Thursday, November 6, 2008

தோல்வியிலும் கண்ணியம்




ஒரு காலத்தில் அடிமை வம்சமாக கருதப்பட்ட ஆப்ரிக்க -அமெரிக்க இனத்தினை சேர்ந்த ஒபாமா அவர்கள் உலகின் முதல் நாடாக கருதப்படும் அமெரிக்காவின் முதல் குடிமகனாக தேர்ந்தெடுக்கப்பட்டதை உலகம் இன்று கொண்டாடி வருகிறது. அவரது எழுச்சி மிகும் உரை பலராலும் விரும்பி படிக்கப்பட்டுள்ளது.

இதே தேதியில் தோல்வி பெற்ற மெக்-காயன் அவர்களாலும் ஒரு மிகச் சிறந்த உரை நிகழ்த்தப் பட்டுள்ளது. உரையின் சாராம்சம் கீழே.

""ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் மிகவும் துன்புறுத்தப்பட்ட ஆப்ரிக்க-அமெரிக்க இன மக்களில் இருந்து ஒருவர் இன்றைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஆகி இருப்பது அமெரிக்கா எவ்வளவு முதிர்ச்சி அடைந்து உள்ளது என்பதையே காட்டுகிறது. ஒவ்வொரு அமெரிக்கரும் கொண்டாட வேண்டிய தருணமிது. இதற்கு காரணமான ஒபாமா அவர்களைப் பாராட்டுவோம்.

தேர்தல் சமயத்தில் ஒபாமாவும் நானும் பல விஷயங்களில் கடுமையாக விவாதம் செய்துள்ளோம். இன்னும் கூட பல கருத்து வேறுபாடுகள் இருவருக்கும் உள்ளது. ஆனால் கடும் சவால்களை நாடு சந்தித்து வருகின்ற இன்றைய தேதியில், இந்த நாட்டை முன்னின்று நடத்த ஒபாமாவுக்கு என்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்.

நேற்று வரை ஒபாமா எனது போட்டியாளர். ஆனால் இன்று அவர் எனது தலைவர். நான் அவரது ஊழியன் அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஒரு கோரிக்கை. அமெரிக்காவின் மேன்மையை முன்னிட்டு நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். வரலாறு படைப்போம்.""


(அவரது முழு உரையையும் படிக்க விரும்பினால் கீழ்க்கண்ட இணைப்பை கிளிக்கவும்)



இத்தகைய சிறந்த உரை நிகழ்த்திய மெக்-காயன் அவர்களை பாராட்டும் அதே தருணத்தில், இந்தியர்களாகிய நாம் சில விஷயங்களை அமெரிக்காவிடம் இருந்து கற்றுக் கொண்டால் நல்லது. கற்றுக் கொள்ளவும் வேண்டும்.

தேர்தல் சமயங்களில் மட்டுமல்ல அனைத்து சமயங்களிலும் எதிர் கட்சிகளை எதிரி கட்சிகளாகவே பாவித்து மக்களிடையே கட்சியின் அடிப்படையில் விரோதம் உருவாக்கும் நமது தலைவர்கள் (முக்கியமாக தமிழ் நாட்டு தலைவர்கள்) இந்த உரையைப் பார்த்த பிறகாவது தம்மை கொஞ்சம் மாற்றி கொண்டால் நன்றாக இருக்கும் .

மக்களும் கூட ஒரு விஷயம் புரிந்து கொள்ள வேண்டும். கட்சிகளுக்கு தமக்கான வேறுவேறு கொள்கைகள் தனித்தனியே கொண்டிருக்கும் உரிமை உண்டு. ஆனால் நாட்டின் நலம் என்ற பொது கொள்கையில் கூட வேறுபாடு காட்டுவது மன்னிக்க முடியாத தவறு. எனவே, தேர்தல் அற்ற கால கட்டங்களில், கட்சிகளால் தமது சுய நலத்திற்காக விதைக்கப்படும் 'கட்சி அடிப்படையில் விரோதம்' என்ற விஷ வித்துகளை வேரிலேயே களைந்து எறிய வேண்டும். மரமாக வளர விடக் கூடாது.

நன்றி.

12 comments:

Unknown said...

i think, if McCain spoke half well as his concession speech, he'd have won the presidency. The speech was awesome.

Maximum India said...

Thank you for the comments vasu

Anonymous said...

உண்மையான வார்த்தைகள்

எதிர்கட்சி கொண்டு வந்த காரணத்துக்காகவே எதிர்ப்பதும், எள்ளி நகையாடுவதும், அறிக்கை விடுவதும், கவிதை எழுதுவதுமாக இருக்கும் நம் தலைவர்களிடம் இதை எதிர் பார்க்க முடியுமா என்று தெரிய வில்லை....

KARTHIK said...

// தேர்தல் சமயங்களில் மட்டுமல்ல அனைத்து சமயங்களிலும் எதிர் கட்சிகளை எதிரி கட்சிகளாகவே பாவித்து மக்களிடையே கட்சியின் அடிப்படையில் விரோதம் உருவாக்கும் நமது தலைவர்கள் (முக்கியமாக தமிழ் நாட்டு தலைவர்கள்)//

நீஙகள் நினைக்கும் படி நடக்க வேண்டுமானாள்.நம் நாட்டிலும் இரு கட்சி ஆட்சிமுறை வரவேண்டும்.

Maximum India said...

அன்புள்ள meetnnk

பின்னூட்டதிற்கு நன்றி.

//எதிர்கட்சி கொண்டு வந்த காரணத்துக்காகவே எதிர்ப்பதும், எள்ளி நகையாடுவதும், அறிக்கை விடுவதும், கவிதை எழுதுவதுமாக இருக்கும் நம் தலைவர்களிடம் இதை எதிர் பார்க்க முடியுமா என்று தெரிய வில்லை....//


உண்மையில் leaders are the followers of the followers.

எனவே மக்கள் விரும்ப வில்லை என்று உறுதியாக தெரிந்தால் தலைவர்கள் நிச்சயம் தயங்குவார்கள்

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டதிற்கு நன்றி.

//நீஙகள் நினைக்கும் படி நடக்க வேண்டுமானாள்.நம் நாட்டிலும் இரு கட்சி ஆட்சிமுறை வரவேண்டும்.//

நீங்கள் சொல்வது உண்மையென்றாலும் கூட, இங்கு கூட (பெரும்பாலும்) இரு கூட்டணி அரசியல்தானே நடக்கிறது. இங்கு அரசியல் வாதிகளுக்கு தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல மற்ற நேரங்களில் கூட தொண்டர்கள் (குண்டர்கள்?) தேவைப் படுகிறது. விரோதத்தை maintain பண்ணினால்தானே மக்கள் ஒன்று சேர்வதை தடுக்க முடியும். இல்லை என்றால் (கொள்ளையடிக்கும்) கொள்கைகளில் வித்தியாசம் இல்லாத போது எதை சொல்லி கட்சி வேறுபாடுகள் காட்ட முடியும்?

வால்பையன் said...

எதிர்கட்சிகள் அறிக்கை விட்டு கொண்டிருப்பதற்க்கு காரணம், மக்களிடம் நாங்களும் இருக்கிறாம் என்ற மாயையை உருவாக்க.

மக்களீடம் விழிப்பணர்வு ஏற்பட்டு விட்டால் இங்கே எந்த அரசியல்வாதிகளும் நிற்க முடியாது,
இந்தியாவில் புதிய ஜனநாயகம் பிறக்கும்

நல்ல பதிவு
நீங்கள் எனக்கு தெரிந்து வலையை தரமான கருத்துகளுக்கு பயன்படுத்துகிறீர்கள்

வாழ்த்துக்கள்

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டதிற்கு நன்றி.

//எதிர்கட்சிகள் அறிக்கை விட்டு கொண்டிருப்பதற்க்கு காரணம், மக்களிடம் நாங்களும் இருக்கிறாம் என்ற மாயையை உருவாக்க.

மக்களீடம் விழிப்பணர்வு ஏற்பட்டு விட்டால் இங்கே எந்த அரசியல்வாதிகளும் நிற்க முடியாது,
இந்தியாவில் புதிய ஜனநாயகம் பிறக்கும்//

நம் வாழ்நாளிலேயே இவ்வாறு நடக்குமென்று நம்புவோம். அந்த மறுமலர்ச்சிக்கு நாமும் ஒரு காரணமாக இருப்போம்.

//நல்ல பதிவு
நீங்கள் எனக்கு தெரிந்து வலையை தரமான கருத்துகளுக்கு பயன்படுத்துகிறீர்கள்

வாழ்த்துக்கள் //

நீங்கள் மற்றும் கார்த்திக் தொடர்ந்து தரும் ஊக்கம் இதற்கு முக்கிய காரணம். உங்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்.

எட்வின் said...

அமெரிக்காவில் இதெல்லாம் அற்பமான விஷயம், இதே நம்ம ஊரில் நடந்தால் அது நம்ப முடியா விஷயம்
நஞ்சு நெஞ்சில் இருக்கிறது என அர்த்தம்...அட போங்கயா... அரசியல் மானம், மருவாத அதெல்லாம் காமராசர், பெரியாரோடு மண்ணாப் போச்சு.

Maximum India said...

அன்புள்ள அர்னோல்ட்

பின்னூட்டதிற்கு நன்றி.

//அமெரிக்காவில் இதெல்லாம் அற்பமான விஷயம், இதே நம்ம ஊரில் நடந்தால் அது நம்ப முடியா விஷயம்
நஞ்சு நெஞ்சில் இருக்கிறது என அர்த்தம்...அட போங்கயா... அரசியல் மானம், மருவாத அதெல்லாம் காமராசர், பெரியாரோடு மண்ணாப் போச்சு.//

நீங்கள் சொல்வது கூட உண்மைதான்.

அன்றைக்கு உலகின் மிக பெரும் வல்லரசாக இருந்த ஒரு நாட்டிடம் இருந்து அஹிம்சை வழியாகவே சுதந்திரம் பெற முடியும் என்று நூறாண்டுகளுக்கு முன் இங்குஅடிமையாக வாழ்ந்தவர்களுக்கு இருந்த நம்பிக்கையை கொஞ்சம் கடனாகப் பெற்றுக் கொள்வோம். நாமும் நம்புவோம் இந்திய அரசியல்வாதிகள் கூட ஒருநாள் மாறுவார்கள் என்று.

Anonymous said...

//தேர்தல் சமயங்களில் மட்டுமல்ல அனைத்து சமயங்களிலும் எதிர் கட்சிகளை எதிரி கட்சிகளாகவே பாவித்து மக்களிடையே கட்சியின் அடிப்படையில் விரோதம் உருவாக்கும் நமது தலைவர்கள் (முக்கியமாக தமிழ் நாட்டு தலைவர்கள்) இந்த உரையைப் பார்த்த பிறகாவது தம்மை கொஞ்சம் மாற்றி கொண்டால் நன்றாக இருக்கும்.//

நீங்கள் சொல்வதுபோல் தலைவர்கள் தம்மை மாற்றிக்கொண்டால் நாம் கட்டிக் காத்துவரும் அரசியல் `பண்பாடு’ என்ன ஆவது?

//எனவே, தேர்தல் அற்ற கால கட்டங்களில், கட்சிகளால் தமது சுய நலத்திற்காக விதைக்கப்படும் 'கட்சி அடிப்படையில் விரோதம்' என்ற விஷ வித்துகளை வேரிலேயே களைந்து எறிய வேண்டும். மரமாக வளர விடக் கூடாது.//

விதைப்பதோடு மட்டுமன்றி நீரூற்றி எருவிட்டுப் பேணி வளர்க்க ஆளிருக்கும்போது வித்துகள் மரமாகவும் வளரும்; வளர்ந்து காடாகவும் மாறும்.

ஓர் ஐயம்:

இப்போது நாடாக இருக்கிறதா, காடாக இருக்கிறதா?

- அ. நம்பி

Maximum India said...

அன்புள்ள நம்பி

உங்களுடைய கருத்துகளில் அனல் பறக்கிறது.

சிறப்பான பின்னூட்டதிற்கு நன்றி.

நம்பி அவர்களே

நம்பினார் கெடுவதில்லை.

எனவே நம்புவோம். இந்த நாட்டிற்கு நல்ல காலம் பிறக்குமென்று.

Blog Widget by LinkWithin