Skip to main content

Posts

Showing posts from 2010

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

நண்பர்களே! வரும் வருடம் அனைவருக்கும் மிகச்சிறந்த ஆண்டாக அமையட்டும்! அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! நன்றி!

ஒரு அரசியல்வாதியின் புலம்பல் !

இது கலிகாலம். பலரும் பார்த்து பெருமூச்சு விடும் அரசியல்வாதிகளையும் இந்த கலிகாலம் விட்டு வைப்பதில்லை. கர்நாடகத்தில் இப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த தேர்தலில், ஒரு பெரிய கட்சியின் சார்பில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் போட்டியிட முனைந்து, பின்னர் போட்டியில் இருந்து விலகி கொண்ட ஒரு உள்ளூர் அரசியல் தலையுடன் பேச இன்று ஒரு வாய்ப்பு கிடைத்தது. வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள வலிமையான கட்சியில் கிடைத்த வாய்ப்பிலிருந்து ஏன் விலகி கொண்டீர்கள் என்று நான் அவரிடம் வினவினேன். அதற்கு அவர் ஒரு பெரிய புலம்பலை பதிலாக தந்தார். "எங்கே சார்! நாற்பது நாற்பத்தைந்து லட்சங்களை இந்த தேர்தலுக்காக விட வேண்டியிருக்கும். ஆனால் போட்ட முதலை திருப்பி எடுப்பது இப்போதெல்லாம் ரொம்பவே கஷ்டமாகி விட்டது. நூறு நாள் வேலை திட்டத்தில் இப்போதெல்லாம் ஆன்லைன் கிரெடிட் செய்து விடுகிறார்கள். மாவட்ட அளவிலான சிறிய பணிகளுக்காக இப்போதெல்லாம் அதிக பணத்தை ஒதுக்குவதில்லை. பெரிய தொழிலதிபர்கள் பெரிய இடத்தில் நேரடியாக காண்டக்ட் வைத்துக் கொண்டு மொத்த காண்டிராக்ட்களை பெற்றுக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் அரசியல் செய்வத...

இந்தியாவின் வண்ணங்களும் ராகுல் காந்தியின் எண்ணங்களும்!

முகரம் பண்டிகையை முன்னிட்டு கர்நாடகத்தின் வடபகுதியில் உள்ள எனது அலுவலகத்தில் இந்த வாரம் பலரும் விடுப்பு எடுத்துக் கொண்டனர். அங்குள்ள ஒரு தமிழ் நண்பரிடம் இது பற்றி விவாதிக்கும் போது, அவருடைய தொழிற்சாலையில் கூட பலரும் விடுப்பு எடுத்துக் கொண்டதாகவும், இந்த பகுதியில் முகரம் வெகு விசேஷமாக கொண்டாடப் படுவதாகவும் கூறினார். முகரத்தை ஒரு இஸ்லாமிய திருநாளாக மட்டுமே அறிந்திருந்த நான், "முஸ்லிம்கள் மட்டும் விடுப்பு எடுத்திருந்தால் கூட பரவாயில்லை, பல இந்து ஊழியர்களும் கூட முகரத்தை முன்னிட்டு விடுப்பு எடுத்துக் கொண்டது ஆச்சரியமாக உள்ளது" என்று அவரிடம் வினவினேன். அதிலும் ஒரு இந்து பெண் ஊழியர், தீபாவளிக்கு ஊருக்கு போவதை விட முகரத்திற்கு சொந்த ஊருக்கு போவது மிகவும் முக்கியம் என்று என்னிடம் விடுமுறைக்காக மன்றாடியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்ததாக கூறினேன். அதற்கு அவர், இந்த பகுதியில் முகரம் இந்துக்களால் மிக விசேஷமாக கொண்டாடப் படுகிறதாக கூறினார். முகரத்தின் போது தீமிதிப்பது, பூ தேங்காய் பழங்களுடன் மசூதிக்கு சென்று வழி படுவது போன்ற பழக்கங்கள் உண்டு என்று வேறு சில உள்ளூர் நண்பர்களும் க...

பயமா? லாப விற்பனையா?

நீண்ட காலத்திற்கு பின்னர் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் சென்ற வாரம் பெருமளவு விற்பனை செய்துள்ளனர். இந்த அதிரடி விற்பனை காரணமாக சென்செக்ஸ் சுமார் 600 புள்ளிகள் வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் மிகப் பெரிய ஊழலான 2G விவகாரம் இந்தியாவின் நம்பகத்தன்மையை பெருமளவில் பாதித்துள்ளததால் அந்நிய முதலீட்டாளர்கள் இவ்வாறு விற்பனை செய்கின்றனர் என்று சில பங்கு சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தியா ஒரு ஊழல் தேசம் என்பதையும் அதனால்தான் இங்கு குறுகிய கால லாப வாய்ப்புக்கள் அதிகம் என்பதையும் நன்கு உணர்ந்தே இந்தியாவிற்குள் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதால், 2G ஊழல் அவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதே சமயத்தில் சிறு நிதி துறையை கட்டுப் படுத்த ஆந்திர அரசு எடுத்த முயற்சியும் தொலை தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து ஸ்பெக்ட்ரத்தை திரும்பி பெற வேண்டும் என்று எழும்பும் சில கருத்துக்களும் அந்நிய முதலீட்டாளர்கள் மத்தியில் லேசான அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சீனா தனது வங்கி கையிருப்பு விக...

ஊழலின் ஊற்றுக்க்கண்!

ஓய்வு பெற்ற வங்கி உயர் அதிகாரி ஒருவர் சமீபத்தில் தம்முடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த போதும் கூட, கல்லூரி கட்டணத்தை செலுத்தும் அளவிற்கு வசதி இல்லாததால், அவர் தனது மருத்துவர் கனவை கைவிட்டு வங்கி வேலையில் சேர நேர்ந்ததாம். கல்வியின் மதிப்பை நன்கு உணர்ந்த அவர், வங்கியில் உயர் பதவிக்கு வந்ததும் கல்விக் கடன்களை, குறிப்பாக வசதி குறைந்தவர்களுக்கு, உணர்வோடு வழங்கி வந்தார். ஆனால் அந்த கடன்களை திருப்பி வசூலிக்க முனைந்த போது அவருக்கு கிடைத்த அனுபவம் அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தவணைகளை விடுங்கள்! கடன் தொகையின் மொத்த அளவு சம்பளம் கிடைக்கும் படியாக வாழ்வில் பெருமளவுக்கு உயர்ந்த மாணவர்கள் கூட கல்விக் கடன்களை திருப்பிச் செலுத்த முனையவில்லை. மாறாக அலட்சியப் படுத்தி உள்ளனர். வயதில் மூத்தவரும் "அந்த கால மனிதருமான" அவரால் இதை ஜீரணிக்கவே முடிய வில்லை. யார் வேண்டுமானாலும் எதில் வேண்டுமானாலும் ஏமாற்றலாம்.ஆனால் வாழ்வின் முதல் படியினையே "ஏமாற்றும் படியாக" எப்படி இவர்களால் ஆரம்பிக்க முடிகிற...

எப்போதும் சந்தோசமாக இருக்க எளிமையான ஏழு வழிகள்!

எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டுமா? இதோ பிடியுங்கள் ஏழு டிப்சுகளை! 1. யாரையும் வெறுக்காதீர்கள். 2. எதற்கும் கவலைப் படாதீர்கள்! 3. எளிமையாக இருங்கள்! 4. குறைவாக எதிர்பாருங்கள்! 5. நிறைவாக கொடுங்கள்! 6. நிறைய புன்னகையுங்கள்! 7. அப்புறம், அடிக்கடி இந்த பதிவு வலை பக்கம் வாருங்கள்! நன்றி!

வேலை தேடி வந்த ஒபாமா!

பொதுவாக, வேலை தேடி அமெரிக்காவிற்கு செல்வது இந்தியர்களின் வாடிக்கை. அதுவும் அமெரிக்க தூதகரங்களின் வாசலில் விசா வேண்டி தவமிருப்பவர்கள் இந்தியாவில் ஏராளம். ஆனால் ஒரு மாறுதலுக்காக இப்போது ஒபாமா வேலை தேடி இந்தியாவிற்கு வந்துள்ளார். எப்போதுமே அமெரிக்க அதிபர்களின் வருகைகள் தில்லியை குறிவைத்தே அமைவதுண்டு. அவ்வப்போது அமெரிக்க சேவை தொழிலாளிகளின் தலை நகரங்களான பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் அமெரிக்க அதிபர்களின் காலடிகள் படுவதுண்டு. ஆனால் இந்த முறை டில்லிக்கு கொடுக்கப் பட்டது ஒரு நாள் மட்டுமே. பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்கள் திரும்பிக் கூட பார்க்கப் படவில்லை. முதலாளிகளின் நகரமான மும்பைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. அதுவும் இந்திய தொழில் அதிபர்களுடன் போடப் பட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கு பின்னரும், அந்த ஒப்பந்தத்தினால் எத்தனை அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் உருவாகப் போகின்றன என்று வெளிப்படையாக அறிவிக்கப் பட்டது, இந்த பயணத்தின் முக்கிய நோக்கத்தினையும், காலசக்கரத்தின் மாற்றத்தையும் பறை சாற்றியது. யாருக்குத் தெரியும்? ஒரு ஒபாமா வேலைகள் தேடி இந்தியா வருகை தந்த இந்த க...

தீப ஒளி பரவட்டும்!

நிச்சயமற்ற உலக பொருளாதார சூழல் மற்றும் லாப விற்பனை நம்மூர் சந்தையை சென்ற வாரமும் தளர்ச்சியாகவே வைத்திருந்தன. ரியாலிடி மற்றும் எரிசக்தி துறை பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. பண்டிகை கால எதிர்பார்ப்புக்கள் வாகன மற்றும் நுகர் பொருட் துறை பங்குகளை உயரச் செய்தன. அமெரிக்க அரசு மற்றும் அதன் மத்திய வங்கி எதிர்பார்த்த அளவுக்கு அமெரிக்க பொருளாதாரத்தின் மீட்சி கடந்த ஒரு வருடத்தில் சிறப்பாக இல்லாமல் போனது பொருளாதார ரீதியாக ஒரு பாதகமான அம்சமாக இருந்தாலும், அமேரிக்கா மீண்டும் ஒருமுறை பெரிய அளவில் மீட்சி திட்டங்களை அறிவிக்கலாம் என்ற புதிய எதிர்பார்ப்பு சந்தையை வார இறுதியில் சற்று நிமிர செய்துள்ளது. நாம் முன்னரே எதிர்பார்த்தது போலவே நிபிட்டி 5930 அளவில் ஒரு சிறப்பான அரணை அமைத்துக் கொண்டு வலுவாக மீண்டுள்ளது. குறுகிய கால நோக்கில், நிபிட்டி 6130 எனும் இடைக்கால தடையை உடைத்தால், தீபாவளி உற்சாகம் மற்றும் அமெரிக்க புதிய திட்ட எதிர்பார்ப்புக்கள் நிபிட்டியை 6350 வரை கொண்டு செல்ல வாய்ப்புக்கள் உள்ளன. அதே சமயம் சிறிய மற்றும் இடை நிலை பங்குகளை வாங்கும் போது கவனம் அவசியம். ஏற்கனவே சொன்னபடி வர்த்தகர்கள...

மறு மதிப்பீடு அவசியம்!

கடந்த வெள்ளிக் கிழமை அன்று, இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது நினைவிருக்கலாம். காலாண்டு முடிவுகள் சந்தை எதிர்பார்ப்பிற்கும் மேலே இருப்பதால் இன்போசிஸ் துவக்க்கத்திலேயே வெகுவாக உயரும் என்றும் இன்போசிஸ் பங்கு ஏற்றம் ஒட்டு மொத்த இந்திய சந்தையினையே மேலேடுத்துச் செல்லும் என்றும் சி என் பி சி தொலைக்காட்சியில் சந்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் பேசிக் கொண்டனர். அதிலும் ஒரு பங்குசந்தை விற்பன்னர் (?), அன்றைய தினம் உலக சந்தைகளுக்கே இந்தியா ஒரு பூஸ்ட் ஆக இருக்கும் என்று மிகவும் நம்பிக்கையாக சொன்னார். பங்கு சந்தை தொடர்புகள் குறைந்து போனதால் பங்கு சந்தையின் உடனடி ரியாக்ஷன் பற்றிய நேரடி-புரிதல் வாய்ப்புக்கள் எனக்கு குறைவாக இருந்த நிலையிலும் கூட, இவர்களின் பேச்சுக்கள் எனக்கு அபத்தமாகவே பட்டது. இன்போசிஸ் பங்கின் வருடாந்திர வருவாய் (EPS) சுமார் 110 ரூபாயாக இருக்கும் நிலையில் (அப்போதைய) பங்கின் விலை சற்று அதிகமாகவே தோன்றியது. அதிலும், இன்போசிஸ் நிறுவனத்தின் வருங்கால வளர்ச்சி விகிதத்தைப் பற்றி அதன் தலைவரே கவலை தெரிவித்த நிலையில், பங்கு சந்தை வல்லுனர்களின் (?) கணிப்புக்கள் வழக்கம்...

இது ஒரு அறுவடைக் காலம்!

பங்குசந்தையில் தீபாவளி முன்கூட்டியே ஆரம்பித்து விட்டது. அதிரடியான அந்நிய முதலீடுகளும் இந்திய பொருளாதாரத்தின் வெகு வேகமான மீட்சியும் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்களாகும். விதை முளையாகி, விருட்சமாக வளர்ந்திருப்பது சரியான சமயத்தில் விதைத்தவர்களுக்கு பெருத்த மகிழ்ச்சியைத் தரும். அதே சமயத்தில் சரியான சமயத்தில் அறுவடை செய்ய வில்லை என்றால் உழைப்பு எல்லாம் வீணாகிப் போய்விடும் அல்லவா? ஒரு முதலீடு எவ்வளவு முக்கியமோ, சரியான தருணத்தில் லாப விற்பனை செய்வதும் அவ்வளவு முக்கியமானது. எனவே நண்பர்களே, உங்களிடம் உள்ள முதலீடுகளை ஓரளவிற்கு விற்று விடுங்கள்! எந்த எந்த பங்கை எவ்வளவு விற்பனை செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம். நெல் கோதுமை போன்ற ஒரு சில ஆயுள் குறைந்த பயிர்கள் முழுமையாக அறுவடை செய்யப் படுகின்றன. காய்கறி, காப்பி போன்ற செடிகளின் உற்பத்திப் பொருட்கள் மாத்திரம் அறுவடை செய்யப் படுகின்றன. அதே சமயம் தென்னை, மாங்கனி போன்றவை விருட்சமாக வளரும் வரை பொறுத்திருக்கிறோம். இந்த பதிவு வலையிலேயே பரிந்துரைக்கப் பட்ட மைத்தாஸ் போன்ற பங்குகள் முதல் வகையை சேர்ந்தவை. முழுமையாக விற்று லாபம் பார்க்கலாம்....

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்!

என்னைப் போன்ற அனைத்திந்திய பணியில் உள்ள வங்கி அதிகாரிகளின் வாழ்க்கை முறை ஒரு பணி மாறுதல் உத்தரவில் தலைகீழாக மாறிப் போய் விடுகிறது. அதுவும் பணி உயர்வுடன் கூடிய பணி மாறுதல் என்றால் கேட்கவே வேண்டாம். கிராமப் புற/ சிறு நகர சேவைகள் கட்டாயமாக்கப் பட வேண்டும் என்ற அரசின் கொள்கையின் படி, கர்நாடக மாநிலத்தின் வட பகுதியில் உள்ள ஒரு சிறு நகரத்திற்கு நான் இப்போது மாறுதலாகி உள்ளேன். இதுவரை பெரிய நகரங்களில் மட்டுமே வாழ்ந்து வந்த நான், அதுவும் பெங்களூர், மும்பை போன்ற நகரங்களில் பல வருடங்கள் வாழ்ந்து வந்த எனக்கு இங்கே முற்றிலும் புதிய அனுபவங்கள். குடி நீர், சாலை வசதி, மின்சாரம், தொலைத்தொடர்பு, போக்குவரத்து போன்ற வாழ்வியல் ஆதார வசதிகள் மிகவும் குறைந்த இது போன்ற பகுதிகள் இந்தியாவின் மறுபக்கமா அல்லது இதுதான் இந்தியாவின் உண்மையான பக்கமா என்ற கேள்வி என்னுள்ளே இப்போது எழுகின்றது. அதே சமயம் இந்தியாவின் இந்த பக்கத்தை (அல்லது உண்மையான பக்கத்தை) அறிந்து கொள்ள /புரிந்து கொள்ள கிடைத்த ஒரு அற்புதமான வாய்ப்பாக இந்த பணிக்காலத்தைக் கருதுகின்றேன். எனக்கு இங்கே கிடைக்கும் முற்றிலும் புதிய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து...

பணவீக்கம் எனும் சுனாமி!

சமீபத்தில் ஒரு மூத்த முதலீட்டளார் ஒருவருடன் சந்தை நிலவரம் குறித்து விவாதித்து கொண்டிருந்தேன். அந்த நண்பர் முப்பது ஆண்டுகளாக பங்கு சந்தையில் முதலீடு செய்து வருபவர். ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளை பத்து ரூபாயில் வாங்கியவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பொருளாதார அனுபவம் மிகுந்த அவர் கூறிய சில அறிவுரைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த சில வருடங்களாக இந்திய பொருளாதாரம் வியப்பூட்டும் அளவில் வேகமாக வளர்ந்திருப்பது அனைவரும் அறிந்ததுதான். தனிப்பட்ட அளவிலும் பலருடைய வருமான அளவுகள் உயர்ந்து வந்திருக்கிறது. இது ஒரு மகிழ்ச்சியான விஷயம்தான். அதே சமயத்தில் பொருளாதார வளர்ச்சியின் வேகத்திற்கு குறைவாக ஒருவரது தனிப்பட்ட வருமானம் உயரும் பட்சத்தில் அவரது பாடு திண்டாட்டமாகி விடும். குறிப்பாக ஓய்வூதியம் பெறுபவர்கள், வங்கி வைப்புத் தொகை வட்டியில் வாழ்பவர்கள் மேலும் பொருளாதார வேகத்திற்கு ஏற்றபடி தம்முடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியாதவர்களின் வாழ்க்கைப் பயணம் (ஒப்பீட்டு முறையில் பார்க்கும் போது) தடுமாறுவதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்த பாடம் இன்னும் இருபது முப்...

பொறுமையின் எல்லை எதுவரை?

ஒரு பந்த் வெற்றி பெற வேண்டுமானால் மக்களின் ஆதரவு கட்டாயம் தேவைப் படும். கடந்த பல வருடங்களாக இந்தியாவில் நடைபெற்ற பல முழு அடைப்பு போராட்டங்கள் (மேற்கு வங்கம் மற்றும் கேரளா நீங்கலாக) தோல்வி பெற்றதற்கு மக்களின் ஆதரவு இல்லாமல் போனது ஒரு முக்கிய காரணமாகும். மேலும், அரசியல் கட்சி இரட்டை நிலைப்பாடும், நீதி மன்றங்களின் தலையீடும் இந்த போராட்டங்கள் நீர்த்துப் போகச் செய்த இதர காரணங்களாக அமைந்தன. நான் மும்பையில் வசிக்கும் ஐந்து வருடங்களில் (எதிர்கட்சிகள் சார்பில்) முழுமையான பந்த் போராட்டத்தை ஒரு தடவை கூட சந்தித்தது இல்லை. ஆனால், முழு அடைப்பு போராட்டத்தை தோற்கடிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசாங்கம் செய்த பல முயற்சிகளையும் மீறி இன்றைய போராட்டம் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றி பெற்றதற்கு காரணம் என்ன என்று சற்று யோசித்தேன். எதிர்கட்சிகளின் செல்வாக்கு, கலவரம் குறித்த மக்களின் அச்சம் ஆகியவற்றையும் மீறி, மத்திய அரசின் மீது பொதுமக்களுக்கு குறிப்பாக தொழிலாளர் சமூகத்திற்கு இருக்கும் அதிருப்தியே இதற்கு முக்கிய காரணமாக தோன்றுகிறது. நிர்பந்தங்கள் இல்லாமலேயே பல தொழிலாளர் மற்றும் சிறு வணிகர் அமைப்புக்கள் இந...

சீன (யுவான்) நாணயத்தின் சீரமைப்பு - ஒரு இந்திய பார்வை!

உலக பொருளாதார சிக்கலை உருவாக்கியதில் சீனாவுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. கடன் வாங்கி செலவழித்த மேற்கத்திய நாடுகள் ஒரு பக்கம் என்றால், உற்பத்தி பொருட்களின் விலையை செயற்கையாக குறைவாக வைத்திருந்த சீனா மறு பக்கம், உலக வணிக அசமனிலை ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது. தனது ஏற்றுமதி பொருட்களின் விலையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க சீனா கையாண்ட பல்வேறு வழிமுறைகளில் முக்கியமானது, தனது தேசிய நாணயத்தின் மதிப்பை (செயற்கையாக) மாற்றாமல் வைத்திருந்தது ஆகும். சீனாவின் இந்த தவறான போக்கினால், மற்ற ஏற்றுமதி நாடுகளின் (கிழக்காசியா மற்றும் இந்தியா) "போட்டியிடும் வலு" வெகுவாக பாதிக்கப் பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், நெசவு தொழில் மற்றும் இதர சிறு ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். உலக அரங்கில் சீனாவிற்கு இருந்த செல்வாக்கும், மேற்கத்திய நாடுகள் குறைந்த விலையில் மற்றவர்களின் சேவைகளை அனுபவித்து வந்த சௌகரியத்தை இழக்க விரும்பாததும், மற்ற ஏற்றுமதி நாடுகளின் குரல் எடுபடாமல் செய்தன. இப்போது நாணயத்தின் மீதான தனது கட்டுப்பாட்டினை குறைத்துக் கொள்வதாக சீனா அறிவித்திருப்பது, மற்ற நாடுகளின் ஏ...

பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது எப்படி?

பொதுவாக பங்குகளில் நேரடி முதலீடு செய்வது என்பது சற்று நேரம் பிடிக்கும் வேலை. மேலும் நிறுவனங்களை பற்றிய, பங்குகளைப் பற்றிய சில தொழிற்நுட்ப தகவல்களையும் அறிந்திருக்க வேண்டிய அவசியம் முதலீட்டாளர்களுக்கு உண்டு. நேரடியாக பங்குகளில் முதலீடு செய்ய வாய்ப்பில்லாதவர்களுக்கும், இந்திய பொருளாதார வளர்ச்சியின் பயன்களை அடைய பரஸ்பர நிதி முதலீடுகள் ஒரு நல்வாய்ப்பினை வழங்குகின்றன. அதே சமயம், பங்குகளின் எண்ணிக்கையை விட பரஸ்பர நிதி திட்டங்களின் எண்ணிக்கை அதிகமோ என்று மலைப்புற செய்யுமளவுக்கு இன்று பரஸ்பர நிதி திட்டங்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாகி விட்டன. நாளுக்கு நாள் புதிய புதிய திட்டங்களைப் பற்றிய ஏராளமான விளம்பரங்களும் வந்த வண்ணம் உள்ளன. ஒரு நல்ல பரஸ்பர நிதி திட்டத்தினை தேர்ந்தெடுக்க உதவும் சில வழிமுறைகளைப் பற்றி இங்கு பார்ப்போம். முதலில் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது. புதிய திட்டங்களில் முதலீடு செய்வதை தவிருங்கள். காரணங்கள் கீழே. 1. புதிய திட்டங்களில், விளம்பர செலவினம், தரகு போன்ற செலவின தொகைகள் அதிகமாக இருக்கும். அந்த செலவினத்தொகைகள் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்பவர்களின் மீதுதான் சுமத்தப் படும்....

பொருளாதார வளர்ச்சி Vs பணவீக்கம்

உலக பொருளாதார சிக்கலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், இந்திய பொருளாதார (GDP) வளர்ச்சி பிரமிக்க தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. சென்ற காலாண்டில் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி எட்டு சதவீதத்திற்கு மேல் இருந்திருக்கிறது. பணவீக்கமான பத்து சதவீதத்தையும் சேர்த்துக் கொண்டால், நடப்பு விலைவாசியின் படி பொருளாதார வளர்ச்சி (GDP at current Prices) பதினெட்டு சதவீதத்திற்கும் மேல். ஓரிரண்டு சதவீதத்திற்கு மேல் வளர்வதற்கே மூச்சு முட்டும் மற்ற பல நாடுகளுக்கு மத்தியில் இந்த வளர்ச்சி அசாதாரணமானதுதான். மற்ற புள்ளி விபரங்களும் இந்தியாவின் பொருளாதார மீட்சியை தெளிவாகவே பறை சாற்றுகின்றன. ஏப்ரல் மாதத்திற்கான இந்திய தொழிற் வளர்ச்சியோ (Industrial Production) பதினேழுக்கும் மேலே இருந்திருக்கிறது. தொழிற் நம்பிக்கை குறியீடு (Manufacturing Confidence) ஐம்பதுக்கும் மேல். உள்நாட்டின் கார் விற்பனை முப்பது சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. அலைவரிசை விற்பனையில் மத்திய அரசுக்கு ஒரு லட்சம் கோடிக்கும் மேல் வருவாய் கிட்டியுள்ளது. இப்படி பல பொருளாதார புள்ளி விபரங்களும் இந்தியாவின் முன்னேற்றத்தை புடம் போட்டுக் காட்டுகின்றன. அன்...

தமிழகம்! ஜாக்கிரதை!

இந்தியாவை பொறுத்த வரை பயங்கரவாதத்தினால் அதிகமாக பாதிக்கப் படாத மாநிலமாகத்தான் தமிழகம் இருந்து வந்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டுள்ளதாக இன்று வந்த செய்தி உண்மையிலேயே அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ரயில்வே துறை ஊழியர்களின் சமயோசிதமான செயல்பாடுகள்தான் மலைகோட்டை எக்ஸ்பிரஸ் சந்திக்கவிருந்த மிகப் பெரிய விபத்தினை தவிர்த்து ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரை காப்பாற்றி உள்ளது. அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டு தெரிவிக்கும் அதே நேரத்தில், தமிழகம் விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டம் இது என்பதையும் இங்கு பதிய விரும்புகிறேன். ராஜபக்சேயின் இந்திய வருகையை எதிர்த்து அச்சிடப் பட்ட நோட்டிஸ்கள் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கின்றது. இது உறுதிபடுத்த முடியாத தகவல் என்பதால் உடனடியாக யார் மீதும் குற்றம் சாட்டி விட முடியாது என்றாலும், சதி வேலையில் ஈடுபட்டவர்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அது எவ்வளவு உயர்வாக இருந்தாலும், அவர்கள் கண்டிக்கப் படவேண்டியவர்கள் மற்றும் சட்டத்தினால் தண்டிக்கப் பட வேண்டியவர்கள். வட மாநிலங்களில் வாழ்ந்தவன் என்ற முறையில் பயங்கரவாதத்தி...

மன்னிப்பு - ஒவ்வொருவரது அகராதியிலும் இருக்க வேண்டிய வார்த்தை!

சென்ற வாரம் முழுதும் தமிழ் கூறும் பதிவுலகம் பரபரப்பாக இருந்தது. பதிவுலகத்தின் வெளிவட்டத்தை மட்டுமே சார்ந்தவன் என்றாலும், "கூட்டமாக இருந்தால் எட்டிப்பார்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையும் உரிமையும் ஆகும்" என்பதால் நானும் கொஞ்சம் எட்டிப்பார்த்தேன். தீர்ப்பு அல்லது தீர்வை விடுங்கள், குறைந்த பட்ச கருத்தை சொல்லும் அளவுக்கு கூட, சம்பந்தப் பட்ட பிரச்சனையைப் பற்றிய அறிதல்களும் புரிதல்களும் எனக்கு மிகக் குறைவாக இருந்ததால், "கோட்டுக்கு அந்த பக்கமே" இருந்து விட்டேன். பெண்ணியம், ஆணாதிக்கம், பார்ப்பனியம் என புரிந்து கொள்ள சிக்கலான பல வார்த்தைகளுக்கு இடையே அடிக்கடி உச்சரிக்கப் பட்ட "மன்னிப்பு" என்ற ஒரு வார்த்தை, என்னுள் வேறு சில நினைவுகளை வரவழைத்தது. அந்த நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். டாக்டர்.வேனி டபுள்யு டயர் (Dr.Wayne W Dyer) என்ற அமெரிக்க எழுத்தாளரைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் மிக அதிகமாக விற்பனை செய்யப் பட்ட "ஆளுமை வளர்ச்சி" தொடர்பான புத்தகங்களில் குறிப்பிடத்தக்கதான "Your Erroneous Zon...

அடுத்தது ஹங்கேரி?

கிரீஸ் மற்றும் ஸ்பெயின் கடன் சிக்கல் அலை ஓய்ந்து முடிவதற்குள்ளேயே, ஹங்கேரி அலை இப்போது உலக சந்தைகளை தாக்க ஆரம்பித்துள்ளது. கிரீஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளைப் போலவே ஹங்கேரியும் கடன் சிக்கலில் தவிப்பதாக வந்த செய்திகளை அந்த நாட்டின் அரசு அதிகாரபூர்வமாக மறுத்துள்ள போதிலும், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலைமை முன்னர் எதிர்பார்த்ததை விட தற்போது மோசமாகவே உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஐரோப்பிய நாடுகளின் தவறான சமூக பொருளாதார கொள்கைகளே அவற்றின் இப்போதைய சிக்கலுக்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். சென்ற நூற்றாண்டின் மத்திய காலம் வரை உலகின் பெரும்பகுதியை காலனியாதிக்கம் செய்தவை ஐரோப்பிய நாடுகள் ஆகும். தொழிற் புரட்சி மற்றும் காலனியாதிக்கத்தின் சுரண்டல் வாயிலாக செல்வ செழிப்பு நாடுகளாக ஐரோப்பிய நாடுகள் அப்போது விளங்கி வந்தன. ஆனால் இரண்டாவது உலகப் போர் மற்றும் புதிய சுதந்திர நாடுகளின் உதயம் ஆகியவை ஐரோப்பிய நாடுகளின் அரசியல் செல்வாக்கை பெருமளவுக்கு குறைத்தன. இருந்தாலும் ஐரோப்பிய நாடுகளின் தொழிற்நுட்ப வளர்ச்சி இன்னும் கூட பலகாலம் வரை அந்த நாடுகளை செல்வந்த நாடுகளாகவே நீடிக்க உதவியது. சீனா மற்றும் க...

(பண) மழை வருமா?

ஐரோப்பிய நாடுகளைப் பற்றிய கவலைகள் சற்று குறைந்ததும் சீனா ஐரோப்பாவுக்கான தனது உதவி திட்டங்களை உறுதிப் படுத்தியதும் சென்ற வாரம் உலக சந்தைகள் ஆசுவாசப் படுத்திக் கொள்ள உதவின. உலக பொருளாதார கூட்டமைப்பு (OECD) இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றிய அளித்த பாசிட்டிவான அறிக்கை இந்திய பங்கு சந்தைக்கு கூடுதல் பலத்தை அளித்தது. மேலும் அம்பானி சகோதரர்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தமும், அந்நிய முதலீட்டாளர்களின் விற்பனை அளவு குறைந்ததும், உள்ளூர் வர்த்தகர்களின் பெருவாரியான ஆதரவும் பங்கு சந்தை சென்ற வாரத்தின் முதல் நாள் இழப்பை முழுமையாக சரிகட்டி வாராந்திர உயர்வை சந்திக்க உதவின. மேலும் எதிர்கால வர்த்தகத்தின் மாதாந்திர முடிவு (F&O monthly expiry) "விற்ற பின் வாங்குதலை (Short Covering)" அதிகப் படுத்தியது. மொத்தத்தில் தொடர் வீழ்ச்சிக்குப் பிறகு முதலீட்டாளர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்த வாரமாக சென்ற வாரம் அமைந்தது. அதே சமயத்தில், சென்ற வாரம் நமது சந்தை முடிவடைந்த பிறகு வெளிவந்த சில தகவல்கள் வரும் வாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புக்கள் உள்ளன. ஸ்பெயின் நாட்டின் ரேட்டிங் குறைப்பு ஐரோப்பிய நா...

ஆண்டி மடம் கட்டிய கதை!

அடுத்த வேளை உணவுக்கும் தூங்குவதற்கும் வசதியில்லாத சில ஆண்டிகள் ஒன்றாகக் கூடி, "தமக்காக பெரிய மடம் கட்டிக் கொள்ள வேண்டும், அங்கே இருபத்து நான்கு மணி நேரமும் உணவுக்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்" என்றெல்லாம் கதை பேசி விட்டு நிம்மதியாக குறட்டை விடுவார்கள் என்ற கதையை நாம் கேள்விப் பட்டிருப்போம். சென்ற வாரத்தில் கிரீசுக்கு உதவி செய்ய ஐரோப்பிய யூனியன் முன்வந்த போது எனக்கு இந்த கதைதான் ஞாபகம் வந்தது. குறிப்பாக ஸ்பெயின் போன்ற நாடுகள், தாமே கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கின்ற நிலையில் கிரீசுக்கு குறைந்த வட்டியில் கடன் தருவதாக உறுதி அளித்தது வேடிக்கையாகவே இருந்தது. அதுவும் ஆசிய சந்தைகள் துவங்குவதற்கு முன்னரே உதவித்தொகையை அறிவிக்க வேண்டும் என்று முனைந்தது சந்தைகளில் Shorting செய்பவரை (குறிப்பாக யூரோ நாணய சந்தையில்) தண்டிக்க வேண்டும் என்ற நோக்கமே பிரதானமாக இருந்ததை வெளிக்காட்டியது. நீண்ட கால திட்டங்கள் எதுவும் இருப்பதாக தெரிய வில்லை. இந்த கெட்டிக்காரர்களின் வேடம் மிகக் குறைந்த காலமே நீடித்துள்ளது. கிரீஸ் மற்றும் வேறு சில நாடுகளின் கடன் சிக்கல் தொடரும் பட்சத்தில், வருங்காலத்தில் ஐரோப...

கடித்த படி சாரி, படித்த கடி!

ரீசன்ட்டா படித்து ரசித்தது... ஒரு ஆள் பாக்கெட்ல மொத்தமா Rs.200 இருக்கு... அப்போ 4 ஏழைகள் அவன் கிட்டே வந்து பணம் கேட்கிறார்கள்.... அவன் உடனே ஆளுக்கு 100 ருபாய் கொடுக்கறான்.. எப்படி?? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? என்ன, மொத்த பணம் 200 ல நாலு பேருக்கு 100 ருபாய் எப்படி கொடுக்க முடியும், தப்பா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? "நாலு பேருக்கு நல்லது பண்ணனும்னா எதுவுமே தப்பில்லே" !! டிஸ்கி: படித்ததுமே கொஞ்சம் தலை சுற்றியது. அதனால்தான் தலைப்பில் கொஞ்சம் குழப்பம். உங்களுக்கு எப்படி? நன்றி!

ஐபிஎல்'லும் ஆஸ்கார் விருதும்!

நமது கிரிக்கெட் வீரர்கள் உலக கோப்பை போட்டிகளில் சொதப்பி விட்டதற்கு அளவுக்கதிமான ஐபிஎல் கொண்டாட்டங்கள்தான் காரணம் என்றும் (எனவே) ஐபிஎல் போட்டிகளை குறைக்க வேண்டும் என்றும் ஏராளமான கண்டனக்குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த கண்டனக் குரல்களை எழுப்புபவர்கள் பெரும்பாலும் முந்தைய உலகக் கோப்பை போட்டிகளில் சொதப்பிய முன்னாள் வீரர்கள் மற்றும் தமது டிஆர்பி ரேட்டிங்குகளை அதிகரிக்க வேண்டி நேற்று வரை ஐபிஎல் துதி பாடிய தொலைக்காட்சிகளும்தான் என்பது குறிப்பிட தக்கது. சராசரி கிரிக்கெட் ரசிகர்களின் சார்பாக நான் இவர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி இங்கே. நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளைய தளபதி விஜய், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் போன்றவர்கள் நடித்த படங்களில் பல இங்கே சக்கைப் போடு போட்டிருக்கின்றன. ஆனால் இவர்கள் இதுவரை ஆஸ்கார் விருது ஏன் வாங்க வில்லை என்று யாராவது கேள்வி கேட்கின்றனரா? யாரும் கேட்க மாட்டார்கள். ஏனென்றால் அனைவருக்கும் தெரியும். "அதுவேறு, இது வேறு" என்று. அதே போலத்தான், ஐபிஎல்'லும் ஐசிசி கிரிக்கெட்டும். உள்ளூரில் விலை போகும் சரக்குகள் வெளியூரிலும் விலை போகத்தான் வேண்டும் எ...

சாதனையும் வேதனையும் !

முதலில் சாதனைக்கு பாராட்டு! சதுரங்க விளையாட்டின் முப்பரிமாணங்களிலும் (League, Knock Out and Match) உலக சாம்பியன் பட்டம் வென்று, அவரை உலக சாம்பியன் என்று அங்கீகரிக்க மறுத்து வந்த ஒரு பிரிவினரை வாயடைக்கச் செய்த, நமது சதுரங்க சக்கரவர்த்தி விஸ்வநாதன் ஆனந்த இப்போது "மிகக் கடுமையான போட்டியாளராக" கருதப் படும் டோபலோவ்'வை வீழ்த்தி, தனது உலக சாம்பியன் பட்டத்தை வெற்றிகரமாக தக்க வைத்துக் கொண்டுள்ளார். போட்டி ஆரம்பிப்பதற்கு சற்று முன்னே எரிமலை குழம்பின் காரணமாக ஐரோப்பியாவில் விமான போக்குவரத்து தடைபட்டது விஸ்வநாதன் ஆனந்தின் தயார் நிலையை வெகுவாக பாதித்தது. இந்த போட்டியின் முதலாவது ஆட்டத்திலேயே ஆனந்த் தோல்வி அடைந்தது அவரது தயாரின்மையை வெகுவாக வெளிப்படுத்தியது. இருந்தாலும் சாம்பியன்கள் எளிதில் வீழ்வதில்லை என்பதற்கு உதாரணமாக சிறப்பாக மீண்டு வந்த அவர் போட்டியின் எட்டாவது ஆட்டம் வரை முன்னிலையே வகித்து வந்தார். டோபலோவ் இறுதி கட்டத்தில் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்றும் ஆனந்தின் வயது மற்றும் உடல் வலு-குறைவு ஆகியவை கடைசி கட்டத்தில் அவருக்கு எதிராக அமையும் என்று சில சதுரங்க முன்னாள் வீரர்கள் ...

மொபைலில் மொபைல் பேச்சு வேண்டாமே!

பொருள் பொதிந்த புகைப்படம்! நன்றி!

உலக பொருளாதார சிக்கல் - பகுதி - II ?

நெருப்பை நெருப்பால் அணைக்க முடியுமா? கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத பொருளாதார சிக்கலை இன்னொரு கடனால் தீர்க்க முடியுமா? இந்த கேள்விகளுக்கு விடை "இல்லை" என்பது உண்மையானால் உலகம் இரண்டு வருடங்களுக்குள்ளாகவே மீண்டுமொரு பெரிய பொருளாதார சிக்கலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதும் உண்மையாகும். சற்று விளக்கமாக இங்கே பார்ப்போம். கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கு முன்னர் வாடிக்கையாளர்களின் "கடன் வாங்கி செலவு செய்யும் போக்கு" வரைமுறைகளை மீறியதால் அவர்கள் கையை விரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு கடன் கொடுத்த வங்கிகள் காலாவதியாகும் நிலையும் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர், ஏன் ஒரு வங்கியை கூட இன்னொரு வங்கி நம்பாத சூழ்நிலை உருவாகியது. உலக பொருளாதாரம் சில மாதங்கள் வரை ஸ்தம்பித்து காணப் பட்டது. பங்கு சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு நிதி சந்தைகளும் சரிவை சந்தித்தன. அப்போது, பொருளாதார சிக்கலை தீர்க்க வேண்டி, உலக நாடுகளின் அரசாங்கங்கள் அதிகப் படியான கடனை வாங்கி அந்த கடனின் உதவியால் சரிந்து கொண்டிருந்த பொருளாதாரத்தை நிமிர்த்தின. அதே போல காலாவதியான வங்கிகளுக்கு (கடன் மூலமாக) அதிக மூலத...

நீதிக்கு தலை வணங்குவோம்!

இந்த வாரம் மிகவும் எதிர்பார்க்கப் பட்ட இரண்டு முக்கிய தீர்ப்புக்கள் வழங்கப் பட்டிருக்கின்றன. முதலாவது, மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பாக் தீவிரவாதி கசாப்புக்கு கொடுக்கப் பட்ட மரண தண்டனை. பல அப்பாவிகளை ஈவிரக்கமில்லாமல் கொடூரமாக கொலை செய்த அவனை நடுசந்தியில் இட்டு பழி தீர்க்க வேண்டும் என்ற வலுவான மக்கள் உணர்வுகளுக்கு மத்தியிலும் சட்டத்தின் ஆட்சியினை நிலை நிறுத்திய இந்திய அரசாங்கம் மற்றும் மிகவும் சிக்கலான ஒரு வழக்கினை சரித்திரத்தில் இதுவரை இல்லாத படி விரைவாக விசாரித்து உறுதியான தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஆகியோருக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம். இந்திய அரசாங்கத்தின் கடமை இத்துடன் நிறைவு பெற்று விட வில்லை. கசாபின் மரண தண்டனையை விரைவாக நிறைவேற்ற வேண்டிய மற்றுமொரு பெரிய பொறுப்பும் அரசாங்கத்திற்கு உள்ளது. மற்றொரு தீர்ப்பு! இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட பாகப் பிரிவினை போராட்ட வழக்கின் தீர்ப்பு. "கிருஷ்ணா-கோதாவரி படுகையிலிருந்து வெளிவரும் எரிவாயு மத்திய அரசுக்குத்தான் சொந்தம். ரிலையன்ஸ் ஒப்பந்ததாரர் மட்டுமே". ஒரு குடும்ப ஒப்பந்தம் நாட்டின...

பிரச்சினைகளை எதிர்கொள்வது எப்படி?

அன்றாட வாழ்வில் மனிதர்களுக்கு பல விதமான பிரச்சினைகள் வருவதுண்டு. அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு ஒரே மாதிரியாக அமைந்து விட முடியாது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அதே சமயத்தில், பிரச்சினைகளை எதிர் கொள்வதற்கான வழி எளிதான ஒன்றுதான் என்று நம்புகிறேன். அந்த வழி என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய எனது கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலில் பிரச்சினை நிகழும் காலகட்டத்தில் நாம் எப்படியெல்லாம் நடந்து கொள்கின்றோம் என்று பார்ப்போம். சில உதாரணங்கள் கீழே. கஷ்டத்தில் (அல்லது டென்ஷன் ஆக) இருக்கும் போது உணவின் மீது கவனம் குறைந்து விடுகின்றது. ஒன்று சாப்பாட்டின் அளவு குறைந்து போகின்றது. அல்லது கண்டமேனிக்கு (ஆரோக்கியமில்லாத) ஆகாரங்கள் உள்ளே போகின்றன. தூக்க நேரங்கள் மாறிப்போய் விடுகின்றன. நிறைய டிவி அல்லது சினிமா பார்க்கின்றோம். லேட்டாக படுக்கைக்கு செல்கிறோம். விடிந்த பிறகும் தூக்கம் களைந்த பின்னரும் கூட படுக்கையில் புரண்டு கொண்டே இருக்கின்றோம். உடற்பயிற்சி செய்வது நின்று போகின்றது. லேட்டாக அலுவலகத்திற்கு கிளம்புகின்றோம். அல்லது கட் அடிக்கிறோம். எல...

நாம் மறந்த இந்தியர் : பழங்குடியினர்:

வணிகமயமாகி விட்ட இன்றைய சமூக பொருளாதார சூழலில் நாம் மதிக்க தவறிய, மறந்து போனவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பழங்குடி மக்கள். மேலும் பல விஷயங்களைப் போலவே ஊடக மயக்கம் இங்கும் உண்டு. பழங்குடி மக்கள் என்றாலே நாகரிகமற்றவர்கள் (சில சமயங்களில் நரமாமிசம் சாப்பிடுபவர்கள்) காட்டு மிராண்டிகள், மூட நம்பிக்கையில் முழுகிப் போனவர்கள் என்ற ஒருவித மூட நம்பிக்கையை நம் மீது திணித்திருப்பது சினிமா உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள். உண்மையில் அவர்கள் உலக சமநிலைக்கு அவசியமானவர்கள், இயற்கையை அழிக்காமல் அதனுடன் இயைந்து வாழ்பவர்கள் என்பதெல்லாம் மறக்கடிப்பட்டு, அவர்களை அவர்களது சொந்த பூமியில் இருந்து வணிக நோக்கங்களுக்காக வெளியேற்றும் முயற்சி தீவிரமாக இப்போது நடைப் பெற்று வருகின்றது. இதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் அனைவரும் பலவகையில் உடந்தையாக உள்ளனர். இவர்களைப் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அலட்சியம் செய்யும் நாமும் கூட ஒருவகையில் இவர்கள் படும் இன்னல்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறோம். மரியாதைக்குரிய நண்பர் திரு.நெற்குப்பை தும்பி அவர்களின் பதிவின் பிரதி இங்கே. நாம் மறந்த இந்தியர் : ...

அடங்காத காளையும் விடாத கரடியும்!

கோல்ட்மென் சாக்ஸ் மோசடி விவகாரம் இந்திய பங்கு சந்தையில் இன்னொரு பெரிய சரிவை துவக்கி வைக்கும் என்று கரடிகள் ஆவலுடன் காத்திருக்கையில், மத்திய வங்கியின் வருடாந்திர நிதி அறிக்கை காளைகளுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்தது. விண்ணை முட்டும் விலைவாசிகளை கட்டுப்படுத்த மத்திய வங்கி கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கையில், கடனாளிகளுக்கு (குறிப்பாக மத்திய அரசாங்கம்) கடன் தங்கு தடையில்லாமல் கிடைக்கப் வழி வகுப்பதுவும் மத்திய வங்கியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என வெளிப்படையாகவே அறிவிக்கப் பட்டு விட, கடன்களுக்கு வட்டி வீதம் இப்போதைக்கு (பெருமளவுக்கு) உயராது என்ற நம்பிக்கை சந்தையில் உருவாகியுள்ளது. மேலும் வங்கிகள் வாராக் கடன்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியதற்கான காலக் கெடுவை நீட்டிக்கப் போவதாக மத்திய வங்கி அறிவிக்க காளைகளின் கை மேலும் ஓங்கியது. வாராக்கடன்களுக்கான நிதி ஒதுக்கீடு இதுவரை குறைவாக செய்துள்ள பல வங்கிகளின் பங்குகள் சென்ற வாரம் வெகுவாக உயர்ந்தன. நலிவடைந்துள்ள சில பொதுத்துறை வங்கிகளின் பங்குகளில் மத்திய அரசு முதலீடு செய்வதாக அறிவித்ததும் வங்கித்துறை பங்குகள் உ...

மீண்டும் ஒரு யேன்-பண-மாற்றும் (Yen Carry Trade) சுனாமி?

தொடர்ந்து எட்டாவது வாரமாக நமது பங்கு சந்தை வெற்றியுடன் முடிவடைந்திருக்கிறது. பெரிய நிறுவனங்களின் பங்குகளில் அவ்வளவு முன்னேற்றம் இல்லாத போதும் சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் ஏராளமாக முன்னேறியுள்ளன. தொடர்ந்த அந்நிய பணவரவு, இந்திய பொருளாதார முன்னேற்றத்தின் மீதான புதிய நம்பிக்கைகள், உலக சந்தைகளின் சாதகமான சூழ்நிலை ஆகியவையே இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்கள் என்றாலும், சமீபத்தில் ஜப்பானிய யேன் நாணயத்தில் நிலவி வரும் மாறுதல்கள் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. குறைந்த வட்டியில் கிடைக்கும் ஜப்பானிய நாணயத்தை மற்ற சந்தைகளில் முதலீடு செய்யும் போக்கு, 2006 -07 ஆம் ஆண்டிற்கு மீண்டும் துவங்கியுள்ளதாக பங்குசந்தை நிபுணர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். இத்தகைய குறைந்த வட்டி பண வரவு துவக்கத்தில் பங்குசந்தைகள் வேகமாக முன்னேற உதவினாலும், இறுதி நேர திடீர் பண-திருப்புதல்கள் பங்குசந்தையின் மோசமாக பாதித்து விட வாய்ப்புள்ளது. இந்திய பெரிய பங்குகளின் குறியீடான நிபிட்டி தனது முக்கிய எதிர்ப்பு நிலையான 5300 க்கு மிக அருகிலேயே முடிவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் வேலை இழப்புகள் குறைந்து வருவதாக கடந்த வ...

நீங்கள் ரொம்ப புத்திசாலியா?

நாளை முட்டாள்கள் தினம். ஆனால் உங்களை யாரும் ஏமாற்ற முடியாது, நீங்கள் ரொம்ப புத்திசாலி என்று நம்புகிறீர்களா? ஆமாம் என்று சொல்பவர்கள் தயவு செய்து உங்கள் கீ போர்டில் உள்ள "F13 கீ "யை ஒரு தடவை அமுக்குங்கள். அமுக்கிட்டீங்களா? அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்! நாளை ரொம்ப தூரம். இன்னைக்கே ஆரம்பிப்போம். "முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்!" நன்றி!

டெக்னிகல் அனாலிசிஸ் - ஒரு அறிமுகம்!

ஏற்கனவே நமது பதிவுகளில் விவாதித்தபடி ஒரு பங்கின் ஏற்றத்தாழ்வுகள் பொதுவாக இருவகையாக ஆராயப் படுகின்றன. ஒரு நிறுவனத்தின் அடிப்படை நிதி நிலைமைகளை வைத்து பங்கின் விலையை கணிக்க முயல்வது அடிப்படை ஆராய்ச்சி அல்லது Fundamental Analysis. இன்னொரு வகையான ஆராய்ச்சின் பங்கின் விலைகளின் போக்கினை (Trends) அடிப்படையாக வைத்துக் கொண்டே அந்த பங்கின் வருங்கால போக்கினை அறிய உதவும் தொழிற்நுட்ப வரைபட ஆராய்ச்சி அல்லது Technical Analysis. சென்ற பதிவில் நண்பர்கள் பார்வைக்காக ஒரு வரைபடம் வழங்கப் பட்டிருந்தது. அந்த வரைபடத்தை பற்றிய விரிவான குறிப்புக்கள் ஏதும் வழங்கப் படவில்லை என்று திரு.நெற்குப்பை தும்பி ஐயா குறிப்பிட்டிருந்தார். எனவே அந்த பங்கினை பற்றி விவரிக்கும் போதே டெக்னிகல் அனலிசிஸ் பற்றிய சில விளக்கங்களை இந்த பதிவில் அளிக்கலாம் என்று நினைக்கிறேன். ஏற்கனவே சொன்னபடி ஒரு பங்கின் விலையின் போக்கை வைத்துக் கொண்டே, அந்த நிறுவனத்தில் நிகழும் சில முக்கிய மாற்றங்களை புரிந்து கொள்ள முடியும் என்பதுதான் டெக்னிகல் அனாலிசிசின் அடிப்படை. உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் நிகழும் முக்கிய மாற்றங்கள் வெளியுலகத்திற்கு அறியவருவதற்கு ...

இது விபத்து பகுதி! கவனம் தேவை!

தொடர்ந்து ஏழாவது வாரமாக நமது பங்கு சந்தை வெற்றிக் கொடியை நாட்டி வந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அதிவேகமான மீட்சி, உலக சந்தைகளின் சாதகமான நிலை மற்றும் மிக முக்கியமாக ஏராளமான அந்நிய முதலீட்டாளர்களின் வரவு ஆகியவை இந்த அதிரடி முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்கள். அதே சமயத்தில் தற்போது நம்முடைய பங்குசந்தை 2010 ஆம் ஆண்டின் அதிக பட்ச நிலைக்கு மிக அருகிலே வர்த்தகமாகி வருகின்றது என்பதும் தினந்தோறும் பல சிறிய/இடைநிலை பங்குகள் அதிவேகமான வளர்ச்சியை பெற்று வருகின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப் பட வேண்டியவை. எதிர்கால வர்த்தகநிலையின் (F&O Open Position) அளவு தொடர்ந்து ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேலேயே காணப் படுவது, நமது பங்குசந்தையில் ஏராளமான வர்த்தக நிலை (Trading Position) எடுக்கப் பட்டதையே வெளிக்காட்டுகின்றது. இந்தியா போன்ற ஒரு வளரும் பொருளாதாரத்தின் பங்கு மதிப்பீடுகள் (Valuation Ratios) அளவுக்கு சற்று அதிகமாகவே காணப் படும் என்றாலும் 2008 இல் நிகழ்ந்தவற்றையும் நாம் மறந்து விட முடியாது. எனவே புதிய வர்த்தக நிலை எடுப்பவர்கள் சற்று அதிகப் படியான எச்சரிக்கையுடன் சந்தையை அணுகவும். நீண்ட கால முதலீட்ட...

தாடிக்காரன் தப்பு செஞ்சான்! மீசைக்காரன் மாட்டிக்கிட்டான!

மும்பை தாக்குதலில் கைதாகி விசாரனைக்குள்ளாகி வரும் கசாபின் வழக்கறிஞர் கூறிய மராட்டிய கவிதை இது. கசாப் ஏதோ சினிமா ஆசையில் இந்தியாவிற்கு வந்து ஜுஹு கடற்கரையோரம் சுற்றிக் கொண்டிருந்ததாகவும், அவனை அங்கிருந்து போலீசார் பிடித்து வந்து மும்பை தாக்குதல் வழக்கில் சிக்க வைத்து விட்டதாகவும், மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது போல உலகிற்கு காட்டவே போலீசார் அவனுக்கு எதிராக பொய் சாட்சியங்களை உருவாக்கியிருப்பதாகவும் திறம்பட வாதிட்ட அந்த வழக்கறிஞர் தன துணைக்கு மேற்சொன்ன மராட்டிய கவிதையும் சேர்த்துக் கொண்டார். சிங்க மராட்டியர்தம் கவிதைக்கு கேரளத்து தந்தங்கள் பரிசளிப்போம் என்று பாரதியே சொல்லியிருந்தாலும், தீவிரவாதத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப் பட்ட இந்திய மக்களில் எவரேனும் இந்த மராட்டிய கவிதைக்கு வாய் வழி பாராட்டேனும் அளிப்பாரா என்பது சந்தேகமே . சொல்லப் போனால் கசாப்புக்கு கூட இது கொஞ்சம் ஓவர் எனவே தோன்றியிருக்கும். அனைத்து வீடியோ மற்றும் இதர நேரடி ஆதாரங்களுமே சித்தரிக்கப் பட்டவை என்று ஆவேசமாக வழக்கறிஞர் வாதிட்டாலும் அந்த நேரம் கசாப் தலையை நிமிர்த்தக் கூட இல்லை என்று பத்திரிக்...

இந்த பதிவிற்கு ஒரு முப்பது வினாடி ஒதுக்குங்கள்!

வாழ்க்கையைப் பற்றி கோகா கோலா தலைவர் (திரு.பிரையன் டைசன்) நிகழ்த்திய முப்பது வினாடி உரை இங்கே. வாழ்க்கையை ஐந்து பந்துகளுடன் விளையாடும் ஒரு விளையாட்டாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த பந்துகளாவன: வேலை (தொழில்) , குடும்பம், உடல்நலம், நண்பர்கள் மற்றும் ஆன்மிகம் (அல்லது சுய தேடல்). அனைத்தையும் மாற்றி மாற்றி காற்றில் சுழல வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். வேலை என்பது ரப்பர் பந்து போல. அது தவற விடப் பட்டாலும் துளியும் சேதமடையாமல் திரும்பக் கைக்கு வந்து சேர்ந்து விடும். ஆனால் மற்ற பந்துகள் அப்படியல்ல. குடும்பம், நட்பு, உடல் நலம் மற்றும் ஆன்மிகம் ஆகியவை கண்ணாடி பந்துகள் போன்றவை. ஒரு முறை தவற விட்டாலும், அவற்றை பழைய நிலையில் திரும்பப் பார்க்க முடியாது. சொல்லப் போனால் சமயத்தில் சிதறி சின்னாபின்னமாக ஆகியும் விடலாம். எனவே நண்பர்களே! வேலை நேரத்தில் சுறுசுறுப்பாக வேலையை கவனியுங்கள். வேலை நேரம் முடிந்தவுடன் வீட்டுக்கு கிளம்புங்கள். தேவையான நேரத்தை உங்கள் குடும்பம், நட்பு ஆகியவற்றுக்கு வழங்குங்கள். உடலுக்கு தேவையான ஓய்வை அளியுங்கள்! டிஸ்கி: என்ன! முப்பது வினாடி நேரம் ஆகவில்லையே? நன்றி!

பணவீக்கம் - ஆதாயம் யாருக்கு?

இன்றைய மொத்த விலை பணவீக்கம் (Wholesale Price Index Inflation) பத்து சதவீதத்திற்கு அருகாமையிலும் நுகர்வோர் பணவீக்கம் (Consumer Price Index Inflation) பதினாறு சதவீதத்திற்கு மேலேயும் உள்ளன. இவை அரசின் கணிப்புக்கள் மட்டுமே. உண்மையான பணவீக்கம் இருபது சதவீதத்திற்கும் மேல் இருக்கும் என்பது பர்ஸ் எவ்வளவு வேகமாக காலியாகிறது என்று அனுபவப் பட்டவர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் பணவீக்கத்தை கட்டுபடுத்துவதில் அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்க வில்லை. எடுக்கப் பட்ட சிற்சில நடவடிக்கைகள் கூட மிகுந்த கால தாமதத்துடனேயே எடுக்கப் பட்டிருக்கின்றன. உண்மையில் பணவீக்கத்தினால் ஆதாயங்கள் உள்ளனவா அப்படியென்றால் யாருக்கு ஆதாயம் என்பதை இங்கே பார்ப்போம். பொதுவாகவே பொருளாதாரத்தில் அளவான பணவீக்கம் என்பது வரவேற்கப் படும் ஒன்று. பணவீக்கம் இருந்தால்தான் தொழில் மற்றும் வணிகத்தில் முதலீடு செய்ய பலரும் முன்வருவார்கள். அவ்வாறு முதலீடு செய்கையில் வேலைவாய்ப்புக்கள் பெருகும். சமூகத்தில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். வளர்ந்த நாடுகள் பணவீக்கத்தை பொருளாதார வளர்ச்சியின் ஆரம்ப அறிகுறியாக கரு...