Skip to main content

கடவுளும் இப்போது குழப்பத்தில்!

கடவுள் உண்டு. அவர் ஒருவரே என்று சொன்னவரையும் (இரண்டாவது மற்றும் நிஜ கடவுளை விட பெரிய) கடவுளாக்கி விட்டார்கள்.

கடவுள் (வெளியில்) இல்லை. உனக்குள்ளே இருக்கிறார் என்றவரைக் கூட (வெளி) கடவுளாக்கி விட்டனர்.

கடவுள் உண்டு. அவரை அடைய வழிக் காட்டுவோம் என்றவர்களையும் கடவுளர்கள் ஆக்கி விட்டனர்.

கடவுள் பற்றி பேசாமல் அன்பைப் பற்றி மட்டுமே பேசியவரைக் கூட ஒரு கடவுளாக்கி விட்டனர்.

கடவுள் ஒருவர் மட்டுமே. நாங்கள் அவரது இறை தூதர் (மட்டுமே) என்றவர்கள் மட்டுமல்ல. அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் கூட கடவுள்கள் ஆக்கி விட்டனர்.

இன்றைய தேதியில், கடவுளின் பெயரால் வியாபாரம் நடத்துபவர்கள் கூட கடவுளர்கள் ஆகி விட்டனர்.

குழப்பம் தீர்க்க வந்தவர்களின் பெயரைச் சொல்லியே பல குழப்பங்கள் நடக்கின்றன.

காற்று வாக்கில் வந்த சேதி.

(நிஜ) கடவுள் கூட இப்போது குழப்பத்தில் இருக்கிறார்.

அவரது மனக் கேள்வி.

யாரை அனுப்பி இந்த குழப்பத்தைத் தீர்க்க?

யாரையாவது அனுப்பினால், அவரையும் ஒரு கடவுளாக்கி, புதிய (அதிக) குழப்பத்தை உருவாக்கி விடுவார்களே?

சிந்திப்போமாக. அவரது கேள்விக்கு என்ன பதிலென்று?

நன்றி.

Comments

kama said…
இன்றைய தேதியில், கடவுளின் பெயரால் வியாபாரம் நடத்துபவர்கள் கூட கடவுளர்கள் ஆகி விட்டனர்.

இவர்களையெல்லாம் போட்டு தாக்கினால் சரியாக வரும்
KARTHIK said…
இப்படி சிந்திச்சவங்களும்,பேசுனவங்களும் தான் நாளடைவில் கடவுளாக மாறினாங்க.

நீங்க எப்போ மாறப்போரிங்க :-))

plz remove this word verification
krjtwrites said…
பிறந்தோம், வளர்ந்தோம், வாழுகிறோம் - எதற்காக?

கடவுள் கொள்கை என்பது மனிதனைப் பக்குவப்படுத்துவதற்க்காக ஏற்படுத்தப்பட்டதுதான். ஆனால் இன்று என்ன நடக்கிறது என்பதை நாடே அறியும்.
லேபில்: கடவுள், நையாண்டி, மதம்

உங்க வீட்டுக்கு ஆட்டோ உறுதி
Thamizhan said…
இருந்தா எப்போவே வந்திருப்பேனே!

நான் இல்லேங்கிற தைரியத்திலே தானே
ஏம்பேரே சொல்லி சொல்லி எல்லா அநியாயம்,அக்கிரமம்,ஏமாற்று எல்லாம் நடக்குது.

நான் இருக்கேன்னு உண்மையான பயம் இருந்தா இதெல்லாம் நடக்குமா?ஏம் பேரைச் சொல்றவனே தயவு செய்து நம்பாதீங்க!முடிஞ்சா ஜெயில்லே போடுங்க!எல்லாம் சரியாயிடும்.
அருமையான பதிவு
கபீஷ் said…
what to say , i ll write a post on this
Maximum India said…
Dear kabeesh

please inform me when you write about it. I would like to see your views also. I have a lot of thoughts about it. But no time to write.

Popular posts from this blog

வாண வேடிக்கையா? வெறும் புஸ்வாணமா?

பெரிதாக வெடிக்கப் போகிறது அல்லது வண்ண மயமான ஒளிச்சிதறல்கள் பூக்கப் போகின்றன என்றெல்லாம் பெரிதாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, சில பட்டாசுகள் புஸ்வாணமாக போவதுமுண்டு. தீபாவளி தினத்தன்று நமக்கெல்லாம் சில சமயங்களில் ஏற்பட்டு விடும் இது போன்ற ஒரு அனுபவம் சென்ற வாரம் பங்குசந்தையிலும் ஏற்பட்டது. சென்ற வாரம் நம்மை ஏமாற்றிய புஸ்வாணங்களைப் பற்றி முதலில் பார்ப்போம். முதல் புஸ்வானம் - பாரதி ஏர்டெல் தென் ஆப்பிரிக்க தொலைபேசி நிறுவனமான எம்டிஎன்-னுடான இணைப்பு இல்லையென்றவுடன் முதலில் துள்ளிக் குதித்த பாரதி பங்கு, வெகு சீக்கிரத்திலேயே ஆடி அடங்கி விட்டது. எம்டிஎன்னுடன் இணையாததால் சில அபாயங்கள் நீங்குகின்றன என்று அந்த பங்கினை அதிக விலையில் வாங்கி வைத்து ஆசையுடன் காத்திருந்த பலருக்கு பாரதி ஒரு பெரிய புஸ்வாணமாகவே அமைந்தது. இரண்டாவது புஸ்வானம் - ரிலையன்ஸ் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் ரிலையன்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்கு கொடுப்பதாக அறிவித்தது. இந்தியாவின் 'நம்பர்-ஒன்' வணிகத் தாளான எகோநோமிக் டைம்ஸ் பத்திரிக்கை, தீபாவளி வாணவேடிக்கை ஆரம்பித்து விட்டதாக முதல் பக்கத்தில் தலைப்ப...

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...