Skip to main content

இதோ இந்தியாவில் இன்னுமொரு தாஜ்மஹால்

ஆக்ராவில் யமுனா நதிக் கரையோரம் அமைந்துள்ள தாஜ்மகால் பற்றி அனைவரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். இந்தியாவிலேயே, இன்னொரு பகுதியில் தாஜ்மஹாலின் மற்றொரு பிம்பம் அமைக்கப் பட்டிருக்கிறது தெரியுமா? அதுவும் தாஜ்மஹால் கட்டிய ஷாஜகானை சிறை வைத்த அவுரங்கசீப் அவர்களின் மனைவியின் நினைவாகவே அமைக்கப் பட்டுள்ளது என்பது கூட ஒரு சுவாரஸ்யமான விஷயம்.

உண்மையான தாஜ்மஹால் கீழே




இரண்டாவது தாஜ்மஹால் கீழே




இரண்டுக்கும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்கள் கண்டுப் பிடிக்க முடிகிறதா?

சஸ்பென்ஸ் போதும் நினைக்கிறேன்.

தாஜ்மகாலைப் போன்றே உள்ள இரண்டாவது கல்லறைக் கோயில் அவுரங்கஜீபின் மூன்றாவது மனைவியின் (தில்ராஸ் பனோ பேகம்) நினைவாக அவருடைய மகனால் (ஆஜம் ஷா) பதினேழாம் நூற்றாண்டில் கட்டப் பட்டது. இதன் பெயர் பிபி-கா-மக்பாரா. இது மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரத்தில் அமைந்துள்ளது. இது ஏழைகளின் தாஜ்மஹால் எனவும் அழைக்கப் படுகிறது. பிற்காலத்திய முகலாய கட்டிட வடிவமைப்பில் உருவான இந்த கல்லறைக் கோயில் ஆக்ரா தாஜ்மகாலின் புகழின் முன்னே சூரிய ஒளியில் தெரியும் நிலவாக முக்கியத்துவம் குறைந்து போனாலும் பார்க்க வேண்டிய ஒரு சுற்றுலாத் தலம். சமீபத்தில் எனக்கு இங்கு செல்லக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்த ஒரு சுற்றுலா வழிகாட்டியுடன் (Guide) எனக்கு சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

அவை இங்கே.

தாஜ்மஹால் மனைவிக்காக அமைக்கப் பட்ட காதல் கோயில் என்றால் இது அம்மாவிற்காக அமைக்கைப் பட்ட தாய்மையின் நினைவு சின்னம்.

இதை உருவாக்க எடுத்துக் கொண்ட நேரமும் செலவுத் தொகையும் தாஜ்மகாலை விட குறைவு. கருமித் தனத்திற்கு பெயர் பெற்ற அவுரங்கசீப் செலவழிக்க முன் வராத காரணத்தினால், அவரது மகனாலேயே முழு செலவும் செய்யப்பட்டது.



ஆக்ரா தாஜ்மஹால் யமுனா நதிக் கரையோரம் அமைக்கப் பட்டது. இந்த தாஜ்மஹால் மலைக் குன்றுகளுக்கு நடுவே அமைக்கப் பட்டுள்ளது.

ஆக்ரா தாஜ்மஹால் முழுக்க முழுக்க மார்பில் கற்களால் கட்டப் பட்டது. இதுவோ மார்பில் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கலவையினால் கட்டப் பட்டது.

இதன் அருகே அமைந்துள்ள பூங்காவின் அளவு அகரவின் தாஜ்மகாலின் அருகே உள்ள பூங்காவின் அளவை விட மிகப் பெரியதாகும்.



உண்மையான தாஜ்மகாலில் உள்ள மத்திய டோம் அதன் சுற்றுப் புறங்களில் உள்ள மினார்களின் உயரத்தை விட அதிகம். ஆனால் இந்த தக்கன தாஜ்மகாலில் மினார்களின் உயரமே அதிகம்.

வேடிக்கையான ஒரு விஷயம், மனைவியின் கல்லறை இவ்வளவு பெரிதாக இருக்க, இந்தியாவின் சக்கரவர்த்தியாக இருந்த கணவரின் (அவுரங்கசீப்) கல்லறையோ இதன் அருகாமையிலேயே (குல்டபாத் சில கி.மீ. தூரம்) மிகவும் சிறிதாக அமைக்கப் பட்டுள்ளது காரணம் தெரியுமா? அவுரங்கசீப் தனது சொந்த உழைப்பில் (குரான் காப்பிகள் எழுதி மற்றும் ஹஜ் தொப்பிகள் நெய்து ) பெற்ற பணத்தைக் கொண்டே தனது கல்லறை அமைக்க வேண்டும் என்று விரும்பினார். இதனால் அவருக்கு ஒரு திறந்த வெளி கல்லறையே அமைக்க முடிந்தது

Comments

A GREAT WARRIOR OF INDIA, WHO HAS BEEN IN THE WAR FRONT TILL HIS END OF DAYS....A MAN OF PRINCIPLES, VERSATILITY & TEETOTALER ....TREMENDOUS ADMINISTRATOR.HE WAS A GREAT & THE LAST MOHAL EMPEROR...FOR FULL DETAILS ABOUT THIS GREAT KING, REFER..."VANDHARGAL...VENDARGAL"...AUTHOR..FAMOUS CARTOONIST "MADAN".
Maximum India said…
Dear Ramasubaramaniam

Thank you for the comments.

Vandhargal Vendrargal is one of my favorite books
Maximum India said…
Raghavan commented on your story 'இதோ இந்தியாவில் இன்னுமொரு தாஜ்மஹால்'

'இந்த வலைப்பூவை படிக்கும் வரை இந்த விஷயம் என்க்குத்தெரியாது. நன்றி நண்பரே.'

Here is the link to the story: http://www.tamilish.com/story/12240

Thank your for using Tamilish!

- The Tamilish Team
Maximum India said…
Dear Aruna

Thank you for the comments
KARTHIK said…
வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தில் கூட இதைப்பற்றி குறிப்பிடவில்லை என்றே நினைக்கிறேன்.
அருமையான தகவல்.
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

நீங்கள் சொல்வது சரி.

இந்த தக்கன தாஜ்மகாலின் புகைப் படம் "வந்தார்கள் வென்றார்கள்" புத்தகத்தில் இடம் பெற்றிந்தாலும் விரிவான விளக்கம் கொடுக்கப் படவில்லை.

பின்னூட்டதிற்கு நன்றி

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.