Friday, October 3, 2008

கருத்துச் சுதந்திரம் இங்கே கொஞ்சம் வித்தியாசம்!


இன்போசிஸ் நிறுவனர் திரு.நாராயண மூர்த்தி, ஒரு முறை பல்கேரியாவில் ரயில் பயணம் மேற்கொண்ட பொழுது, ஒரு சக பயணியிடம், அந்நாட்டு அரசியல் பேசிய காரணத்தினால், 72 மணி நேரம் உணவின்றி சிறையில் வைக்கப் பட்டார்.

(வலை தளம்: தடம்">http://www.rediff.com/money/2007/may/28bspec.தடம்)

திரு.தருண் கண்ணா (Billion of Entrepreneurs), ஒரு முறை, சீனாவில், வலை தளங்களைப் பார்க்கும் போது, ஜிங் மற்றும் ச்சா என்ற இரு வலை காவல் கார்ட்டூன்கள், ஒவ்வொரு வலைப் பக்கத்திலும் தெரிய வருவதைப் பார்த்தப் பின் தனது நண்பர்களிடம் விசாரித்துள்ளார். அவர்கள் கூறியதாவது. அந்த கார்ட்டூன்கள், அரசு தங்களின் (netizens) ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்து வருகிறது என்பதைக் குறிப்பதானவை ஆகும்.


மேலும் சீனாவில் பெயரளவிற்கு, கருத்து சுதந்திரம் இருந்தாலும் கூட, பெரும்பாலான, பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சி அமைப்புகள் அரசாலேயே நடத்தப் படுகின்றன.


(வலை தளம்: ௨௯" href="http://en.wikipedia.org/wiki/Freedom_of_speech_by_country#People.27s_Republic_of_China_.28mainland.)

அதே சமயத்தில், பல மேலை நாடுகளில், கருத்துச் சுதந்திரம் பெரும்பாலும் அதிகமாகவேக் காணப் படுகிறது. அங்கேயும் கூட, நவீன யுகத்தின் கண்டுபிடிப்புகளான, தீவிர வாதம், பிரிவினை வாதம் ஆகியவற்றைக் கட்டுபடுத்துவதற்க்காக, இப்போது, சில கட்டுப் பாடுகள் விதிக்கப் பட்டு வருகின்றன.


இதெல்லாம் சரி.


இந்தியாவின் நிலை?


இந்திய அரசியல் சட்டம், தனது குடிமகன்களுக்கு, சற்று நிபந்தனைகளுடன் கூடிய கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்துள்ளது.


அதே சமயத்தில் நடைமுறையில்?


மகாத்மா காந்தி முதல் மன்மோகன் சிங் வரை பெரும் தலைவர்கள் அனைவரும், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் விமர்சிக்கப் படுகின்றனர்.


மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒரு புதிய கோணத்தில் காரணங்கள் கண்டு பிடிக்கப் படுகின்றன.


பத்திரிக்கைகள் மற்றும் தொ(ல்)லைக் காட்சிகள், சில தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறையைக் கூட, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் விமர்சிக்கின்றன.


ஆளுபவர்களை மட்டுமல்ல, ஆண்டவனைக் கூட நாம் விட்டு வைப்பதில்லை.


மற்றொரு பக்கம்.


நிழல் தலைவர்கள், நிழல் உலக தாதாக்கள், நாடாள ஆசைப் படும் சில நடிகர்கள், சில தொழிலதிபர்கள், இன, மொழி மற்றும் மதங்களின் அடிப்படையில் அரசியல் பண்ணுபவர்கள், சமயங்களில், இறந்து போன சில தலைவர்களப் பற்றிக் கூட, சில மடாதிபதிகள் ஆகியோரின் செயல்களைப் பற்றி, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், பொதுவாக யாராலும் விமர்சனம் செய்ய முடிவதில்லை.

அப்படி விமர்சனம் செய்த சிலரின் நிலை என்ன ஆனது என்று நான் ஒன்றும் கூறப் போவதில்லை.


அதுதான் உங்களுக்கே தெரியுமே?



நன்றி.


மீண்டும் (சி)சந்திப்போம் .

"Freedom is not worth having if it does not connote freedom to err.

It passes my comprehension how human beings, be they ever so experienced and able, can delight in depriving other human beings of that precious right"



- Mahatma Gandhi



No comments:

Blog Widget by LinkWithin