Monday, October 13, 2008

பார்சி இன மக்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்


எனது குஜராத்தி நண்பர் ஒருவர் பார்சி இன மக்கள் இந்தியா வந்து சேர்ந்த கதை எனக்குக் கூறினார். அதில் ஒரு சிறந்த வாழ்க்கைப் பாடம் அடங்கி உள்ளது.

அதாவது, சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர், பார்சி இன மக்கள், தமது சொந்த மண்ணான பாரசீகத்தில் (ஈரான் ) இருந்து வெளியேற நேரிட்டது. அவர்கள், இந்தியாவில் அடைக்கலம் புகுவதற்காக கப்பலில் பயணம் செய்து , குஜராத் கரையோரம் இந்திய (குஜராத்)மன்னரிடம் அனுமதி கோரி காத்து இருந்தனர்.

அப்போது, குஜராத் மன்னர், தம் மண்ணில் ஏற்கனவே மக்கள் தொகை அதிகம் , மேலும் யாருக்கும் இடம் இல்லை என்று குறிப்பால் உணர்த்துவதற்காக ஒரு பால் நிறைந்த பாத்திரத்தை கப்பலுக்கு கொடுத்து அனுப்பினார்.

பார்சி மக்களோ , அப்பாத்திரத்தில் சிறிது சர்க்கரை இட்டு , மன்னருக்கே திருப்பி அனுப்பினார் .

அதன் குறிப்பானது . "நாங்கள் தனித்து தெரிய மாட்டோம் . பாரமாகவும் இருக்க மாட்டோம் . தங்களுடன் கலந்துவிடுவோம் . மேலும் தங்கள் வாழ்வுக்கும் சுவை கூட்டுவோம் ".


இந்த நூதனமான பதிலால் மகிழ்ச்சி அடைந்த மன்னர் , அவர்களை இந்தியாவிற்குள் (இந்திய கலாச்சாரத்தை பின் பற்ற வேண்டும் என்பது போன்ற சில நிபந்தனைகளுடன்) அனுமதித்தார்.


அன்று முதல் இன்று வரை, அம்மக்கள், இந்தியகலாச்சாரத்திற்குள் தம்மை இணைத்துக் கொண்டு, அதே சமயத்தில் தங்கள் தனித்துவத்தினையும் இழக்காமல் , வாழ்ந்து வருகின்றனர் .


அது மட்டுமல்ல. மிக சிறிய எண்ணிக்கையிலேயே இருந்தாலும் , இந்தியாவில் அவர்கள் பெருமளவிற்கு மதிக்கப் படும் ஒரு சமுதாயமாக வாழ்ந்து வருகின்றனர்.


அணு சக்தி மேதை , ஹோமி பாபா , தொழில் அதிபர் டாடா ,பொருளாதார மேதை பெரோஸ் ஷா மேதா , ராணுவ தளபதி மனேக் ஷாச் போன்றோர் பார்சி இன மக்களே .


இதில் இருந்து நாம் கற்று கொள்ளவேண்டிய பாடம் என்ன?


இன்றைய தேதியில், பிறக்க ஒரு இடம் , பிழைக்க ஒரு இடம் என்பது வாழ்வியல் நியதி ஆகி விட்டது . அவ்வாறான சூழலில், நாம் வாழ வந்த பகுதியின் கலாச்சாரத்தினை மதித்து , மொழியினை (முடிந்த வரை) கற்றுக்கொண்டு, (அதே சமயத்தில் தங்கள் தனித்துவம் இழக்காமல்) அம் மக்களுடன் கலந்து வாழ்வோம் எனில் , பல பிரச்சினைகள் (உதாரணமாக தற்போதைய மராட்டியர் - வட இந்தியர் பிரச்சினை) தவிர்க்கப் படும்.


நன்றி

7 comments:

RATHNESH said...

குஜராத்தி மக்களிடமிருந்தே நிறைய பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணுபவன் நான். அவர்களுக்கே பார்ஸி மக்கள் பாடம் சொன்னவர்கள் என்றால் . . .

அருமையன அழுத்தமான அழகான பதிவு. பாராட்ட வார்த்தைகள் இல்லை.

maximum india said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ரத்னேஷ்

குஜராத் மக்களைப் பற்றி நீங்கள் சொன்னது உண்மை.

பல குஜராத்தி நண்பர்களுடன் பழகக் கூடிய வாய்ப்பு பெற்றவன் நான். அவர்களின் கூர்மையான வியாபார அறிவு கண்டு வியந்து போயிருக்கிறேன். வரும் பதிவுகளில் அவர்களது தனி சிறப்புகள் குறித்தும் பகிர்ந்து கொள்வோம்

குமரன் (Kumaran) said...

தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்ட்ரர்களையும் இதற்கு எடுத்துக்காட்டாகக் காட்டமுடியும். :-)

தமிழ்ப் பண்பாட்டில் திளைத்துக் கொண்டே தங்கள் தனி அடையாளத்தை இழக்காமல் பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் வாழ்கிறார்கள்.

குமரன் (Kumaran) said...

தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்ட்ரர்களையும் இதற்கு எடுத்துக்காட்டாகக் காட்டமுடியும். :-)

தமிழ்ப் பண்பாட்டில் திளைத்துக் கொண்டே தங்கள் தனி அடையாளத்தை இழக்காமல் பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் வாழ்கிறார்கள்.

வடுவூர் குமார் said...

வாவ்! குறிப்பால் உணர்த்தியதை குட்டியாக சொல்லி அசத்திட்டீங்க.
அருமை.

கபீஷ் said...

I second Mr. Rathnesh

Maximum India said...

Thank you kabeesh for the comments

Blog Widget by LinkWithin