
இப்போது, மின்னஞ்சல் வட்டாரங்களில் அதிகம் உலா வரும் ஒரு நகைச்சுவை கலந்த (உள்ளூருக்கு வருவதற்கான) அழைப்பிதழ் கீழே.

இதிலுள்ள படி இந்த பண்டிகைக்கு, சொந்த ஊர் சென்றவர்கள் தன் உறவினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தீபாவளியைச் சிறப்பாக கொண்டாட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சில பல காரணங்களினால், இது போன்ற தருணங்களில் தனது சொந்த ஊருக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்காத என் போன்ற சிலருக்காக இங்கே சில கருத்துகள்.
எவ்வளவு சாப்பிட்டாலும் கம்மி என்று சொல்லும் அம்மாவின் அன்பு கலந்த சாப்பாடு, எவ்வளவு தாமதமாக வந்தாலும் தூங்காமல் காத்திருக்கும் அப்பாவிடம் இன்னமும் வாங்கும் திட்டு , உறவினர் வீட்டுக்கு அடிக்கும் விசிட்கள் மற்றும் நண்பருடன் பார்க்கும் தீபாவளி ரிலீஸ். இது மட்டுமல்ல, இளமையின் வசந்த காலங்களை நினைவூட்டும் உள்ளூர் பகுதிகள். இவை அனைத்தும் பண்டிகை காலங்களில், ஊருக்கு செல்லாததால் ஏற்படும் ஈடு செய்ய முடியாத சில இழப்புகள்.
இப்போது, என்ன செய்ய முடியும் நம்மால்?
அடி வாங்கினாலும் அடுத்த நிமிடம் மறந்து சிரிக்கும் ஒரு குழந்தையின் மனதை தீபாவளி முடியும் வரை கொஞ்சம் கடன் வாங்கி கொள்ளுங்கள். கடன் வாங்கிய மனதில், இப்போது பணி நிமித்தமாக தங்கி இருக்கக் கூடிய பகுதியை தனியாக சுற்றிப் பார்க்கும் ஒரு பொருட்காட்சியாக ஏற்றிக் கொள்ளுங்கள். திறந்த மனதோடு வேடிக்கை பாருங்கள் மேலும் அங்கு நடைபெறும் தீபாவளிக் கொண்டாட்டங்களில் (எத்தகையதாக இருந்தாலும்) முழு மனதோடு கலந்து கொள்ளுங்கள்.
உதாரணமாக, தீபாவளி எப்போது வரும் என்று பல நாட்கள் காத்திருந்து விட்டு, தீபாவளியன்று மதியத்திற்கு மேல், தீபாவளி முடியப் போகிறதே என்று கவலையும் அடுத்த தீபாவளி எப்போது வரும் என்ற ஏக்கமும் சிறு வயதில் கொண்டிருந்தவன் நான். ஆனால் நான் இப்போது உள்ள பகுதியி
லோ மூன்று நாட்கள் தீபாவளி கொண்டாடப் படுகிறது. நம்மூரின் தீபாவளியையும் சேர்த்து கொள்ளும் பட்சத்தில், என்னால் (மனம் மட்டும் இருந்தால் போதும்) நான்கு நாட்கள் தீபாவளி கொண்டாட முடியும்.
லோ மூன்று நாட்கள் தீபாவளி கொண்டாடப் படுகிறது. நம்மூரின் தீபாவளியையும் சேர்த்து கொள்ளும் பட்சத்தில், என்னால் (மனம் மட்டும் இருந்தால் போதும்) நான்கு நாட்கள் தீபாவளி கொண்டாட முடியும்.ஆகவே நண்பர்களே, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மனப்பான்மையுடன் இந்த தீபாவளியை எங்கிருந்தாலும் இனிதாக கொண்டாடுவோம்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Comments
Wish you a great Deepavali
:)
Wish You a Great Deepavali
எங்கூரில் பத்துக் கொண்டாட்டம்.
3 முடிஞ்சுருச்சு. ஏழு மிச்சம் இருக்கு:-)
Wish you very happy deepavali
சரிதான்
// நம்மூரின் தீபாவளியையும் சேர்த்து கொள்ளும் பட்சத்தில், என்னால் (மனம் மட்டும் இருந்தால் போதும்) நான்கு நாட்கள் தீபாவளி கொண்டாட முடியும்.//
அப்போ உங்க்களுக்கு இன்னைக்குத்தான்
தீபாவளி நல்வாழ்த்துக்கள்