Skip to main content

தமிழ் இலக்கியத்தில் சந்தை நிலவரம்

தமிழ் பதிவுலகில் (எழுத்துலகில்) நுழைந்து சுமார் 50 நாட்களே ஆகிருக்கும் பட்சத்தில், எனது எழுத்துக்களை மேம்படுத்த என் பதிவுலக நண்பர் ஒருவரிடம் கோரிய போது அவர் கூறிய யோசனை. மற்ற பதிவுகளையும் படித்து புரிந்து கொண்டு பின்னூட்டம் அளிக்க முயற்சி செய்வது. சரிதான், நம் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்ட நண்பர்களின் பதிவு பூக்களிலிருந்து ஆரம்பிப்போம் என்ற எனது முடிவின் முடிவு என்னைக் கொஞ்சம் மிரளச் செய்து விட்டது.


புகைப் படங்களால் மயக்கும் ஒருவர், கவிதைகளால் வேறு உலகம் காணச் செய்யும் ஒருவர், கவிதைகளையும் கவிதையான புகைப்படங்களையும் ஒருங்கே கொடுத்து மிரட்டும் ஒருவர், காந்தி தேசத்தின் மறுபக்கம் கண்ட ஒருவர், கட்டுரையினையே கவிதையாக்கிய ஒருவர், ஜெர்மானிய ரஷ்ய இலக்கியம் பேசும் ஒருவர், ஜெயகாந்தன் முதல் ஜெயமோகன் வரை அலசும் ஒருவர், வெளி வராத புத்தகங்களுக்கு கூட விமர்சனம் எழுதும் ஒருவர் மற்றும் பதிவினையே தலை கீழாக இட்டு Irreversible Technique கண்ட ஒருவர்.


இவர்கள் எழுத்துக்களை இரு மாதங்கள் முன்னரே கண்டிருப்பேன் என்றால் நான் எழுத தைரியமாக முன்வந்திருப்பேனா என்பதே சந்தேகம்தான்.


என்னை பொறுத்த வரை (தமிழ் மற்றும் ஆங்கில) இலக்கிய அறிவு சற்று குறைவுதான். என்னுடைய தமிழ் பள்ளிப் பாட நூல்களில் உள்ளது போல இருக்கிறது என்று எனது மனைவியே கூறினார். அதில் தவறில்லை. நான் தமிழ் மற்றும் ஆங்கிலம் பயின்றது எனது பள்ளிப் பருவம் வரை மட்டுமே. அதன் பின்னர் பயின்றது தொழிற்கல்வி மற்றும் துறை சார்ந்த கல்வி மட்டுமே.


மேலும் சமூக பொருளாதார காரணங்களினால், சிறு வயதினிலேயே பணிக்கு சேர்ந்த எனது மேற்படிப்பு முழுவதும் பெரும்பாலும் தொலைதூர கல்வி மூலமே. எனவே நேரமின்மை காரணமாக கல்வி நீங்கலான மற்ற புத்தகங்கள் படிக்க அதிக வாய்ப்பு அமைய வில்லை. அதே சமயத்தில் கல்வி மற்றும் துறை சார்ந்த புத்தகங்களில் (Mechanical Engineering to Financial Engineering) எனக்கு எப்போதுமே தீராத காதல் இருந்து வந்திருக்கிறது.


நான் அறிந்த சிறிய அளவிலான தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் கூட, இந்திய ஆட்சிப் பணிகளுக்கான முதன்மை தேர்வுக்காக தயார் படுத்த மட்டுமே. நான் படித்த சில பொது (ஆங்கில) இலக்கியங்கள் கூட சில நேர்முக தேர்வுகளை மனதில் கொண்டுதான்.


இளைய வயதினிலேயே முற்றிலும் மாறுபட்ட துறைகளில் பணியாற்றும் வாய்ப்பும் பல்வேறு ஊர்களில் வசிக்கும் வாய்ப்பும், மிகவும் வேறுபட்ட நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பும் பெற்றிருந்ததால் கிடைத்த (சிறிதளவே ஆயினும்) அறிவினையும் அனுபவத்தினையும் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளவே சந்தை நிலவரம் என்ற இந்த பதிவு வலை. இதற்கு தமிழ் இலக்கியத்தில் எந்த இடம் என்பதே எனது இன்றைய சிந்தனை.


இரண்டாம் பத்தியில் குறிப்பிட்டுள்ளவை போன்ற பதிவுப் பூக்கள் தமிழ்த் தாயை அலங்கரிக்கும் மணம் வீசும் மலர்களாக இருக்கும் வேளையில் இந்த சந்தை நிலவரம் தமிழ்த் தாயின் கோயிலின் வெளிப்பகுதிகளை அலங்கரிக்கும் காகித பூக்களாகவாவது இருக்க வேண்டும் என்பது எனது இலக்கிய அவா.


அதற்கு உங்கள் ஊக்கமூட்டும் வாழ்த்துக்களை பணிவன்புடன் கோருகிறேன்.

Comments

MCX Gold Silver said…
sir nanraaka ealudiullirkal
MCX Gold Silver said…
sir nanraaka ealudiullirkal
வனம் said…
வணக்கம்

ஏன் நீங்கள்
Mechanical Engineering to Financial Engineering

சார்ந்த பதிவுகள் போட்டால் நிச்சையம் படிக்க தயாராக இருக்கிறேன்

துறை சார்ந்த பதிவுகள் தமிழில் மிக குறைவு

நானும் கருவியியல் படித்தவன்தான்

நன்றி
உங்களுடன் ஆன ரயில் சினேகத்தை பற்றி அடிக்கடி சொல்லுவார் நண்பர் கார்த்திக், உங்களுடய துறை சார்ந்த பதிவுகள் பெருமளவில் எனக்கு உதவியிருக்கிறது.

பின்னூட்டங்கள் தமிழில் இட்டால் மகிழ்வேன்.
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

பின்னூட்டதிற்கு நன்றி.

இன்னும் கூட, தமிழில் சிந்தித்து எழுத சற்று சிரமமாக இருப்பதுடன் சற்று அதிக நேரமும் ஆகிறது . அதனால்தான், பெரிய அளவிலான பின்னூட்டங்கள் ஆங்கிலத்தில் எழுதி வந்திருக்கிறேன் . (சிறிய அளவிலான பின்னூட்டங்கள் தமிழே எழுதி வருகிறேன் ) . வரும் காலங்களில் கண்டிப்பாக தமிழிலேயே அனைத்து பின்னோட்டங்களும் எழுத முயற்சிப்பேன் .
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

பின்னூட்டதிற்கு நன்றி.

இன்னும் கூட, தமிழில் சிந்தித்து எழுத சற்று சிரமமாக இருப்பதுடன் சற்று அதிக நேரமும் ஆகிறது . அதனால்தான், பெரிய அளவிலான பின்னூட்டங்கள் ஆங்கிலத்தில் எழுதி வந்திருக்கிறேன் . (சிறிய அளவிலான பின்னூட்டங்கள் தமிழிலேயே எழுதி வருகிறேன் ) . வரும் காலங்களில் கண்டிப்பாக தமிழிலேயே அனைத்து பின்னூட்டங்களும் எழுத முயற்சிப்பேன் .
KARTHIK said…
// என்னை பொறுத்த வரை (தமிழ் மற்றும் ஆங்கில) இலக்கிய அறிவு சற்று குறைவுதான். என்னுடைய தமிழ் பள்ளிப் பாட நூல்களில் உள்ளது போல இருக்கிறது.//

அப்படியெல்லாம் இல்லை அண்ணா அருமையா இருக்கு.பல தமிழ் புத்தகங்கலை வாசித்தாலும் ஏனோ எனக்கு எழுத்து மட்டும் வருவதே இல்லை.

உங்களுக்கு மட்டும் இல்லாமல் மற்றவருக்கும் பயன் படும்படியாக இருக்கு உங்க எழுத்து.

தொடருங்கள் வாழ்த்துக்கள்.
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டதிற்கு நன்றி.

//பல தமிழ் புத்தகங்கலை வாசித்தாலும் ஏனோ எனக்கு எழுத்து மட்டும் வருவதே இல்லை.//

சில மணி நேரமே நாம் பேசி இருந்தாலும் என்னால் சொல்ல முடியும். உங்களிடம் சரக்கு உண்டு. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவிங்கன்னு நம்பறேன்.


//உங்களுக்கு மட்டும் இல்லாமல் மற்றவருக்கும் பயன் படும்படியாக இருக்கு உங்க எழுத்து.//


தான் அறிந்ததை பிறருக்கும் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் எனக்கு எப்போதும் உண்டு. இது வரை சிறு நண்பர் வட்டத்திலேயே சுற்றி வந்த என் கருத்துகள் இன்று ஊரறிய செய்ததில் உங்களுக்கும் பங்கு உண்டு.

என்னுடைய ஒரே சிரமம் பல தொழிற்நுட்ப வார்த்தைகளுக்கு தமிழ் சொல் கண்டுபிடிப்பது மற்றும் தமிழில் டைப் அடிப்பது. உதாரணமாக, பலருக்கும் புதிராக இருக்கும் Derivatives பற்றி நான் சில எளிய விளக்கங்கள் அளிக்க விரும்புகிறேன். ஆனால், Derivatives என்ற சொல்லுக்கு ஏற்றுக் கொள்ளும் வகையில் என்னால் தமிழ் சொல் கண்டுபிடிக்க முடிய வில்லை. எனவே ஆரம்பமே இடிக்கிறது. இதில் உங்களாலோ அல்லது தமிழ் புலமை உள்ள வேறு நண்பராலோ உதவ முடியும் என்றால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

Popular posts from this blog

வாண வேடிக்கையா? வெறும் புஸ்வாணமா?

பெரிதாக வெடிக்கப் போகிறது அல்லது வண்ண மயமான ஒளிச்சிதறல்கள் பூக்கப் போகின்றன என்றெல்லாம் பெரிதாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, சில பட்டாசுகள் புஸ்வாணமாக போவதுமுண்டு. தீபாவளி தினத்தன்று நமக்கெல்லாம் சில சமயங்களில் ஏற்பட்டு விடும் இது போன்ற ஒரு அனுபவம் சென்ற வாரம் பங்குசந்தையிலும் ஏற்பட்டது. சென்ற வாரம் நம்மை ஏமாற்றிய புஸ்வாணங்களைப் பற்றி முதலில் பார்ப்போம். முதல் புஸ்வானம் - பாரதி ஏர்டெல் தென் ஆப்பிரிக்க தொலைபேசி நிறுவனமான எம்டிஎன்-னுடான இணைப்பு இல்லையென்றவுடன் முதலில் துள்ளிக் குதித்த பாரதி பங்கு, வெகு சீக்கிரத்திலேயே ஆடி அடங்கி விட்டது. எம்டிஎன்னுடன் இணையாததால் சில அபாயங்கள் நீங்குகின்றன என்று அந்த பங்கினை அதிக விலையில் வாங்கி வைத்து ஆசையுடன் காத்திருந்த பலருக்கு பாரதி ஒரு பெரிய புஸ்வாணமாகவே அமைந்தது. இரண்டாவது புஸ்வானம் - ரிலையன்ஸ் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் ரிலையன்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்கு கொடுப்பதாக அறிவித்தது. இந்தியாவின் 'நம்பர்-ஒன்' வணிகத் தாளான எகோநோமிக் டைம்ஸ் பத்திரிக்கை, தீபாவளி வாணவேடிக்கை ஆரம்பித்து விட்டதாக முதல் பக்கத்தில் தலைப்ப...

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...