Skip to main content

வேலை மாறும் நண்பர்களுக்கு சில யோசனைகள்

தற்போது, வதந்திகளில் சிக்கித் தவிக்கும் ஒரு பிரபல தனியார் வங்கியைப் பற்றிய விவாதம் எழுந்த போது, அங்கு, சில மாதங்களுக்கு முன்னே,( அதிக ஊதியம் மற்றும் பணி முன்னேற்றத்திற்க்காக (Career)) தனது பழைய வேலையை உதறி விட்டு, பணிக்கு அமர்ந்த ஒரு நண்பரைப் பற்றி கவலையுடன் கூடிய ஒரு கேள்வி எழுந்தது.

வங்கியின் நிலை மோசமாகும் பட்சத்தில், அவரது எதிர்காலம் என்னவாகும்?

அதே போல, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பன்னாட்டு முதலீட்டு வங்கியின் மும்பை பின் அலுவலகத்தில் (Back Office), எனது நண்பரின் உறவினர் சில மாதங்களுக்கு முன், சேர்ந்த போது, அவரது இல்லத்தினர், அதனை ஒரு விழாவாக கொண்டாடினர்.

ஆனால், அந்த வங்கி தற்போது மூடப் பட்ட நிலையில், அந்த அலுவலகம் மற்றும் அதன் ஊழியர்களின் நிலை கேள்விக் குறியாகி விட்டன.

தற்போதைய பொருளாதார சூழலில், பணி மாற்றம் என்பது, பல் வேறு காரணங்களினால், தவிர்க்க முடியாததாகி விட்டது.

அதில் எந்த தவறும் இல்லை.

ஆனால், அதே சமயத்தில், (எனக்கு தெரிந்த வகையில்) சில விஷயங்களில் நாம் கவனமாக இருப்பது நல்லது. அவற்றை இங்கு பட்டியலிட்டு உள்ளேன்.

1. நிறுவனத்தின் புகழ் Brand Image

2. நிறுவனத்தின் தலைமை Reputation of the Management

3. நிதி நலன் Financial Health

4. துறை மற்றும் நிறுவனத்தின் பழங்கால வளர்ச்சி மற்றும் எதிர்கால வாய்ப்புகள் (Past growth of the Industry and the Company as well as the future prospects)

5. நிறுவனத்தின் மனித வள கொள்கைகள்
(H R policies on career development)

6. பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் நிறுவனமாக இருந்தால், பங்கு விலை ஏற்ற இறக்கங்கள்.(Stock Price movement as it is a leading indicator)

7.ஊதிய உயர்வு (இதை கடைசியாக வைத்ததன் நோக்கம் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்)

மேற்கண்டவற்றை நன்கு ஆராய்ந்த பின்னரே, ஒரு நல்ல முடிவு எடுப்பது சிறந்தது.

இந்த தகவல்களைப் பெறுவது, இந்த இன்டர்நெட் யுகத்தில், பெரிய விஷயமில்லை.

மேலும், நேரடித் தேர்வில், உங்களுக்கு அளிக்கப்படும் வாய்மொழி உத்தரவாதங்களை நம்பாதீர்கள்.

அனைத்தும் எழுத்து வடிவில் (Black & White) இருப்பது நல்லது.

காரணம், சில பல சமயங்களில், உங்களுக்கு உத்தரவாதம் அளித்தவரை, நீங்கள் மறுபடி பார்க்கவே முடியாது.

மேலும், ஒப்பந்த விஷயங்களிலும் கவனமாக இருங்கள்.

Package என்பது அனைத்து வகையான நிறுவன செலவுகளைக் குறிப்பது.

உங்களுக்கு, கையில் என்ன வரும் என்பதில் தெளிவாக இருங்கள்.

எந்த ஒரு பணியிலும், புதிய நிறுவனத்தில் இணையும் பொழுது, ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள், அந்த நிறுவனத்தின் ஒரு ஊழியர் மட்டுமல்ல. அதன் உரிமைதாரரும் (Stake Holder) கூட.

எனவே ஒரு நிறுவனத்தைப் பற்றி, முடிந்த வரை தெரிந்த பிறகு, இணைவது நல்லது.

சிந்திப்போம்.

மீண்டும் சிந்திப்போம்.

Comments

தங்கள் கருத்துக்கும் அக்கறைக்கும் நன்றி.
ஆனால் யதார்த்த வாழ்வில், நாம் தேர்வு சேயும் வலிமையில் illai (beggers cant choose).

அது போக நீங்கள் குறிப்பிட்டுள்ள லேஹ்மான், மெர்ரில் லின்ச் போன்றவற்றில் IIM A, Harward MBA பட்டதாரிகள் சேர்ந்து வேலை இழஅக்கின்றனர்

நாமும் இது பற்றி 1 மாதத்திற்கு பதிவு, மீடியாக்களில் பேசுவோம், அப்புறம் மறந்து விடுவோம்,

அப்துல் கலாம், சிவகாசி ஜெயலக்ஸ்மி எல்லாம் மறந்தாச்சே இப்போது, அது போலதான் இந்த நிகழ்வும்.
.
KARTHIK said…
// நீங்கள், அந்த நிறுவனத்தின் ஒரு ஊழியர் மட்டுமல்ல. அதன் உரிமைதாரரும் (Stake Holder) கூட.//

நல்ல பதிவு.
Maximum India said…
அன்புள்ள குப்பன்!

//ஆனால் யதார்த்த வாழ்வில், நாம் தேர்வு சேயும் வலிமையில் illai (beggers cant choose).//

நீங்கள் சொல்வது மிக பழையக் காலம்.

இந்த தடுமாற்றமான பொருளாதார நிலையில் கூட, சரியான (Skilled) ஆட்களுக்கு, வேலைச் சந்தையில் (Job Market) கிராக்கி உள்ளது.

அப்படிப் பட்ட சில நண்பர்களுக்கான பதிவே இது.

Popular posts from this blog

NHPC நிறுவன பங்கு வெளியீடு (IPO) - முதலீடு செய்யலாமா?

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு அரசு நிறுவனத்தின் அதுவும் ஒரு மினி-ரத்னா தகுதி கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் புதிதாக வெளியிடப் பட உள்ளன. இந்த நிறுவனத்தைப் பற்றியும் ]பங்கின் விலை நிர்ணயம் பற்றியும் சில தகவல்கள் பகிர்தலுக்காக இங்கே. NHPC அதாவது தேசிய நீர்மின் உற்பத்தி நிறுவனம் 1975 ஆம் ஆண்டு நாட்டின் நீர்சக்தியை திறம்பட உபயோகிப்பதற்கான நோக்கத்துடன் உருவாக்கப் பட்டது. இந்த நிறுவனம் இது வரை 13 மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து சுமார் 5100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் பெற்றுள்ளது. தற்போது 11 மின் உற்பத்தி நிலையங்களை புதிதாக அமைத்து வருவதன் மூலம் இந்த நிறுவனம் இன்னும் சில ஆண்டுகளில் சுமார் 4600 மெகாவாட் அளவுக்கு கூடுதலாக மின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த பதினொரு மின் நிலையங்களில் ஏழு நிலையங்களின் மூலம் மட்டும் சுமார் 3240 மெகாவாட் அளவுக்கான மின்சாரம் பெப்ரவரி 2011 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் இப்போது சுமார் 168 கோடி பங்குகளை ஏலக்கணக்கில் (BOOK BUILDING) சந்தையில் வெளியிடுகி...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...