Friday, October 31, 2008

சிறந்த பின்னூட்டம் இடுவது எப்படி?


சிறந்த பின்னூட்டங்கள் பதிவினை மேலும் அழகுப்படுத்தும் அணிகலன்கள். அவை புதிய சிந்தனைகளை உருவாகவும் சில சமயங்களில் பதிவருக்கே சில சந்தேகங்களை தீர்க்கவும் உதவி செய்யும்.

எனது குறுகிய கால பதிவு உலக அனுபவத்தில், சிறந்த பின்னூட்டம் இடுவது எப்படி என்பது பற்றிய எனது சில சிந்தனைகளை தங்கள் முன் வைக்கிறேன். சிறந்த பின்னூட்டம் இடுவதற்கான அடிப்படை விஷயங்கள் கீழே.

முதலில் பதிவின் நோக்கத்தினை முழுமையாக புரிந்து கொள்வது.

அதன் மீது தனது உண்மையான உணர்வுகளை தெரிவிப்பது. எதிர் கருத்துகள் எதிரியின் கருத்துகள் அல்ல. சிறந்த நண்பர்களால், ஒத்துப் போகாமல் இருக்க ஒத்துப் போக முடியும். (Agree to Disagree)

புரியாதவற்றை பற்றி தயங்காமல் சந்தேகங்கள் கேட்பது (பின்னூட்டம் இடுவது). ஏற்கனவே மற்றவர்கள் கேட்ட கேள்விகளைத் தவிர்ப்பது. புதிய சிந்தனைகளை பதிவுக்கு துணை சேர்ப்பது.

நாகரிகமான நகைச்சுவை நல்லது.

தனி மனித தாக்குதல்களை அல்லது புகழ்ச்சிகளை தவிர்ப்பது.

மேலோட்டமான கருத்துகளை தவிர்ப்பது. (To the Point).

பின்னூட்டங்கள் பதிவரின் மேல் உள்ள அக்கறையின் பேரிலேயே என்பதை தெளிவு படுத்துங்கள்.

இந்த பதிவின் மீது கூட சிறந்த பின்னூட்டங்கள் (மேலும் சில யோசனைகள்) வரவேற்க படுகின்றன.

நன்றி.

5 comments:

வால்பையன் said...

எனக்கேல்லாம் மொக்கையா தான் பின்னூட்டம் போடத் தெரியும்
தப்பா நினச்சிக்காதிங்க தலைவா

சிக்கிமுக்கி said...

மறுக்க விரும்பினால், தக்க அடிப்படைகளோடும் சான்றுகளோடும்
பக்குவமாய் எழுதுவது - என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

மொக்கையும் கூட ஒருவகை இலக்கியம்தான் நண்பரே!

Maximum India said...

அன்புள்ள சிக்கிமுக்கி

நல்ல கருத்து. நன்றி

Maximum India said...

அன்புள்ள சிக்கிமுக்கி

நல்ல கருத்து. நன்றி

Blog Widget by LinkWithin