Thursday, October 9, 2008

நான் ஓகே. நீங்கள் ஒகேவா?


மனவியல் மேதை, ஹாரிஸ் அவர்களது ஒரு எளிய தத்துவம் இது.


ஒவ்வொரு மனிதர்க்கும், தன்னைப் பற்றியும், தனது சுற்றமிருப்பவர் பற்றியும் ஒரு மதிப்பீடு இருக்கும். அவற்றை நான்கு வகைகளாக பிரிக்கலாம்.



நான் ஓகே. நீங்கள் ஓகே இல்லை.


இவ்வகையினர் உயர்வு மனப்பான்மை கொண்டிருப்பர். மற்றவர் மீது குறை மட்டுமே கண்டு பிடிப்பர்.


நான் ஓகே இல்லை நீங்கள் ஓகே.


இவ்வகையினர் தாழ்வு மனப்பான்மை கொண்டிருப்பர். மற்றவர்களைக் கண்டால், அச்சம், தயக்கம் கொண்டு விலகி இருக்க முயற்சி செய்வர்.


நான் ஓகே இல்லை. நீங்கள் ஓகே இல்லை.


இவ்வகையினர் ஆபத்தானவர்கள். விரக்தி மிகுந்து தற்கொலைக்கு கூட முயற்சி செய்பவர். சமூகத்தால் உடனடியாக கவனிக்கப் பட வேண்டியவர்கள்.


நான் ஓகே நீங்களும் ஓகே.


இந்த வகை மனிதர்கள் மன முதிர்ச்சி அடைந்தவர்கள். நானும் ஒரு வகையில் சிறந்தவன். அதே போல மற்றவர்களும் ஒவ்வொரு வகையில் சிறந்தவர்கள் என்ற சிந்தனை கொண்டவர்கள். இந்த சிந்தனை பெரும்பாலோர்க்கு வரும் போது பிரச்சனைகள் குறைந்து காணப்படும்.


இப்போது சொல்லுங்கள். நான் ஓகே. நீங்களும் ஓகே தானே?


மேலும், என்னுடைய நண்பர் ஒருவர், எப்போதும் சந்தோசமாகவும், புன்சிரிப்பு மாறாத முகத்துடனும் இருப்பவர். அவரிடம் எவ்வாறு அப்படி இருக்க முடிகிறது என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில் இங்கே.


அவர் தனது பெரும்பாலான சுய தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்கிறார். உதாரணமாக, வீட்டு பராமரிப்பு, வாகனச் சுத்தம், துணி சுத்தம் போன்றவை. இவ்வாறு செய்யும் போது (உடல் தொடர்ந்து உழைக்கும் போது) மனம் அதிகம் சிந்திப்பதில்லை. இதனால் பெரும்பாலான கவலைகள் மனதில் தொடர்ந்து தங்குவதில்லை. பொதுவாக, உடல் உழைப்பாளிகள், வசதி குறைந்திருந்தால் கூட, மனக் கவலைகள் குறைந்து காணப் படுவதற்கு இதுவே காரணமாக இருக்க முடியும்.


எனக்கு, இது நல்ல கருத்தாகப் பட்டது. உங்களுக்கு?


நாளை உலக மன நாள்.


உறுதி கொள்வோம்.


உடல் உழைப்பை (பயிற்சி) அதிகம் கொள்வோம். மன உளைச்சலை தவிர்ப்போம்.



சிந்திப்போம்.

"The more tranquil a man becomes, the greater is his success, his influence, his power for good. Calmness of mind is one of the beautiful jewels of wisdom. "

~James Allen



மீண்டும் சந்திப்போம்.


பின் குறிப்பு. "நான் ஓகே நீங்கள் ஓகே" என்ற மனவியல் கருத்தை எளிய முறையில் எனக்கு விளக்கிய, எனது மரியாதைக்கும் அன்புக்கும் உரிய அந்த நண்பர், தற்போது ஒரு மிக உயரிய பதவிக்கு மத்திய அரசினால் தேர்வு செய்யப் பட்டுள்ளார். அவருக்கு எனது மேலான வாழ்த்துக்களை இங்கு உரித்தாக்குகிறேன்.

4 comments:

கூடுதுறை said...

இப்ப நான் ஓகெ...

இது எனது புதிய பதிவு...வருகைதாருங்கள்
http://paakeypa.blogspot.com/

Advocate P.R.Jayarajan said...

Double Ok

கபீஷ் said...

I'm OK. You r OK.

VOC has translated one book of James Allen

Maximum India said...

Dear Kabeesh

Double OK

Blog Widget by LinkWithin