Skip to main content

சில கருத்துப் பிழைகள் - சில காரணங்கள்

நம்மில், பலரும், பள்ளிப் பருவம் வரை மட்டுமே, தமிழ்க் கல்வி பயின்றுள்ளோம். பின்னர், மேற்படிப்பு, தொழிற்கல்வி மற்றும் பணியிடங்களில் (சில சமயங்களில் வாழுமிடம் கூட) பெரும்பாலும், ஆங்கிலத்திலேயே வாழ்ந்து வருகிறோம்.

இதனால், பெரும்பாலான சிந்தனைகள் ஆங்கிலத்திலேயே உள்வாங்கும் (Conception) சூழல் ஏற்படுகிறது. அவ்வாறான சிந்தனைகளை தமிழில் மொழிப் பெயர்ப்பு செய்து வெளியிடும் (பதிவு) பட்சத்தில், அதனை தமிழில் படித்து, ஆங்கிலத்தில் புரிந்து கொண்டால் மட்டுமே, சரியான கருத்து பரிமாற்றம் ஏற்படுகிறது.

ஆனால், அக்கருத்துக்களை, தமிழில் படித்து தமிழிலேயே புரிந்து கொள்ள முயற்சிக்கும் போது, குழப்பங்கள் ஏற்பட்டு, சரியான கருத்து பரிமாற்றம் நிகழாமல் போய் விடுகிறது. இதன் காரணமாகவே, தமிழில் சட்டம், கணக்கியல், மருத்துவம், பொருளாதாரம் போன்ற தொழிற் துறைகளில் சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் அரிதாகவே காணப் படுகின்றனர்.

இதனை தவிர்க்க, தமிழ் எழுத்தாளர்கள் (குறிப்பாக தொழிற் துறை வல்லுனர்கள்) கூடுமானவரை, தமிழிலே சிந்தித்து, கருத்துக்களை உள்வாங்கி, பின்னர் தமிழில் எழுதும் போது சிறந்த படைப்புகள் உருவாகும். பெருமளவு தமிழரையும் தொழிற் கருத்துகள் சரியான முறையில் சென்றடையும்.

சுஜாதா, தாமோதரன் போன்ற எழுத்தாளர்கள் இவ்விஷயத்தில் முன்னோடிகளாவர்.


தமிழில் சிந்திப்போம்!


சிறந்த படைப்புகளை தமிழில் உருவாக்குவோம்!


தமிழரை சென்றடைவோம்!

Comments

Easwar said…
IDHU ORU NALLA MUYARCHI. VAZTHUKKAL.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.