எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும்.நன்றி .மாரிமுத்து

Maximum India said...

நன்றி வால்பையன்

கூடிய சீக்கிரம் கார் சொந்தக்காரர் ஆக வாழ்த்துக்கள்.

Maximum India said...

நன்றி மாரிமுத்து

//டாட்டா மீது நம்பிக்கை வைத்திருக்கும் கோடிக்கனவர்களில் நானும் ஒருவன். இது வரை டாட்டா வெஹிகிலை தவிர வேறு எந்த வண்டியையும் என் கம்பெனிக்காக வாங்கினதில்லை. என்னுடுடைய நம்பிக்கை அது. அதுக்காக எல்லோரும் இப்படி இருக்க வேண்டும் என்பது இல்லை. டாட்டா இது வரை யாரையும் சீட் பண்ணியது இல்லை . யாருக்காவது இது மாதிரி நல்ல நினைப்பு வருமா?. நம்ம மக்கள் எல்லோரும் காரில் செல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணம். காரை பார்த்து பெரிய மூச்சு விட்ட எல்லோரும் காரில் தனது குடும்பத்துடன் காரில் செல்ல வழி தந்த டாட்டா அவர்களை நன்றி பெருக்குடன் கை எடுத்து கும்பிடலாம். எத்தனை பிள்ளைகள் காரை பார்த்து பெரிய மூச்சு விட்டு இருப்பார்கள். இனி எத்தனை குடும்பத்தில் பிள்ளைகள் சொல்லும் " எங்க வீட்லே கார் இருக்கே என்று ". இது எத்தனை சந்தோசம். இதற்கே எத்தனை நன்றி வேண்டுமானாலும் ரத்தன் டாட்டா அவர்களுக்கு கோடி நன்றி சொல்லலாம் . நம்ம இந்திய நாட்டுக்கு இது போன்ற நல்ல ஆத்மா கிடைத்திட நாம் எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும்.நன்றி .மாரிமுத்து//

உங்களுடையது ஆத்மார்த்தமான வார்த்தைகள். நம் நாட்டில் உள்ள எளிய மக்களும் இனி சொந்த காரில் செல்ல வேண்டும். பணம் சம்பாதிப்பதே முதல் குறிக்கோளாக இருக்க வேண்டிய தொழில் அதிபர் ஒருவர் மக்களுக்காக சிந்திக்கும் போது, நாட்டிற்கு சேவை செய்வதே குறிக்கோளாக கொள்ள வேண்டிய அரசியல்வாதிகள் தங்களைப் பற்றி வெட்கப் பட்டுக் கொள்ளட்டும்.

நன்றி.

அசோசியேட் said...

நன்றாக சொன்னீர்கள். டாடாவுக்கு நன்றி சொல்வதில் என்னையும் இணைத்து கொள்கிறேன். நல்ல கருத்து.........

அமர பாரதி said...

இந்த விலையில் நானோ வெளி வந்தால் போக்குவரத்து மிக மோசமாக பாதிக்கப்படும். நமக்கு இருக்கும் சாலை கட்டமைப்பு வசதிகள் இப்போது இருக்கும் வாகனங்களுக்கே போதாது. இந்த நிலையில் இந்த விலையில் கார் விற்றால் போக்குவரத்துக் சுற்றுச்சூழலும் மிக மோசமாக பாதிக்கப்படும்.

Maximum India said...

//நன்றாக சொன்னீர்கள். டாடாவுக்கு நன்றி சொல்வதில் என்னையும் இணைத்து கொள்கிறேன். நல்ல கருத்து.........//

உங்களுக்கும் எனது நன்றி அசோசியேட்

Maximum India said...

அன்புள்ள அமரபாரதி

//இந்த விலையில் நானோ வெளி வந்தால் போக்குவரத்து மிக மோசமாக பாதிக்கப்படும். நமக்கு இருக்கும் சாலை கட்டமைப்பு வசதிகள் இப்போது இருக்கும் வாகனங்களுக்கே போதாது. இந்த நிலையில் இந்த விலையில் கார் விற்றால் போக்குவரத்துக் சுற்றுச்சூழலும் மிக மோசமாக பாதிக்கப்படும்.//

உங்களுடைய கருத்து கவனத்தில் கொள்ள வேண்டியது. ஆனால் தனக்கென சொந்தமாக வைத்துக் கொள்ள ஒவ்வொரு எளிய மனிதருக்கும் உரிமை உள்ளது. சுற்றுச் சூழல் மாசுபாடு, வாகன நெரிசல் காரணம் காட்டி அந்த உரிமையை தட்டிப் பறிக்க முடியாது.

போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச் சூழல் மாசுபாடுகளின் முக்கிய காரணம், மோசமான சாலை கட்டுமான வசதிகள் மற்றும் தேவையை விட மிகவும் குறைவான "பொது போக்குவரத்துச் சேவைகள்". இவற்றை சரி செய்ய வேண்டியது அரசின் கடமை. பொதுவாகவே கார் வார இறுதி நாளில் வெளியே செல்வதற்க்குதானே? மேற்சொன்ன வசதிகள் நன்கு இருந்தால் மக்கள் ஏன் வேலை நாட்களில் காரைத் தொடப் போகிறார்கள்?

நன்றி.

மங்களூர் சிவா said...

மிக மகிழ்ச்சியான செய்தி. டாடாவால் இந்தியர் அனைவருக்கும் பெருமை.

Maximum India said...

நன்றி மங்களூர் சிவா

Blog Widget by LinkWithin