Skip to main content

கிரிக்கெட் - சில அடிப்படை தகவல்கள்

நேற்று ஒரு தொலைக் காட்சியில் பார்த்தேன். நாளை மறு நாள், கிரிக்கெட் மேட்ச் என்று தலைப்பு செய்திகளில் வந்தது. பரபரப்பு தொற்றி கொண்டது.

இன்றைக்கோ, (வங்கப்) புலியின் ஒய்வு குறித்து நாடே (பாராளுமன்ற சபாநாயகர் உட்பட) கவலைப் படுகிறது.

இந்த பரப்பான சூழ்நிலையில், கிரிக்கெட்டைப் பற்றி சில அடிப்படை தகவல்கள் (மட்டுமே) இங்கே.

கிரிக்கெட் ஒரு காலனி விளையாட்டு.

முன்னாள் பிரிட்டிஷ் அரசிடம் அடிமைப் பட்டிருந்த நாடுகள் மட்டுமே இந்த விளையாட்டில் உண்டு.

கிரிக்கெட் சர்வதேச அங்கீகாரம் பெறாத ஒரு விளையாட்டு.

ஒலிம்பிக், ஏசியாட் போன்ற சர்வதேச அரங்குகளில் இந்த விளையாட்டுக்கு இடம் இல்லை.

கிரிக்கெட் விளையாட்டுத் திறன் (Athletic skills) மிகுந்த நாடுகள் அக்கறை காட்டாத ஒரு விளையாட்டு.

உடல் திறனை உலக அரங்குகளில் காட்டும், சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் கிரிக்கெட் இல்லை. (ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மட்டுமே விதி விலக்கு)

கிரிக்கெட் புள்ளி விவரங்களின் விளையாட்டு

இன்றைக்கு டெண்டுல்கர் இத்தனையாவது முறை களம் இறங்குகிறார், இத்தனை ரன் எடுத்தார், இத்தனையாவது முறை இத்தனை ரன் எடுத்தார் என்று புள்ளி விவரங்களால் நம்மை புல்லரிக்க வைக்கும் விளையாட்டு இது.

கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன்களின் விளையாட்டு.

ஐந்து நாட்கள் தொடர்ந்து விளையாடினாலும் கூட, வேர்வை சிந்த தேவையில்லாத விளையாட்டு இது.

கிரிக்கெட் ஒரு பொழுது போகாதவர்களின் விளையாட்டு.

ஐந்து நாள் போட்டி, ஒரு நாள் போட்டி மற்றும் ௨0-௨0 ஓவர் போட்டி (இது கூட கொஞ்ச அதிக நேரம்தான்) என்று வருடம் முழுக்க இருந்தாலும், அதனை பார்க்க ஆட்களும் உண்டு, அதனை நாள் முழுக்க கவரேஜ் செய்ய தொலைக் காட்சிகளும் உண்டு மற்றும் முதல் பக்கத்தில் போட பத்திரிக்கைகளும் உண்டு.

கிரிக்கெட் ஒரு முட்டாள்களின் விளையாட்டு

இதனை சொன்னவர், பேரறிஞர் பெர்னார்ட் ஷா அவர்கள்

"Cricket is a game played by 22 fools and followed by 22,000 fools".

இப்போது ஒரே ஒரு வித்தியாசம், தொலைக் காட்சிகளின் உபயத்தால், ஆயிரத்தை, கோடியாக மாற்ற முடிந்துள்ளது.

இப்போது சொல்லுங்கள்.

இப்படிப்பட்ட கிரிக்கெட், இந்தியாவின் தேசிய மதம் என்றும், டெண்டுல்கர் அதன் கடவுள் என்றும், டோனி ஒரு சிங்கம் என்றும், கங்குலி ஒரு (வங்கப்) புலி என்றும், டிராவிட் ஒரு (பெருஞ்ச்) சுவர் என்றும் கூச்சல் இடுவது வேடிக்கையாக இல்லையா?

இத்தகைய வெறித்தனமான கிரிக்கெட் பற்று, தானாக உருவானது அல்ல, ஊடக விற்பன்னர்களால் மிகுந்த திட்டமிட்டு உருவாக்கப் பட்ட ஒன்று.

சிந்திப்போம்.


மீண்டும் சிந்திப்போம்.

Comments

இனியா said…
Yes, you are absolutely right. Also, all other good games/sports do not get any attention/recognition as we all got addicted to this game of Lords/Lazy People.
FunScribbler said…
//சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, கொரியா//

சீனாவில் கிரிக்கெட் விளையாடுவது உண்டு. பெண்கள் அணிகள்கூட உள்ளது. ஆனால் அவ்வளவு பிரபலம் கிடையாது.

//வேர்வை சிந்த தேவையில்லாத விளையாட்டு இது.//

வேகாத வெயில training பண்ணி,வெந்து அவ்வளவு நேரம் fieldல நின்னு விளையாடுகிறார்கள். வேர்வையே வராதா? யாரு சொன்னது??

//கிரிக்கெட் ஒரு பொழுது போகாதவர்களின் விளையாட்டு.//

அப்படி பார்த்தால் எல்லாம் விளையாட்டும் பொழுது போகாதவர்களின் விளையாட்டு தான். வேற வேலை இருந்தால் எதுக்கு விளையாடனும்?

//"Cricket is a game played by 22 fools and followed by 22,000 fools".//

அப்படி பார்க்க போனால் காற்பந்தும் இதுக்கு உகந்தது தான்.
உண்மை தான் இந்தியா போன்ற நாடுகளில் கிரிக்கெட் வெறித்தனமாக ஓடிகிட்டு இருக்கு. அதுக்குன்னு கிரிக்கெட் மேல் பழி சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்ல...
Maximum India said…
நண்பரே!

தங்கள் கேள்வி அனைத்திற்கும், உங்கள் கேள்விகளிலேயே பதில் இருக்கிறது. ஒன்றைத் தவிர.

// வேகாத வெயில training பண்ணி,வெந்து அவ்வளவு நேரம் fieldல நின்னு விளையாடுகிறார்கள். வேர்வையே வராதா? யாரு சொன்னது??//

நீங்கள் ஒரு நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடுங்கள். பிறகு ஒரு மணி நேரம் தொடர்ந்து பூப்பந்து அல்லது கால் பந்து விளையாடுங்கள். பிறகு தெரியும். எவ்வளவு சக்தி தேவை ஒவ்வொரு விளையாட்டுக்கும் என்று.

மற்றபடிக்கு, நான் கிரிக்கெட் விளையாதவனோ அல்லது கிரிக்கெட்டை விரும்பாதவனோ கிடையாது.

என்னுடைய ஆதங்கம் கடைசி பத்தி மட்டுமே.

// இத்தகைய வெறித்தனமான கிரிக்கெட் பற்று, தானாக உருவானது அல்ல, ஊடக விற்பன்னர்களால் மிகுந்த திட்டமிட்டு உருவாக்கப் பட்ட ஒன்று.//

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
Joe said…
I was a big time Cricket fan until I was 18.

I don't agree that one doesn't have to sweat in Cricket but it's not such a great game as the media or the majority of India project it as...

I have started following football in the last decade, for reasons like
1. It's much more interesting
2. It doesn't consume the whole day, you may watch it for 2 hours and still get on with your work or other activities in a day.
3. Other than world cup football which happens once in 4 years, you don't have to keep track of schedules of football games between two countries, as there aren't many, between two world cups.

Football rules!
கபீஷ் said…
Good one! u resembled my thoughts
Maximum India said…
Dear Kabeesh

Thank you for the comments

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...