Monday, October 13, 2008

சேமிக்க கற்றுக் கொள்வோம்!


நம்மில் (இளைஞர்கள்) பலரும் பொருளாதாரத்தின் ஒரு பக்கத்தினை (அதாவது, வளர்ச்சி அல்லது அதி வேக வளர்ச்சி) மட்டுமே இது வரை பார்த்து வந்திருக்கிறோம். இப்போது மறுபக்கமும் (அதாவது தேக்கம் அல்லது வீழ்ச்சி) பார்க்க நேரிடும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.




இது வரை, நாம் வருங்காலம் பற்றிய கவலை மற்றும் தேவை இல்லாத, செலவுகள் (இது வரை வருமானத்திற்கு மிகக் கீழே இருந்தது ) குறைக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒரு சூழலில் வாழ்ந்து வந்திருககிறோம் .



இப்போதோ, பொருளாதார வீழ்ச்சி (குறைந்த பட்சம் தேக்கம்) நம் கண் முன்னே பயமுறுத்தி கொண்டு இருக்கிறது.



வருமானம் பெருமளவு அதிகரிக்காத அதே சமயத்தில், செலவுகள் நாளுக்கு நாள் மேல் செல்லும் வாய்ப்பு (உபயம் - பண வீக்கம் ) உருவாகி உள்ளது.



இவ்வாறான சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும்?



என்னுடைய நண்பர் ஒருவர் கூறினார். நாம் இப்போது நமது பெற்றோரின் வாழ்க்கை முறையிலிருந்து சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.



முதலாவது Contented Life Style. அதாவது, அதிகம் ஆசைப் படாத வாழ்வு நெறி.
இரண்டாவது. A Rupee saved is a Rupee earned. அதாவது, எவ்வளவு குறைந்த வருமானமாக இருந்த போதிலும், அதில் ஒரு குறிப்பட்ட பகுதியை வருங்காலத்திற்காக சேமிப்பது.



இவ்விரண்டு கருத்துக்களை நாம் செவ்வனே பின் பற்றுவோமானால், வருங்காலத்தில் எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் நம்மால் எதிர் கொள்ள முடியும்.



அதற்கு, நாம் அத்தியாவசிய செலவினங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற செலவினங்கள் என்று இரண்டாக பிரித்து கொள்ள வேண்டும்.



அத்தியாவசியமற்ற செலவினங்களைக் குறைத்து அந்த தொகையை வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டும்.



சேமிப்பதற்கு மேலும் சில எளிய வழி முறைகள் கீழே



கிரெடிட் கார்டு உபயோகத்தினை குறைத்து அதற்கு பதிலாக கூடுமான வரை நோட்டுகள் மூலமாகவே செலவு செய்வது.



மிச்சம் பிடிப்பதாக எண்ணிக் கொண்டு தள்ளுபடி விலையில் தேவை இல்லாத பொருட்களை வாங்குவதை தவிர்ப்பது.



கவர்ச்சியான சூப்பர்/ஹைபெர் சந்தைகளுக்கு செல்வதையும் அங்கு உறையிட்ட ரெடிமேட் உணவுப் பொருட்களை வாங்குவதையும் தவிருங்கள்.



தந்தையிடம் எப்படி பொருட்களை வாங்குவது என்பதையும் , தாயிடம் அவற்றை எப்படி சேமிப்பது என்பதையும் கற்றுக் கொள்ளுங்கள்.



போக்குவரத்தினை முன்னரே திட்டமிட்டால் அதிகப்படியான செலவினைக் குறைக்க முடியும்.உதாரணமாக, கூடுமான வரை பொது வாகன போக்குவரத்தை பயன்படுத்துவது, கார் உபயோகத்தை குறைப்பது போன்றவை .



மேலும், பல சுய தேவைகளுக்காக, உடல் உழைப்பைக் கூட்டும் பட்சத்தில் நமது உடலுக்கும் நல்லது, நமது பணப்பைக்கும் கூட நல்லது.



(இப்பதிவினைப் பார்ப்பவர்களும் கூட சில வழி முறைகளைத் தெரிவித்தால் மகிழ்ச்சி. )



வருங்காலத்திற்காக பணத்தை சேமிப்போம் , கவலைகளை அல்ல .



If you know how to spend less than you get, then you have the philosopher’s stone

- Benjamin Franklin

6 comments:

Adriean said...

நன்றி.

Itsdifferent said...

I think credit card can be used, but make sure to pay 100% of the outstanding balance when it is due that month.
2. Avoid too many eatouts.
3. Try to do atleast 60 Mins of exercise a day, which will help in the long run.
4. Establish regular savings, these days there are very many attractive schemes with good returns. Regular savings seem to have accumulated good wealth than randome one time savings. It also, creates a feeling, that you have less money for disposal.

Maximum India said...

Dear Gopinath

What I meant on usage of credit card for spending was little different.

Many people mistake credit card money as easy money and tend to spend more on unnecessary things.

If you use hard currency instead of credit card, the spending will come down. You can check yourself for a month. (I have a personal experience on it)

Maximum India said...

Dear Gopinath

Thank you for the suggestions on saving money.

Maximum India said...

Mr. Raghavan's comment in Tamilish. Com

'எந்து தந்தை எனக்கு கற்றுக் கொடுத்தது. எவ்வளவு சம்பாதித்தாலும் அதில் குறைந்தது 10% ரெக்கரிங் டெபாசிட் போடவேண்டும் என்பார். தேவையில்லாத பொருட்களை வாங்க கூடாது. ஹோட்டலில் போய் தேவையில்லாமல் பகட்டுக்காக சாப்பிடக்கூடாது. தொலைபேசியில் தேவையில்லாமல் பேசக்கூடாது. கண்ட நிறுவனங்களையும் வட்டி கூடுதலாக கொடுப்பதை நம்பி டெபாசிட் செய்யக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக வரவுக்குள் செலவு செய்யவேண்டும்.'

Maximum India said...

Well said Mr. Raghavan.

Thank you

Blog Widget by LinkWithin