Monday, November 17, 2008

இந்தியா - சீனா முந்தப் போவது யார்?


இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டு நாடுகளும் உலகின் பழம் பெரும் நாகரிகங்களின் தொட்டில்களாகக் கருதப்படுபவன. மக்கள் தொகையிலும் நாட்டின் வளர்ச்சி விகிதத்திலும் உலகின் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவை. ஆனால், நாட்டின் வளர்ச்சிக்கு இவ்விரண்டு நாடுகளும் தேர்ந்தெடுத்த வழிமுறைகள் வேறுவேறு. அந்த வழிமுறைகளைப் பற்றியும் இரண்டு நாடுகளில் முந்தப் போவது யார் என்பது பற்றியும் இங்கு அலசுவோம்.

தற்கால சுதந்திர இந்தியா தனது ஜனநாயக பயணத்தை துவக்கியது 1947 இல். தற்கால சீனா, மக்கள் சீனக் குடியரசாக (People's Republic of China) கம்யூனிச பயணத்தை துவக்கியது 1949 இல். சுதந்திரம் பெற்றவுடன் இந்தியா தேர்ந்தெடுத்த பாதை தனியாரும் அரசும் இணைந்து இயங்கும் (சோஷலிச உணர்வு கொண்ட) கலவை பொருளாதாரம் (Mixed Economy). சீனா தேர்ந்தெடுத்த பாதையோ அனைத்தும் அரசே என்ற கம்யூனிச பொருளாதாரம்.

இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் துவங்கியது 1991 இல். இந்த விஷயத்தில் முந்திக் கொண்ட சீனா தனது பொருளாதார சீர்திருத்தங்களை 1981 லேயே துவங்கி விட்டது. இந்திய சீர்திருத்தங்கள் ஜனநாயக ரீதியானவை. ஒரு பெட்டிக் கடையை நகர்த்தக் கூட சில சமயங்களில் உச்ச நீதி மன்றத்தின் அனுமதி பெற வேண்டியிருக்கும். ஆனால் சீனாவின் சீர்திருத்தங்களோ எதேச்சிகாரமானவை. நகரங்களைக் கூட சில நாட்களில் நகர்த்தி வைக்க முடியும். இந்திய சீர்திருத்தங்கள் பொதுவாக வெளிப்படையானவை. இந்தியாவில் ஊடகங்களும் எதிர்கட்சிகளும் அரசை புரட்டி எடுக்க முடியும். சீனாவிலோ ஊடகங்கள் அரசின் முழுக் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. இரும்புத்திரை பூட்டியிருப்பதால் அங்கிருந்து வரும் பல தகவல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகும்.

பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவில் கையாளப்படும் முறை பொருளாதாரத்தில் அரசின் பங்கைக் குறைப்பது, மக்களை அதிகம் முதலீடு செய்ய மற்றும் செலவிட வைப்பது, சீனாவிலோ அரசே அதிகம் பொருளாதார முடிவுகளை எடுப்பது மற்றும் உற்பத்திஇனை அதிகப் படுத்துவது. இதன் காரணமாக இந்தியா ஒரு இறக்குமதி சார்ந்த நாடாகவும் சீனா ஒரு ஏற்றுமதி சார்ந்த நாடாகவும் இருக்கின்றன. இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு சீனாவை விட மிகக் குறைவு. மேலும் இந்தியாவில் முதல் தலைமுறை பெரும் கோடீஸ்வரர்கள் (First Generation Billionaires) தனியார் துறையில் பலர் உருவாக , அரசோ பெரும் கடனாளியாகவே உள்ளது. அதே சமயம் சீனாவிலோ அரசின் கைவசம் மிகப் பெரும் தொகை உள்ளது. இதன் காரணமாகவே இந்த பொருளாதார தேக்க சூழ்நிலையில் கூட சீனா அரசால் 586 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 25 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்ய முடிகிறது. இந்திய அரசோ அவ்வளவு கடன் மட்டுமே வைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தியாவின் சீர்திருத்தங்கள் பெரும்பாலும் நிதித் துறையில். இந்தியாவில் அந்நிய முதலீடுகள் நிதி சந்தைகள் மூலமாகவே பெறப் பட்டன. சீனாவின் சீர்திருத்தங்களோ பெரும்பாலும் உற்பத்தி துறையில். நேரடி அந்நிய முதலீடுகள் உற்பத்தி துறையில் பெறப் பட்டன. இந்திய நிறுவனங்களின் பங்குகள் அந்நியர் வசம் இருந்தாலும் தலைமை பொறுப்பு பெரும்பாலும் இந்தியர் வசமே உள்ளது. சீனாவிலோ அந்நியர்கள் கிட்டத் தட்ட முழுமையாக பல நிறுவனங்களை சொந்தம் கொண்டாட முடியும். சீனாவை விட இந்தியாவின் நிதித் துறை அதிகம் திறக்கப் பட்டு இருப்பதுடன் மிகவும் வலிமையான தாகவும் உள்ளது. இந்தியாவின் நாணயமான ரூபாய்க்கு மற்ற அந்நிய செலவானியாக மாற்றப் படும் தன்மை (Partial Rupee Convertibility) ஓரளவுக்கு உண்டு. இந்திய சந்தைகள் நாணய மாற்று விகிதத்தை (Market decided Rates) நிர்ணயிக்கின்றன ஆனால் சீனா யுஅனுக்கோ (Yuan) மாற்றப் படும் தன்மை கிடையாது. அரசே நாணய மாற்று விகிதத்தை (Exchange Rate) நிர்ணயிக்கின்றது

இப்போது உள்ள உலகப் பொருளாதார தேக்க நிலை இரு நாடுகளையுமே பாதிக்கும். சீனாவிற்கு ஏற்றுமதி இருக்காது. இந்தியாவிற்கோ அந்நிய முதலீடு கிடைக்காது, மேற்சொன்னது போல சீனாவால் பெரும் முதலீடுகள் (நம்பகத் தன்மை கேள்விக் குறி) செய்ய முடியும் போது இந்திய அரசினால் அவ்வாறு செய்ய முடிவது கடினம். எனவே இந்தியா இந்தியர்களின் தனிப் பட்ட திறமைகளின் (Enterpreneurship and Innovative Skills) அடிப்படையிலேயே இந்த சிக்கலில் இருந்து வெளிவர முடியும்

இப்போதுள்ள சூழ்நிலையில் சீனாவே ரேசில் முந்தியுள்ளது போல தோன்றினாலும் கூட எதேச்சிகார அரசுகள் பெரும் வெற்றியை பெற்றதில்லை என்று சரித்திரம் சொல்வதாலும் ஜனநாயக ரீதியான சீர்திருத்தங்கள் நிதானமானவை என்றாலும் கூட அவற்றின் அடித்தளங்கள் வலுவாக இருக்கும் என்பதாலும் இந்தியா நீண்ட கால அடிப்படையில் இந்த பந்தயத்தில் வெல்லும் என்று நம்புகிறேன்.

நன்றி

29 comments:

Senthil said...

me the firstu

informative post

Nam-Tamil said...

வணக்கம்,
அருமையான பதிவு... வாழ்த்துக்கள்..!

//இந்தியா நீண்ட கால அடிப்படையில் இந்த பந்தயத்தில் வெல்லும்//

ஆனால், இதை வன்மையாக மறுக்கிறேன்...!
நாம், சீனா உடன் ஒப்பிடும் நிலையில் இல்லை என்பதே என்ன வாதம்....!
ஒரு இந்தியனால், சீனாவின் எந்த ஒரு மூலையில்லும் ஒரு வருடம் கூட தங்கி வேலை செய்ய இயலும். ஆனால், நமது நாடு ஓர் எதிர்வினை அதற்கு..! வெளிநாட்டில் வாழும் இந்தியர் கூட வாழ முடியாத் சூழல்...!

வளர்ச்சி என்பது எல்லா நிலையிலும் சரி சமமாக வேண்டும்...!
நமது நாட்டில் ஏற்ற தாழ்வுகள் மிக மிக அதிகம்... சீனா கூட நம்மை எதிரியைக் பார்க்கவில்லை... அவர்கள் ஒப்பீடு அமெரிக்காதான்... என்னால், சரியாக எழுத முடியவில்லை.. அல்லது சொல்ல தெரியவில்லை... ஆனால், சீனாவில் உங்கள் பதிவை படித்தால் நிச்சயம் சிரிப்பார்கள்....! நன்றி...!

Maximum India said...

அன்புள்ள செந்தில்

வாழ்த்துகளுக்கு நன்றி.

Maximum India said...

அன்புள்ள நம்-தமிழ்

வாழ்த்துகளுக்கு நன்றி.

//ஆனால், இதை வன்மையாக மறுக்கிறேன்...!
நாம், சீனா உடன் ஒப்பிடும் நிலையில் இல்லை என்பதே என்ன வாதம்....!
ஒரு இந்தியனால், சீனாவின் எந்த ஒரு மூலையில்லும் ஒரு வருடம் கூட தங்கி வேலை செய்ய இயலும். ஆனால், நமது நாடு ஓர் எதிர்வினை அதற்கு..! வெளிநாட்டில் வாழும் இந்தியர் கூட வாழ முடியாத் சூழல்...!

வளர்ச்சி என்பது எல்லா நிலையிலும் சரி சமமாக வேண்டும்...!
நமது நாட்டில் ஏற்ற தாழ்வுகள் மிக மிக அதிகம்... சீனா கூட நம்மை எதிரியைக் பார்க்கவில்லை... அவர்கள் ஒப்பீடு அமெரிக்காதான்... என்னால், சரியாக எழுத முடியவில்லை.. அல்லது சொல்ல தெரியவில்லை... ஆனால், சீனாவில் உங்கள் பதிவை படித்தால் நிச்சயம் சிரிப்பார்கள்....! நன்றி...!//

மேலோட்டமாக பார்க்கும் போது நீங்கள் சொல்வது எல்லாம் சரி போலத்தான் தோன்றும். ஆனால் முற்றிலும் உண்மையல்ல. காரணங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

1. இன்றைய தேதியிலேயே இந்தியா சீனாவை விட பல விஷயங்களில் முன்னணியில் உள்ளது. உதாரணம்: நிதி சந்தைகள் மற்றும் வங்கித்துறை. இவற்றை முதலில் நான் சொல்வதற்கு காரணம் நான் இந்த துறைகளில் ஓரளவுக்கு அனுபவம் பெற்று இருப்பதால் என்னால் உறுதியாக சொல்ல முடியும். அடுத்த துறை மென் பொருள் துறை. இந்தியர்களின் தொழிற் மற்றும் வியாபாரத் திறமை (Entrepreneurship) நமது மிகப் பெரிய பலம். விண்வெளித் துறையில் கூட நாம் பெற்றிருப்பது வணிகம் சார்ந்த வெற்றிகள். அங்கும் நம்மளவிற்கு சீனா இன்னும் வெற்றி காணவில்லை என்று கூட சொல்லலாம்.
2. இந்தியாவின் வோட்டு அரசியல் மற்றும் ஜனநாயகம் அதன் வளர்ச்சிக்கு தடைகற்களாக இருப்பது உண்மைதான் என்றாலும் தென்கிழக்கு ஆசிய மற்றும் தென் அமெரிக்கா நாடுகளைப் போல நாம் (மிக வேகமாக சீர்திருத்தங்களை மேற்கொண்டதால்) பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்ததற்கும் இவைதான் காரணம் என்பதையும் மறுக்க முடியாது.
3. சீனாவின் வெற்றிகள் முழுக்க முழுக்க அந்நாட்டின் அரசின் வெற்றியேயாகும். இந்தியாவின் வெற்றிகள் அதன் மக்களின் தனிப் பட்ட வெற்றிகள் ஆகும்.
4.சீனா-அமெரிக்கா ஒப்பீடு, மற்றும் இந்தியாவில் புறக்கணிக்க அவர்கள் செய்யும் முயற்சி எல்லாம் ஒரு மாயையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே. எனக்கு தெரிந்து பல பன்னாட்டு முதலீட்டு நிபுணர்கள் (Investment Gurus) இந்தியாவையே (மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில்) அதிகம் நம்புகின்றனர்.

உண்மையில் யார் முந்துவார் என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றாலும் இந்தியர்களாகிய நாம் நம்புவோம் இந்தியா முந்துமென்று.

நன்றியுடன்

Itsdifferent said...

I had been to China a few times on my business.
I think the aristocracy has helped them a lot. We are caught on petty issues, in each and everything, which stalls our progress. And our politicians are a biggest roadblock to our progress.
PC says only 15% of the funds allocated to the projects are used for projects. And he cannot do anything about it. He is not able to extend the tax bracket beyond the salaried and Corproates. We are No 1 in Swiss Bank account holding.
China plans everything with a capacity requirement in the next 20 years in mind.
We plan and build what is required today, and complete that in the next 5/10/20 years.
They have the infrastructure that is unbeatable. Their foreign relations are at a point, that they can tap into the resources in any country at moment's notice. Our foreign relations is sucking upto the big powers.
So, I would say absolutely no comparison at all. Do we have human resource to achieve the success, yes, but that alone cant win success, it is the government and the officials who has to plan and move the country forward. So far every such move is achieved only by Private companies. Govt is a big zero in our country. If by some miracle we get a "Obama" of our own, things will never change.
Sorry to state that, but I think you would agree.

MCX Gold Silver said...

உண்மையில் யார் முந்துவார் என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றாலும் இந்தியர்களாகிய நாம் நம்புவோம் இந்தியா முந்துமென்று.


நம்பிக்கையே வாழ்கை நம்புவோம்

Maximum India said...

Dear Gopinath

Thanks for the comments. As I told earlier, China's strength lies in its bureaucracy. India's strength lies in the spirit of entrepreneurs. Let us wait and see who races ahead in the long run.

Maximum India said...

Thank you Dg.

I would like to repeat many times

//உண்மையில் யார் முந்துவார் என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றாலும் இந்தியர்களாகிய நாம் நம்புவோம் இந்தியா முந்துமென்று.


நம்பிக்கையே வாழ்கை நம்புவோம்//

Anonymous said...

இரு நாடுகளின் அரசு, ஆட்சிமுறை முதலியவற்றைப் பொதுவாக ஒப்பிட்டுப் பார்த்துள்ளீர்கள்.

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு மிக முக்கிய காரணங்களுள் ஒன்று மக்களின் மனப்பாங்கு.

கீழேயுள்ள செய்தியைப் படித்துப் பாருங்கள். இந்தியாவின் மக்களுக்கும் சீனாவின் மக்களுக்கும் உள்ள பெருத்த வேறுபாடு தெளிவாகத் தெரியும்.

செய்தி: இருக்கின்றனர் மக்கள்… இப்படியும்!

http://nanavuhal.wordpress.com/2008/11/17/uzaippu-muyarchi/

- அ. நம்பி

Maximum India said...

அன்புள்ள நம்-தமிழ்

//ஆனால், சீனாவில் உங்கள் பதிவை படித்தால் நிச்சயம் சிரிப்பார்கள்....! //

இந்தப் பதிவை படித்து சீனர்கள் சிரிப்பது இருக்கட்டும். முதலில் அவர்களைப் பார்த்து அவர்களே வெட்கப் பட்டுக் கொள்ளட்டும். அவர்கள் பார்வையில், உலகின் பார்வையில் ஏன் உங்கள் பார்வையில் கூட சீனர்கள் அழகான கிளி போன்ற பறவைகளாகவும் இந்தியர்கள் ஏளனம் பண்ணக் கூடிய அளவில் உள்ள காக்கை போன்ற பறவைகளாகவும் இருக்கலாம். ஆனால் என்னைப் பொருத்த வரையில் சீனர்கள் கூண்டில் அடைக்கப் பட்ட கிளிகளே. அந்தக் கூண்டு தங்கத்தில் ஆனதா, வெள்ளியில் ஆனதா அல்லது பித்தளையில் ஆனதா என்பது எனக்கு பொருட்டல்ல.

கொலை ஆயுதம் பிடித்து திரியும் மாணவர்களை அடக்கக் கூட யோசிக்கும் போலீசார் (வேறு பல காரணங்கள் இருந்திருக்கக் கூடும் என்றாலும் மனித உரிமை மீறல் பற்றிய அச்சமும் ஒரு காரணம்) மற்றும் அது குறித்து அரசை கிழித்து புரட்டி எடுக்கும் ஊடகங்களும் கொண்ட இந்திய நாட்டு மக்களைப் பார்த்து நிராயுதபாணிகளான மாணவர்களின் மீது தியான்மென் சதுக்கத்தில் டாங்குகள் ஏற்றி கொன்ற போது கூட அடங்கிப் போன சீனர்கள் சிரிக்க முடியுமா என்பது என் சந்தேகம் .

இன்றைய தேதியில் பல்வேறு குழப்பங்கள் இருந்தாலும், சரியான தலைமை கிடைக்கும் பட்சத்தில் இந்தியா முன்னேற வாய்ப்புகள் உண்டு. ஆனால் பிரெஞ்சு மற்றும் ரஷ்ய புரட்சிகள் போன்றே (அதிக காலம் சிலரால் பலர் அடக்கப் படும் போது) எதேச்சிகாரத்தை எதிர்த்து மக்கள் புரட்சி சீனாவில் உருவாகவும் வாய்ப்பு உள்ளது என்பதையும் நாம் மறக்கக் கூடாது.

Maximum India said...

அன்புள்ள நம்பி

பின்னூட்டதிற்கு நன்றி.

//ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு மிக முக்கிய காரணங்களுள் ஒன்று மக்களின் மனப்பாங்கு.

கீழேயுள்ள செய்தியைப் படித்துப் பாருங்கள். இந்தியாவின் மக்களுக்கும் சீனாவின் மக்களுக்கும் உள்ள பெருத்த வேறுபாடு தெளிவாகத் தெரியும்.

செய்தி: இருக்கின்றனர் மக்கள்… இப்படியும்!//

உங்களுடைய பதிவை படித்தேன். உங்களுக்கு அந்த சீனா கிராம மக்களுக்கும் பாராட்டுகள்.

அதே சமயத்தில் இந்தியாவில் இது போன்ற கதைகள் ஆயிரக் கணக்கில் உண்டு என்பதையும் ஒதுக்கி தள்ள முடியாது. சந்தேகம் இருந்தால் கூகிள் சர்ச் சென்று Indian small village success story என்று அடித்துப் பாருங்கள்.

நம் நாட்டின் மிகப் பெரிய பிரச்சினை. நல்ல விஷயங்களை ஒதுக்கித் தள்ளி விட்டு, தவறான விஷயங்களுக்கு ஊடகங்களும் (வர்த்தகப் போட்டி காரணமாக) அரசியல்வாதிகளும் (தேர்தல் போட்டி காரணமாக) முக்கியத்துவம் கொடுப்பது. சீனாவிலோ, ஊடகங்கள் அரசின் கையில், மேலும் எதிர் கட்சியே கிடையாது. அதன் காரணமாகவே அங்கிருந்து நல்ல செய்திகள் மட்டுமே வெளி வருகின்றன.

அது மட்டுமல்ல, சீனாவில் அந்நாட்டு மக்களின் உழைப்பு மட்டுமே மூலதனம். இந்தியாவிலோ, உலகிலேயே வேறெங்கும் காண முடியாத குஜராத்தியரின் வியாபார திறமை, தமிழர்களின் தொழிற் நுணுக்கம், பஞ்சாபிகளின் துணிச்சல், பீகார் மக்களின் கடும் உழைப்பு, பெங்காலிகளின் Intellectuality, இன்னும் பல திறமைகளின் கூட்டணி உண்டு. ஆனால் சீனாவில் இருக்கும் இந்தியாவில் இல்லாத ஒரே ஒரு விஷயம், சீனர்களுக்கு அவர்கள் நாட்டை உலக அளவில் உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற வேட்கை. இதற்காக அவர்கள் எதையும் இழக்க தயாராக இருக்கிறார்கள். இந்தியர்களோ எல்லாத் திறமையும் இருந்தும் நம்பிக்கை இழந்து காணப் படுகிறார்கள். ஆனால், மீண்டும் சொல்கிறேன், இந்தியர்களாகிய நாம் நம்பிக்கை வைப்போம், இந்தியா முந்துமென்று.

Anonymous said...

இதுபோன்ற சாதனைகள் உலக நாடுகள் பலவற்றிலும் உண்டு; மறுக்கவில்லை. ஆனால் நான் குறிப்பிட்டது சாதனையை அன்று. சாதனைக்குப் பின்னால் உள்ள மனப்பாங்கு; மன உறுதி.

//ஆனால் சீனாவில் இருக்கும் இந்தியாவில் இல்லாத ஒரே ஒரு விஷயம், சீனர்களுக்கு அவர்கள் நாட்டை உலக அளவில் உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற வேட்கை. இதற்காக அவர்கள் எதையும் இழக்க தயாராக இருக்கிறார்கள்.//

இதுதான் நான் சொல்ல நினைத்துச் சொல்லாமல் விட்ட உண்மை. இத்தகைய வேட்கைகொண்ட மக்கள் இருக்கும் எந்த நாடும் முன்னேறும்.

- அ. நம்பி

Maximum India said...

அன்புள்ள நம்பி

//இத்தகைய வேட்கைகொண்ட மக்கள் இருக்கும் எந்த நாடும் முன்னேறும்.//

இந்த வேட்கை இந்தியர்களுக்கு கூடிய சீக்கிரமே வரும் என்று நம்புவோம்.

பின்னூட்டத்திற்கு நன்றி

KARTHIK said...

// சீனர்களுக்கு அவர்கள் நாட்டை உலக அளவில் உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற வேட்கை.//

அருமையான பதிவு

நல்ல ஒப்பீடு.

Nam-Tamil said...

அனைவருக்கும் என் நன்றி...!

//மேலோட்டமாக பார்க்கும் போது நீங்கள் சொல்வது எல்லாம் சரி போலத்தான் தோன்றும்.//

மன்னிக்கவேண்டும்...!! நான் மேலோட்டம் அல்ல...! சீனாவில் உட்பகுதியில் வசிப்பவன். என்னுள், என்னுடைய நாட்டையும் இந்த ஒரு நிலையில் என் பேரனாவது காண மாட்டேனா??? எண்ணற்ற ஒரு உள் ஆசையே மேலூட்டமாக வந்தது...!!

இதோ, அனைவருக்கும் நல்ல உணவு, உடை, இருப்பிடம், சிறந்த மேம்பட்ட போக்குவரத்து, சுத்தமான சூழ்நிலை, சுகாதரமான வாழ்க்கைமுறை இது எல்லாம்... இதுவரை என் மக்களுக்கு கிடைக்கவில்லை...!!!

காரணம்: உங்களை போல்.... வெறும் நம்பிக்கையை மட்டுமே குடுத்த என் அரசியல் வியாதிகள்... அந்த வியாதி என் மக்களுக்கு வேண்டாம்... இதோ... என் தாத்தா, அப்பா, நான் என்று பல தலைமுறை வாழமலேயே இறகிறோமே...?? என் நம்பிக்கையை கல்லறரை வரை எடுத்து செல்லவா...??? என் தலைமுறை என் நாட்டின் பெயர் சொல்லாது....??? என்ன கொடுமை....???

//விண்வெளித் துறையில் கூட நாம் பெற்றிருப்பது வணிகம் சார்ந்த வெற்றிகள். அங்கும் நம்மளவிற்கு சீனா இன்னும் வெற்றி காணவில்லை என்று கூட சொல்லலாம்.//

நண்பா, நாம் காணவில்லை என்று சொலலுங்கள்...! 30 நாட்களுக்கு முன்னால் "விண்வெளியில் ஒரு தோழர்கள் கூட்டம் கூடப்பட்டது...", "ஒலிம்பிக்888" இது எல்லாம் நம்பிக்கை மட்டும் இல்லை... ஒரு இனத்தின் தியாகம், வேகம், ஒருமை, தெளிவு, கட்டுப்பாடு என்னும் பல...!
நாம் கனவு, நம்பிக்கை எல்லாம், நம்மை ஏமாற்றுபவர்களை மட்டுமே வாழவைக்கின்றன......! (ex: vijakanth, rajinikanth & etc.. etc...)

//3. சீனாவின் வெற்றிகள் முழுக்க முழுக்க அந்நாட்டின் அரசின் வெற்றியேயாகும். இந்தியாவின் வெற்றிகள் அதன் மக்களின் தனிப் பட்ட வெற்றிகள் ஆகும். //

வெற்றி என்று எதை சொல்கின்றிகள்...??? அம்பானி மனைவிக்கு விமானம் தந்ததையா???? இது எல்லாம் என் நாட்டின் சாபகேடு...!!!
ஐயா... இன்னும் தனி மனித தேவை கூட நாம் பெறவில்லை....!!

//4.சீனா-அமெரிக்கா ஒப்பீடு, மற்றும் இந்தியாவில் புறக்கணிக்க அவர்கள் செய்யும் முயற்சி எல்லாம் ஒரு மாயையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே. எனக்கு தெரிந்து பல பன்னாட்டு முதலீட்டு நிபுணர்கள் (Investment Gurus) இந்தியாவையே (மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில்) அதிகம் நம்புகின்றனர். //

ஆம்.... உண்மைதான் US companiyai சீனாவின் உள்பகுதி வரை கொண்டுவந்த என்னக்கு.... 3 வாரங்கள் ஆகியும், இந்தியாவின் bussiness plan வரைய இயலவில்லை... இதோ, நான் 28il அங்கு பேச, இந்த நிமிடம் வரை நீங்கள் சொல்கின்ற (குருட்டு) நம்பிக்கை மட்டுமே உள்ளது... ஏதோ ஒரு அரசியல்வாதியை நம்பியே வரவேண்டும்....?? அதே அரசியல்வாதி, இங்கு எல்லா வசதியும் செய்து கொடுத்து வரவேற்கின்றகள் (ஒரு காசுகுட வாங்காமல்), இதோ என் அலுவலக்த்தில் என் visa விற்கு இன்னும் அலைந்து கொண்டு இருகின்றகள்... indian embassyil....??? எகப்பட கெடுபிடி.....???? நம்பிக்கையே வாழ்கை நம்புவோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........................??????????

//உலகின் பார்வையில் ஏன் உங்கள் பார்வையில் கூட சீனர்கள் அழகான கிளி போன்ற பறவைகளாகவும் இந்தியர்கள் ஏளனம் பண்ணக் கூடிய அளவில் உள்ள காக்கை போன்ற பறவைகளாகவும் இருக்கலாம். ஆனால் என்னைப் பொருத்த வரையில் சீனர்கள் கூண்டில் அடைக்கப் பட்ட கிளிகளே.//

ஆனால், யானையை வைத்துக்கொண்டு, பிச்சை எடுக்க மட்டும் அல்லவா பயன் படுத்தி கொண்டு இருக்கிறோம்....??

நம்புவோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........................??????????

Itsdifferent said...

Being positive is a good thing. But being hopeful that something good will happen is not good enough.
If we know that our Politicians are the weak link in this chain, are we as Gen Y and Gen X ready to initiate a change.
We have a powerful medium, can we initiate a discussion to create such a force!!!!

Maximum India said...

அன்புள்ள நம் தமிழ்

சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி. இந்தியா சீனாவை போல முன்னேறவில்லையே என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது.

இன்றைய தேதியில் சீனா நம்மை விட முன்னேறி உள்ளது என்பதை நானும் ஒப்பு கொள்வதினாலேயே அதை என் பதிவிலே குறிப்பிட்டுள்ளேன். நாம் சீனாவிடம் இருந்து கற்க வேண்டியது ஏராளமாக உள்ளது என்பதைக் கூட எனது முந்தைய பதிவுகளில் தெரிவித்துள்ளேன்.

அதே சமயத்தில், சீனா அரசு சீன மக்களை வெற்றி என்ற போதையில் நிரந்தரமாக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, தவறினால் மிகப் பெரிய ரத்தப் புரட்சி ஏற்படும் என்பதை பல புத்தகங்கள் மற்றும் பல பன்னாட்டு அறிஞர்களின் பேச்சுகள் மூலம் அறிந்து வைத்துள்ளேன். கார்ல் மார்க்ஸ் சித்தாந்தத்தின் அடிப்படையில், வருங்காலத்தில் (பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படும் போது) சீனாவில் ஒரு மிகப் பெரிய ரத்த புரட்சி ஏற்படப் போவது காலத்தின் கட்டாயம். அதை அரசால் (இப்போதைய Stimulus Package மற்றும் Olympic Success போன்றவற்றின் துணை கொண்டு) தள்ளிப் போட முடியுமே தவிர முழுமையாக தவிர்க்க முடியாது.

உலக அழகி ஐஸ்வர்யா ராயும் உடல் தளர்ந்த தாயாரும் அருகருகே நிற்கும் போது ஐஸ்வர்யா ராய் எவ்வளவோ விஷயங்களில் சிறந்தவராக இருந்தாலும், என்னால் எனது தாயாரையே அம்மா என்று அன்போடும் உரிமையோடும் அழைக்க முடியும். அதே போலத்தான் நம் தாய் நாடும். எவ்வளவோ குறைகள் இங்கிருந்தாலும் நாம் அவற்றை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டுமே தவிர குறை சொல்வதனால் ஏற்படுகின்ற மனத் திருப்தியோடு நிறுத்தி கொள்ள கூடாது.

நீங்கள் தனிப்பட்ட முறையில் வாழ்வில் உயர்வு அடைந்தவர். வெளி நாடுகளில் வாழ்பவர். நானும் கூட வாழ்வில் ஓரளவுக்கு வெற்றிகளை பெற்றவன். இந்தியாவிலேயே அதிகமான அளவிற்கு மனை நிலம் விற்பனை செய்யப் பட்ட இடத்தில் வாழ்பவன். ஆனால் நம் இருவரின் வெற்றியால் மட்டுமே இந்தியா முன்னேறி விட முடியாது. இந்தியர் அனைவரும் வெற்றி பெற நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டியது வெற்றி பெற்ற நம் போன்றவரின் கடமை. இந்தியர் மீது நம்பிக்கை இல்லாமல் இந்தியரால் வெற்றி பெற முடியாது என்று முதலிலேயே முடிவு கட்டி விட்டு நாம் என்னதான் செய்தாலும் அவற்றால் எந்த பயனும் இல்லை.

எனவே, நூறாண்டு முன்னர் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசை வெளியேற்ற முடியும் என்று நம்பிய மகாத்மா காந்தியை துணைக்கழைத்து மீண்டும் சொல்கிறேன். நம்புவோம் இந்தியா ஒரு நாள் முன்னேறும் என்று. யாருக்கு தெரியும் அந்த முன்னேற்றத்திற்கு நாமும் கூட ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

புதிய சிந்தனைகளை தூண்டிய உங்களது பின்னூட்டத்திற்கு மீண்டும் ஒரு முறை நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

Maximum India said...

Dear Itsdifferent

//Being positive is a good thing. But being hopeful that something good will happen is not good enough.
If we know that our Politicians are the weak link in this chain, are we as Gen Y and Gen X ready to initiate a change.
We have a powerful medium, can we initiate a discussion to create such a force!!!!//

Thank you for the comments.

I agree to your views. Why don't we think and discuss in a positive way to take our country to a leadership position.

Maximum India said...

Dear karthik

Thanks for the comments

ஆட்காட்டி said...

சீனாக் காரன் எங்கேயோ போயிட்டான், இந்தியன் இப்பவும் கூலிகளைப் பெத்துத் தள்ளிக் கொண்டு இருக்கிறான்.

வால்பையன் said...

//இந்தியா ஒரு இறக்குமதி சார்ந்த நாடாகவும் சீனா ஒரு ஏற்றுமதி சார்ந்த நாடாகவும் இருக்கின்றன//

இதுவே சீனாவின் பலமாகவும், இந்தியாவின் பலவீனமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

வால்பையன் said...

//கோடீஸ்வரர்கள் (First Generation Billionaires) தனியார் துறையில் பலர் உருவாக , அரசோ பெரும் கடனாளியாகவே உள்ளது. //

இந்தியா ஏன் இப்படி முதலாளிகளை மட்டும் வளர்த்து விடுதுன்னு எனக்கும் ரொம்ப நாளா சந்தேகம்

வால்பையன் said...

//இந்தியா நீண்ட கால அடிப்படையில் இந்த பந்தயத்தில் வெல்லும் என்று நம்புகிறேன்.//

கூடவே நானும்

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டங்களுக்கு நன்றி


//இதுவே சீனாவின் பலமாகவும், இந்தியாவின் பலவீனமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.//

உண்மைதான். முக்கியமாக பெட்ரோல் இறக்குமதி செலவு இந்தியாவில் அதிகம்.

//இந்தியா ஏன் இப்படி முதலாளிகளை மட்டும் வளர்த்து விடுதுன்னு எனக்கும் ரொம்ப நாளா சந்தேகம்//

எனக்கு கூட இந்த சந்தேகம் இருக்குங்க. என்னோட "ஆரு வூட்டு சொத்துக்கு ஆரு அடுச்சுகறது" படிசீங்கள்ள?

//கூடவே நானும்//

நம்பிக்கைக்கு நன்றி.

Joe said...

//இந்தியா நீண்ட கால அடிப்படையில் இந்த பந்தயத்தில் வெல்லும்//

//ஆனால், இதை வன்மையாக மறுக்கிறேன்...!
நாம், சீனா உடன் ஒப்பிடும் நிலையில் இல்லை என்பதே என்ன வாதம்....!
ஒரு இந்தியனால், சீனாவின் எந்த ஒரு மூலையில்லும் ஒரு வருடம் கூட தங்கி வேலை செய்ய இயலும். ஆனால், நமது நாடு ஓர் எதிர்வினை அதற்கு..! வெளிநாட்டில் வாழும் இந்தியர் கூட வாழ முடியாத் சூழல்...!

வளர்ச்சி என்பது எல்லா நிலையிலும் சரி சமமாக வேண்டும்...!
நமது நாட்டில் ஏற்ற தாழ்வுகள் மிக மிக அதிகம்... சீனா கூட நம்மை எதிரியைக் பார்க்கவில்லை... அவர்கள் ஒப்பீடு அமெரிக்காதான்... என்னால், சரியாக எழுத முடியவில்லை.. அல்லது சொல்ல தெரியவில்லை... ஆனால், சீனாவில் உங்கள் பதிவை படித்தால் நிச்சயம் சிரிப்பார்கள்....! நன்றி...!
//

அவர்களது உட்கட்டமைப்பை நாம் எட்டி பிடிக்கவே இன்னும் இருபது ஆண்டுகள் ஆகும்.

சீனாவை இந்தியா பின் தள்ளி முன்னேறி விடும் என்பதெல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு வேண்டுமானால் நடக்கலாம்.

Joe said...

//இந்தியா ஏன் இப்படி முதலாளிகளை மட்டும் வளர்த்து விடுதுன்னு எனக்கும் ரொம்ப நாளா சந்தேகம்//

இந்தியா மட்டுமல்ல எல்லா நாடுகளுமே சாமான்யனை விட முதலாளிகளுக்கு தான் முன்னுரிமை அளிக்கும். எனென்றால் வோட்டு போடும் மக்கள் அரசியல்வாதிகளிடம் நூறு, ஆயிரம் ரூபாய் வாங்குபவர்கள். முதலைகள், மன்னிக்கவும், முதலாளிகளோ அரசியல்வாதிகளுக்கு பல லட்சங்களை நன்கொடையாக தருபவர்கள்.

Maximum India said...

அன்புள்ள joe

பின்னூட்டத்திற்கு நன்றி

//அவர்களது உட்கட்டமைப்பை நாம் எட்டி பிடிக்கவே இன்னும் இருபது ஆண்டுகள் ஆகும்.

சீனாவை இந்தியா பின் தள்ளி முன்னேறி விடும் என்பதெல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு வேண்டுமானால் நடக்கலாம். //

எப்படியோ நடக்கலாம் என்று நம்புவதற்கு நன்றி. என்னுடைய பழைய பதிலே உங்களுக்கும்.

vinoth said...

ஏன் சீனா பெட்ரோலிய ப்ரோடுக்ட்ஸ் இறக்குமதி செயவது இல்லைய
என்னக்கு கொஞ்சம் எக்ஸ்ப்ளைன் பண்ணுங்க

Maximum India said...

அன்புள்ள வினோத்

//ஏன் சீனா பெட்ரோலிய ப்ரோடுக்ட்ஸ் இறக்குமதி செயவது இல்லைய
என்னக்கு கொஞ்சம் எக்ஸ்ப்ளைன் பண்ணுங்க//

சீனாவில் மிகப் பெரிய அளவில் பெட்ரோல் இறக்குமதி செய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய இறக்குமதி செலவை ஏற்றுமதி வருமானம் ஈடு கட்டி விடுகிறது. இந்தியாவிலும் பெட்ரோல் ஏராளமாக இறக்குமதி செய்யப் படுகிறது. ஆனால் அதை ஈடுகட்டும் வகையில் ஏற்றுமதி இல்லை. அவ்வளவே

நன்றி.

Blog Widget by LinkWithin